“நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி” – திராவிட பேரரசன் #கலைஞர்
கலைஞர் அப்படி என்ன கிழித்து விட்டார் என மனசாட்சியின்றி கேட்கும் மடையவர்களுக்கு இந்த மலைப்போன்ற பட்டியலை காணிக்கை ஆக்குகிறேன்
உருவாக்கம் :- @nithya_shre
01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கித் தந்த #கலைஞர்
அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது
3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது
15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”
3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது
யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது
பார்வையற்றோர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள்
“சென்னை #அண்ணா_மேம்பாலம்”
ஜூலை 1, 1973
தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.
நவம்பர் 13, 1973
திருநெல்வேலி “திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்”
*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்
*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)
*குறள் போன்று இரண்டு அடுக்கு திருவள்ளுவர் பெயர்
ஏப்ரல் 17, 1973
“#பூம்புகார் சுற்றுலா நகரம்” சிலப்பதிகார கலைக் கூடம்.
இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் “பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்”
பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைப்பு.
“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்”
இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் 96அடி , 360டன்
“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா” என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் வசதிகள் செய்து 1970ல் ஓடச்செய்தார்
இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். 20 லட்சம் மக்கள் பயன் பெற.
குளித்தலை – முசிறி “தந்தை பெரியார் காவேரி பாலம்” கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்)
அடிமைபடுத்தியவர்கள் வாயாலே “மை லார்ட்” என்று சொல்ல வைத்தவர் #கலைஞர்.
ஆம் உயர் நீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த நீதிபதி – அ. வரதராசன் 15/02/1972 அன்று கலைஞர் ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டார்.
நீண்ட கால கோரிக்கையான ரயில் பாதை அகலபாதை திட்டத்தை கலைஞரின் முயற்சியால் மத்திய அரசிடம் பெற்று நிறைவேற்றி தந்தார்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2009 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் தலைவர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
20, ஆகஸ்ட் 2010
சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைக்கும் மேலான வசதிகளுடன் 600+ படுக்கைகள், Centralized AC, அதிநவீன தீவிர சிகிச்சை உபகரணங்கள், மேலும் தனித்தனி பிரிவுகள் கொண்டது இந்த மருத்துவமனை
ஆகஸ்ட் 2010:
சேலம் – உத்தமசோழபுரத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளி அன்றைய முதல்வர் #கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டது.
“ஏழைகளின் ஊட்டி” சேலம் – ஏற்காட்டில் 16 ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சி நில மரபணு பூங்காவும்,
36 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவும் #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
பெண்_காவலர்கள் (1973)
கலைஞர் ஆட்சியில்தான் முதன்முதலாக தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இன்று டிஜிபி போன்ற உயர்பதவிகளில் பெண் காவலர்கள் பணிபுரிய வித்திட்டவர் கலைஞர்.
தமிழ் வளர்ச்சிக்காக “தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறைக்கு” என்று தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் #கலைஞர் ( 13/05/1996 ).
இந்தியாவில் முதன்முதலாக அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியவர் #கலைஞர் (1989)
இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பணிகளில் பெரும் பதவிகளில் இடம்பெற வித்திட்டவர் கலைஞர்.
No comments:
Post a Comment