Monday, 25 June 2018

அன்புமணியின் பொய் நம்பர் (2) அம்பலம்*

அன்புமணியின் பொய் நம்பர் (2) அம்பலம்*

சேலம் மல்டி ஸ்பெஸாலிட்டீ ஆஸ்பத்திரியை தான் கொண்டுவந்ததாகவும் திரு ஸ்டாலின் பொய் சொல்வதாகவும் சொன்ன அன்புமணி ராமதாசின் பொய் அம்பலம் ஆகிவிட்டது.

2003 ஆம் ஆண்டு திரு ஆ.ராசா Minister of state for Family health and welfare மந்திரியாக இருந்த போது The Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY
என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 6 AIIMS மருத்துவமணைகளுக்கு இணையான மருத்துவமனைகளை உருவாக்கவும் 13 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதில் திரு ஆ.ராசாவால்  தமிழகத்தில் திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமணைதான் முதலில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வற்புறுத்தலால் 2004 ல் அமைச்சரான அன்புமணி 2006 ல் திருச்சிக்கு பதிலாக சேலத்தை பட்டியலில் இணைத்தார்.

இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.31 கோடி திமுக மாநில அரசு தந்தது. அது இல்லாமல்  229 கோடி மதிப்புள்ள நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை தமிழக திமுக அரசுதான் ஒதுக்கித்தந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த மருத்துவமனைக்கு Recurring expenditures மட்டுமே ஆண்டுக்கு
35 கோடி.

அன்புமணி அமைச்சராகவே இல்லாவிட்டாலும் இந்த மருத்துவ மணை திருச்சியிலோ சேலத்திலோ வந்துதான் இருக்கும்.

திமுகவால் MP திமுகவின் ஒத்துழைப்பால் அமைச்சரான அன்புமணி திரு ஸ்டாலினை அவமரியாதை செய்வது கேடுகெட்ட செயலும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்

http://pmjandhanyojana.co.in/pradhan-mantri-swasthya-suraksha-yojana/

திரு வீரபாண்டி ஆறுமுகம் 10.8.2010 இல் அளித்த பேட்டி

https://tamil.oneindia.com/news/2010/08/10/anbumani-ramadoss-veerapandi-arumugam.html

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004 ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.

அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்பு தான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.

இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.

பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.

அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது.

தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி தான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.

நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்பு கூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.

ஆனால், தான் தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரி ஆகவே நான் தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர் தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.

பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார்? என்றார் வீரபாண்டியார்.


தாம்பரம் சித்தமருத்துவ மணை கொண்டு வந்தது திமுகதான்.

அன்புமணி பொய் நம்பர் (1)
அம்பலம்.
தாம்பரம் சித்தமருத்துவ மணை கொண்டு வந்தது திமுகதான்.

தாம்பரம் சித்த மருத்துவமனை ஒன்பதாவது 5 ஆண்டு திட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டது. 1999 ஜனவரியில் National Institute of Siddha ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

 திமுக ஆட்சியில் 27.3.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.

30.9.2000 முதல்  2003 வரை Minister of State (Health and Family Welfare) ஆக இருந்தது ஆ.ராசா தான். இந்த திட்டத்திற்கு 2002 இல் ராசா காலத்தில் ஜனவரி 2002 ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2003 ஜனவரியிலேயே வேலையும் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த மருத்துவமணைக்கு
இடம் ஒதுக்கித் தந்து 40% நிதியை மாநில அரசுதான் தந்துள்ளது. மத்திய அரசின் நிதி 60% மட்டுமே.

அன்புமணி அமைச்சரானதோ 2004 மே 22 இல்தான்.

2005 செப்டம்பர் 3 இல் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மனை திறப்பு விழாவிற்கு அமைச்சர் என்ற முறையில் பிரதமருடன் வந்து விட்டு தான்தான் செய்ததாக புளுகுகிறார் அன்புமணி.

திட்ட மதிப்பீடு 49 கோடி
திட்டத்திற்கு கட்டுமான செலவை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்திலும் நடைமுறை செலவை 75:25 என்ற விகிதத்திலும் பிரித்துள்ளன.

திட்டத்திற்கு மத்திய அரசின் இறுதி தவணையை தந்து விட்டு தானே முழு தொகையையும் விடுவித்ததாக கதை விடுகிறார் அன்புமணி.  அதுவும் ஏற்கனவே திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைதான் விடுவித்தார் அன்புமணி.

மேலும் செப்டம்பர் 2010 ல் திமுக ஆட்சியில் தான் டெல்லியில் இயங்கி வந்த Central Council of Research in Siddha (CCRS) சென்னை தாம்பரத்தில் முறைப்படி அமைக்கப்பட்டது.

 தாம்பரம் சித்த மருத்துவமணை அமைந்ததில் 90% பங்கு திமுகவிற்கு எனும் போது அது திமுகவின் சாதனை மட்டுமே. வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது.




முழு விபரமும் கீழே 👇

https://en.m.wikipedia.org/wiki/National_Institute_of_Siddha

In the 7th five year Plan, the Government of India then decided to establish the National Institute of Siddha (NIS) at Chennai at an estimated cost of ₹ 470 million spread over a period of 6 years. The proposal was approved, in principle, during the 9th Five Year Plan period and a society of NIS was registered in January 1999.The capital cost of ₹ 360 million was shared by the Government of India and Government of Tamil Nadu in the ratio of 60:40 and the recurring expenditure of ₹ 110 million was shared in the ratio of 75:25. The foundation for the institute was laid on 27 March 1999. The project was cleared in January 2002 and work started a year later.

The institute was inaugurated on 3 September 2005 by Manmohan Singh, Prime Minister of India.
Till 2010, the research council of Siddha was functioning under the CCRAS in New Delhi, which was established in 1978. In March 2010, the Ayush Department of the Union Health Ministry decided to bifurcate CCRAS to create an exclusive body for Siddha research called the Central Council of Research in Siddha (CCRS), after a long period of pressure from the Siddha community in Tamil Nadu and elsewhere. The new council was decided to be headquartered in Chennai, and the council was officially formed in September 2010.


Sunday, 17 June 2018

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில் ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில்
ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?
இட ஒதுக்கீடு வரலாறு*
இடஒதுக்கீடுக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சியும், பெரியாரின் போராட்டங்களுமே.
இதன் தொடர்ச்சியாக  எந்தவித ஆதாயமும், சுயநலமும், நிர்பந்தமும் இல்லாமல் இடஒதுக்கீடை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தியது கலைஞர்தான். மற்றவர்கள் நிர்பந்தத்தால் செய்தனர்.
1969 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்பு சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தபட்டோர் நலக்குழு அமைக்கிறார் கலைஞர்.
அதன் அறிக்கையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 25% இடஒதுக்கீட்டை 31% எனவும்,பட்டியல் இனத்தவருக்கு இருந்த 16% இடஒதுக்கீடை 18% எனவும் உயர்த்தினார் கலைஞர்
அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் பார்ப்பணர் தூண்டுதலால் இடஒதுக்கீடில் 'வருமான வரம்பு முறையை' புகுத்துகிறார்.
இதனால் ஆத்திரமுற்ற  மக்கள்  அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் MGR ஐ படுதோல்வி அடைய செய்கின்றனர்.
தான் தோற்றதற்கு முக்கிய காரணமே   வருமான வரம்பு முறையை கொண்டு வந்ததுதான் என்பதை உணர்ந்த MGR உடனேயே வருமான வரம்பு முறையை விலக்கிக்கொண்டு மீண்டும் பழைய இட ஒதுக்கீடு முறையையே கொண்டு வருகிறார்.
மேலும் தன் தவறை மறைக்க மக்களை திருப்தி படுத்த ஏற்கனவே கலைஞரால் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்கான இடஒதுக்கீடை 31% லிருந்து,50% மாக உயர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதாவது இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது
1989 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அந்த 1 % இடஒதுக்கீடை மலைசாதி,பழங்குடி இனத்தவருக்கு வழங்குகிறார் கலைஞர்.
இதை தொடர்ந்து  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 % தனி இடஒதுக்கீடை வழங்குகிறார் கலைஞர்
ஆக அந்த 69 % இடஒதுக்கீடு கலைஞரால் BC-30 %, MBC-20 %, SC-18 %, ST-1 % என்று மாறுகிறது.
69% இடஒதுக்கீடு முறையினை எதிர்த்து விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.1992ல் அதனை ஏற்று இந்த நடைமுறைக்கு தடை விதிக்கிறது உச்சநீதிமன்றம்.
இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுகின்றன.
வேறு வழியின்றி அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார்  ஆட்சியிலிருந்த ஜெயலலிதா.
"அரசியல் பிரிவு 31-சி யின் கீழ் புதிய சட்டமொன்று இயற்றி இந்த 69 % இடஒதுக்கீடு முறையை தக்க வைக்கலாம்" என ஆசிரியர் வீரமணி  யோசனை சொல்ல அனைவரும் ஏற்கின்றனர்.
ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யபடுகிறது.
இதில் முக்கிய விசயம் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த 18 கட்சிகளுக்கும் தனித்தனியே கடிதம் எழுதி  மசோதா நிறைவேற அவர்களின் ஆதரவை பெற்றவர் கலைஞரே.
இப்படித்தான் 1994 ல் புதிய சட்டதிருத்ததின் படி தமிழகத்திற்கான 69% இடஒதுக்கீடு காக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.
ஜெ செய்தது ஒன்றே ஒன்றுதான்
அதுவும் வேண்டா வெறுப்பாக திமுக அப்போது பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததால் செய்தார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 69 % இடஒதுக்கீடை சட்டமியற்றி உறுதிப்படுத்தும் முயற்சியை செய்தார், அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற கட்டாயத்தினால் மட்டும்தான்.
Antony Parimalam

தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்

தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்

1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. இதன் காரணமாக அரசு பணியில் 1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தொழில் நுட்பகல்வியில் 16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.
3. கல்வி உதவி
தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரை ரூ.2315.90 லட்சம் செலவில் 34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 350042 மாணவ/மாணவியருக்கு 4098.24 லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ2104.20 லட்சம் செலவில் 178659 இஸ்லாமிய மாணவ/மாணவியர் பயனடைந்துள்ளனர். இது மொத்தத்தில் 51 விழுக்காடு ஆகும்
. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.
11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்
திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
5. திறன் வளர்ப்பு பயிற்சி
சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.
6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்
சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அ. தனி நபர் கடன் திட்டம்
சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97
ஆ. சிறுகடன் திட்டம்
சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்
ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்
உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.
இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.
8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்
உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.
முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.
கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.
பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.
10. கபரஸ்தான் பாதுகாப்பு:
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.
11. உலமா ஓய்வூதியத்திட்டம்
ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.
12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு
மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு
சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
14. மறுவாழ்வு திட்டம்
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
இதை தவிர
15. சிறுபான்மையினர் நல ஆணையம்
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.
16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்
17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்
18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்
19. உர்தூ அகாடமி
20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.
21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.
22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்
23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.
24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து
25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பு 26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 648 பணியாளர்கள் ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து 26.2.2011 அன்று அரசு ஆணை. இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.
1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!
இந்த சாதனைப் பட்டியல் முற்றுப்பெற்று விடவில்லை. இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமின்றி 26.3.2011 அன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில் உறுதி மொழி அளித்துள்ளார் கலைஞர்.

Wednesday, 13 June 2018

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.

இதை முழுசா படிங்க.

கலைஞரால் ஒப்பந்தத்தை தடுக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் 1974 ஒப்பந்தத்தினால் தமிழக மீனவன் நலன் காக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இணைப்பு :- 1974 கட்சத்தீவு ஒப்பந்த நகல்.👇 https://t.co/S5TQfpUxAV


Check out @iloveonlyjose’s Tweet: https://twitter.com/iloveonlyjose/status/1006819429043359745?s=09

கட்சத்தீவு* நடந்தது என்ன? முழுவிபரம்

கட்சத்தீவு*
நடந்தது என்ன?
முழுவிபரம்

https://m.facebook.com/story.php?story_fbid=1529474367178973&id=100003492741526

பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.


திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.

ஏன் இந்த அவசரம் தெரியுமா?

முதல் காரணம் 1974 நியூக்லியர் டெஸ்ட்க்கு இந்தியவிற்கு கிடைத்த எதிர்ப்பு.
2வது காரணம் 1976 ல் இலங்கையில் நடைபெற இருந்த
NAM summit. மேலும் president of UNGA பதவி இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு.

அவசர அவசரமாக கட்சத்தீவு ஒப்பந்தம் 26th June,1974 அன்று கொழும்புவிலும் 
28 June, 1974 அன்று டெல்லியிலும் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

1)ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி ratification செய்யப்பட வேண்டும்.

"It shall enter into force on the date of exchange of the instruments of ratification which will take place as soon as possible"

இன்று வரை இந்த ஒப்பந்தம் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்படவில்லை.

ஒப்பந்தமே அங்கீகரிக்கபடாத நிலையில் இந்த ஒப்பந்தமே இந்தியச் சட்டப்படி செல்லாது

2)This 1974 agreement had secured the rights of Indian fishermen  to dry their nets and use Church for religious observance.

3) இந்த ஒப்பந்தத்தின் Article 5 மற்றும் 6 படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை ஏற்கப்பட்டிருந்தது.
Article 6 categorically stipulated that vessels of India and Srilanga will enjoy in each others' water such rights as they have traditionally enjoyed therein.

இந்தியாவில் இந்திராவால்  25 June 1975 முதல் 21 March 1977 வரை எமர்ஜென்ஸி காலம் நடந்தது.

திமுக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்டது.

இதற்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் 23.3.1976 இல் இந்திய இலங்கை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளையே உட்படுத்தியது.

அதனால் 1974 மற்றும் 1976 க்கும் சம்பந்தமில்லை.

(In 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS)

ஆனால் 1976 ஏப்ரலில் இந்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

நமது கேள்விகள்

1) இன்று வரை கச்சத்தீவு 1974 ஒப்பந்தம் மத்திய பார்லிமென்டால் அங்கீகரீக்கப்படவில்லை என்பதால் இந்திய சட்டப்படி ஒப்பந்தமே செல்லாது என்பதே உண்மை.

ஒப்பந்தமே செல்லாதபோது கலைஞரை எந்த அடிப்படையில் குறைசொல்கிறீர்கள்?

2) ஒப்பந்தத்தை கலைஞர் மட்டுமே எதிர்த்தார்.

இந்திராவின் அடிமையாக அப்போதிருந்த அதிமுக MGR , காங்கிரஸ் நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் விரல் சூப்பிக்கொண்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?

3) முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் . அப்போது MGR ஆட்சி.

1977-1987 வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?


4)இன்று ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞரை வசைபாடும் எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்டது ஏன்?

அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாமே.

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை



Tuesday, 12 June 2018

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்* கலைஞர் 1969 ல் ஆட்சிக்கு வரும் முன் என்ன நடந்தது?

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்*
கலைஞர் 1969 ல் ஆட்சிக்கு வரும் முன் என்ன நடந்தது? முழு விபரமும் கீழே.

காவேரி ஒப்பந்தம் 1924
THE 1924 AGREEMENT

The main clauses among the 15 operative clauses of the Agreement
are as follows:

1. Mysore Government may construct KRS reservoir to a height of 124 ft above the river bed and to an effective capacity of 44.827 TMC ft to irrigate 1.25
lakh acres.

2. Mysore Government agrees to regulate discharges through and from KRS reservoir strictly in accordance with the rules and regulations which forms part
of this Agreement.

3. Madras Government is permitted to construct a reservoir at Mettm" to an efective capacity of 93.5 TMC ft to extend irrigation by 3.01 lakh acres in the delta area.

4. There should be mutual exchange of returns of technical details and extension of irrigation at the close of each official year

5. Mysore Government may make further extension of irrigation to the tune of 1,10,000 acres by constructing reservoirs of aggregate capacity of 45 TMC
ft on the Cauvery and its tributaries without infiinging the accepted rules and regulations of discharges at KRS.

6. Mysore Government is also permitted to extend irrigation by improvement of duty under each one of the irrigation channels to the extent of 1/3 of what was being irrigated prior to 1910.

7. Mysore should furnish all particulars of reservoirs it proposes to build against the permissible limit of 45 TMC ft to Madras Government.

8. Madras Government may construct new irrigation reservoirs on the tributaries like Bhavani, Amaravati, and Noyil rivers. If they do so, Mysore may construct an off set reservoir of capacity not exceeding 60% of the new
reservoir constructed by Madras. The impounding should not however diminish the supplies to which Madras and Mysore are entitled under this
Agreement including the divisible surplus.

9. Both Governments agree that the limitations and arrangements embodied in Clause IV and V i.e., in respect of extension of irrigation by both Governments set out shall after the expiry of 50 years (in 1974) be opened to reconsideration in the liglit of the experience, gained and for an examination of the possibilities of further extension of irrigation within the territories of the respcctive Govenrments and to such modifications and
additions as may be mutually agreed upon as a result of such reconsideration

10. In case of a dispute between the two Governments touching the interpretation or operation or carrying out this Agreement, such a dispute shall be referred
to arbitration or to Government oflndiaifboth parties agree for settlement.

Thus the 1924 Agreement was in the nature of follow up action on the original 1892 Agreement, the validity of which continued to survive.

In short, Madras gave its assent under Clause 3 of the 1892 Agreement to Mysore to construct KRS reservoir and secured the right to construct its Mettur Project and both Madras and Mysore obtained additional right to extend irrigation to new 39 areas.

IRRIGATION DEVELOPMENT ( POST 1924 )
In Mysore, irrigation from major and medium works under the Cauvery
which was 1.1 lakh acres at the beginning of the century increased to 3 lakh acres by 1930 with the extension of irrigation under the KRS.

By 1970, it had further risen to about 4.4 lakh acres. About half of this increment of 1.4 lakh
acres was contributed by new irrigation from small reservoirs, Anicuts and channels on the tributaries, and the other half by extension of irrigation under the
KRS Anient and Channels.'"

In Tamilnadu, ayacut development in this period was more fast and
significant. The initial pre-Mettur extent of 14.4 lakh acres of irrigation was augmented by Mettur to an extent of 3.2 lakh acres and to an equal extent by projects implemented in the first plan (1951-56) and Second Plan (1956-61) periods.

The first plan projects were the Lower Bhavani Project (covering 2.1 lakh acres) and the Mettur Canal Project (0.5 lakh acres).

The three Second Plan projects, the Amaravathy, the New Kattalai High Level Canal and the Pullambadi Canal were to add about 0.2 lakh acres each.

Mysore objected these
new projects on the ground that they were not permissible under the 1924 Agreement.

Madras maintained that irrigation from the Mettur Canal was within
the acreage limit allowed for the Cauvery-Mettur project.

 The other two projects were cleared by the Planning Commission on the assurance of the Madras Government that these projects would utilise only surplus waters or waters saved by economy and would not entail the creation of any new prescriptive rights.

Overall, the Mettur and other 1934-1972 projects added 6.4 lakh acres to the pre-Mettur extent of 14.4 lakh acres.

 In addition, the area under a second crop was increased to a total extent of 4.5 lakh acres of this, 2.5 lakh acres was located in the old Cauvery delta, 0.8 lakh acres in the Coleroon system, 0.8 lakh
acres under the canals in Salem and Tiruchinapalli districts and 0.4 lakh acres in the Bhavani and the Amaravathy sub-basins.

 Madras did not seek any extra waters on account of extensions to irrigation beyond what had been assured to it under the 1924 rules of regulation.

The Karnataka Government under its development plans took up
constructional work on some irrigation projects to utilise its share of water under the 1924 Agreement.

 Work on the Kabini reservoir was commenced in 1959, although the project had been discussed in 1933 itself.

Later projects began with dams and reservoirs on tributaries including the Harangi (1964), Swamavathy (1965), the Hemavathy (1968), the Varuna Canal (extension from KRS, 1979) and the Yagachi (1983). The total irrigation potential under these schemes upto 1990 was expected to be about 13 lakh acres with actual established irrigation until then being 11.2 lakh acres.

The contention of Tamilnadu is that the projects undertaken by Karnataka are not within the stipulated limits and were in excess of the allowances made
in the 1924 Agreement for new irrigation in Karnataka. It also opined that the new projects under taken by Karnataka would reduce the assured supplies to
Tamilnadu through limit flows from KRS and that the 1924 Agreement covers storages in non-scheduled rivers only if they do not affect Tamilnadu's prescriptive right.

Owing to Tamilnadu's objections, the above projects were not cleared by the Central Water Commission or by the Union Planning Conmission for inclusion under Plan Schemes in Karataka.

 Expenses on them have been
met from non-Plan allocations and Karataka argues that this has resulted in loss of Central assistance, improper funding and execution delays.

Along with requirements of 85.2 TMC ft for minor irrigation, 50 TMC ft for water supply and 7 TMC ft for power peojects, Karataka has projected its requirements at
465 TMC ft.

1924 முதல் 1990 வரை கர்நாடகா மற்றும் தமிழகம் எப்படி அணைகள் கட்டின எப்படி விவசாய பரப்பை அதிகரித்தன என்ற விபரம் இணைப்பில் உள்ளது.