Thursday, 7 June 2018

கலைஞர் 14 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காரணம் அவர் முன்னெடுத்த போராட்டங்கள்.

கலைஞர் 14 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காரணம் அவர் முன்னெடுத்த போராட்டங்கள்.

இப்போதெல்லாம் நடிகர்கள் சினிமாவில் போராட்டம் நடத்தி விட்டு நேரடியாக முதலமைச்சராக விரும்புகிறார்கள்.


இளிச்சவாயன் தமிழனை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்😁


கலைஞர் நடத்திய போராட்டங்களால் சிறையில் இருந்த முழு விபரம்.


சிறைப்படுத்தப்பட்ட நாள்கள்

1. கல்லக்குடி – 15-7-53 முதல் 21-11-53 வரை

பெயர் மாற்றப் போராட்டம்


2. பிரதமர் நேருவுக்குக் கருப்புக்கொடி – 3-4-58 முதல் 8-4-58 வரை

விளக்கக்கூட்டம் தடை மீறல்


3. விலைவாசி உயர்வு கண்டனப் – 19-7-62 முதல் 26-10-62 வரை

போராட்டம் (தஞ்சை)


4. மதுரை சட்ட எதிர்ப்புப் போராட்டம்

தலைமை தாங்கியதாகக் குற்றச்சாட்டு – 19-12-63 முதல் 25-12-63 வரை


5. தடுப்புக் காவல் சட்டப்படி குளித்தலை – கோவைப் பயணத்தில்

பசுபதிபாளையத்தில் கைது – 25-4-64 முதல் 2-2-65 வரை


6. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 16-2-65 முதல் 4-4-65 வரை

பாளையங்கோட்டை சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் கைது


7. நெருக்கடி காவல் (பத்திரிகைத் தணிக்கையைக்

கண்டித்து அண்ணாசாலையில் – 2-6-76 – இரவே விடுதலை

போராட்டம்


8. பிரதமர் இந்திராகாந்திக்குக்

கருப்புக் கொடி – 30-10-77 முதல் 8-12-77 வரை


9. இலங்கைத் தூதர் அலுவலகத்தின் முன்

அடையாள மறியல் செய்தவர்களை விடுவிக்கக்கோரி மறியல் – 15-9-81 முதல் 29-9-81 வரை


10. இலங்கைத் தமிழர் ஆதரவுப்

போராட்டம் – காஞ்சிபுரம் – 16-5-85 முதல் 30-5-85 வரை


11. சென்னை அரசினர் தோட்ட

கட்சி அலுவலகம் மூடல் – 30-5-85 – இரவே விடுதலை


12. இந்தித் திணிப்பு அறிக்கை எரிப்பு

(சிறைக் கைதி உடை) – 9-12-86 முதல் 30-1-87 வரை


13. வெள்ளக்கோவில் பொதுக்கூட்டம்

தொடர்பாக குமாரபாளையத்தில் கைது – 19-4-87 – இரவே விடுதலை


14. இடஒதுக்கீட்டுப் போராட்டம் – 20-6-94 – இரவே விடுதலை


No comments:

Post a Comment