Wednesday, 1 August 2018

இலங்கை மலையக தமிழர்களின் பரிதாப வரலாறு

இலங்கை பிரச்சினை என்றால் ஈழதமிழர் என்பார்கள், சிங்களகொடுமை, புலிகள், போர் , மறக்காமல் காங்கிரஸ் கலைஞர் துரோகம்  இப்படித்தான் செய்திகள் வரும்

இலங்கையில் மூவிதமான தமிழர்கள் உண்டு, ஈழதமிழர், இஸ்லாமிய தமிழர், மலையக தமிழர்

இதில் ஈழதமிழரை பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், இஸ்லாமிய தமிழரும், மலையக தமிழரும் மறக்கபட்டவர்கள்

இஸ்லாமிய தமிழர்களின் பிரச்சினை வேறுமாதிரியானது, முதலில் சிங்களனும் யாழ்பாண தமிழனும் அவர்களை போட்டுத்தான் அடித்துக்கொண்டிருந்தான்,

பின் சிங்கள யாழ்பாண மோதல் வந்தபின் புலிகள் மட்டும் அடித்துகொண்டிருந்தனர் அல்லது பிடுங்கிகொண்டிருந்தனர். ஓரளவு வசதியான இனம் அது, அதுதான் காரணம்.

இந்த  மலையக தமிழர்கள்தான் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு, ஈழ தமிழர் அந்த  மண்ணை சார்ந்தவர்கள், வெள்ளையர் ஆட்சியில் தேயிலைக்காக மலையகம் கொண்டு செல்லபட்டவர் வம்சம் மலையக தமிழர்கள்

அடிமைபட்டு கிடக்கும் அவலம்

இவர்களை மேலாதிக்கம் செய்த வெள்ளையனின் அதிகாரிகள் யாழ்பாண தமிழர்கள், இந்த யாழ்பாண தமிழருக்கும் இந்த தமிழர்களை அடிமையாகவே வைத்திருப்பதில் ஒரு ஆனந்தம்,

தமிழன் இன்னொரு தமிழனை அடக்கி வைத்திருப்பதில் வெள்ளையனுக்கும் மகிழ்ச்சி

                                                 

அவர்கள் பெரும்பாலும் தமிழக அடித்தட்டு மக்கள், இலங்கையில்நிலவிய சாதிபாகுபாடு அவர்களை அங்கும் அடித்தது

ஈழதமிழருக்கு அவர்கள் ஒதுக்கபட்டவர்கள், புலிகளின் ஈழ வரைபடத்தில் கூட மலையகம் வராது,

ஈழபோராட்டம் மலையக தமிழர்களை அருகிலே சேர்க்கவில்லை என்பது வேறுவிஷயம், பத்மநாபா கம்யூனிஸ்ட் என்பதால் அவர் கொஞ்சம் முயற்சி எடுத்தார் அவரோடு சரி

புலிகள் ஒருகாலும் மலையக தமிழர் உரிமை வாழ்வு பற்றி கனவிலும் சிந்தித்ததில்லை,

மலையகத்தார் மனிதர்களே இல்லை என்பது போல இருந்தார்கள் அவர்கள் கனவு யாழ்பாணம், கிளிநொச்சி இன்னபிற‌

ஈழவிடுதலை வெறி அவர்களிடம் இருந்ததே தவிர மலையக மக்கள் எப்படியும் போகட்டும் என்ற எண்ணம்தான் இருந்தது, 

மலையகத்தார் தமிழர்கள்தான் ஆனால் ஈழத்தவர் அல்ல என்பதால் புலிகள் அதுபற்றி சிந்திக்கவில்லை, புலிகள் அப்படித்தான்

சிங்களமோ ஈழதமிரையே விரட்ட துணிந்த நிலையில் மலையக தமிழர்களை எங்கே நினைக்கும்?

1960களில் மலையக மக்களில் ஒரு பகுதியினரை நாடற்றவர்களாக்கி, இந்தியாவிற்கு அனுப்பி மகிழ்ந்தது சிங்களம், யாழ்பாணத்தாரும் தடுக்கவில்லை மாறாக சென்று தொலையட்டும் எனும் மனநிலையில் இருந்தார்கள்

அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசும் அவர்களை ஏற்றிருக்க கூடாது, மல்லுகட்டியிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை, மாறாக ஏற்றுகொண்டது, இது பெரும் தவறு

மலையக மக்கள் பெருகினால் அது நம் வோட்டு வங்கிக்கு பாதிப்பு என சிங்களமும், யாழ்பாண தமிழனுக்கு ஆபத்து என ஈழமும் நினைத்து செய்த கூட்டு சதி அது.

குடியுரிமை பறிக்கபட்டு அனுப்புவது என்பது ஒரு அவமான செயல், கிட்டதட்ட நிர்வாண கோலம்

அந்த கொடுமையினை அன்று சிங்களம் செய்தபொழுது எல்லா தரப்பும் வேடிக்கை பார்த்தது, பெரும் வரலாற்றுகொடுமை அது.

பின்பு ஈழபிரச்சினையில் இந்திராவும், ராஜிவும் தலையிட்டபொழுதும் அம்மக்களை மறந்துவிட்டார்கள் அல்லது புறக்கணித்தார்கள்

இந்த மலையக அடிமை தமிழர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் சிங்களம், ஈழம், தமிழகம், இந்தியா என எல்லா தரப்பு மக்களாலும் கண்டுகொள்ளபடாத அபலைகள்

சொந்த நாட்டு உறவும் இன்றி, வாழும் நாட்டில் உரிமை இன்றி ஒரு வகையான சிறை அகதி வாழும் வாய் பேசும் அடிமைகள், மிக மிக பரிதாபத்திற்குரியவர்கள்,

இங்கிருந்து 1840 களில் இலங்கை சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலை களை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங் கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப் பட்டார்கள்.

இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர் களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர் களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார்.

இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காததிருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின.

2012 கணக்குபடி இலங்கை மலையக தமிழர்கள்
8,42,323 பேர் உள்ளனர். ஆனால் 1989 கணக்குபடி 8,73,000 பேர்
மலையக தமிழர்

இன்றும் மலையகத்தமிழர்களின் 40000 வீடுகளுக்கு மேல் கழிப்பறை கூட கிடையாது

பத்திரிக்கை செய்திகள்

1 comment:

  1. மிகச் சுருக்கமாக இலங்கையில் உள்ள தமிழர் அரசியல் பற்றிய தங்களின் கட்டுரை .
    தமிழரிடையே மூன்று பிரிவுகள் என்பதும், அவர்களுக்குளேயே வேற்றுமை இருந்தது என்பதும் தமிழக . இந்திய அரசியலை கடந்த 35 ஆண்டுகளாக தேரிந்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய செய்தி. இது என் அறியாமையே காட்டுகிறது.
    தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete