Monday 30 July 2018

மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான்

மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான்.

2006-11 மின் பற்றாக்குறைவுக்கு காரணம் ஜெயலலிதா 2001-06 வரை மின் திட்டங்களே கொண்டு வராத காரணத்தினால்தான்.

திமுக ஆட்சியில் 1200MW உற்பத்தி செய்ய 1996-2001 வரை 11 மின் திட்டங்களை கொண்டு வந்தது.

DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity

ஆனால் ஜெயலலிதா 2001-06 ஆட்சியில் எந்த புதிய மின் திட்டத்தையும் கொண்டுவரவில்லை

மேலும் இன்று மின் பற்றாக்குறை இல்லாமைக்கு காரணம் 2006-11 ல் கலைஞர் கொண்டு வந்த மின்திட்டங்கள்தான்

எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26-6-2007-ல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் உற்பத்திதான் இன்று பலன் தருகிறது

மேலும்the 800 MW plant at Udankudi at an investment of Rs. 8,362 crore, 183 MW generation through cooperative sugar mills திட்டமிடப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

2006-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011-ல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012-ல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013-ல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014-ல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

2006-ம் ஆண்டு தமிழகத்திலே திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால்,திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியும் இருக்க மாட்டார்கள்


1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே 1991 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 20 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்தது
 

அதற்கு முன்பே, 3.10.1982 முதல் 26.7.1984 வரை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்தது

By
Antony Parimalam




















2 comments:

  1. தி மு க ஆட்சியில் நல்ல பொருளாதார சூழல் இருந்தது நகரங்கள் விரிவாக்கமும் அமைந்தது
    உற்பத்தி பொருளாதாரம் போன்றவற்றில் முதல் ஐந்து மாநிலத்தில் இருந்தது மின் இல்லாமல் இது சாத்தியமில்லை
    தொழிற்சாலை உற்பத்திக்கு வீட்டுக்கு மின்சாரம் வழங்கபடுதலை விட முன்னுரிமை வழங்க பட்டது பொருளாதா நெருக்கடி மக்களுக்கு இல்லை மேலும் மின்சார கட்டணம் மிக குறைவாக இருந்தது
    ஆனால் இன்றைய 2011 to 2018 ஆட்சியில் 100 மடங்கு மின் கட்டணத்தை அதிமுக உயர்த்தியுள்ளது

    பொருளாதார உற்பத்தி நிலையில் 15 ம் இடத்திற்கு சென்று விட்டது பொது மக்களுக்கு எப்படியோ கரண்ட் இருக்கு என்று நினைத்தால் அதை விட வேதனையான மறுபக்கம் வருமானம் பொருளாதாரம் இல்லை
    டிவி பார்க்க கரண்ட் இல்லை என்று கோபபட்டு அதிமுகவுக்கு ஓட்டு போட்டு வருவாய் இழந்ததது தான் மிச்சம்
    கொஞ்சம் பொறுத்து இருந்தால் திமுக சீர் செய்து இருக்கும்

    கூடுதலாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட கூடங்குளம் மின் உற்பத்தி காலம் கடக்க பட்டு கொண்டே சென்றது
    அது உற்பத்தி தொடங்கும் காலத்தில் அதிமுக ஆட்சி என்ற நிலை வந்துவிட்டது

    ReplyDelete