Saturday, 30 June 2018

தமிழகத்தில் மீத்தேன்/ஹைடிரோகார்பன்/ பெட்ரோலிய மண்டலம் என்னதான் நடந்தது? ஓர் நேர்மையான அலசல்**

தமிழகத்தில் மீத்தேன்/ஹைடிரோகார்பன்/ பெட்ரோலிய மண்டலம்
என்னதான் நடந்தது?
ஓர் நேர்மையான அலசல்**

1958-59 முதல் ஆரம்பிக்கப்பட்டு 1960 ல் சர்வே செய்யப்பட்டு முதற்கட்டமாக காரைக்கால் அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் முதன்முதலாக ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984.

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.

அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.

அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளதாம்

ஆதாரம்
https://www.thehindubusinessline.com/news/national/gas-politics-may-flare-tamil-nadus-finances/article9569864.ece.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கணக்கின் படி தமிழகத்தில் 219 கிணறுகள் தோண்டப்பட்டதற்கே கணக்கு உள்ளது.71 கிணறுகளில்தான் எண்ணை எடுப்பதாகவும் கணக்கு உள்ளதாம்.

ஆனால் 181 இயங்குவதாக ONGC தெரிவிக்கிறது.

அதாவது 2013 க்கு முன்பு ONGC தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியையே பெறவில்லையாம்.

Consent to Operate (CTO) என்ற அனுமதி நடைமுறையையே 2013 க்கு பின்தான் தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாம்.

ஆதாரம்
https://www.thehindu.com/news/national/tamil-nadu/ongc-oil-wells-in-state-are-unlicensed-say-activists/article22912263.ece


*************************************
மீத்தேன் வேறு ஹைடிரோ கார்பன் வேறா?

மீத்தேன் என்பது ஒரு ஹைடிரோ கார்பன்தான்.இரண்டும் ஒன்றுதான். பெட்ரோலியம் எடுக்கும் போது கிடைக்கும் இயற்கை வாயுதான் மீத்தேன்.

மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?

திரு ஸ்டாலின் மீத்தேன் ஆய்வுக்காக GEECL என்ற கம்பெனியுடன்  செய்யப் போட்ட ஒப்பந்தம் ஒன்றே ஒன்றுதான். வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் கையெழுத்து இடவில்லை.

அந்த திட்டம் 2016 இல் ரத்து செய்யப்பட்டு கைவிடப்பட்டு விட்டது

ஆதாரம்

https://www.cmie.com/kommon/bin/sr.php?kall=warticle&dt=2016-11-11%2013:24:31&msec=163

https://en.m.wikipedia.org/wiki/Kaveri_delta_coal-bed_methane_project

*************************************
நெடுவாசல் திட்டம்*

நெடுவாசலில் ஹைடிரோகார்பன் ஆய்வு 2008 ல் ஆய்வு செய்யப்பட்டு பிறகு போதுமான எண்ணை இல்லை என்று கைவிடப்பட்டது.

ஆனால் மோடி அரசு நாடு முழுவதும் 65 இடங்களில், ‘கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வயல்களை’ (Discovered small and marginal fields), கடந்த 2017 பிப்ரவரியில் ஏலம் விட்டது. அதில் ஒன்றுதான், நெடுவாசல்.

மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் இதுவரை நடந்தவை.

*************************************
பெட்ரோலியம் மண்டலம்
இன்றைய நிலை*

1) 2007 ல் அறிவிக்கப்பட்ட பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை படி 2011 வரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.திட்ட மதிப்பீடு ஆய்வு பணிகளே நடந்தது.

2) 2012 ல் மத்திய மந்திரிசபை இந்த பெட்ரோலிய மண்டலத்திற்கு அனுமதி வழங்குகிறது.

3) 2015 டிசம்பரில் தமிழக அரசு  45 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்க தயார் என நோட்டீஸ் வெளியிட்டிருந்தது.


4) தமிழ்நாடு State Housing and Urban Development Department   2017ஜூலை 19 அன்று கடலூர் நாகப்பட்டனம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களை தமிழ்நாடு Town and Country Planning Act பிரிவு 10 இன் கீழ் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்தது.

ஆதாரம்*
https://timesofindia.indiatimes.com/city/chennai/govt-notifies-45-tn-villages-to-be-part-of-petrochemical-hub/articleshow/59708814.cms


மேற்கண்ட வ.எண் 3 மற்றும் 4 ஆகியவை தமிழக அரசால் பெட்ரோலிய மண்டலம் தமிழகத்தில் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தான்.

ஆனால் மேற்கண்ட அதிமுகவின் நடவடிக்கைகளை எதிர்த்து ராமதாஸ் & அன்பு மணி ராமதாஸ்  ஒரு வார்த்தை கூட பேசாது இருந்தது ஏன்? அப்போதே போராடி தடுத்து இருக்கலாமே.
ஏன் செய்யவில்லை?

மேற்கண்ட அதிமுக அரசின்  நடவடிக்கைகள் அடிப்படையிலேயே மத்திய அரசு  ஜனவரியில் தமிழகத்தில் 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சர்வதேச டெண்டர், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம் மூலமாக 2018 ஜனவரி 19-ந் தேதி வெளியிடப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏப்ரல் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாகை கடலூர் மாவட்டங்களில்   24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.


மேலும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை என்பது 2007 ல் ராம்விலாஸ் பாஸ்வான் காலத்திலேயே அறிவிக்கப்பட்டு பெட்ரோலிய மண்டலத்திட்டம் பரிசீலனையில் இருந்தது. அன்றைய சுகாதாரதுறை மந்திரியான அன்புமணி ராமதாசுக்கும் அது தெரியும்.

ஆனால் பாமக ராமதாசோ அவர் மகன் அன்புமணி ராமதாசோ அந்த திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

" ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன் அமைச்சரவை சகாவாக அன்றைக்கு இருந்த பெட்ரோ கெமிக்கல் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வானிடம் கூறி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியதுதானே?

அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் உருவாக்கும் கொள்கையை எதிர்க்காமல் அமைதி காத்து விட்டு, இன்றைக்கு மக்களை சந்திக்கிறேன் என்று பயணம் நடத்துவது ஏன்?

ஆனால் தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு முதலீடுகள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் கொள்கைப்படி இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்குத்தான் முயற்சிகள் எடுத்தாரே தவிர, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் ஆட்சியிலிருக்கும் வரை அந்த பகுதியை “பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக” அறிவிக்காமல் இருந்தார்.

அதற்கான அரசு ஆணைகள் எதையும் வெளியிடாமல் இருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு, ஊழல் அதிமுக செய்த தவறுக்கு முட்டுக்கொடுப்பதற்காக இப்படி தி.மு.க. மீது புழுதி வாரித்தூற்றும் செயலில் ஈடுபடுவது நியாயமா?"

எனக் கேட்கிறார் துரை முருகன்


எனது கருத்து :-

இந்த மீத்தேன் / ஹைடிரோ கார்பன் விவகாரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது 2011 இல் தான். அதற்கு முன் போதியவிழிப்புணர்வு அரசுக்கே கிடையாது.

இதுதான் உண்மை. இப்போதும் பழங்கதை பேசுவது அர்த்தமற்றது.

2007 ல்  நடந்த விசயத்தை சுட்டிக்காட்டுவதாலோ 1985 முதல் நடக்கும் பெட்ரோல் எடுக்கும் பணிக்கு யார் காரணம் என்று குற்றம் சாட்டுவதாலோ மக்களுக்கு ஏதாவது நியாயம் கிடைக்கப்போகிறதா?

இதெல்லாம் பாமகவின் சிறுபிள்ளைத்தனமான வேலை.
உண்மையில் பெட்ரோலிய மண்டலம் வேண்டாம் என்றால் பாமக ராமதாஸ் அதிமுக அரசு 45 கிராமங்களை 2017 ல் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை எதிர்த்திருக்க வேண்டும்.

அப்போதும் செய்யவில்லை குறைந்தபட்சம் இப்போதாவது அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

 ஆனால் 30 வருட வெட்டிக்கதை பேசி அதில் திமுகவை விமர்சித்து சந்தோசப்படுகிறார் ராமதாஸ்.

உண்மை என்னவென்றால் ராமதாஸ் அவர்களுக்கு மக்கள் மேல் உண்மையான அக்கறை கிடையாது. இருந்திருந்தால் அவரது நடவடிக்கை வேறு மாதிரியல்லவா இருந்திருக்கும்.

Antony Parimalam

No comments:

Post a Comment