இறுதி போரில் இந்தியா ஆயுதம் கொடுத்ததாகவும்,கலைஞர் அதை தடுக்கவில்லை எனவும் விஷத்தை பரப்ப சொல்லி அனுப்பப்பட்ட ஒரு விசுவாச நாயின் தும்பிகளுக்கும்,தெருவில் அடாவடி செய்த ரௌடி பின் தாதாவாகி பல கொலைகள் செய்து பின் மண்டையில் வெட்டப்பட்டு செத்தவனின் அடிவருடிகளுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்
மே 20 அன்று இஸ்ரேலிய தளபதி மோஷே தயானின் பிறந்தநாள்,
ஆச்சரியமாக அதே நாளில்தான் புலிகளும் முடிந்ததாக அறிவிக்கபட்டது
ஆச்சரியமாக அதே நாளில்தான் புலிகளும் முடிந்ததாக அறிவிக்கபட்டது
புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்பந்தம் என்றால் கண்டிப்பாய் உண்டு
1983ல் ஈழபோராளிகளுக்கு பயிற்சி என்றவுடன் புலிகளை தவிர எல்லோரும் அராபத்திடம் பயிற்சி பெற பாலஸ்தீனம் சென்றனர்,உமா மகேஸ்வரன்,பத்மநாபா எல்லாம் அவ்வகை
புலிகள் இலங்கையிலே கண்ணில்பட்டோரை கொன்று பயிற்சி என சொல்லி சுட்டு கொண்டிருந்தனர்.
இந்தியா இதன் பின்பே மொத்தமாக எல்லோரையும் அழைத்து பயிற்சி அளித்தது எனினும் பாஸ்தீன அராபத் என்பவரே முதலில் ஈழபோராளிகளுக்கு பயிற்சி அளித்தவர்
பயிற்சி கொடுத்த இடம் லெபனான்
இலங்கை அரசு சாமான்யபட்டதா? அவர்களுக்கு அன்று அதுலத் முதலி என்றொரு சூரர் இருந்தார் அவர் சொன்னார இவர்களுக்கு பாலஸ்தீனம் என்றால் நமது தேர்வு இஸ்ரேல் தவிர யாராக இருக்க முடியும்?
இஸ்ரேல்-சிங்கள உறவு வலுவடைந்தது,சிஐஏ சிரித்து கொண்டிருந்தது
அதுவரை லண்டனில் பாடம் நடத்தி வெள்ளைக்கார மனைவியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பாலசிங்கம் இனி நானே புலிகளின் வழிகாட்டி என வந்து அமர்ந்தார்
பாலசிங்கம் ஏன்? எப்படி வந்தார் என தெரியாது,அவர் வந்தபின்பே புலிகளின் போக்கு மாறிற்று, இந்தியா அவர்களின் எதிரியானது.
இதனால்தான் பாலசிங்கத்தை இந்தியா கடைசிவரை உள்ளே விடவில்லை
நம்புவீர்களோ இல்லையோ நடந்தது இதுதான்.
பாலஸ்தீனில் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் புலிகளால் கொல்லபட்டனர்,உமா,பத்மநாபா என எல்லோரும் வரிசையாக அனுப்பிவைக்கபட்டனர்,உச்சமாக இஸ்ரேல் எதிரியான ராஜிவும் அனுப்பி வைக்கபட்டார்
இதனால்தான் கடைசி வரை பிடல் காஸ்ட்ரோ புலிகளை போராளி என்று சொல்லவே இல்லை,அவர் புலிகளை கணக்கில் வைக்கவே இல்லை
இஸ்ரேலின் கணக்கு துல்லியமானது,ஒருவேளை இலங்கையில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் வென்றிருந்தால் அவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பார்கள்,அது சிக்கல். முளையிலே கிள்ள வேண்டும்!
ராஜிவ் உயிருக்கு ஆபத்து என அராபத் அலறியதும் இதனாலே
ராஜிவின் மரணத்திற்கு பின்பே இந்தியா இஸ்ரேலுடன் நெருங்கியது.
வெளியே பார்த்தால் புலிகள்,சிங்களம்,இந்தியா என்றிருந்த போராட்டத்தில் உள்ளே நடந்தது உளவுத்துறை சண்டைகள்
இப்படியாக பாஸ்தீன ஆதரவு போராளி எல்லாம் புலிகளால் தொலைக்கபட்டனர்
புலிகள் விடுவார்களா?
அந்த அதுலத் முதலியினையும் கொன்றதும் இஸ்ரேலுக்கு அப்செட்,எனினும் இனி பாலஸ்தீன ஆதவாளர்கள் யாரும் களத்தில் இல்லை என்பதால் அமைதி காத்தது
புலிகள் இருந்தாக வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது,அமெரிக்காவிற்கும் இருந்தது,அதைகாட்டி ஆயுதம் விற்கும் வியாபாரமும்
இஸ்ரேலுக்கும் இருந்தது இதனால் இந்தியா ஈழத்தை விட்டு ஒதுங்கியதும் இஸ்ரேல் அமைதிகாத்தது
2005களில் இனி புலிகள அகற்றபட வேண்டும் என மேற்குலகம் தீவிரமாக இறங்க புலிகளை ஒழிக்க பலநாட்டு தளபதிகள் களத்தில் இறங்கினர்.
அதில் இஸ்ரேலிய பாணி வித்தியாசமாயிருந்தது
சிங்கள தளபதிகளுக்கு புது கோணத்தில் பாடம் நடத்தினார்கள்
அதுவரை சிங்களம் தெற்கே இருந்து "பாதை போ பாதை போ பயிற்றங்காய் பறியாமல் போ" என செல்லும் புலிகள் வந்து தடுப்பர் நேருக்கு நேர் சண்டையிடுவார்கள் ராணுவம் திரும்பும்
இஸ்ரேலியர் சுற்றி வளைத்து அடிக்கும் நுட்பத்தை சொல்லி கொடுத்து
புலிகளை கலைத்து அடிக்க சொல்லிகொடுத்தனர்
குறிப்பாக ஆழ ஊடுருவும் அணி இஸ்ரேல் பாணி,ஒரு நபர் ஒரே ஒரு நபர் புலிகள் கட்டுபாட்டு பகுதியில் ஊடுருவுவார்,தகவல் அனுப்புவார் கொலை செய்வார் இன்னும் ஏராளம்
ஆனால் செய்தது யார் என தெரியாது,தடயம் இருக்காது, புலிகளுக்குள்ளே சண்டை வரும்.
சந்தேகம் மேலோங்கும் தங்களுக்குள்ளே எதிரி இருப்பதாக நினைத்து உள்ளுக்குள் மோதி பலமிழப்பர்
இவ்வகை ஆட்டமும் இறுதி யுத்தத்தில் நடந்தது
கவனியுங்கள் 2006ல் இருந்து புலிகளை 3 பக்கம் சுற்றி அப்படியே முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்தி கடைசியில் மண்டையில் போட்ட யுத்தம் அது,அற்புதமான வியூகம்
புலிகளும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய பாதுகாப்பான மண் அரண்களை அமைத்து சிங்களன் இதை தாண்டுவானா என கேட்டுகொண்டிருந்தனர்,அதை கண்ட இஸ்ரேலியருக்கு சிரிப்புத்தான் வந்தது
இஸ்ரேலிய கிபீர் விமானமும்,இஸ்ரேலிய படை வியூகமும் ஈழப்போரில் முக்கிய பங்கு வகித்தன (இந்திய தளவாடமாம் 😂)
இந்த வியூகங்கள் எல்லாம் அன்றே சொல்லிகொடுத்தது மோசே தயான்
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என வாழ்நாள் முழுவதும் யுத்தம் நடத்திய தயான்
"அதில் 100 மக்கள் செத்தாலும் 1 தீவிரவாதி தப்ப கூடாது,காரணம் தப்பிய 1 தீவிரவாதி பின்னால் 1000 மக்களை கொல்வான், குறைந்த சேதாரம் தவிர்க்க முடியாதது"
இந்த தத்துவத்தில்தான் ஈழப்போர் நடந்தது,புலிகள் சிங்கள ராணுவத்தில் லஞ்சம் மூலம் ஊடுருவியிருந்தனர் அதை களைந்ததிலும் இஸ்ரேலிய பங்கு உண்டு.
எப்படி என்றால் பாம்பின் கால் பாம்பறியும்,கடைசி வரை கொழும்பில் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தாமல் போனது இப்படித்தான்
ஆக என்றோ மோசே தயான் சொன்ன பாடங்கள் பின்பு புலிகளுக்கு எதிராகவும் திரும்பின
எல்லாம் சரி,இலங்கை மேல் இஸ்ரேலுக்கு என்ன பாசம்?
ஒரு மண்ணும் இல்லை!
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் குறி வைத்திருப்பார்கள்
முன்பு சிங்கப்பூரை விழுங்குவேன் என கொக்கரித்த இந்தோனேஷிய அதிபர் சுகர்னோவினை அடக்கியதிலும் இஸ்ரேல் பங்கு உண்டு
உலகெல்லாம் தேவைபடுவோர்க்கு உதவி தனக்கு வெண்டியவர்களாக மாற்றுவதில் கில்லாடி அவர்கள்
இந்தியா பாலஸ்தீன ஆதரவு நாடாக இருந்ததும் இலங்கைக்கு அவர்கள் உதவ முக்கிய காரணம்
மிக சரியாக மோசே தயான் பிறந்த நாளில்தான் இலங்கையிலும் அவர்கள் சாகசமாக புலிகளை துடைத்தெறிந்தார்கள்
புலிகளை வைத்தே பாலஸ்தீன் பயிற்சி பெற்ற போராளிகளை கொன்றுவிட்டு,ராஜிவினையும் கொன்றுவிட்டு,பிரேமதாசவினையும் கொன்றுவிட்டு சகலைரையும் கொன்றுவிட்டு கடைசியில் புலிகளையும் அழித்துவிட்டது
அந்த அறிவார்ந்த கூட்டம்
ஆனால் ஜெயவர்த்தனே ஆட்டமும் பாராட்டதக்கது,இந்தியா வளர்த்த ஈழபோராட்டத்தை இந்தியா கொண்டே அடக்க திட்டமிட்டு,அமைதிபடை அழைத்து இருவரையும் மோதவிட்டு,பின் இந்தியா ஒதுங்கி,அதன் பின் புலிகளை அனாதையாக அழிக்க திட்டம் போட்டவர்,பின்னாளின் வெற்றிக்கு அவர்தான் பிதாமகன்
உலகின் மிக இறுக்கமான கொடூர,தற்கொலை தாக்குதலை எல்லாம் அசால்ட்டாக நடத்தும் என சொல்லபட்ட புலிகளை,தீவிராவதத்தை அனுதினமும் எதிர்கொள்ளும் நாடு என கருதபடும் இஸ்ரேல் உதவியுடன் இலங்கை ஒழித்து கட்டபட்ட கதை இதுதான்
உலக நிலவரம் இப்படி இருக்க கலைஞர் கொன்றார்,சோனியா கொன்றார் என சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள்,அவர்கள் அப்படித்தான்😂 சிரித்துவிட்டு கடந்துவிடுங்கள்
பிகு:இந்தியா புலிகளுக்கு உதவ காரணம் இலங்கையில் தனக்கொரு பிடி தேவை என்றே!
ஈழம் ஒரு சர்வதேச அரசியல்
புரிய முயற்சி செய்யுங்கள்
Please READ 👇
No comments:
Post a Comment