Thursday, 28 June 2018

ஈழக்கதை பகுதி(4)

புலிகள் தோல்விக்கு யாரை காரணம் சொல்வீர்கள். ஒரு சாதாரண முதலமைச்சாரால் உலக அளவிலான பிரட்சினையை
தீர்க்க முடியுமா? #ஈழக்கதை பகுதி(4)

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

 போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை  காப்பாற்றி இருக்க முடியுமா?  கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள்.  நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

 போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில்  சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்?   கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.
(முற்றும்)

1 comment:

  1. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனின் அதிகார ஆசைதான் இந்த பேரிழப்புக்கு காரணம். நார்வே அமைதி குழுவின் கோரிக்கைகளை ஏற்று நடந்து இருந்தால்,இவ்வளவு பெரிய உயர்ச்சேதம் தவிர்க்க பட்டிருக்கும்

    ReplyDelete