திமுக தமிழுக்கு என்ன செய்தது?
செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம்
ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.
1)1970ஆம் ஆண்டில் தமிழ்த் தாய் வாழ்த்தை உருவாக்கியது
2) தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.
3) 1974இல் அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
4) 1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
5) ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது
6) ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 சதவீதம் தமிழ்த் தட்டச்சுகள் இருக்க வேண்டும்.
7)திராவிடப் பல்கலைக் கழகம்: தென்னக மொழிகளையும், அவற்றிடையே உள்ள உறவுகளையும், ஊடாடி நிற்கும் பண்பாட்டுக் கூறுகளை யும் உறுதி செய்யும் வகையில் ‘குப்பம்’ எனும் நகரில் “திராவிடப் பல்கலைக் கழகம்” தொடங்கப்பட்டது.
8) சிறப்புச் சொல் துணையகராதி: 1972 முதல் புதுப்பிக்கப்படாத அகராதிகளில் துறையின் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு முதலில் 10 துறைகளுக்குரிய சிறப்புச் சொல் துணை அகராதிகளைப் புதுப்பித்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
9)தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து புகை வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களை புகை வண்டிகளில் இப்போது காணலாம்
10) :தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர், தொடக்க நிலைப் பள்ளிகளுக்கே அரசின் ஏற்பு வழங்கப்படும் என்றும், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பயிற்று விக்கப்படும் என்றும் முதன்மை மொழியாக தமிழ் அல்லது தாய்மொழியே இருக்குமென்றும் அரசு ஆணையிட்டது
11) தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள்: 19.2.97இல் இ.மு. சுப்பிரமணியன்பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, 24.12.98இல் மங்கலங் கிழார், 4.8.97இல் மனோன்மணியம் சுந்தரனார், 30.10.1999இல் ராய சொக்கலிங்கம், 13.3.2000இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன.
12) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டது
13)மும்மொழித்திட்டத்தை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கியது அண்ணாதான்
14)Tamilnad TAMIL learning Act 2006 ஐ கொண்டுவந்தது
9-6-2006 திமுகதான். இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.
15) Indian Administrative Exam: If Tamils write the Indian Administrative exam in Tamil, there is a possibility of many getting through the exam. The erstwhile government did not publish any books with this point in mind. A decision to publish books on Tamil Language, history of literature, geography, and history in Tamil was taken and as a first step, the history of Tamil Language was first published.
16) Grammar committee: A grammar committee was formed to write and publish new grammar books for the benefit of modern era students of schools and colleges. The change made was based on the ancient Tamil grammar texts from books such as Tolkāppiyam and Nannul.
17) Encyclopedia: Volumes of the encyclopedia on plays were compiled by Tamil university. Three volumes on music were compiled by Bharathidasan University. Five volumes on medicine were compiled and published by Tamil development board.
18) Tamil shorthand book: About 5,000 copies of Tamil shorthand books were printed and published on 24.12.1998 keeping in mind the necessity of making Tamil shorthand books.
19) Recruitment board: Arrangements have been made so that the question papers would have Tamil questions followed by the English ones.
20) History of Tamil Nadu: The period of Pallavas – Pandiyas part 2, the period of Cholas Part 1and Part 2 were published. The task of compiling the entire history of Tamil Nadu in a single edition is in process.
தமிழில் கையெழுத்திட அரசு ஊழியர்களுக்கு ஆணை பிறபித்தது
கடைகளில் தமிழில் பெயர் கட்டாயமாக எழுத வேண்டும் என உத்தரவிட்டது
ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை
மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியது.அவர்களின் வாரிசு ஒருவருக்கு மேற்படிப்பில்,வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியது.
தமிழ் வளர்ச்சி துறை எனும் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு முதன் முதலாக தமிழ்குடிமகனை அமைச்சராக்கியது.
கல்லூரிகளில் தமிழ் மன்றம்
தமிழ் வழி மாணவர்களுக்கு ஊக்க தொகை
தமிழ்வழியில் பொறியியல் படிப்பு
தமிழ் வழி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை
என்ற கட்டாய உத்தரவு
தமிழ்நாடு, சென்னை என பெயர் மாற்றம் செய்தது...