Friday, 18 December 2020

விவசாயிகள் நண்பன் திமுக

 #விவசாயிகள்_நண்பன்_திமுக  1) விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 ,40, 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2) விவசாயி பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் .அதை 2006-2007 ல் கழக அரசு 7% எனக் குறைத்தது  6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாய் கடன்  2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1393 கோடியே 97 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 3) விவசாய பயிர் கடன் வட்டி 2008-2009-ல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 லட்ச ரூபாயும் கடன் வழங்கப்பட்டது  2009-2010-ல் பயிர்க்கடன் களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 திமுக ஆட்சியில் 2006- 2011வரை மொத்தம் 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 லட்ச ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது நிலுவையில் உள்ள மேலும் 2 லட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 வேளாண் துறைக்காக 2001-2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 137 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது 2006-2011 ஐந்தாண்டு கால திமுக கழக ஆட்சியில் 7 ஆயிரத்து 437 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2005-2006-ல் அ.தி.மு.க. அரசு நெல்லுக்கு வழங்கிய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 600; திமுக அரசு ஆண்டுக்காண்டு இதனை உயர்த்தி, 2009-2010-ல் சாதா ரக நெல் விலை 1,050 ரூபாய் என உயர்த்தி வழங்கியது #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 2009-2010-ல் 9.5 % சர்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மைய அரசு நியாய மற்றும் ஆதாய விலையாக 1,077 ரூபாய் 60 காசு என அறிவித்த போது திமுக அரசு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை உட்பட டன் ஒன்றுக்கு 1,650 ரூபாய் என வழங்கியது. #விவசாயிகள்_நண்பன்_திமுக

 பெரியாரின் பிறந்த நாளான 17.9.2006 முதல் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,78,796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு 2,12,853 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது; #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 2006-2011 திமுக ஆட்சியில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 திமுக ஆட்சியில் உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட 1999-ல் அறிமுகப் படுத்தப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்தின்கீழ் 2001 மே வரை 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை ஈர்த்தன; 2006-11-ல் மேலும் 50 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக


 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக 50% மானியத்தில் புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் 62,772 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக புதிய பம்பு செட்டுகள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 2006-11 திமுக ஆட்சியில்... தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 282 கோடியே 63 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 213 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், ஆக மொத்தம் 496 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 திமுக ஆட்சியில் 2007-08 ஆண்டை விட 2008-2009-ம் ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் ராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தைப் பின்பற்றிய காரணத்தால் அரிசி உற்பத்தியில் பின்னடைவு ஏதுமில்லாமல் 51 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் பெற முடிந்தது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 ராஜராஜன் 1000 திட்டத்தின்கீழ், திமுக ஆட்சியில் 3 லட்சத்து 63 ஆயிரம் கோனோ களையெடுக்கும் கருவிகளும், 2 லட்சத்து 43 ஆயிரம் மார்க்கர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தால் 30%-40% மகசூல் அதிகரித்தது ஆய்வுகளில் தெரிகிறது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 ல் கொண்டுவரப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர். நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 திமுக ஆட்சி 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது. அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர். #விவசாயிகள்_நண்பன்_திமுக


 கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர். #விவசாயிகள்_நண்பன்_திமுக

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 

 விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. #விவசாயிகள்_நண்பன்_திமுக


 பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர். #விவசாயிகள்_நண்பன்_திமுக


 2006-2010- ல் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 விவசாயிகளுக்கு 1990ல் இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர் தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்துகிற 21.4 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது #விவசாயிகள்_நண்பன்_திமுக

 1996 முதல் 2001ம் ஆண்டில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் தமிழக முழுவதிலும் அமைத்தார் கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 1996-ல் வந்த கலைஞர் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை 25 % 27% அதிகரித்தார். 1996-2001-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்கைச் சீற்றத்தால் இறக்கும் ஆடுகளுக்கு 1000 ரூபாயும், மாடுகளுக்கு 5,000 ரூபாயும், கன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கியவர்.  #விவசாயிகள்_நண்பன்_திமுக

 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நவீன வங்கிக் கட்டிடங்கள், 10,000 எக்டேர் தரிசு நிலத்தினை மேம்பாடு செய்து மரக்கன்று சாகுபடி, நிலமற்ற விவசாயிகளுக்கு வயதின் அடிப்படையில் மாத ஓய்வூதியம்.. தந்தது கலைஞர்

 #விவசாயிகள்_நண்பன்_திமுக  


கூட்டுறவு வங்கிகள் நகைக் கடனை 1 லட்சமாக உயர்த்தியது, யூரியா உரத்திற்கு விற்பனையாக இருந்த 4 விழுக்காட்டு வரியை 2 விழுக்காடாகக் குறைப்பு, பழைய ஆயில் இஞ்ஜின்களுக்குப் பதிலாக புதிய ஆயில் இஞ்சின் வழங்குதல், செய்தது கலைஞர் #விவசாயிகள்_நண்பன்_திமுக 


 இதைவிட செய்ய வேறு என்ன இருக்கிறது? 


 Antony Parimalam

Friday, 9 October 2020

2G அலைக்கற்றை தொடர்பாக திரு ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்.. 

  2G அலைக்கற்றை தொடர்பாக திரு ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்.. 


 குற்றச்சாட்டு (1) 


 2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில் டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா? 2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில் டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா  ? ராசா செய்தது சரியா இல்லை தவறா?


 1) உண்மையில் சமீபத்திய 2015 இல் நடந்த ஏலத்தால் டெலிகாம் துறைக்கு கிடைத்தது ஒரு MHz க்கு 290 கோடி மட்டுமே. 2007-08 ஆம் ஆண்டிலேயே  ராஜா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்  டெலிகாம் துறைக்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  வருமானத்தை  பெற்று தந்துள்ளார்.


 2) மேலும் ஏலமுறையில் ஒரு முறைதான் டெலிகாம் துறைக்கு வருமானம் வரும். ஆனால்  ராஜாவின் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் லைசென்ஸ் பீஸ் முதலில் வாங்கப்படும். அதன் பின்னர் லைசென்ஸ் பெற்ற அந்த கம்பெனி ஒவ்வொரு ஆண்டும் தான் செய்யும் வியாபாரத்தை பொறுத்து டெலிகாம் துறைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். இதனால் டெலிகாம் துறைக்கு இரண்டு விதத்தில் வருமானம் வந்தது.


 3) ஏலமுறை வந்ததால் சிறிய நிறுவனங்களால் ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.  எந்த வித போட்டியும் இல்லாததால் பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் உடன்பாடு செய்து கொண்டு மனம் போன போக்கில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்தி கொண்டே உள்ளனர். இப்போது சொல்லுங்கள் ராஜா செய்தது சரியா ..தவறா.,


 2G மறு ஏலம் மிகப்பெரிய தோல்வி சமீபமாக 2G மற்றும் 3G அலைக்கற்றை 380+5=385 MHz. டெலிகாம் துறையால் ஏலம் விடப்பட்டது. அதில் அரசுக்கு 385 MHz க்கு 1,09000 கோடி கிடைத்துள்ளது. 


 அதாவது ஒருMHz சராசரியாக. சுமார் 290 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.


 ஆனால் வினோத்ராய் ஒருMHzக்கு 3350 கோடிக்கு ஏலம் போகும் என கணக்கிட்டதன் அடிப்படையில்  385 MHzக்கு 12,89,750 கோடி வருமானம் ஏலத்தில் வந்திருக்க வேண்டுமே.


 ஆனால் வந்திருப்பது  வெறும் 109000 கோடிதானே. 


 இதன் மூலம் வினோத்ராய் என்னும் பொய்யரின் கணக்கு தவறு என நிரூபணமாகியுள்ளது.   


      2007-08 ஆம் ஆண்டிலேயே ராஜாவால் டெலிகாம் துறைக்கு 52 MHz க்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  சுமார் 14000 கோடி  வருமானம்  வந்துள்ளது.


 ராஜா விற்பனை செய்த 52 MHz ஐ ஏலம் விட்டால் அரசுக்கு 174000 கோடிகள் கிடைத்திருக்கும் என ஒரு மெகா பொய்யை திட்டமிட்டே சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


  குற்றச்சாட்டு (2)

 கட் - ஆப் (Cut-off) தேதியை மாற்றி ராசா தவறு செய்துவிட்டார் என்ற CBI குற்றச்சாட்டு சரியா ? 


 ராசா டெலிகாம் மந்திரியானவுடன் யாருக்கும்  ஒதுக்கப்படாமல் ஸ்பெக்ட்ரம் இருப்பதை கண்டறிந்தார். அதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்பட்டு வந்தது. 


 ராசா உடனடியாக ஸ்பெக்ட்ரம்  விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார்.  1-10-2007 க்குள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் ஆனது.


 ஆனால் எதிர்பாராத விதமாக 575 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. கையிருப்பு வெறும் 52 MHz ஸ்பெக்ட்ரம் மட்டுமே. எனவே கடைசி தேதி 25.9.2007 என அட்வான்ஸ் செய்யப்பட்டது. 


 இதைத்தான் ஊழல் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வரப்பெற்ற 575 விண்ணப்பங்களுக்கும் எந்த லைசென்ஸும் வழங்கப்படவில்லை. 


 அதனால் கட்ஆப் தேதி மாற்றத்தால் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.  


இந்த 575 விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு  பலமாதங்கள் முன்பே  வந்திருந்த விண்ணப்பங்கள் சற்று தாமதமாக கண்டறியப்பட்டது. 


 எனவே அந்த விண்ணப்பங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவேடு மற்றும் வந்த தேதி அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதில் என்ன தவறு ? 


 அவ்வாறு வழங்கப்பட்ட கம்பெனிகளில்தான் ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் வருகின்றன. இரண்டு கம்பெனிகளும் எதிரி கம்பெனிகள். இரண்டு எதிரெதிரான கம்பெனிகள் கூட்டுசதியில் எப்படி ஈடுபடுவார்கள்  ?


 ராசாவால்  2G லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள் அதை பயன்படுத்தி பெரிய தொகை லாபம் அடைந்து விட்டதாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் ராசாவால் வழங்கப்பட்ட அத்தனை லைசென்ஸ்களும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


 இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய கம்பெனிகளும் முதலில் தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவார்கள். பிறகு அதை பயன்படுத்தி புதிய பங்குகளை வெளியிட்டு அதில் பெரிய லாபம் பார்ப்பார்கள்.


 பின்னர்தான் தொழில் தொடங்குவார்கள். அதற்குள் சில வருடங்களே ஆகிவிடும். இதெல்லாம் உச்ச நீதிமன்றம் அறியாததா? முழுமையாக விசாரித்து அதன் பின்னர்தானே லைசென்சை ரத்து செய்திருக்க வேண்டும். இதற்கு பெயர்தான் ஜனநாயகமா  ?


 குற்றச்சாட்டு(3) 


 2G கூட்டு சதியா? 


 ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளுடன் ராசா கூட்டு சதியில் ஈடுபட்டார் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டு சரியா  ? அல்லது சதியா? 


 ராசா டெலிகாம் மந்திரி ஆவதற்கு முன்பே ஸ்வான் கம்பெனி லைசென்ஸ்க்கு விண்ணப்பம் செய்திருந்தது. 


 மேலும் ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நிலையில் கூட்டுசதி எப்படி சாத்தியம்? 


 சதிக்கு ஆதாரம் என்ன? ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து முதலீடு பெற்றது தவறு என்கிறது சிபிஐ


 ஆனால் இதே டெலிகாம் துறையில் டாடா டெலிசர்வீஸ் லிட் , சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் மற்றும் எஸ் டெல் போன்ற கம்பெனிகள் மிப்பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் பெற்றிருக்கிறார்களே  . அதை அரசும் சிபிஐயும் கண்டுக்கொள்ளவில்லையே. அது ஏன்? 


 டெலிகாம் துறையில் மிகப்பெரிய முதலீடு தேவை என்ற நிலையில் புதிய கம்பெனிகள் தொழில் தொடங்க முதலீடு பெறவும் புதியதொழில் என்றால் காலதாமதம் என்பதும் நடக்கக்கூடியதுதானே. 


 அது சரி இதற்கெல்லாம் எதை ஆதாராமாக வைத்து ராசாவை தொர்பு படுத்துகிறது சிபிஐ. ? நாடகத்தை ஆரம்பித்து விட்டு திரு திரு என முழிக்கிறார்கள்.


 If Swan and Unitech are to be charged because of the equity infusion into their companies, then the prosecution (CBI) has to explain why it has not charged Tata Teleservices Ltd, Sistema Shyam Teleservices, and S Tel, which also had infusion of foreign equity of much greater amounts.'' "The prosecution (CBI) theory of one conspiracy among all accused is ex-facie absurd.'' Swan had already applied for a licence in March 2007, before Raja became the telecom minster. It had no reason to conspire with him. Plus, Unitech and Swan were direct rivals. They would never conspire with each other. "Unitech never got spectrum in Delhi circle and Swan did not get it in some other districts. There is no evidence at all to suggest a to suggest a common conspiracy between Swan and Unitech.'' 


By Antony Parimalam

மேலும் அறிய

2G தொடர்பான உண்மைகள். https://www.facebook.com/notes/prakash-jp/2g-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/483094071791770

Wednesday, 16 September 2020

நீட் தேர்வு யாரால் வந்தது?

 நீட் தேர்வு யாரால் வந்தது? 


முழுமையான விளக்கம் 👇


 கலைஞர் தேர்தல் அறிக்கையிலும், 2006ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும்,  பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்தார். 


 அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்  அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார். அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு  அனுப்பி 3.3.2007 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றது திமுக ஆட்சிதான்.


 இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் திமுக ஆட்சியில்தான். 


 பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் கழக ஆட்சி இருந்தபோதுதான். 


 பிறகு 2012 இல்தான் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிவித்தது. உடனே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் அதை எதிர்த்தன. அந்த வருடம் தேர்வை நடத்தவில்லை. அதன் பிறகு மத்திய அரசு முதன் முதலில் மே 5 2013 இல் நீட் தேர்வை அறிவித்தது. கலைஞர் எதிர்த்ததால் விருப்பப்படும் மாநிலங்கள் சேரலாம், கட்டாயமில்லை என அறிவித்தார் கபில் சிபல்.


 அதை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை18, 2013 இல் உச்சநீதிமன்றம் NEET தேர்வுக்கு தடை விதித்தது.


 2014 ல் ஆட்சிக்கு வந்த BJP NEET விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது. 2016 ஏப்ரல் 11 ல் ஐந்து நபர்கள் அரசியலாசன பெஞ்ச் மத்திய அரசுக்கு நீட் தேர்வை அனுமதித்து உத்தரவிட்டது. காங் கொண்டுவந்த Neet ல் விருப்பப்பட்ட மாநிலத்துக்கு மட்டுமே என்ற சரத்தை நீக்கி அனைத்து மாநிலத்திற்கும் என கட்டாயமாக்கிய புது வரைவு நகலை தயாரித்த Bjp அரசு அதை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற ஒப்புதலையும் பெற்றுவிட்டது காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட நீட் தேர்வை தொடர்ந்து போராடி உச்சநீதிமன்ற அனுமதி பெற்றது மோடியின் BJP அரசுதான். 



 2016 இல் ஜெ ஆஸ்பத்திரியில் இருந்தபோது  நவம்பர் 23- அன்று மத்திய BJP அரசு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறும் என அரசாணை பிறப்பிக்கிறது


மீண்டும் நீதிமன்றத்தில் அனைத்து மாநிலத்திற்கும் நீட்டை கட்டாயமாக்கி உச்சநீதி மன்றத்தில் நீட் மசோதா மனுதாக்கல் செய்து உத்தரவு பெற்றது மோடியின் BJP அரசு நாள் 2016 ஏப்ரல் 11. தமிழகஅரசின் நீட் மசோதாவை குடியரசுதலைவருக்கு அனுப்பாததும் BJP மோடி அரசே.



 அதிமுகவின் துரோகம்


 "நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் 01.02.2017 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார். அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 21 மாதங்களாக சட்டப்பேரவையிலோ வேறு எங்குமோ எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைத்தது அதிமுக அரசு. 


BJP யினரும் வாயை திறக்கவில்லை சட்டசபையில் அப்போதே உண்மையை சொல்லியிருந்தால் ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திட முடியும் என 201வது விதி கூறுகிறது. 


 பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பவரால் நீட் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று 6 ஜூலை 2019ல் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில்தான் சட்டசபை தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்ட விபரத்தை மத்திய அரசு வக்கீல் வெளிட உண்மை வெளியே தெரிந்தது. கடைசிவரை உண்மையை அதிமுக வெளியே சொல்லவேயில்லை 21 மாதங்களாக உண்மையை மறைத்த அதிமுக அரசின் துரோகத்தை மன்னிக்க முடியுமா? 



 ஸ்டாலின் அறிக்கை நாள் 12,ஜூலை 2019👇


 நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ‘நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள்’ என்று முதலமைச்சர் பழனிசாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக  சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 


 நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது முதலமைச்சராக இருந்த கலைஞர்தான். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட்  தேர்வுக்கு தடையும் பெற்றார்.


 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் இருந்தபோதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. 


 நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசு தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான். நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்கு தவறான தகவலை தந்து கொண்டிருப்பதும் அதிமுக  அமைச்சர்களும், முதலமைச்சரும்தான் ஏன் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியது. ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரைவார்த்து விட்டு- பாஜவின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிசாமிதான்


.   ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரசாரத்தில் ஈடுபடும் முதலமைச்சரும், அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும்  தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான்” என்கிறார்.


 ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005  தேதியிட்ட அரசு ஆணை, ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார். இந்த அடிப்படை தகவல்கள் கூட சுகாதாரத்துறை  அமைச்சராக இருப்பவருக்கு தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். 


 ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் திமுக ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை  நடைபெறக் காரணமாக இருந்ததும் திமுக ஆட்சிதான் என்பதை முதலமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனிமேலாவது “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கறையை அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, திமுக மீது  மீண்டும் மீண்டும் பழிபோடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்


 https://m.dinakaran.com/article/News_Detail/509782/amp

Saturday, 8 August 2020

கலைஞரும் - மின்சாரத்துறையும் :

 கலைஞரும் - மின்சாரத்துறையும் :

திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது!

காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும்.

அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம்,

1️⃣. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970

2️⃣. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970

3️⃣. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971

4️⃣. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971

5️⃣. வைகை 6 MW மின் திட்டம், 1990

6️⃣. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990

7️⃣. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998

8️⃣. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000

9️⃣. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001

🔟. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011

1️⃣1️⃣. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011

1️⃣2️⃣. 7 சர்க்கரை ஆலைகளில் 162 MW திறன் கொண்ட இணைமின்  உற்பத்தி திட்டங்கள்

1️⃣3️⃣. திருவண்ணாமலை அருணாசலம் சர்க்கரை ஆலையில் 19 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்

1️⃣4️⃣. காஞ்சிபுரம் பழைய சீவரம் 12 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்

1️⃣5️⃣. ஈரோடு வேலம்பாளையம் 10 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டம்

1️⃣6️⃣. சூரிய சக்தி மூலம் 165 KW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள் 

1️⃣7️⃣. பேசின் பிரிட்ஜ் 196 MW திறன் கொண்ட டீசல் என்ஜின் மின் உற்பத்தி திட்டம்

1️⃣8️⃣. சாத்தனூர் 7.5 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்

1️⃣9️⃣. Parsan's Valley 30 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டங்கள் 

2️⃣0️⃣. திருமூர்த்தி 1.95 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்

2️⃣1️⃣. முக்குருத்தி 0.70 MW  திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம் 

2️⃣2️⃣. நெய்வேலி 250 MW திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி கூடுதல் மின் உற்பத்தி திட்டம்

2️⃣3️⃣. ஜெயங்கொண்டம் 500 MW திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டம் 

2️⃣4️⃣. சாமல்பட்டி 106 MW மின் திட்டம்

2️⃣5️⃣. பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 MW  மின் திட்டம்

2️⃣6️⃣. சமயநல்லூர் 106 MW  மின் திட்டம்

2️⃣7️⃣. திருவாரூர் 107 MW  மின் திட்டம்

2️⃣8️⃣. எண்ணூர் 330 MW  அனல் மின் திட்டம்

இந்த திட்டங்கள் அனைத்தும் 1️⃣9️⃣6️⃣9️⃣-1️⃣9️⃣7️⃣6️⃣ & 1️⃣9️⃣9️⃣6️⃣-2️⃣0️⃣0️⃣1️⃣ திமுக ஆட்சிக்காலம் வரை உருவானவை. 1️⃣9️⃣9️⃣6️⃣ல் திமுக ஆட்சி தொடங்கும் போது நுகர்வோரின் தேவையை ஈடு செய்த உச்ச மின் அளவு 4424 MW ஆகா இருந்தது, 2️⃣0️⃣0️⃣1️⃣ல் 5932 MW என்று உயர்ந்திருக்கிறது, அதாவது 1508 MW உயர்வு (மூன்றில் ஒரு பங்கு உயர்வு).

காற்று, சூரிய சக்தி, கரும்பு சக்கை போன்ற இணைமின் உற்பத்தி திட்டங்களுக்கு முழு வரிவிலக்கும் அளித்திருக்கிறார் கலைஞர்.

#SCADA திட்டம்:

சென்னையில் உள்ள 96 துணை மின்நிலையங்களையும் ஒன்றாக இணைத்து எங்கெங்கு கூடுதல் மின்சாரம் இருக்கிறதோ அதை அங்கிருக்கும் மின்மாற்றி மூலம் மின்சாரம் தேவைப்படும் இடத்திற்கு மாற்றி மின்னோட்டத்தை சீராக்குவதற்காக சென்னையில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் தான் Supervisory Control & Data Acquisition System (SCADA).

அதற்கடுத்து 2️⃣0️⃣0️⃣1️⃣-2️⃣0️⃣0️⃣6️⃣ அதிமுக ஆட்சி. எத்தனை மின் திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு  ஜெயலலிதா தொடங்கினார் என்பதை யாரேனும் அதிமுக தொண்டர்களிடம் பட்டியலிட சொல்லுங்களேன்..?

2️⃣0️⃣0️⃣6️⃣-2️⃣0️⃣1️⃣1️⃣ல் மீண்டும் திமுக ஆட்சி. அந்த 5 ஆண்டுகளில் கலைஞர் அமல்படுத்திய திட்டங்கள்.

1️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2007

2️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2007

3️⃣. ராமநாதபுரம் 92 MW எரிவாயு மின் திட்டம், 2008

4️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2008

5️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2008

6️⃣. மேட்டூர் 500 MW அனல் மின் நிலையம், 2008

7️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 3), 2009

8️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2009

9️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2009

🔟. உடன்குடி 1600 MW அனல்மின் நிலையம்,2009

இது போக சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக 21 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள், மின் பகிர்மானத்துக்கு 233 துணை மின் நிலையங்கள் என்று திமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது.

கலைஞரின் மின் உற்பத்தி திட்டங்களுக்கெல்லாம் மகுடம் போன்றது காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்.

வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான மூலாதாரம்.

அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.

20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.

அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.

இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப்படுகிறது. அது தான் 400 MW திறன் கொண்ட "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும்.

தமிழ்நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தியான 2284 MW-ல் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மட்டும் மொத்தம் 866 MW உற்பத்திக்கான திட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அதாவது 3ல் ஒரு பங்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கலைஞர் உருவாக்கியதே!

இதை Tangedco இணையதளத்தில் Hydro Stations பக்கத்தில் போய் பார்க்கலாம்.

இப்படியெல்லாம் மின் உற்பத்தி, மின் பகிர்மான திட்டங்களை கொண்டுவந்த தலைவர் கலைஞர் இதன் மூலம் மக்களுக்கு என்ன திட்டங்களை தந்திருக்கிறார்?

♦ அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், 1969-76

♦ குடிசைக்கு ஒரு மின்விளக்கு திட்டம், 1969-76

♦ விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 1989-91

♦ இலவச மின்சாரம் விரயமாவதை தடுத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக மின் மோட்டார்

♦ பெரு விவசாயிகளுக்கு 50% மானியமாக  மின் மோட்டார்

♦ கைத்தறி & விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

♦ ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்

ஆக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் போது மின்வெட்டு என்று இனியும் யாரேனும் குற்றம் சொன்னால் அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி மாண்புமிகு புரட்சித்தலைவி இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் 15 ஆண்டு பொற்கால ஆட்சியில் (1991-96, 2001-06 & 2011-16) தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் எத்தனை என்பது மட்டும் தான்.

#FatherofModernTamilnadu

ByA Sivakuma

தமிழ்நாடு மின்கழக தொ‌ழிலாள‌ர் முன்னேற்ற சங்கம்

Sunday, 26 July 2020

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு


திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு
திமுக இந்து மதத்திற்கு செய்த நன்மைகள் போல வேறு எந்த அரசும் செய்ததில்லை
இது தொடர்பான எனது Tweets 👇
(1)
கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை 2009 ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர்
அந்த திமுவா இந்துக்களின் எதிரி?
(2)
திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971)
(3)
பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது,
1969ல் முதல்வராகி 1970 ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே
(4)
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,... அர்ச்சகர்களுக்கு....
ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை
முதல்வர் கலைஞர் கருணாநிதி 18.10.2010 அன்று வழங்கினார்
(5)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்!!!!
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(6)
அனைவரும் கடவுளை தொடலாம்
அனைவரும் அர்ச்சகராகலாம்
அனைத்து மொழியிலும் மந்திரம் சொல்லலாம்!
அனைவரும் கற்பகிரகத்திற்குள் போகலாம்!
அனைவருக்கும் கோயில் சொந்தம்
என திமுகசொன்னதால் அது இந்துக்களின் எதிரி என அவாள்கள் பொய்யுரைப்பது நியாயமா?
நீதியா?
(7)
முருகனை திமுக இழிவு செய்ததா? ?
பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் அமைத்தது திமுக!
கோயில்களில் கருணை இல்லங்கள்,  நூல்லையங்கள், திருமண மண்டங்கள் அமைத்தது திமுக
அந்த திமுகவா இந்துக்களின் எதிரி?
(8)
திமுகவா இந்து மக்களை 4 வர்ணங்களாக பிரித்தது?
திமுகவா தீண்டாமை  செய்தது??
திமுகவா இந்து மக்களை  கோவில் கருவறைக்குள் விடாமல் தடுக்குது?
திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
இதையெல்லாம் செஞ்சவன் திமுகவை இந்துக்கள் எதிரி என்கிறான்
(9)
கலைஞர் தனது 90வது வயதிலும் ‘ராமானுஜர்’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு கதை எழுதினார்
சமத்துவ சமூகத்திற்காக போராடிய 11வது நூற்றாண்டை சேர்ந்த சீர்த்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கதையாக்கினார்
நல்லவர்களை திமுக ஆதரிக்கும்
(10)
குறிஞ்சி நில தமிழ் கடவுள் முருகனை இழிவாக சித்தரிப்பது யார்?
ஆபாச புராணங்களை எழுதியவர்தானே முருகனை இழிவாக சித்தரித்துள்ளர்
திமுகவினர் இந்துக்களின் எதிரி என்றால் 2006-11 ல் 550 கோடிகள் செலவில் 5000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்களா?
(11)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(12)
கிராம கோவில் பூசாரிகள்_நலவாரியம்
உருவாக்கியவர் கலைஞர்
பூசாரியின் மனைவி/மகள் மகப்பேறு உதவி - 6000
பூசாரியின் குழந்தை கல்விக்கு 1000 - 6000 வரை
பூசாரி அல்லது அவர் குழந்தை திருமணத்திற்கு நிதியுதவி
ஈமச்சடங்கிற்கு 2000 முதல் 15,000 வரை
(13)
திமுகவா NEET தேர்வு கொண்டு வந்து ஏழை இந்து மக்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுத்தது?
திமுகவா உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது?
திமுகவா OBC மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை மறுத்து கடந்த 5 வருடமா இந்துக்களை ஏமாற்றுது?
(14)
திமுக சமூகநீதிக்கான  கட்சி
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பிழைக்கும் கேவலமான கட்சி அல்ல
கடவுள் பெயரையும் மதத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிச்சையெடுக்கும்
கட்சியல்ல
உண்மையான இந்துக்கள் என்றென்றும் திமுகவைதான் ஆதரிப்பர்
(15)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(16)
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள் செய்தது திமுக
திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரியது திமுக. சுற்று சுவர்கள் கட்டியது
(17)
சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
தஞ்சை பெரிய கோயில்
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்குகள் எல்லாமே
திமுக செய்தது
(18)
பரம்பரை பரம்பரையாக ஒரே சாதி அனுபவித்த
பரிவட்ட மரியாதை நிறுத்தம்
அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
இந்து சமயத்தில் சமதர்மத்தை ஜனநாயகத்தை
கொண்டு வந்த திமுக இந்துக்களின் எதிரியா?
(19)
2006-2008 கலைஞர் ஆட்சி காலத்தில் மட்டும் 2,190 கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன
2006-2011-ம் ஆண்டு காலத்தில் 5000க்கும் மேற்பட்ட  குடமுழுக்கும் நடத்தப்பட்டன. 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன
(20)
2008-ல் கோயில்களில் புனரமைப்பு பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சத்திலிருந்து மூன்று கோடியாக உயர்த்தியவர் கலைஞர்
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன
(21)
கலைஞரின் 2006-2011 ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதிமுக. ஜெயலலிதா 2001-2006 ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 
இப்போது புரியுதா இந்துக்களின் நண்பன் திமுக என்பது...
(22)
இந்து_சமய_அறநிலையத்துறை (1971)
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக #எம்_கண்ணப்பனை நியமித்தார்.
(23)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(24)
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது எனத் தடுத்தது தீட்சிதர்கள்
அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. 
அவருக்கு உதவியது திராவிடர் கழகம்
அவருக்கு பென்சன் தந்தவர் கலைஞர்
By

Antony Parimalam

Thursday, 4 June 2020

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 கொண்டுவரப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர்.

நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது.

அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25 % லிருந்து 31% மாகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை 16 % லிருந்து 18 % மாகவும் அரசு அதிகரித்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில், காவல் துறை ஆணையம் ஒன்றை அமைத்தார் கலைஞர். அதன் அறிக்கையைத் தொடர்ந்து, காவலர் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருது வழங்குவது தொடங்கியது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். 1971 மே 27 அன்று ஒப்படைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மேலும் கூடுதலான கூட்டாட்சி சார்ந்த அரசமைப்பு சாசனத்தை நோக்கிச் செல்வதற்கான சாலை வரைபடத்தை அளிக்கின்றன

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் புத்தாடைகளாக வழங்கப்பட்டன. இதேபோல், 100% மாணவர் வருகையை நிலைநாட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில் 1974-75ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் 9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 1969 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத் தொகை அடிப்படையிலான திட்டங்கள், கடன் வசதிகள், கல்வி உதவித்தொகைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1970இல் ஓர் அரசாணை மூலம், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய வகுப்பு (பியுசி) வரையில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களின் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 1972இல் அரசாணை ஒன்றின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. 1970-71 முதல் 1974-75 வரையில் 377 மாணவர்கள் இத்திட்டத்தால் பலனடைந்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.4,46,200 வழங்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பட்டியலின மாணவர்களில் ஐந்து பேர் வழக்குரைஞர் பயிற்சி பெறவும், ஐந்து பேர் கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிக்க மையங்கள் 4 லிருந்து  1973-74இல் 30 ஆக அதிகரிக்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம், சமமான வாரிசுரிமைகளை உறுதியாக்கியது. , பெண்கள் இயல்பாகவே குடும்பத்துக்குள் பொருளாதாரப் பங்காளிகளானார்கள், முடிவெடுக்கிற இடத்தைப் பெற்றனர். தேசிய அளவில், இத்தகைய சட்டத் திருத்தம் 2005இல்தான் கொண்டுவரப்பட்டது.



மாற்றுத்திறனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் கலைஞரே முன்மாதிரி.

 2007இல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்டது, 2009ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்றே ஒரு தனித் துறை ஏற்படுத்தப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

மாற்றுப் பாலினத்தவர்களுக்காக என தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின் கீழ் 2008, ஏப்ரல் 15 அன்று திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. திருநங்கையர் சமூகத்துக்குப் பாதுகாப்பையும் சமூக மதிப்பையும் உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகிற பணி இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட 1970இல் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிறுவப்பட்டதானது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 730 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை உருவாக வழி செய்தது.

இந்த நடவடிக்கையால் 107 புதிய தொழில் நிறுவனங்கள் உதயமாகின, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பெருந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஒரு முக்கியத் தேவை என்பதால், 1998இல் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது முன்னோடி நடவடிக்கையாகும்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்), எல்காட் (தமிழ்நாடு மின்னணுக் கழகம்) ஆகிய இரண்டு அரசுத் துறைகளுக்கும் இடையேயான கூட்டுத் திட்டமாக, நவீன தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை கலைஞர் அரசு ஏற்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 2000, ஜூலையில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்துவைத்த டைடல் பூங்கா, மென்பொருள் நிறுவனங்கள் மிகவும் விரும்பி நாடுகிற இடமாக சென்னையை மாற்றியது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், சட்டத்தின் ஆட்சி, செயல்திறன்மிக்க அதிகாரிகள், அனைத்து மட்டத்திலுமான சமூக உள்கட்டமைப்பு ஆகியவையுமாகச் சேர்ந்து, தமிழகம் முதலீடுகளுக்கு இணக்கமான மாநிலமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்தின.


2008ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 23% லாரிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் 15% சென்னை, ஓசூர் நகரங்களிலிருந்து வந்தவை

அந்த ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள்

தயாரிப்புத் துறையில் ஒரு தலைமையிடத்தை பிடித்த சென்னை மாநகரம் 'தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட்' என்று பெயர் பெற்றது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர்

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

2006-2010- ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்







Monday, 23 March 2020

கலைஞரே சாதனைகளின் தலைவன் by நித்யா






கலைஞரே சாதனைகளின் தலைவன்

“நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி” – திராவிட பேரரசன் #கலைஞர் 💥
கலைஞர் அப்படி என்ன கிழித்து விட்டார் என மனசாட்சியின்றி கேட்கும் மடையவர்களுக்கு இந்த மலைப்போன்ற பட்டியலை காணிக்கை ஆக்குகிறேன்
உருவாக்கம் :- @nithya_shre





01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கித் தந்த #கலைஞர்
அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது
3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது




15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”
3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது
யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது
பார்வையற்றோர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள்




“சென்னை #அண்ணா_மேம்பாலம்”
ஜூலை 1, 1973
தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.





நவம்பர் 13, 1973
திருநெல்வேலி “திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்”
*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்
*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)
*குறள் போன்று இரண்டு அடுக்கு திருவள்ளுவர் பெயர்




ஏப்ரல் 17, 1973
“#பூம்புகார் சுற்றுலா நகரம்” சிலப்பதிகார கலைக் கூடம்.
இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் “பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்”
பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைப்பு.




“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்”
இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே




ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் 96அடி , 360டன்
“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா” என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் வசதிகள் செய்து 1970ல் ஓடச்செய்தார்




இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். 20 லட்சம் மக்கள் பயன் பெற.




குளித்தலை – முசிறி “தந்தை பெரியார் காவேரி பாலம்” கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்)



:)