நீட் ஏன் தேவையில்லை?
1) ஏழை நடுத்தர மாணவர்களால் பல லட்ச ரூபாய் செலவு செய்து பயிற்சி பெற முடியாது
2) நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்பட வாய்ப்பில்லை.
3) நீட் தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்ளுக்கு எதிராவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது
4) தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுதலாம் என்றபோதிலும், ஏழை மாணவர்களின் பொருளாதார நிலைமை அதற்கு இடம் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது
5) மாநில பாடத் திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புக்கு தயாரான மாணவர்கள், நீட் பாடத்திட்டத்திற்கென தனியே தயாராக வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
6) 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெறுகிறார்கள். அவ்வாறே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
7) கம்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதியில்லாத கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது.
8) நீட் தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதால், மாணவர்களின் கல்வித் தரம் குறையும்.
9) மருத்துவ கல்வி வணிகமாக்கலை நீட் தேர்வு முறை ஊக்குவிக்கிறது.இதை அனுமதிக்க முடியாது
10) நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானது.
11)இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் கிடையாது என்பதால் ஒரே தேர்வு முறை என்பதே தவறு.
12) தமிழ்தாய்வழி கல்வி பயின்றவர்களால் மருத்துவ படிப்பில் சேரமுடியாதது மிகப் பெரிய அவலம்
13) தமிழர்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கல்லூரிகளில் தமிழக மாணவர்களால் சேர முடியாத நிலை
14) வசதியுள்ள பணக்காரர்கள் கணிசமான மருத்துவ இடங்களை ஆக்கிரமிப்பதால் வருங்காலத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
15) நீட் தேர்வு என்பது மாநிலங்களில் கல்வி உரிமை பறிப்பு
மாநில அரசு.. மத்திய அரசுக்கு ஒதுக்கும் இடங்களுக்கும் தனியார் மருத்துவ கல்லூரி இடங்களுக்கும் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். தமிழக அரசுக்கல்லூரிகளில் நீட் தேர்வு திணிப்புக் கூடாது