Friday, 10 August 2018

1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது

1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது
எம்ஜிஆர் 1974, 1976 களில் இந்திராவிடம் மண்டியிட்டு கச்சத்தீவை பற்றி வாயே திறக்காமல் இருந்த MGR பற்றி ஜெயலலிதா வாயை திறக்காதது ஏன்?
தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது.மற்ற நேரத்தில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.
1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு.
அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.
1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய அரசுக்குத் தெரியுமா?" என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன். 
  'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' உண்மைதான். ஆனால் இந்திய அரசு பார்லிமென்ட் அனுமதியின்றியே கட்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கையுடன் செய்தது.பார்லிமென்ட்டை மதிக்காத இந்திரா ஒரு மாநில முதல்வரை மட்டும் மதித்து விடுவாரா?

ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான்.
ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியதற்குப் பிறகுதான், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை. இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல.
" பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராமநாதசுவாமிக்கு என கச்சத்தீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சத்தீவில் அந்தோணியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். 1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.
ராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார்.
ஏனென்றால், அப்போது ராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சத்தீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது. நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது"

No comments:

Post a Comment