Thursday, 28 June 2018

ஈழக்கதை பகுதி(3)

ராஜீவை கொன்றவர்களுக்கு கருணை பெற்று தர ராஜீவின் குடும்பத்திடமே கோரிக்கை வைத்த கலைஞர்.**
 #ஈழக்கதை பகுதி(3)

இறுதிப்போருக்கான காரணம் இலங்கையா?

LTTE மாவிலாறு அணையை 21 July 2006 மூடியதே இறுதிப்போருக்கான காரணமாக அமைந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 15000 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போர் மூண்டது. 2009 இல் முடிவுக்கு வந்தது.

கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..

விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.

இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..

அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கனிமொழி கடைசி நேரத்தில் புலிகளை காப்பாற்ற முயற்சித்தது உண்மைதான்.

அவர் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசியதும் உண்மைதான். அவர் பேசிய நேரம் எல்லாம் கை மீறி போய்விட்டதும் உண்மைதானே.

சரணடைதல் எப்படி நடந்தது தெரியுமா?

 நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:

*   மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடங்கள்.'

* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'

* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'

* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார்.  "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'

* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.

* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக் குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.

* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.

* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.

* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.

* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.

* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.

* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.

கோத்தபய்யா உத்தரவின் பேரில் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாதான் இப்படுகொலைகளை நிகழ்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் தொடர்ச்சியினை முற்றாக அழிப்பதே கோத்தபய்யாவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்பு களோடு பேசினார்கள் என் பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தை களில் நேரடியாக சம்பந்தப் பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சரணடைதலில் அரசியல் செய்ய அவரது ஆளுமையால் இயலாது.

#தொடர்ச்சி பகுதி4

No comments:

Post a Comment