Tuesday, 26 June 2018

108 ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது யாரால் கொண்டுவரப்பட்டது?


108 ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது யாரால் கொண்டுவரப்பட்டது?

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.

மற்றபடி இதன் முன்னோடி காங்கிரஸ் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி

முதன் முதலில் 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது

இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 108ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 4535. இதன் மூலம் ஆண்டுக்குப் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக EMRIஇன் அறிக்கை சொல்கிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது

இந்த திட்டத்தை விரும்பிய மாநில முதல் மந்திரிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். கலைஞர் மனது வைக்காதிருந்தால் இத்திட்டம் தமிழகத்தில் வந்தே இருக்காது

அன்புமணி காலத்தில் வந்தது அவ்வளவுதான்.

No comments:

Post a Comment