Sunday, 17 June 2018

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில் ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில்
ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?
இட ஒதுக்கீடு வரலாறு*
இடஒதுக்கீடுக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சியும், பெரியாரின் போராட்டங்களுமே.
இதன் தொடர்ச்சியாக  எந்தவித ஆதாயமும், சுயநலமும், நிர்பந்தமும் இல்லாமல் இடஒதுக்கீடை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தியது கலைஞர்தான். மற்றவர்கள் நிர்பந்தத்தால் செய்தனர்.
1969 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்பு சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தபட்டோர் நலக்குழு அமைக்கிறார் கலைஞர்.
அதன் அறிக்கையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 25% இடஒதுக்கீட்டை 31% எனவும்,பட்டியல் இனத்தவருக்கு இருந்த 16% இடஒதுக்கீடை 18% எனவும் உயர்த்தினார் கலைஞர்
அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் பார்ப்பணர் தூண்டுதலால் இடஒதுக்கீடில் 'வருமான வரம்பு முறையை' புகுத்துகிறார்.
இதனால் ஆத்திரமுற்ற  மக்கள்  அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் MGR ஐ படுதோல்வி அடைய செய்கின்றனர்.
தான் தோற்றதற்கு முக்கிய காரணமே   வருமான வரம்பு முறையை கொண்டு வந்ததுதான் என்பதை உணர்ந்த MGR உடனேயே வருமான வரம்பு முறையை விலக்கிக்கொண்டு மீண்டும் பழைய இட ஒதுக்கீடு முறையையே கொண்டு வருகிறார்.
மேலும் தன் தவறை மறைக்க மக்களை திருப்தி படுத்த ஏற்கனவே கலைஞரால் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்கான இடஒதுக்கீடை 31% லிருந்து,50% மாக உயர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதாவது இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது
1989 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அந்த 1 % இடஒதுக்கீடை மலைசாதி,பழங்குடி இனத்தவருக்கு வழங்குகிறார் கலைஞர்.
இதை தொடர்ந்து  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 % தனி இடஒதுக்கீடை வழங்குகிறார் கலைஞர்
ஆக அந்த 69 % இடஒதுக்கீடு கலைஞரால் BC-30 %, MBC-20 %, SC-18 %, ST-1 % என்று மாறுகிறது.
69% இடஒதுக்கீடு முறையினை எதிர்த்து விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.1992ல் அதனை ஏற்று இந்த நடைமுறைக்கு தடை விதிக்கிறது உச்சநீதிமன்றம்.
இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுகின்றன.
வேறு வழியின்றி அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார்  ஆட்சியிலிருந்த ஜெயலலிதா.
"அரசியல் பிரிவு 31-சி யின் கீழ் புதிய சட்டமொன்று இயற்றி இந்த 69 % இடஒதுக்கீடு முறையை தக்க வைக்கலாம்" என ஆசிரியர் வீரமணி  யோசனை சொல்ல அனைவரும் ஏற்கின்றனர்.
ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யபடுகிறது.
இதில் முக்கிய விசயம் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த 18 கட்சிகளுக்கும் தனித்தனியே கடிதம் எழுதி  மசோதா நிறைவேற அவர்களின் ஆதரவை பெற்றவர் கலைஞரே.
இப்படித்தான் 1994 ல் புதிய சட்டதிருத்ததின் படி தமிழகத்திற்கான 69% இடஒதுக்கீடு காக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.
ஜெ செய்தது ஒன்றே ஒன்றுதான்
அதுவும் வேண்டா வெறுப்பாக திமுக அப்போது பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததால் செய்தார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 69 % இடஒதுக்கீடை சட்டமியற்றி உறுதிப்படுத்தும் முயற்சியை செய்தார், அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற கட்டாயத்தினால் மட்டும்தான்.
Antony Parimalam

7 comments:

  1. அய்யா...வணக்கம் .,

    இந்த bc 30%...தமிழக அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் மட்டுமா அல்லது தமிழக அரசு பணிகளிலும் சேருவதற்கு பொருந்துமா?

    மத்திய அரசு கல்வி நிலையங்களிலும்,மத்திய அரசு பணிகளில் வேலையில் சேருவதற்கு இந்த இட ஒதுக்கீடு உண்டா?

    உங்களின் எளிமையான விளக்கம் புரிந்துகொள்ள ஆவல்...நன்றி...அய்யா

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசு பணிகளிலும் பிற்படுத்தபட்டோருக்கான 30% இடஒதுக்கீடு பொருந்தும்.
      மத்திய அரசு பணியிடங்களில் பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீடு உண்டு

      Delete
    2. நன்றி...அய்யா...

      Delete
  2. JJ vin aatchiyil konduvarapptta 69 vizhukkaadu othukeettu arsanaiyai ethirththe melmuraiyeedu seitha mooththa vazhakkarignar vijayanai gundarkalai vaiththu naiyya pudaiththathu jj aatchiyilthaan enpathu varalaaru!Enave nalaignar thaan 69$ othukkeettai konduvanthaar ena puzhukavendaam!

    ReplyDelete
  3. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை என்ன?

    ReplyDelete
  4. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை என்ன?

    ReplyDelete
  5. நன்றி...அய்யா....

    ReplyDelete