Monday, 25 June 2018

சட்டசபையில் திரு. ஸ்டாலின் பொய் சொன்னாரா? அன்புமணி ராமதாசின் பொய் பித்தலாட்டம் அம்பலம்* பகுதி (3)

சட்டசபையில் திரு. ஸ்டாலின் பொய் சொன்னாரா? அன்புமணி ராமதாசின் பொய் பித்தலாட்டம் அம்பலம்* பகுதி (3)

கீழே உள்ள பேட்டியில் திரு ஸ்டாலின் பாமகவின் சாதனைகளை திமுகவின் சாதனையாக சட்டசபையில்  பொய் சொன்னதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை அளித்துள்ளார்.

 http://youtu.be/CaSQl01a_S8

திமுகதான் தாம்பரம் சித்த மருத்துவமனையும் சேலம் மல்டி ஸ்பெசாலிடி மருத்துவமனையையும் கொண்டு வந்தது என கீழ்கண்ட பதிவுகளில் ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=1547526738707069&id=100003492741526

https://m.facebook.com/story.php?story_fbid=1547532558706487&id=100003492741526

அடுத்தது மத்திய அரசில் OBC க்கு 27% இட ஒதுக்கீடு தொடர்பானது.

23.5.2005 இல் சோனியா வீட்டில் ஐ.மு.கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்ததாம். அதில் OBC க்கு 27% இடஒதுக்கீட்டை முடக்கிப்போட முயற்சி எடுக்கப்பட்டதாம். அதை  ராமதாஸ் தனி ஆளாக காப்பாற்றினாராம். அதாவது 5 MP க்கள் வைத்திருந்த பாமகவை பார்த்து பயந்து விட்டாராம் சோனியா.

நல்ல நகைச்சுவை கதை.

2001 இல் ஊழல்ராணி ஜெ வை அன்பு சகோதரியாக ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா டாஸ்மாக்கை விரிவு படுத்தியதையும் மிடாஸ் கம்பெனி திறந்ததையும் வேடிக்கை பார்த்தவர் மருத்துவர் ராமதாஸ்.

தன் மகனுக்கு MP சீட் தராததால் திமுகவுடன் சேர்ந்து திமுக உதவியால் தன் மகனை ராஜ்யசபா MP ஆக்கியவர் ராமதாஸ். அதன் பின்னர் திமுக வீரபாண்டி ஆறுமுகம்  பரிந்துரையால்தான் சுகாதார மந்திரி பதவியை மகனுக்கு வாங்கினார்.

இந்த லெட்சணத்தில் ஐ.மு.கூட்டணியையே ராமதாஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல் அன்புமணி கதையளக்கிறார்.

மண்டல் கமிசன் பரிந்துரையை முதன் முதலில் அமல் படுத்த முயன்றவர் கலைஞரின் நண்பர் VP சிங் அவர்கள்தான்.

டிசம்பர் 1, 1989ல் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் கூட்டணியின் பிரதமராக ஜார்கண்ட் ஜாட் தலைவரான ஜோதி லாலை முன்னிறுத்தினார் வி.பி.சிங். ஆனால், ஜோதிலால் மறுத்துவிடவே இந்தியாவின் ஏழாவது பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார். அந்த காலத்தில் அவரோடு இருந்தவர்கள் தான் இன்னமும் இந்திய அரசியலில் தனிப்பெரும் ஆளுமைகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் கருணாநிதி, லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், ஓம் பிரகாஷ் சவுதாலா, பிஜூ பட்நாயக், ராம் விலாஸ் பாஸ்வான், என்.டி.ராமா ராவ் என்று பெரும் பட்டாளமே அவரோடு இருந்தது. அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலம் பதினோறே மாதங்கள் தான். ஆனால் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வொளி

 மொரார்ஜி தேசாய் காலத்தில் 1978ல் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்கிற மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்சிக்கு சமூக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தீர்வாக முன்வைத்த மண்டலின் பரிந்துரை பத்தாண்டுகளுக்கு மேல் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் அதை தூசுதட்டி எடுத்தார் வி.பி.சிங். இந்தியாவின் அத்தனை சக்திகளும் அவரை எதிர்த்து களமிறங்கின. ஊடகங்கள் மிகக்கடுமையாக விமர்சித்து எழுதின. நாடெங்கும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. கோஸ்வாமி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். நீதிமன்றமும் வி.பி.சிங்கின் முடிவுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது.

அந்த நெருக்கடியான காலத்தில் அவரோடு முழுமையாக துணை நின்ற அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்களின் உதவியுடன் எல்லாவற்றையும் எதிர்கொண்டார். பதவியே போனாலும் பரவாயில்லை மக்கள் நலனே முக்கியம் என்று  ஆகஸ்ட் 8, 1990 ல் மண்டல் கமிசனை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டமியற்றினார். வி.பி.சிங். பட்டியலின மக்களின் இடப்பங்கீடு பாதிக்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இடப்பங்கீட்டை உறுதுபடுத்திய அவரை, சாதியின் பெயரால் வி.பி.சிங் இந்தியாவை பிளவுபடுத்திவிட்டார் என்று விமர்சித்தன ஊடகங்கள். ஆனாலும் அவம் பின்வாங்கவில்லை. இதன் மூலம் அமுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின் வளர்ச்சிக்கான விதையை தூவினார்.

இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்யாயத்தின் முன்னுரையை எழுதிய வி.பி.சிங்கிறகு ‘சமூக நீதி காவலர்’ என்று கலைஞர் கருணாநிதி கம்பீரமான பட்டத்தை அளித்தார்.

அத்வானியின் ரதயாத்திரையை பீகாரில் தடுத்து, கைது செய்தார் லல்லு பிரசாத் யாதவ். அதை காரணம் காட்டி தனது ஆதரவை திரும்பப்பெற்றது பா.ஜ.க. அதன் விளைவாய் நவம்பர் 11, 1990ல் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவில் தோற்கடிக்கப்பட்டது வி.பி.சிங் அரசு.

அன்று அவர் பேசிய நாடாளுமன்ற உரை இந்தியாவின் ஒவ்வொரு மக்களும் படிக்க வேண்டிய பாடம். அவர் எதிர்கட்சிகளை நோக்கி கேட்ட கேள்வி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கேள்வி. அந்த உரையின் தொடக்கத்திலேயே பெரியாருக்கும், அம்பேத்கருக்கும், ராம் மனோகர் லோகியாவிற்கும் நன்றி சொன்னார் வி.பி.சிங்.

பதவியை இழந்தபோதும், இடப்பங்கீட்டு உரிமையை நிலைநிறுத்திய திருப்தியுடன் பதினோறே மாதத்தில் ஒரு சகாப்தமாய் உருபெற்ற வி.பி.சிங் பதவி விலகினார்.

அதன் பின்னர் வழக்குகளை சந்தித்து மீண்டு வந்தது 27 % இட ஒதுக்கீடு. அதற்கு ஆபத்து அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது என்று கதை கட்டுவது மிகப்பெரிய நகைச்சுவை.

இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும்  சோனியா உட்பட யாரும் திமுகவையும் கலைஞரையும் கேட்காமல் எடுக்க வாய்ப்பேயில்லை.

27% இட ஒதுக்கீட்டில் விபி சிங் அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று ஆதரவளித்தது கலைஞர்தான் என்பதை நாடே அறியும்.

எனவே அன்புமணி அவர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment