ANTONY PARIMALAM

Sunday, 12 August 2018

விவசாயிகளுக்காக கலைஞர் நடத்திய நங்கவரம் போராட்டம் 1956

விவசாயிகளுக்காக கலைஞர் நடத்திய நங்கவரம் போராட்டம் 1956

 நங்கவரம்,மேல நங்கவரம்,சூரியனூர்,காவகாரப்பட்டின்னு 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூனு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னா,அதுக்கு காரணம் கலைஞர்தான். நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர் நடத்திய மாபெரும் போராட்டம்தான். 1953 ம் ஆண்டு இந்தத் கிராமங்களை சேர்ந்த 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.ராமநாதய்யர்,என்.ஆர்.ரெங்கநாதய்யர் என்கிற இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க.

 அதாவது,அந்தப் பண்ணையார்களுக்கு சொந்தமான 33412 ஏக்கர் நிலங்களை இந்தத் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க. பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன.

அப்போது,காமராஜர் 60 க்கு நாற்பதுன்னு ஒரு சட்டம் போட்டார். அதாவது,நிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும்,உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சு தரணும்ன்னு சொல்லிய சட்டம் அது.

 ஆனால்,ராமநாதய்யர் அப்படிச் செய்யாமல்,விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார்.

 இதனால்,விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மூன்று வருடம் அந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து கவுண்டம்பட்டி முத்து நடத்தினார்.

1956-ல் இந்தத் போராட்டம் உக்கிரம் அடைந்தது. அப்போது, தி.மு.கவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த அன்பிலாரை கூப்பிட்ட அண்ணா,'கலைஞரை அழைத்துப் போய்,நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்ய சொன்னார். கலைஞர் களத்திற்கு வந்தார்.


 நேராக வயல்களுக்கு 10000 விவசாயிகளை திரட்டிட்டு போய்,தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு,'உழுதவனுக்கே நிலம் சொந்தம்','நாடு பாதி நங்கவரம் பாதி' என்று கோஷம் போட்டார். தொடர்ந்து ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார்.

 அதன் காரணமாக,மாவட்ட நிர்வாகமும்,ராமநாதய்யரும் கவுண்டம்பட்டி முத்துவையும் ,கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

அங்கே விவசாயிகள் சார்பாக அவங்க வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார். இதனால்,மூன்று வருட விவசாயிகளின் உரிமை போராட்டம் முடிவுக்கு வந்தது.

 எத்தனையோ பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தனது வீரியமான போராட்டத்தால் சாதித்துக் காட்டினார் கலைஞர்.

 இதனால்,அந்த நிலங்களை மேல்மடையில் உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 1000,நடுமடை பாசன நிலங்களுக்கு 750,கடைமடை பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு 500 என்று பணையாருக்கு கொடுத்து,நிலங்களை விவசாயிகள் தங்கள் பெயர்களில் பட்டா பண்ணிக் கொண்டார்கள்

https://www.vikatan.com/amp/news/tamilnadu/133720-he-is-the-reason-for-my-growth-karunanidhi-says-about-kaundampatti-muthu-to-stalin.html?__twitter_impression=true
Posted by Antony Parimalam at 00:06 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 11 August 2018

பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 18:19

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.

எரிக் சொல்ஹேய்ம் பதில்:

இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை. ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

சொல்ஹேய்ம் பதில்:

அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

தமிழோசை கேள்வி:

அப்படியானால் இலங்கைப், போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

சொல்ஹேய்ம் பதில்:

போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.

தமிழோசை கேள்வி:

நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

சொல்ஹேய்ம் பதில்:

இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழோசை கேள்வி:

இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

சொல்ஹேய்ம் பதில்:

2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121008_ericsolhaim.shtml


Posted by Antony Parimalam at 08:49 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 10 August 2018

1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது

1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது
எம்ஜிஆர் 1974, 1976 களில் இந்திராவிடம் மண்டியிட்டு கச்சத்தீவை பற்றி வாயே திறக்காமல் இருந்த MGR பற்றி ஜெயலலிதா வாயை திறக்காதது ஏன்?
தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது.மற்ற நேரத்தில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.
1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு.
அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.
1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய அரசுக்குத் தெரியுமா?" என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன். 
  'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' உண்மைதான். ஆனால் இந்திய அரசு பார்லிமென்ட் அனுமதியின்றியே கட்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கையுடன் செய்தது.பார்லிமென்ட்டை மதிக்காத இந்திரா ஒரு மாநில முதல்வரை மட்டும் மதித்து விடுவாரா?

ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான்.
ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியதற்குப் பிறகுதான், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை. இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல.
" பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராமநாதசுவாமிக்கு என கச்சத்தீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சத்தீவில் அந்தோணியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். 1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.
ராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார்.
ஏனென்றால், அப்போது ராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சத்தீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது. நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது"

https://www.vikatan.com/news/india/65385-was-katchatheevu-removed-from-india-map-mgr-regime.html
Posted by Antony Parimalam at 22:57 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கலைஞர் விளக்கம்

விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கலைஞர் விளக்கம்

தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை  எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான்  என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு  எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற  உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான  ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு  எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும்  பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்!இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி  முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று  போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும்  ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு  காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு  அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட,அந்த அணிகளிடையே  இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை;அதன் காரணமாக ஏற்பட்ட  விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

தி.மு.க. அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று  அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி,இலங்கையில் இரண்டு வார  காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச்  சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு  தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.அதையொட்டி,கழகத்தைச் சேர்ந்த மக்களவை  உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல்  கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள்.

18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே தொலைபேசியில்  இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.22-10-2008 அன்று மத்திய மந்திரி  பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை  வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார்.24-10-2008 அன்று  சென்னையில் பிரமாண்டமான "மனித சங்கிலி''ஒன்றினை நடத்தினோம். 26-10- 2008 பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்  இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார்.இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற,  மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி  23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும்  கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

26-4-2009 அன்று விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின்  கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம்.இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம்  உடனே அமலுக்கு வரும்.இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள்  அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது.இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை  அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை "ஜோக்''  என்று கேலி செய்தது. 26 ம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு  முழுவதும் நான் தூங்கவில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு  கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல  முறை தொடர்பு கொண்டேன்.பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார்.  வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு  கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று  எதிர்பார்த்தேன்.எந்தச் செய்தியும் வரவில்லை.இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை  என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம்  அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே  இந்த வயதிலே செய்து கொண்டு,நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம்  செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ  கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான்  யாருக்கும் கூறாமல்,கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால்,நானாக  முடிவெடுத்துச் சென்றேன். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து  உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான்  உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப்  பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர்.  போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம்,  அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய மந்திரிகளும் இருந்தும்  கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி,  போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட  சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும்  தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற  உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும்  காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங்  கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல  என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் - அசையாத  நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி  வணக்கத்தைத் தெரிவித்து - இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு- நமது  உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற  உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான  உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா  ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்!” என்று கூறியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/7745.html
Posted by Antony Parimalam at 01:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பிரபாகரன் கடைசி இண்டர்வியூ

பிரபாகரன் கடைசி இண்டர்வியூ
https://m.rediff.com/news/2008/oct/26ltte2.htm
LTTE chief V Prabhakaran speaks out
October 26, 2008 18:03 IST
Liberation Tigers of Tamil Eelam supremo V Prabhakaran has asked India to lift the ban on his outfit in order to 'fulfil the aspirations of Tamil people', while admitting that Lankan forces have made inroads into the Tiger areas and were at the doorstep of their key town Kilinochchi.
'We expect that it (India) would lift the ban on our organisation and support us to fulfil the long awaited aspirations of the Tamil people,' the 53-year old leader of the LTTE said in an interview.
Conceding that security forces had closed in on the rebel strongholds and had even entered key areas, Vellupillai Prabhakaran, however, said capturing the Tigers administrative capital Kilinochchi was still a distant dream for them.
'The Sri Lankan forces have entered parts of our homeland and are stationed in close proximity to Kilinochchi town. But, capturing Kilinochchi is just a day dream of (Sri Lankan President Mahinda) Rajapaksa,' he said.
In an e-mail interview to Chennai-based Tamil magazine Nakkeeran, Prabhakaran hailed Tamil Nadu Chief Minister M Karunanidhi's stand of seeking quick relief measures for displaced Tamils.
The LTTE leader also expressed dejection over All India Anna Dravida Munnetra Kazhagam leader J Jayalalitha distancing herself from the Tamil problem, while praising other leaders of the state for taking up the ethnic issue in the island state.
'Tamil Nadu Chief Minister, Kalaignar is a Tamil nationalist. He has not only voiced his concern against the Sinhala state terrorism in Tamil Eelam, but has also showed it in action. Today, it makes us happy to see him taking a stance in support of the Tamils when they face untold sufferings. We expect such support in the future as well,' Prabhakaran said.
'Jayalalitha had also voiced her support. But, if she has changed her stand now, what could we say about it,' he said replying to a query.
Showering praise on Tamil Nadu leaders taking up the ethnic issue in Sri Lanka, Prabhakaran said the support 'will definitely give us more strength'.
While accusing Sri Lankan forces of 'carrying out genocidal attacks on Tamils', Prabhakaran also claimed that the military was facing 'severe losses' due to the attacks launched in Northern Sri Lanka.
'The forces are carrying out indiscriminate attacks on civilian areas. More than 100,000 Tamils have fled their homes and are continuously on the move as refugees, seeking safe areas,' he said.
The rebel leader said the Sri Lankan forces had attacked the political headquarters of LTTE, but that no damage was suffered.
'No one was there at the time of the attack,' he said.
The LTTE chief also termed reports that India was providing military equipment and training to the Sri Lankan forces as 'saddening'.
'The media also reported to the world that Indian experts were involved in providing training to operate the radar instrument in Vavuniya, which is very saddening,' Prabhakaran said.
On whether he expected a change in the current environment and any prospects for holding talks, Prabhakaran said, 'We can only expect such a situation depending on the politics within the government and its military stance.'
'We do not carry out attacks on innocent Sinhala civilians. Ours is a liberation organisation fighting for the liberation of the Tamil people. We have continuously called upon the Indian political analysts and policy makers to clearly understand this,' he said.
On Sri Lankan President Mahinda Rajapaksa's observation that he (Prabhakaran) could be handed over to India, if he surrenders or is captured, the LTTE supreme said, 'this is one of the many dreams of Rajapaksa'.
Asserting that he was not living in bunkers, Prabhakaran said, 'We are living among the people, fighting for them and carrying out our freedom struggle. It is a common phrase used by the military during the last 30 years'.
On whether he still persisted with the demand for a separate nation for Sri Lankan Tamils, Prabhakaran said, 'The Tamil people have at every election since 1977, indicated what their political aspirations are. That would be the permanent solution for the ethnic crisis.'
Posted by Antony Parimalam at 01:18 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கர்நாடகாவில் காவேரி மீது அணைகள் கட்டப்பட்ட ஆண்டுகள் விபரம் கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா? தடுக்க முயற்சிக்கான ஆதாரம்👇




Skip to con














கர்நாடகாவில் காவேரி மீது அணைகள் கட்டப்பட்ட ஆண்டுகள் விபரம்

கிருஷ்ண ராஜசாகர் ஆரம்பம்1926
கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959
ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
கலைஞர் முதல்வரானது 1969ல்தான்
கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து வழக்குபோட்டதை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தனது 25.1.1971 தீர்பில்டிஸ்மிஸ் செய்துவிட்டது
ஆனா கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாரம் என பொய்க்கு மேல் பொய் சொல்றானுங்க
கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா?
தடுக்க முயற்சிக்கான ஆதாரம்👇
https://indiankanoon.org/doc/1945849/
உச்சநீதிமன்றம் காவேரி வழக்கில் 22 November, 1991 வழங்கிய தீப்பில் பாரா (6) ல்
கலைஞர் அரசு கர்நாடக அரசு கட்டிக்கொண்டிருந்த அணைகளை தடுக்க இடைக்கால தீர்ப்பு கோரியதை 25.1.1971 தீர்பில் ஏற்காமல் டிஸ்மிஸ் செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது
Tamil Nadu moved this Court by means of a suit under Article 131 of the Constitution being Suit No. 1 of 1971 seeking a direction to the Union Government to constitute a Tribunal and to refer the dispute to it. In the said suit, Tamil Nadu applied for an interim order to restrain the State of Karnataka from proceeding with and executing the projects mentioned therein. This Court by its Order of 25th January, 1971 dismissed the application for interim relief.

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில்
மேட்டூர் தண்ணீர் திறப்பு விபரம்
2006 ஜுன் 12
2007ஜுலை18
2008ஜுன்12
2009ஜுலை28
2010 ஜுலை28
2011ஜுன் 5
2012 செப்டம்பர் 17
2013 ஆகஸ்டு 2
2014 ஆகஸ்டு 10
2015 ஆகஸ்டு 8
2016 செப்டம்பர் 20
2017 அக்டோபர் 1
ANTONYPARIMALAM8802




.com.
Posted by Antony Parimalam at 01:04 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கட்சத்தீவு* நடந்தது என்ன? முழுவிபரம்




கட்சத்தீவு*
நடந்தது என்ன?
முழுவிபரம்
பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.
திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.
ஏன் இந்த அவசரம் தெரியுமா?
முதல் காரணம் 1974 நியூக்லியர் டெஸ்ட்க்கு இந்தியவிற்கு கிடைத்த எதிர்ப்பு.
2வது காரணம் 1976 ல் இலங்கையில் நடைபெற இருந்த
NAM summit. மேலும் president of UNGA பதவி இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு.
அவசர அவசரமாக கட்சத்தீவு ஒப்பந்தம் 26th June,1974 அன்று கொழும்புவிலும்
28 June, 1974 அன்று டெல்லியிலும் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
1)ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி ratification செய்யப்பட வேண்டும்.
"It shall enter into force on the date of exchange of the instruments of ratification which will take place as soon as possible"
இன்று வரை இந்த ஒப்பந்தம் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்படவில்லை.
ஒப்பந்தமே அங்கீகரிக்கபடாத நிலையில் இந்த ஒப்பந்தமே இந்தியச் சட்டப்படி செல்லாது
2)This 1974 agreement had secured the rights of Indian fishermen to dry their nets and use Church for religious observance.
3) இந்த ஒப்பந்தத்தின் Article 5 மற்றும் 6 படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை ஏற்கப்பட்டிருந்தது.
Article 6 categorically stipulated that vessels of India and Srilanga will enjoy in each others' water such rights as they have traditionally enjoyed therein.
இந்தியாவில் இந்திராவால் 25 June 1975 முதல் 21 March 1977 வரை எமர்ஜென்ஸி காலம் நடந்தது.
திமுக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்டது.
இதற்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் 23.3.1976 இல் இந்திய இலங்கை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளையே உட்படுத்தியது.
அதனால் 1974 மற்றும் 1976 க்கும் சம்பந்தமில்லை.
(In 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS)
ஆனால் 1976 ஏப்ரலில் இந்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
நமது கேள்விகள்
1) இன்று வரை கச்சத்தீவு 1974 ஒப்பந்தம் மத்திய பார்லிமென்டால் அங்கீகரீக்கப்படவில்லை என்பதால் இந்திய சட்டப்படி ஒப்பந்தமே செல்லாது என்பதே உண்மை.
ஒப்பந்தமே செல்லாதபோது கலைஞரை எந்த அடிப்படையில் குறைசொல்கிறீர்கள்?
2) ஒப்பந்தத்தை கலைஞர் மட்டுமே எதிர்த்தார்.
இந்திராவின் அடிமையாக அப்போதிருந்த அதிமுக MGR , காங்கிரஸ் நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் விரல் சூப்பிக்கொண்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?
3) முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் . அப்போது MGR ஆட்சி.
1977-1987 வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
4)இன்று ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞரை வசைபாடும் எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்டது ஏன்?
அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.
1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாமே.
கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை
இணைப்பு (கலைஞர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் 2008)

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.
இதை முழுசா படிங்க.
கலைஞரால் ஒப்பந்தத்தை தடுக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் 1974 ஒப்பந்தத்தினால் தமிழக மீனவன் நலன் காக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இணைப்பு :- 1974 கட்சத்தீவு ஒப்பந்த நகல்.👇



Posted by Antony Parimalam at 00:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

About Me

Antony Parimalam
View my complete profile

Blog Archive

  • ▼  2022 (1)
    • ▼  February (1)
      • நீட் தேர்வு ஏன் தேவையில்லை?
  • ►  2020 (11)
    • ►  December (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2019 (33)
    • ►  December (2)
    • ►  October (3)
    • ►  September (4)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (5)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (7)
    • ►  February (2)
    • ►  January (4)
  • ►  2018 (107)
    • ►  December (6)
    • ►  October (1)
    • ►  September (10)
    • ►  August (26)
    • ►  July (21)
    • ►  June (29)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (2)
  • ►  2017 (67)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  July (12)
    • ►  June (48)
Simple theme. Powered by Blogger.