Tuesday, 4 September 2018

பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*

பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*

முதன்முதலாக கலைஞர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் 1971-ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்துப் பல ஆண்டு காலமாக இருந்த இட ஒதுக்கீடு 16 சதவீதம் என்பது 18 சதவீதம் என உயர்த்தப்பட்டது.

பின்னர், 1990-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினையொட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீதம் முழுவதையும் ஆதிதிராவிடர் மக்களுக்கென (செட்யூல்ட் வகுப்பினர்) ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களுக்கென (செட்யூல்ட் டிரைப்) தனியே ஒரு சதவீதமும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) ஆணை 1950-ன் கீழ் திருத்தச் சட்டம் 1976 (சட்டம் 108/1976)-ன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 36 சாதியினர் பழங்குடியினர் எனவும், 76 சாதியினர் ஆதிதிராவிடர் இன மக்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டது

தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிதிராவிடர் இன மக்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வந்தனர்.

76 பிரிவினர்களாக உள்ள ஆதிதிராவிட இன மக்களில் ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர், மற்றும் அருந்ததியர் ஆகிய 5 பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த 5 பிரிவினர் மொத்த ஆதி திராவிட இன மக்கள் தொகையில் 93.5 சதவீதம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659. சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139. அருந்ததியர் மற்றும் சக்கிலியர் ஆகிய 2 பிரிவுகளையும் சேர்த்தால் அவர்களின் மக்கள் தெகை 15 லட்சத்து 48 ஆயிரத்து 798. இந்த இரு பிரிவினரும் ஆதிதிராவிடரின் மொத்த மக்கள் தொகையில் 13.06 சதவீதம் ஆகும்.

மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 சதவீதமான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம். தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததியர்கள், இந்து சக்கிலியர்கள், இந்து மாதாரி, இந்து பகடை என 4 உட்பிரிவுகள் உள்ளன எனவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருகின்றனர் எனவும், எனவே அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்பொழுது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற 4 சாதிகளுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.

அதை ஏற்று அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான கொள்கை முடிவு கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.


பின்னர் அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.

இந்த இட ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.

இந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து கலைஞர்
உத்தரவு பிறப்பித்தார்.

ஆதிதிராவிட மக்களுக்கு சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள்.

அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை – G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009).

எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.

திமுக ஆட்சியிலிருந்த சுமார் 21 ஆண்டுகளில்  திமுக பட்டியலின மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டதா?

நிச்சயமாக இல்லை. ஆனால் தமிழகத்தை ஆண்ட மற்ற எல்லா கட்சிகளையும்  விட பல மடங்கு அதிகமாக திமுகதான் செய்துள்ளது.


தாட்கோ நிறுவப்பட்டது 1974 இல் திமுக ஆட்சியில்தான்.


இந்நிறுவனம் மூலமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பயன் பெறுகிறார்கள். எல்லாவற்றிலும் 50% மானியம் உண்டு. பல திட்டங்கள் இலவசம்.


(Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) was incorporated in 1974 under the Companies Act, 1956 with a objective to improve socio economic status in Tamilnadu of Adi Dravida people)


தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த ஆதிதிராவிட பள்ளிகளை உருவாக்குதல்,


ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல்,


தாட்கோ & குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல்,


 உயர்கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித் தொகை மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி -

நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்ததும் அமைச்சரை நியமித்ததும் திமுகதான்

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.

ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் நியமனம்

ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள்.

1989,கலைஞர் அரசு, பிஏ, பிஎஸ்சி,பிகாம் படிக்க விரும்பும் பட்டியலினத்திருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் இலவச கல்வி வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். மேலும் குடும்பத்தில் முதல் வாரிசு யாராவது தொழிற்கல்வி படித்தால், அவர்கள் குடும்பம் ஆண்டிற்கு 15000 ரூபாய்க்கு கீழ் உள்ள பட்டியலினத்தாருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அளித்து உத்தரவிட்டார்.

கலைஞர், ஆதி திராவிடருக்கு முந்தைய 1974 ஆட்சியில் 30000 வீடுகளை கட்டி கொடுத்தார், 13 ஆண்டுகளில் வெறும் 36,000 வீடுகளை கட்டி கொடுத்தது அதிமுக அரசு . மீண்டும் 1989-90ல் திமுக ஆட்சியில் 42000 வீடுகளும், 1990-91ல் அதுவே 47000 வீடுகளை கட்டிக்கொடுத்தார். ஆதி திராவிடர்கள் தொழில் முனைவோர் இருந்தால் அவர்களுக்கும் ஆண்டுக்கு 10000 ஊக்கத்தொகை, பிற்பாடு 15000 என்றாக்கி உத்தரவிட்டார்.


2007-ல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.


அனைத்து மத்திய மாநில அரசுத் திட்டங்களிலும் ஆதிதிராடர்களுக்கு 33% ஒதுக்கீடும் சிலவற்றில் 50% ம்
வழங்கப்படுகிறது. அது
கட்டாயம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்திரா வீட்டுவசதித் திட்டம் மூலம் வீடுகள் மற்றும்
பெரியார் சமத்துவபுரம் கொண்டு வந்து அனைரும் சமம் என்பதை நிறுவவில்லையா? அதுவும் கலைஞர்தானே.

அம்பேத்கார் பெயரில் சட்டப்பல்கலை கழகம் அமைத்தது கலைஞரே.

கலப்பு திருமண ஆதரவும் ஊக்கத்தொகையும் திமுகதான் வழங்கியது. திமுக ஆட்சியில்தான் மிக அதிக அளவில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது

மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுகதான்


* முதன்முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பாரான வரதராசன் அவர்களை நீதிபதியாக நியமனம்
 *பள்ளி இறுதியாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பாணவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை
*18 சதவீத ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் புர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நியமிக்க தடை விதித்தார்
*இரட்டை மலை சீனிவாசன் நினைவு தபால் தலை வெளியிட்டார்
*உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்ற திட்டத்தின் படி இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது
*தாழ்த்தப்பட்ட இனத்தவர் விமான ஓட்டியாக உருவாக இலவச பயிற்சியை தந்தார்
*அறங்காவலர் குழுவிலும் , கூட்டுறவு நிர்வாகத்திலும் கட்டாயமாக தாழ்த்தப்பட்ட இன பிரநிதி கட்டாயம் அறிவித்தார்
*கலை அறிவியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்வதற்கு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என ஆணை கொண்டு வந்தார் ,பின்னர் இது பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வந்தார்
*சீனிரிட்டி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட முதன்மை  காவலர்கள் சிறப்பு SIகளாக கலைஞர் காலத்தில் பதவியுயர்வு பெற்றனர்
*கல்நார் வீடுகளை கட்டி தந்தார்
*தமிழ்நாடு தேர்வாணையக்குழுவகன் தலைவராக ஆதிதிராவிடர் முருகராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்
*தன் இல்லங்களில் தாழ்த்தப்பட்டவர்களை சம்மந்தம் செய்தவர் கலைஞர்.....


இன்னும் செய்வதற்கு ஏராளம் இருப்பினும் 21 வருட ஆட்சியில் இதைத்தான் செய்யமுடியும்.


இதில் வேடிக்கை என்னவென்றால் உயர்சாதியினர் திமுகவை வெறுக்க முக்கிய காரணங்கள்

1) திமுக கலப்பு திருமணத்தை ஆதரிப்பது

2) தீண்டாமையை எதிர்க்கிறது

3) திமுக சாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது


நடுத்தர சாதியினரில் சிலரும் உயர்சாதியினர் பலரும் திமுக சாதி ஒழிப்பிற்கான கட்சி என நினைத்து திமுகவிற்கு ஓட்டே போடுவதில்லை.


#திமுக_என்னும்_மத்தளத்திற்கு_இரண்டு_பக்கமும்_இடிதான்

Antony Parimalam 

Sunday, 2 September 2018

ஈழப்போர் பற்றி அறிந்து கொள்ள இத்தனை கட்டுரைகளையும் படிக்கனும்

ஈழப்போர் பற்றி அறிந்து கொள்ள இத்தனை கட்டுரைகளையும் படிக்கனும்
இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனுக்கு தவறான நம்பிக்கை கொடுத்த வைகோ-நெடுமாறன் : கேபி பேட்டி(பகுதி 3)
2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)
இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)
Violations by the LTTE
Preventing Civilians from Fleeing the Conflict Zone
https://www.hrw.org/report/2009/02/19/war-displaced/sri-lankan-army-and-ltte-abuses-against-civilians-vanni
தமிழினி: துயரப் பெருங்கடலின் துளி
கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்கனும். 40000 ஈழமக்கள் இறந்தது எப்படி ? உண்மையில் யார் காரணம்.?
Read 👇
Report of the Secretary-General’s Panel of Experts on Accountability in Sri Lanka was a 2011 report
Read 👇
தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா
செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.
படிங்க 👇
பிரபாகரன் மறுபக்கம் அறிய இந்த 3 கட்டுரைகளை பொறுமையாக படிக்கவும்.
இதை எழுதியது ஒரு ஈழத்தமிழர்
ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!
மகிந்த ராஜபக்சவுடன் புலிகள் நடத்திய பேரம்!! : மாவிலாறு அணை பூட்டப்பட்ட மர்மம்!!
தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

http://nadunadapu.com/?p=104867

Wednesday, 29 August 2018

GAIL திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவர் முன்னிலையில்தான் ஒப்பந்தம் கையொப்பமானது.

GAIL திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவர் முன்னிலையில்தான் ஒப்பந்தம் கையொப்பமானது. ஜெயலலிதா இதை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்
ஆதாரம் 👇
TN signs pact with GAIL for gas pipeline infrastructure

https://www.thehindubusinessline.com/economy/policy/tn-signs-pact-with-gail-for-gas-pipeline-infrastructure/article23118095.ece

GAIL (India) Ltd will invest over Rs 6,000 crore in Liquified Natural Gas distribution network and power project in Tamil Nadu.

The Chief Minister Ms J. Jayalalithaa said the agreement signed between GAIL and the Tamil Nadu Industrial Development Corporation (Tidco) on Thursday provides for the establishment of a natural gas pipeline network to supply fuel to industries, households and for use as automobile fuel. GAIL will invest in the infrastructure and Tidco will facilitate the implementation of the projects.

GAIL, is a Rs 32,000 crore company in transmission and distribution of natural gas and petroleum gas and gas based power projects. Tidco is a State-run industry development agency.

Addressing the Legislature today, Ms Jayalalithaa said the investments will bring down the State’s dependence on coal and petroleum products as fuel and enable fuel self sufficiency for industrial development. Tamil Nadu needs two LNG terminals each of about 5 million tonnes a year.

An agreement between Tidco and the Central Government Enterprise Indian Oil Corporation in March provides for the oil company to set up a 5 million tonne LNG import terminal near Ennore Port to the North of Chennai. This facility will be ready in 2016 and supply over 18 million cubic metres of fuel daily for industrial, household and automobile fuel use.

The agreement with GAIL provides for the pipeline infrastructure.

Also, GAIL’s LNG pipeline between Kochi LNG import terminal and Bangalore will run 310 km through Tamil Nadu traversing Coimbatore, Salem, Erode, Tiruppur, Namakkal, Dharmapuri and Krishnagiri Districts.

GAIL will implement a Rs 1,000 crore LNG distribution pipeline network to distribute the fuel to consumers. The company will also set up a Rs 500-crore pipeline between Salem and Cuddalore to carry 6 million cubic metres of gas daily. It will also set up a floating storage degasification unit in South Coastal Tamil Nadu at a cost of Rs 2,500 crore.

GAIL and Tidco will also set up a joint venture project for a 500 MW, LNG-based power project at a cost of Rs 2,000 crore, she said. This can be expanded with additional investments of Rs 10,000 crore.

Industrial estate

To facilitate industrial investments, the State Government will create industrial estates with adequate infrastructure to provide a competitive environment for manufacturing sector. The first of the modern industrial zones will come up in Tuticorin over a 1,500-acre area, Vellore 2,000 acres and in Krishnagiri over a 4,000 acre area.

A 1000-acre industrial hub for heavy engineering industries with access to Ennore Port will also be established, she said. The road links to the Port are being upgraded to benefit the industrial units in Oragadam to the west of Chennai, which use the Port for exports.

Industrial infrastructure fund

A Rs 100 crore industrial infrastructure fund will be established to maintain the infrastructure in the industrial estates. Tidco will bring in Rs 80 crore and the State Government Rs 20 crore. This fund will be used to upgrade road link, implement pollution control measures and other basic facilities.

Published on May 11, 2012

Tuesday, 28 August 2018

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன் பிறப்புகளே..

உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு பேருண்மையைச் சொல்லி உரையைத் தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவர் போல் பேசத்தெரியாது. பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவைக் கொண்டவனாக உங்கள் முன் நிற்கிறேன். இது பெரியார் அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம் மத்தியில் தலைவர் இல்லாவிட்டாலும். தலைவருடைய கொள்கை தீபம் இருக்கிறது. தலைவரின் கொள்கை தீபம் நம் கையில் இருப்பது முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமம். அந்த முப்படை நம்மிடத்தில் இருக்கிறது என்ற தைரியத்தில் துணிச்சலில் இந்த தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு ஆதரவோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நான் வாழ்ந்ததாக தலைவர் கலைஞர் என்னைபாராட்டியிருக்கிறார். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எனது பெயருக்கு விளக்கம் சொல்லி உச்சி முகர்ந்தார் தலைவர் கலைஞர். அந்த வார்த்தைக்கு உதாரணமானவாக என் வாழ்க்கை முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன்.

என்னைவிட கழகம் பெரிது என்றார் கலைஞர். அவர் வழியில் நானும் சொல்கிறேன் என்னைவிட கழகம் பெரிது. திமுகதான் எந்த தனிமனிதனையும்விட பெரியது. உதயசூரியன் சின்னம்தான் எந்த பெரிய மனிதனைவிடவும் பெரியது.  இந்த மேடையில் எனக்கு ஒரே ஒரு குறைதான்.

இந்த காட்சியைப் பார்க்க தலைவர் கலைஞர் இல்லையே என்ற குறைதான். ஆனால், கலைஞரிடத்தில் பேராசியர் இருக்கிறார். வாழும் திராவிட தூணாக பேராசிரியர் அன்பழகன் இருக்கிறார்.

எனக்கு அக்கா உண்டு அண்ணன் இல்லை..என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதலால், பேராசிரியர் அப்பாவுக்கு அண்ணன். எனவே, பேராசிரியர்தான் எனக்கு பெரியப்பா. அப்பாவுக்கு முன்னரே என்னை தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு சிரமம். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அடுத்த தலைவராவதற்கு ஸ்டாலின் தான் தகுதியானவர் என்று கூறியவர் பெரியப்பா.

அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெற்றதை நான் பெருமையாகக் கருத்துகிறேன். அரங்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்தேன்.

என்னை பள்ளி சிறுவன், கல்லூரி மாணவனாக, கழக பேச்சாளராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பொருளாளராக, செயல்தலைவராக எனது வளர்ச்சியை படிப்படியாகப் பார்த்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள். படிப்படியாக வளர வேண்டும் என்றுதான் கலைஞர் விரும்பினார். நானும் படிப்படியாக முன்னேறவே விரும்பினேன். தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிட தலைவரின் தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், எனும் 4 தூண்களால் எழுப்பிய கோட்டை நமது திராவிட முன்னேற்ற கழகம். சுயமரியாதை இல்லாத மாநில அரசு. சமத்துவத்தையும் சமூகநீதியையும் பகுத்தறிவையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மாநில மக்களின் நலனை காவு கொடுத்து அரசு என்ற பெயரால் பகல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிப்பதுதான் நம்முடைய முதல் கடமையாக இருக்க வேண்டும். நாட்டின் மாபெரும் ஆபத்து எதுவென்றால் கொள்கைகளே இல்லாமல் இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள். தமிழக ஆட்சியர்களை பார்க்கும்போது நெஞ்சு பொருக்குதில்லையே என்ற பாரதியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

வெளியில் இருந்து எதிர்கொள்ளும் சவால்களுக்கு இடையே, நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன? இந்த கேள்விகள் சில நாட்களாக என்னைத் தூங்கவிடவில்லை.

விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்! இந்த நாளில் அந்தக் கனவின் சில துளிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம், நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு, நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதிதாய் பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத விலங்கோ இனமோ இந்த மண்ணில் நீடித்து நிற்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும் கேட்கும் மு.க.ஸ்டாலினாகிய நான் புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். திமுகவின் மரபணுக்களோடு; நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடு.. இதோ உங்கள் முன் பிறந்திருக்கிறேன். நான் மட்டுமா!? என்னோடு பிறந்திருக்கக்கூடிய இந்த கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு எனது வாழ்த்துகள். இது புதிய நாம்.  அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தினர்.

யார் அந்த கழகத்தினர். தன் சாதியே உயர்ந்தது என நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த அனைவரையும் தன் உடன்பிறப்பாக நினைப்பவர்கள் தான் அந்த கழகத்தினர். எளியோருக்கு கரம் கொடுப்பவர்கள். கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தான் நம்பவில்லை எனினும் என்றாலும் பிறர் நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுப்போர். யார் தவறு செய்தாலும், நானே செய்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்.

அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கை என்ன? அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன? பகுத்தறிவு மூலம் உலகைக் காணுவோம் என உரக்கச் சொல்லுதல். ஆணும் பெண்ணும் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சம உரிமைகளைப் பெற்றுத் தருதல். தனி மனித மற்று ஊடக கருத்து சுதந்திரத்தை மீட்டெடுத்தல். கருத்து சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்தல். பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எடுத்தல். இவையெல்லாம் எனது நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை.

கனவு இன்றுமுதல்  மெய்ப்படப்போகிறது. இதை மெய்ப்பிக்க துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த பெருங்கனவை நான் தனியாக மெய்ப்பிக்கமுடியாது. என் உயிரினும் மேலான என் கலைஞரின் உடன்பிறப்புகள் இல்லாமல் இதை மெய்ப்பிக்க முடியாது. இது என் கனவு மட்டுமல்ல.  நம் கனவு. இது கழகத்தின் கனவு. தமிழகத்தின் கனவு அதுதான்.

வா என்னோடு கைகோர்க்க வா..

ஒன்றாக முன்னேற மட்டுமல்ல.. தேவைப்பட்டால் சில அடிகள் பின்னே வைக்கக் கூட

சில அடிகள் பின்னே வைப்பதும் முன்னேற்றமே!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா..

முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா..

நான் முன்னே செல்கிறேன்.. நீ பின்னே வா என அழைக்கவில்லை..

நாம் சேர்ந்தே செல்வோம் வா.. என்று அழைக்கிறேன்

இந்தக் கூட்டத்தில் உள்ள என் அண்ணன்கள் அக்காள்கள் இளையோர் அனைவரும் தம்பிகள் தங்கைகள்

இதுதான் நம்முடைய குடும்பம்; இதுதான் என்னுடைய குடும்பம்

நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம்.

யார் பெரியவர்கள் என்ற போட்டியில் சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் பற்றி கவலைப்படாதவர்களாக யாரும் மாறிவிடக்கூடாது. தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தலைமை நிச்சயம் இயங்கும்.

Monday, 27 August 2018

திரு ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு பகுதி 2

1990
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 ஆகிய நாள்களில் தி.மு.கழகத்தின் ஆறாம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம்மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கழக இளைஞர் அணியினரின் வெண்சீருடைப் பேரணி மகத்தானது. அம்மாநாட்டு வளாகத்திற்குள் தி.மு.க. இளைஞர் அணி திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை அமைத்தது. இக்கண்காட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் இயக்க வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும் எழிலுற அமைக்கப்பட்டன. அத்துடன் சேதுசமுத்திரத் திட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, போக்குவரத்துத் திட்டம் ஆகிய தமிழகம் காண வேண்டிய முன்னேற்றத் திட்டங்களை விளக்கும் செயல்விளக்கக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. எண்ணற்ற கழகத் தோழர்களும், பொதுமக்களும் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்து பயனடைந்து பாராட்டினர்.
அதன்பின் அதே ஆண்டு (1990) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழிக முதல்வர் – தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது சென்னை கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை புகைப்பட – ஓவியக் கண்காட்சியாக இளைஞர் அணி ஏற்பாடு செய்தது. இப்பணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் – இளைஞர் அணி மாநில துணை செயலாளர் மா.உமாபதி, தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் அமைத்தனர். இக்கண்காட்சியை அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மொகந்தா அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
1991
1991ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கினார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ளாத பாரதீய ஜனதா கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகரின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றனர். சந்திரசேகர் 116 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்தார். எனினும் அக்குறுகிய காலத்தில் சந்திரசேகர் ஆட்சி செய்த ஒரே செயல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியைக் கவிழ்த்ததுதான். தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கழக அரசை பொய்யான காரணங்களைக் கூறி ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்ய மறுத்தும் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு ஆட்சியைக் கலைத்தனர்.
அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவாக கழகம் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1992
பிப்ரவரியில் மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியினரின் வெண்சீருடை அணிவகுப்பு காண்போரை வியக்க வைத்தது. அப்பேரணி அணிவகுப்பில் தென்னார்க்காடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தயாளமூர்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்குத் தலைவர் கலைஞர் கேடயம் வழங்கி பாராட்டினார். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
1993
19.01.1993இல் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் தமிழர் திருநாள் விழா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடைபெற்றன. தலைவர் கலைஞர் நிறைவு உரையாற்றினார்.
1994
19.09.1994இல் கழக மதுரை மண்டல மாநாட்டில் முதல் நாள் நடைபெற்ற வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
7.10.1994இல் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம் வந்த இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
1995
13.03.1995இல் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாநகர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி திரட்டினார். அத்தொகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை இளைஞர் அணி வளர்ச்சி நிதியில் சேர்த்து, ரூபாய் ஒரு லட்சத்தை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக இளைஞர் அணியின் சார்பில் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்.
18.7.1995இல் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவு செய்து பேருரையாற்றினார்.
18.9.1995இல் கழக முப்பெரும் விழாவையொட்டி சென்னை இராயபுரம் அறிவகம் முதல் அண்ணா அறிவாலயம் வரை சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினரின் மாபெரும் சைக்கிள் பேரணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
1996
28.1.1996இல் தி.மு.கழகத்தின் 8ஆம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணியின் சிறப்பான அணிவகுப்பைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னணியினர் வள்ளுவர் கோட்டம் வடிவில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று கண்டு களித்தனர்.
மாநாட்டில் இளைஞர் அணியின் சார்பில் ஏ.வி.கே. நினைவு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் துயிலுமிடங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
10.8.1996இல் தமிழக முதல்வர் கலைஞர் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கினார். இத்திட்டத்தை +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று +2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
சென்னை மேயர்
1996 அக்டோபரில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். உலகிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர் என்னும் சிறப்புத் தகுதி பெறுகிறார்.
28.12.1996இல் தி.மு.க. இளைஞர் அணியால் பல்வேறு கழகச் செய்திகளை உள்ளடக்கிய – நமது இயக்க நாள் குறிப்பு – 1997 வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட, கழகத் தலைவர் கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
1997
28.6.1997இல் சேலத்தில் தி.மு.கழக சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
8.10.1997இல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை ஏலகிரியில் நடைபெற்றது.
16.10.1997இல் இங்கிலாந்து நாட்டின் பேரரசியான இராணி எலிசபெத் சென்னை மாநகருக்கு வருகை புரிந்தார். அவருக்கு சென்னை மாநகரின் முதல் குடிமகனாம் மேயர் ஸ்டாலின் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
27.10.1997இல் திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சிப் பாசறையில் பேராசிரியர் நன்னன், கோவை மு.இராமநாதன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன், வெற்றிகொண்டான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
30.10.1997இல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
22.11.1997இல் அமராவதி புதூர் குருகுலம் வளாகத்தில் சிவங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தா.கிருட்டிணன், சுப.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1998
30.6.1998இல் மேயர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1999
3.1.1999இல் சென்னைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை விமான நிலையத்தில் மேயர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
4.1.1999இல் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையத்தினை மேயர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30.8.1999இல் இளைஞர் அணியின் துணைச் செயலாளரும், தளபதி ஸ்டாலின் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், இளைஞர் அணித் தோழர்களின் உறவுப் பாலமாகவும் விளங்கிய அன்பில் பொய்யாமொழி மாரடைப்பில் காலமானார்.
2000
கடந்த 1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த ஊழல்கள் எண்ணற்றவை. தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரைத் திட்டம் வரை பல்வேறு ஊழல்கள் தலைவிரித்தாடின. டான்சி நில ஊழல் வழக்கு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பல்வேறு வழக்குகள் வழக்கு மன்றங்களில் பதிவாகின. அவற்றுள் ஒன்றான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று வழக்கு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு – கட்டாய கடையடைப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக தருமபுரியில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சென்ற பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் அக்கொலை பாதகச் செயலாளர் அப்பேருந்தில் பயணம் செய்த ஹேமலதா, காயத்திரி, கோகிலாவாணி என்னும் மூன்று மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். மற்றும் பல மாணவிகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இக்கொடிய சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
2001
2001ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஜான்பாண்டியனால் திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா உடனடியாக கழக வெற்றி வேட்பாளர் பரிதி இளம்வழுதியை கைது செய்தார்.
அதன்பின் சட்டமன்றத்தில் கழக ஆட்சியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி புழுத்துப் போய்விட்டதாகப் பொய் சொன்னார். அரசுக் கிடங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போனவை அல்ல என்பதை நிரூபித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செய்தியாளர்களுடன் சென்று மாதிரிகளை எடுத்து அவை நல்ல அரிசிதான் என்பதை நிரூபித்தார். இதனை அத்துமீறல் என்று கூறி ஜெயலலிதாஅரசு பொன்முடியைக் கைது செய்தது.
ஜெயலலிதாவின் ஏவல் துறையாக செயல்பட்ட காவல் துறையினர் ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களை அறைக் கதவுகளை உடைத்து, அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனைத் தட்டிக் கேட்ட மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர் பெங்களூருக்கு சென்றிருந்ததால் கைது செய்யவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை சிங்காரச் சென்னையாக்கிட பத்து மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்ததை ஊழல் என்று கூறி கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. தலைவர் கைது செய்யப்பட்டதையும், தான் தேடப்படுவதையும் அறிந்த தளபதி ஸ்டாலின் உடன் சென்னை திரும்பி காவல்துறையிடம் தன் ஒப்படைப்பு செய்தார்.
தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து நாடே கொந்தளித்தது. பலர் நெஞ்சதிர்ச்சியாலும், நஞ்சருந்தியும், தீக்குளித்தும் மாண்டனர். நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறையேகினர்.
தலைவர் கலைஞர் அவர்களை அக்கிரமமான முறையில் கைது செய்தததைக் கண்டித்து ஆகஸ்ட் 12ஆம் நாள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் வரை நடைபெற்றது. அமைதியான முறையில் தன் கண்டனத்தைத் தெரிவித்து நடைபெற்ற அந்தப் பேரணியை, காவல்துறைத் தலைவர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சியால் ஏவப்பட்ட கூலிப் படைகளும், காலிப் படைகளும் அரிவாள், பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஆறு தோழர்கள் மரணமடைந்தனர். எண்ணற்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர். சிதறியோடிய கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். இக்காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளர்களும் காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினர். காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். கழகத் தோழர்கள் வந்த வாகனங்கள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இப்பேரணியில் முழக்கமிட்டபடி தொழிலாளர் பேரணியை நடத்தி வந்த தொழிலாளர் முன்னேற்றக் கழக செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வை.பெருமாள் நெஞ்சதிர்ச்சியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக, தொண்டர் அணியின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொண்டர் அணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கலைஞர் விருது பொற் பதக்கம் வழங்கப்பட்டது. அப்பதக்கத்தை மிடுக்குடன் வந்து பெற்றுத் திரும்பிய தொண்டர் அணியின் செயலாளர் மாஸ்டர் தமிழ்ப்பித்தன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நெஞ்சதிர்ச்சியால் மாண்டார்.
தளபதி அவர்களின் தலைமையில் சிறப்பு மிகுந்த வெண்சீருடை அணிவகுப்பினை நடத்திக் காட்ட பயிற்சியளித்தவரும் தளபதி அவர்களின் தனியன்புக்கு உரியவருமாமன மாஸ்டர் தமிழ்ப்பித்தன் இழப்பு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
25.10.2001 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார்.

2002
22.04.2002 எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் மேயர் போன்ற உள்ளாட்சி மன்ற பதவி வகிக்க முடியாதபடி 22.9.2002இல் அ.தி.மு.க அரசு சட்டம் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் அவர்களின் மேயர் பதவியைப் பறித்தது.
சென்னை மாநகர தலைவராக (மேயராக) இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களின் பதவியைப் பறித்தது செல்லாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு கொடுத்தது. எனினும் இரண்டாவது முறையாக ஒருவரே மேயர் ஆக முடியாது என்று கூறியதால் மேயர் பொறுப்பை விடுத்தார்.
2003
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த கழக தளபதி மு.க.ஸ்டாலின் கழகத்தின் 12ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2.6.2003இல் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமுயற்சியால் தி.மு.க. இளைஞர் அணி நடத்தி வந்த திராவிட இயக்க வரலாறு கண்காட்சி, நிரந்தரமான கண்காட்சியமாக அண்ணா அறிவாலயத்தில் உருவானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணிக்கு தஞ்சை இரத்தினகிரியும், பொள்ளாச்சி மா.உமாபதியும் துணை நின்றனர். கலைஞர் கருவூலம் என்னும் குளிரூட்டப்பட்ட 10,000 சதுர அடி பரப்பளவு தளத்தில் அமைந்த அக்கண்காட்சி இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமை கொண்டது. கலைஞர் கருவூலத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
2004
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பிரகடனம் செய்தார். தலைவரின் அறிவிப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியது. இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தலைமையில் இக்கூட்டணி 40 இடங்களிலும் வென்று மகத்தான வரலாறு படைத்தது.
மத்திய அரசில் தமிழகத்தின் சார்பில் ஆறு கேபினட் அமைச்சர்களும், ஆறு இணை அமைச்சர்களுமாக 12 தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி பாராட்டுக் கூட்டம் நடத்தியது.


தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு பகுதி 1

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில் 
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy)நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990

Thursday, 23 August 2018

கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்கனும். 40000 ஈழமக்கள் இறந்தது எப்படி ? உண்மையில் யார் காரணம்.?

கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்கனும். 40000 ஈழமக்கள் இறந்தது எப்படி ? உண்மையில் யார் காரணம்.?

Read 👇

https://www.hrw.org/report/2009/02/19/war-displaced/sri-lankan-army-and-ltte-abuses-against-civilians-vanni



Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka was a 2011 report

Read 👇

https://en.m.wikipedia.org/wiki/Report_of_the_Secretary-General%27s_Panel_of_Experts_on_Accountability_in_Sri_Lanka

தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

By கிருபன், November 10, 2012 in அரசியல் அலசல்  November 10, 2012

தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.

படிங்க 👇



https://www.yarl.com/forum3/topic/111081-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6-%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/