Friday, 9 October 2020

2G அலைக்கற்றை தொடர்பாக திரு ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்.. 

  2G அலைக்கற்றை தொடர்பாக திரு ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்.. 


 குற்றச்சாட்டு (1) 


 2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில் டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா? 2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில் டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா  ? ராசா செய்தது சரியா இல்லை தவறா?


 1) உண்மையில் சமீபத்திய 2015 இல் நடந்த ஏலத்தால் டெலிகாம் துறைக்கு கிடைத்தது ஒரு MHz க்கு 290 கோடி மட்டுமே. 2007-08 ஆம் ஆண்டிலேயே  ராஜா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்  டெலிகாம் துறைக்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  வருமானத்தை  பெற்று தந்துள்ளார்.


 2) மேலும் ஏலமுறையில் ஒரு முறைதான் டெலிகாம் துறைக்கு வருமானம் வரும். ஆனால்  ராஜாவின் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் லைசென்ஸ் பீஸ் முதலில் வாங்கப்படும். அதன் பின்னர் லைசென்ஸ் பெற்ற அந்த கம்பெனி ஒவ்வொரு ஆண்டும் தான் செய்யும் வியாபாரத்தை பொறுத்து டெலிகாம் துறைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். இதனால் டெலிகாம் துறைக்கு இரண்டு விதத்தில் வருமானம் வந்தது.


 3) ஏலமுறை வந்ததால் சிறிய நிறுவனங்களால் ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.  எந்த வித போட்டியும் இல்லாததால் பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் உடன்பாடு செய்து கொண்டு மனம் போன போக்கில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்தி கொண்டே உள்ளனர். இப்போது சொல்லுங்கள் ராஜா செய்தது சரியா ..தவறா.,


 2G மறு ஏலம் மிகப்பெரிய தோல்வி சமீபமாக 2G மற்றும் 3G அலைக்கற்றை 380+5=385 MHz. டெலிகாம் துறையால் ஏலம் விடப்பட்டது. அதில் அரசுக்கு 385 MHz க்கு 1,09000 கோடி கிடைத்துள்ளது. 


 அதாவது ஒருMHz சராசரியாக. சுமார் 290 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.


 ஆனால் வினோத்ராய் ஒருMHzக்கு 3350 கோடிக்கு ஏலம் போகும் என கணக்கிட்டதன் அடிப்படையில்  385 MHzக்கு 12,89,750 கோடி வருமானம் ஏலத்தில் வந்திருக்க வேண்டுமே.


 ஆனால் வந்திருப்பது  வெறும் 109000 கோடிதானே. 


 இதன் மூலம் வினோத்ராய் என்னும் பொய்யரின் கணக்கு தவறு என நிரூபணமாகியுள்ளது.   


      2007-08 ஆம் ஆண்டிலேயே ராஜாவால் டெலிகாம் துறைக்கு 52 MHz க்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  சுமார் 14000 கோடி  வருமானம்  வந்துள்ளது.


 ராஜா விற்பனை செய்த 52 MHz ஐ ஏலம் விட்டால் அரசுக்கு 174000 கோடிகள் கிடைத்திருக்கும் என ஒரு மெகா பொய்யை திட்டமிட்டே சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


  குற்றச்சாட்டு (2)

 கட் - ஆப் (Cut-off) தேதியை மாற்றி ராசா தவறு செய்துவிட்டார் என்ற CBI குற்றச்சாட்டு சரியா ? 


 ராசா டெலிகாம் மந்திரியானவுடன் யாருக்கும்  ஒதுக்கப்படாமல் ஸ்பெக்ட்ரம் இருப்பதை கண்டறிந்தார். அதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்பட்டு வந்தது. 


 ராசா உடனடியாக ஸ்பெக்ட்ரம்  விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார்.  1-10-2007 க்குள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் ஆனது.


 ஆனால் எதிர்பாராத விதமாக 575 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. கையிருப்பு வெறும் 52 MHz ஸ்பெக்ட்ரம் மட்டுமே. எனவே கடைசி தேதி 25.9.2007 என அட்வான்ஸ் செய்யப்பட்டது. 


 இதைத்தான் ஊழல் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வரப்பெற்ற 575 விண்ணப்பங்களுக்கும் எந்த லைசென்ஸும் வழங்கப்படவில்லை. 


 அதனால் கட்ஆப் தேதி மாற்றத்தால் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.  


இந்த 575 விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு  பலமாதங்கள் முன்பே  வந்திருந்த விண்ணப்பங்கள் சற்று தாமதமாக கண்டறியப்பட்டது. 


 எனவே அந்த விண்ணப்பங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவேடு மற்றும் வந்த தேதி அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதில் என்ன தவறு ? 


 அவ்வாறு வழங்கப்பட்ட கம்பெனிகளில்தான் ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் வருகின்றன. இரண்டு கம்பெனிகளும் எதிரி கம்பெனிகள். இரண்டு எதிரெதிரான கம்பெனிகள் கூட்டுசதியில் எப்படி ஈடுபடுவார்கள்  ?


 ராசாவால்  2G லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள் அதை பயன்படுத்தி பெரிய தொகை லாபம் அடைந்து விட்டதாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் ராசாவால் வழங்கப்பட்ட அத்தனை லைசென்ஸ்களும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


 இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய கம்பெனிகளும் முதலில் தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவார்கள். பிறகு அதை பயன்படுத்தி புதிய பங்குகளை வெளியிட்டு அதில் பெரிய லாபம் பார்ப்பார்கள்.


 பின்னர்தான் தொழில் தொடங்குவார்கள். அதற்குள் சில வருடங்களே ஆகிவிடும். இதெல்லாம் உச்ச நீதிமன்றம் அறியாததா? முழுமையாக விசாரித்து அதன் பின்னர்தானே லைசென்சை ரத்து செய்திருக்க வேண்டும். இதற்கு பெயர்தான் ஜனநாயகமா  ?


 குற்றச்சாட்டு(3) 


 2G கூட்டு சதியா? 


 ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளுடன் ராசா கூட்டு சதியில் ஈடுபட்டார் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டு சரியா  ? அல்லது சதியா? 


 ராசா டெலிகாம் மந்திரி ஆவதற்கு முன்பே ஸ்வான் கம்பெனி லைசென்ஸ்க்கு விண்ணப்பம் செய்திருந்தது. 


 மேலும் ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நிலையில் கூட்டுசதி எப்படி சாத்தியம்? 


 சதிக்கு ஆதாரம் என்ன? ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து முதலீடு பெற்றது தவறு என்கிறது சிபிஐ


 ஆனால் இதே டெலிகாம் துறையில் டாடா டெலிசர்வீஸ் லிட் , சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் மற்றும் எஸ் டெல் போன்ற கம்பெனிகள் மிப்பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் பெற்றிருக்கிறார்களே  . அதை அரசும் சிபிஐயும் கண்டுக்கொள்ளவில்லையே. அது ஏன்? 


 டெலிகாம் துறையில் மிகப்பெரிய முதலீடு தேவை என்ற நிலையில் புதிய கம்பெனிகள் தொழில் தொடங்க முதலீடு பெறவும் புதியதொழில் என்றால் காலதாமதம் என்பதும் நடக்கக்கூடியதுதானே. 


 அது சரி இதற்கெல்லாம் எதை ஆதாராமாக வைத்து ராசாவை தொர்பு படுத்துகிறது சிபிஐ. ? நாடகத்தை ஆரம்பித்து விட்டு திரு திரு என முழிக்கிறார்கள்.


 If Swan and Unitech are to be charged because of the equity infusion into their companies, then the prosecution (CBI) has to explain why it has not charged Tata Teleservices Ltd, Sistema Shyam Teleservices, and S Tel, which also had infusion of foreign equity of much greater amounts.'' "The prosecution (CBI) theory of one conspiracy among all accused is ex-facie absurd.'' Swan had already applied for a licence in March 2007, before Raja became the telecom minster. It had no reason to conspire with him. Plus, Unitech and Swan were direct rivals. They would never conspire with each other. "Unitech never got spectrum in Delhi circle and Swan did not get it in some other districts. There is no evidence at all to suggest a to suggest a common conspiracy between Swan and Unitech.'' 


By Antony Parimalam

மேலும் அறிய

2G தொடர்பான உண்மைகள். https://www.facebook.com/notes/prakash-jp/2g-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/483094071791770

5 comments:

  1. சூப்பர்‌ சார்.

    உங்க‌அயராத உழைப்புக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்💐💐💐👌🏽👌🏽👌🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete
  2. Perfect sir...very good analysis and submission. Appreciation for your real good work.

    ReplyDelete
  3. Really super and good work

    ReplyDelete
  4. Well details.congratulations.

    ReplyDelete