Monday, 9 April 2018

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம்

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம் அயோக்கியத்தனமானது. திரு.ஸ்டாலினை தவிர மற்றவர்கள் கண்டுக்கொள்ளாதது ஏன்?
ஏனென்றால் மக்களுக்கு இதெல்லாம் புரியாத விசயம்.இதனால் ஓட்டு இழப்பு ஏதும் வராது. அதனால் கள்ள மௌம்.
தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ
மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே
அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ.
உபி செலுத்துவது 7000ரூ
திரும்ப பெறுவது 11200ரூ.
ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ
திரும்ப பெறுவது7800ரூ.
13 வது நிதிக்குழு வரை மற்ற அம்சங்களுடன் 1971 மக்கள்தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு
மாநிலங்களுக்கு பங்கு பிரித்தது
ஆனால் 14வது நிதிக்குழுவில்
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 17.5% என்றும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10% என்றும் எடுத்துக் கொண்டதால் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய பங்குத்தொகையில்
19% குறைந்தது.
அதாவது 13 வது நிதிக்குழு வருவாயுடன் 14 வது நிதிக்குழு வருவாயை ஒப்பிட்டால் சுமார் 6000 கோடி தமிழகத்திற்கு நஷ்டம்.
இந்த லெட்சணத்தில் 15 வது நிதிக்குழுவில் 2011 சென்சஸ் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படப் போவதாக தகவல் வெளியாகவுள்ளது.
அது நடந்தால் 13 வது நிதிக்குழு வருவாயுடன் 15 வது நிதிக்குழுவை ஒப்பிடும் போது
தமிழகம் சுமார் 70% நிதிஇழப்பை சந்திக்க நேரிடும்
எந்தெந்த அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி பிரித்து வழங்கப்படுகிறது என்ற விபரம் கீழே.
                    commission
Factor              13th                   14th  
Population
(1971)                25%                 17.5%
Population
(2011)                  0%                      10%
Fiscal
Discipline.          17.5%                    0%
Income
Distance            47.5%                  50%
Area.                   10%                     15%
Forest Cover.    0%                       7.5%
Total.                 100%                  100%
வரும் 15 வது நிதிக்குழுவில் 14 வது நிதிக்குழுவில் சொல்லப்பட்டுள்ள மற்ற அம்சங்களை மாற்றாமல் 1971 சென்சஸ் கணக்கை புறந்தள்ளிவிட்டு 2011 சென்சஸை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழகம் சந்திக்கப்போகும் நிதிஇழப்பு இப்போதைய 19% லிருந்து 70% மாக அதிகரிக்கும்.
2020 ஏப்ரலில்தானே அறிமுகமாகும் என்று இப்போது தூங்கினால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது.

By A.Parimalam ( THE NEWS MAN

No comments:

Post a Comment