Wednesday, 5 July 2017

ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின் பதில்**

ஆரியம் வளர்க்கும் நடிகர் சேகருக்கு ஒரு திராவிடனின் பதில்**

கேள்வி :- திராவிடம்னா என்னா அண்ணே..?

பதில் :-  ஆரியம் என்ற அடிமைத்தனத்தை இருளை போக்க வந்த சூரியன்தான் திராவிடம்.


கேள்வி :- மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..திராடவிடம்

பதில்:-  மிடாஸ் என்னும் சாராய கம்பெனியின் முதலாளியே ஆரியத்தாய் ஜெயலிதாதானே . அக்கம்பெனிக்கு MD யாக ஜெயாவால் நியமிக்கப்பட்ட ஆரியர் சோ என்னும் ஆரியர்தானே.
இங்கே திராவிடம் எங்கே வந்தது?
.
கேள்வி :-  ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..திராவிடம்

பதில் :- ஆரிய குடும்பத்தில் இளம் விதவைகளுக்கு மொட்டையடித்து வெள்ளை புடவை கட்டி அவர்களை கடைசி வரை வீட்டின் மூலையில் அமங்கலியாக அமரவைத்தது ஆரியம்.

இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்து அழகு பார்த்தது திராவிடம்

பெண்ணுக்கு தாலி கட்டி அடிமையாக நடத்தியது ஆரியம்
பெண்களுக்கு சமஉரிமைகள் தந்து ஆதரித்தது திராவிடம்


 கேள்வி :-மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..திராவிடம்

பதில்:-  ஆரியத்தாய் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெரும் கமிசனுக்கு மணல் கொள்ளை உரிமைகள் வழங்கப்பட்டது.


கேள்வி :- சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..திராவிடம்

பதில் :-  ஆயிரம் ஆண்டு சாதி வளர்த்து போற்றி இன்றும் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வரும் ஆரிய கூட்டத்தின்
ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாத்தான் அழிக்க முடியும்.

ஆரியத்தின் விஷ வித்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க திராவிடமும் சில சமரசங்களை செய்துதான் ஆக வேண்டும். கலப்புத் திருமணம் என்னும் சாதி இன்னும் சில வருடங்களில் தமிழகத்தின் மிகப்பெரும் சாதியாக உருவாகப்போகிறது.

அப்போது ஆரியம் பல் இளிக்கப்போவது நிச்சயம்.

கேள்வி:- ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..திராவிடம்

ஆரியத்தின் பினாமி MGR ஆட்சியில்தான் ஜேப்பியார் முதல் சாராய உடையார் வரை ஏரிகள் தாரை வார்க்கப்பட்டது. அதற்கு  உதவியது அன்றைய ஆரிய IAS அதிகாரிகள்தான்.

கேள்வி :- மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது.. திராவிடம்

பதில் :-  1967 முதல் 2017 வரை திராவிட ஆட்சி திமுகவால் நடத்தப்பட்டது 21 வருடங்கள்

மீதி 29 வருடங்கள் அதிமுக என்னும் ஆரிய அடிமை கட்சியால் நடத்தப்பட்ட ஆரிய பினாமி ஆட்சி. அதில் ஜெயாவே ஒரு முழு ஆரியர் என்பதை மறந்து விட்டீரே.


கேள்வி :- சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..திராவிடம்

பதில்:-  திராவிடத்தலைவர் கலைஞர் வீட்டில் அனைத்தும் கலப்புத் திருமணம்தானே. அவரே சாதி மறுப்பின் அடையாளம்.

கேள்வி  :-பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..திராவிடம்

பதில் :- இந்த விசயத்தில் திராவிடம் தேவலாம். அந்த காலத்தில் ஆரிய கடவுகளுக்கு பலதாரங்கள் இருந்ததே. ஆரிய இதிகாசங்களில் ஒரே பொண்ணுக்கு 5 கணவர்கள் போன்ற விஷயங்கள் திராவிடத்தில் கிடையாதே.

இந்த காலத்தில் எந்த திராவிடனும் பலதார திருமணம் செய்வதில்லை. சட்டமும் அனுமதிப்பதில்லை.


கேள்வி :- விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..திராவிடம்

பதில் :- நீங்கள்  சொல்லும் இரண்டும் ஆரியர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்ட அயோக்கியத்தனம்.
இந்த பருப்பெல்லாம் இனிவேகாது.

கேள்வி :- தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது..திராவிடம்

தமிழகத்தில் பிறந்து தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வரும் 3% ஆரியக் கூட்டம் தமிழை ஒழிக்க சமஸ்கிருதம் இந்திக்கு வரவேற்பளித்து செய்து வரும் துரோகம் ஊரே நாறுதே
ஆரியரே

கேள்வி :-இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் #திராவிடம்னு சொல்றாங்கப்பா...

பதில் :- நாடகம்  போடுவது,  நடிப்பது , காட்டிக்கொடுப்பது, சண்டை மூட்டி கலவரத்தை ஏற்படுத்துவது,  சாதிக்கலவரம், மதக்கலவரம் உண்டாக்குவது போன்ற தகிடுதத்தம் செய்வது
எல்லாம் அசிங்கப்பிடித்த ஆரியம்தானே

அனைத்து விதமான ஏமாற்று வேலைகளுக்கும் பித்தலாட்டத்திற்கும் அடிப்படையே #ஆரியம்தான்

Tuesday, 4 July 2017

அரசியல் தூய்மை இல்லாத அன்புமணி

அரசியல் தூய்மை இல்லாத அன்புமணி…

சினிமாவில் நடிப்பவர்கள், வசனம் எழுதுபவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? ஒரு மருத்துவருக்கு நாட்டை ஆளத் தெரியாதா? இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார். நாட்டை ஆள்வதற்கு இவருக்குத் தகுதியிருக்கிறதா என்பதை தனது பிளாஷ்பேக் அனுபவங்களிலிருந்து அன்புமணி சுயசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் மே 2004-லிருந்து மன்மோகன் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஐந்ள் பதவி வகித்தார். அவருக்கு முன்பாக சுகாதாரத்துறை பதவியை வகித்த 13 அமைச்சர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பழமையும் சிறப்புமிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர் ஒருவர் மத்திய அமைச்சரானது இவர் ஒருவரே. ஆனால் பதவியேற்ற நான்காண்டுகளில் அவர்கள் எல்லோரையும் இவர் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சுதந்திர இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகளை கொள்ளை நோய்களிடமிருந்து பாதுகாத்த மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களான கசௌலி மத்திய ஆராய்ச்சிக்கழகம் ( 1905 ), குன்னூர் லூயி பாயிஸ்டியர் இன்ஸ்டிட்யூட் கழகம் ( 1907 ) கிண்டி பிசிஜி லேபரேட்டரி ( 1948 ) ஆகியவற்றின் தடுப்பூசி மருந்து உற்பத்தியை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 15.1.2008 அன்று முதல் நிறுத்தி பூட்டு போட்டார்.
இது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை உருவாக்கியது. பெரும்பாலான பத்திரிகைகள் இதைக் கண்டித்தன. இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மீண்டும் இந்நிறுவனங்கள் திறக்கப்படவேண்டும் எனப் போராடின. ஆனால் இந்த தடுப்பூசி நிறுவனங் கள் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் உற்பத்திவிதிமுறைகளுக்கேற்ப இல்லை என்பதால் இவ்வாறு மூட வேண்டியிருந்தது என அன்புமணி ராமதாஸ் சிறிதும் கூச்சமின்றி விளக்கம் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாக மாறியிருந்த நிலையில், அது வழிகாட்டும் அமைப்பே தவிர கட்டளையிடும் அமைப்பு அல்ல என மருந்தியல் அறிஞர்கள் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
2004ஆம் ஆண்டிலேயே இதுபற்றி தெரிந்திருந்தும் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இந்த தடுப்பூசி நிறுவனங்களை மேம்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரது இந்தச் செயல் பல சந்தேகங்களை கேள்விகளை உருவாக்கியிருந்தது. இதையெல்லாம் அன்புமணி ராமதாஸ் வசதியாக மறந்திருக்கக்கூடும். நாடு மறக்கவில்லை.

கொள்ளை லாபத் தொழில்

மிகப்பெரும் கொள்ளை லாபம் கொழிக்கும் சர்வதேசத் தடுப்பூசிச் சந்தையில், தொழில் வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகள் விலை உயர்ந்த புதிய தடுப்பூசிகளை 1990களின் இறுதியில் அறிமுகம் செய்தன. கொள்ளை லாபம்தான் இதன் பிரதான நோக்கமாக இருந்தது.
இதனால் 1998-2001 ஆண்டுகளில் மலிவு விலையில் தடுப்பூசி தயாரித்து வந்த உலகின் 14 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் முற்றிலும் தயாரிப்பை நிறுத்திவிட்டன. இதனால் அடிப்படையான தடுப்பூசிகளின் தட்டுப்பாடு உலகெங்கும் ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் டிப்தீரியா, இசிவுநோய், போலியோ, காசநோய், வெறிநாய்க்கடி போன்ற நோய்களுக்கான ஆறு அடிப்படை தடுப்பூசிகளை குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், கிண்டி பிசிஜி நிறுவனம், கசொளலி இந்திய ஆராய்ச்சிக்கழகம் உள்ளிட்ட இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்து நாட்டின் நோய் தடுப்புத் திட்டத்திற்கு மலிவான விலையில் அளித்து வந்தன. இவைகளை காங்கிரஸ் பாஜக ஆட்சிகள் தேவைக்கேற்ப நவீனமாக்கவில்லை. போலியோ தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்குரிய நிறுவன விரிவாக்கமும் செய்யவில்லை.
இந்நிலையில் தான் 2004 மே மாதம் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக பதவியேற்றார்.
உலக தடுப்பூசிச் சந்தையில் 33 சதவீதம் இந்தியச் சந்தையாகும். தடுப்பூசி பகாசுர நிறுவனங்கள் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாகவே பார்த்தன. 2004லிருந்து 2008 ஜூலை வரை நிறையவே வாய்ப்பும் அவகாசமும் இருந்தும் இந்நிறுவனங்களை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதாவது தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இந்திய தடுப்பூசிக் கொள்கைகளை வடிவமைப்பதில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குறியாக இருந்தாரா என்ற ஊகங்களை இது உருவாக்கியது. இதுவே இந்திய தொற்றுநோய் தடுப்பியக்கத்திற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி தனியார், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் குவிக்கவும் காரணமாக இருந்தது.

சர்வதேச தடுப்பூசி கொள்ளைக் கூட்டணி

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியில் யுனிசெப், உலகசுகாதார அமைப்பு, உலக வங்கி, பில்கேட்ஸ் பவுண்டேசன் (மைக்ரோசாப்ட்) ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள். இந்தியா உள்பட 34 நாடுகள் இதன் தடுப்பூசி வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் பங்காளிகள். இதில் பில்கேட்ஸ் பவுண்டேஷன் உள்பட அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மற்றும் அதன் அமைப்புகளின் மொத்த நிதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீத மாகும். இந்நாடுகளின் நிறுவனங்கள் தயாரிக்கும் விலையுயர்ந்த ஐந்திற (பெண்டாவேலண்ட் தடுப்பூசிகள்) தடுப்பூசிகளின் உற்பத்தி சந்தையில்லாமல் வீணாகக் குவிந்தன. மறுபுறம் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் தொற்று நோயியல் இயக்கத்திற்கு தேவையான மலிவான தடுப்பூசி நிறுவனங்கள் மூடப்பட்டு (நம்மையும் சேர்த்துத்தான்) செயற்கையான பற்றாக்குறை இவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது.
உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் நலனையே பிரதானமாக கொண்டிருந்ததால் கேட்ஸ் பவுண்டேஷன் ஆளுகையின்கீழ் இந்த கூட்டணியாவது, விலைஉயர்ந்த தடுப்பூசிகளின் விற்பனைக்கான ஏஜெண்டாகவே மாறியது. ஏழை நாடுகளின் சுகாதார இயக்கங்களில் தேவையில்லாத தடுப்பூசிகளை திணிப்பதும் அந்நாட்டின் தொற்றுநோய் தடுப்பியக்கத்தின் எதிர்காலத்தை தனக்கு சாதகமாக மாற்றுவதையும் “சேவை” என்ற பெயரில் இக்கூட்டணி செய்தது.
2011-2015 காலகட்டத்தில் மட்டும் 73 நாடுகளில் 200 வகை விலையுயர்ந்த புதிய தடுப்பூசிகளுக்கு இக்கூட்டணி ஆதரவளித்தது. 8.12.2008 இல் இக்கூட்டணியின் தில்லி அரங்கில் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இந்திய தொற்று எதிர்ப்பியக்கத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் சேர்க்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தவகை தடுப்பூசிகளுக்கு எதிராக கடுமையான வாதங்கள், எதிர்ப்புகள் உருவாகின.
புகழ்பெற்ற சமூக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் யென்னுப்பு மாதவி, ஜேக்கப் எம். புலியேல், என்.ரகுராமன் போன்றோர் பில்கேட்ஸ் கூட்டணியை விமர்சித்தும் எச்ஐபி மற்றும் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகளை நமது தடுப்பியக்கத்தில் சேர்க்க வேண்டிய தேவை எழுவில்லை ( மருத்துவ ஆராய்ச்சிக் கழக சஞ்சிகை அக்டோபர் 2010 பக்கம் 456) என ஆதாரங்களுடன் வாதிட்டனர்.
இந்திய தொற்றுநோயியல் திட்டத்தை தன் தேவைகொப்ப மாற்ற நினைத்த இந்த பில் கேட்ஸ் கூட்டணியைதான் ரத்தினக்கம்பளம் விரித்து அன்புமணி வரவேற்றார். இந்த கூட்டணியில் இருந்த உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய நெருக்கடியை அன்புமணி ராமதாஸ் நமது நிறுவனங்களை மூடுவதற்கு வசதியாக்கிக்கொண்டார்.

பதில் சொல்லத் தயாரா அன்புமணி அவர்களே!

அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஐந்தாண்டுகளில் ஏராளமான கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன. 2007 டிசம்பர் இறுதியில் (அரசு நிறுவனங்களை மூடுவதற்கு சற்று முன்பு) அவரது நெருங்கிய நண்பரின் க்ரீன் சிக்னல் பையோ பார்மா எனப்படும் சென்னை நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிப்பிற்காக ரூ.14 கோடி வங்கியில் பெற்றுத்தந்ததாகவும், மதுரை தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு கருவிகள் வாங்குவதற்கு முறைகேடாக சான்றிதழ் அளித்ததாகவும், தட்டம்மை தடுப்பூசிக்கான மூல மருந்தியல் விதை கொள்முதலில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றதாகவும் “தி பயோனியர்” தொடர்ந்து எழுதியது.
15.1.2008 அன்று இந்திய நிறுவனங்களின் தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திய அன்புமணி அவர் பதவி விலகும்வரை நிறுவன மேம்பாட்டிற்கும் மீண்டும் திறப்பதற்கும் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.
உத்தரப்பிரதேசம் தனியார் கல்லூரியான ரோகி சந்த் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை புதுப்பித்ததிலும் அடிப்படை வசதியில்லாத தனியார் இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் கூறப்பட்ட வழக்கு தில்லி சிஐபி நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகளில் குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்களை மோசடியாக பயன்படுத்துதல் இவைகளுடன் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளில் அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டிற்குரிய முதல் நோக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியது.
ஆனால் அன்புமணி “தி இந்துவிற்கு” அளித்த பேட்டியில் (7.10.2015) முதல் தகவல் அறிக்கையிலோ ஆரம்ப விசாரணைகளிலோ தனது பெயர் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் பின்னர் சேர்க்கப்பட்டது அரசியல் நோக்கம் உள்ளது எனவும் கூறினார்.
குற்றவியல் வழக்குகளின் நடைமுறையில், வழக்கின் புலன் விசாரணையின்போது முதல் தகவல் அறிக்கையில் இல்லாத ஒருவர் குற்றவாளி எனத் தெரிந்தால் அவரை குற்றப்பத்திரிகையில் இணைப்ப தென்பது வழக்கமான ஒன்று. நீதிமன்ற சாட்சிய விசாரணையின்போதும்கூட புதிதாக ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்திற்கு தெரிந்தால் அவர் மீதும் குற்றச்சாட்டு வனையப்பட்டு நடத்தப்பட்ட லட்சக்கணக்கான வழக்குகளை இந்திய நீதிமன்றங்கள் சந்தித்துள்ளன.
இவை மாண்புமிகு அன்புமணி ராமதாசுக்கு தெரியாததல்ல. மக்களுக்கு தெரியாது என அவர் நினைப்பதுதான் தவறு. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே, நீங்கள் மூடிய தடுப்பூசி நிறுவனங்களை திறக்க வேண்டும் என இடதுசாரிகள், தொழிலாளர்கள் போராடினார்கள்.நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பினார்கள். இப்போராட்டம் வெற்றி பெற்றது. இப்போது இந்நிறுவனங்கள் இயங்குகின்றன. 2004 ஆம் ஆண்டிலேயே நம் தாயகத்து தடுப்பூசி நிறுவனங்களை தொழில்நுட்ப அபிவிருத்தி செய்யவேண்டும் எனத் தெரிந்தும் மருத்துவரான உங்களுக்கு அதிகாரம் இருந்தும் அதைச் செய்யவில்லையே ஏன்?
இதற்கான விவாதத்தை நாம் மீண்டும் துவக்கி வைக்கலாம். இந்திய நாடாளுமன்ற நடைமுறையில் நீங்கள் செய்யும் தொழில் முக்கியமல்ல. முன்னிறுத்தும் கொள்கைகள்தான் முக்கியம். உங்கள் தோற்றம் முக்கியமல்ல. அரசியலில் தூய்மைதான் முக்கியம்.
இந்திய தடுப்பூசி நிறுவனங்களை மூடிய வரலாற்றுத் துரோகத்திற்கான விடையை வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள்.
–  சுஜித் அச்சுக் குட்டன்
free wordpress themes

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா , மதிமுக கட்சியினரே...... தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா , மதிமுக கட்சியினரே......

தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

இன்று அவர்களிடம் என்ன சொத்துக்கள் உள்ளது என என்றாவது சிந்தித்தது உண்டா?
அதை அறிந்துக் கொள்ள முயன்றது உண்டா?

ஆட்டு மந்தைகள் போலத்தானே இருக்கிறீர்கள்.

உங்கள் தலைவர்கள் அக்மார்க் யோக்கியர்கள் என்பதை உறுதி செய்த பின்தானே நீங்கள் மற்றக் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்க முடியும்?

உங்கள் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை மறக்க வேண்டாம் ஆட்டு மந்தைகளே.

கொஞ்சம் மூளையை உபயோகிங்க.

1)1976 ஜனவரியில் திமுக ஆட்சியை கலைத்த இந்திராவால் ஏன் எமர்ஜென்சி காலத்திலேயே கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை? ஏன் வெட்டித்தனமா கமிசன் போடனும்? ஒரு FIR கூட போட முடியாதது ஏன்?


2) 10 வருசம் ஆட்சியிலிருந்த MGR ரால் கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது ஏன்?

3)1991 இல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா பழிவாங்காத ஆளே கிடையாதே.
கலைஞர் மீது 1996 வரை எந்த நடக்கையையும் எடுக்க முடியாதது ஏன்?

4) 1996 முதல் 2016 வரை சொத்துக்குவிப்பு வழக்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜெ மற்றும் சசி குடும்பத்தினர்  கலைஞர் மீது மிக மோசமான கோபத்தில் இருந்திருப்பார்கள்.

10 வருட ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே இருந்தது.

 கலைஞர் குடும்பச்சொத்தை நீங்களெல்லாம் பதிவு போடும் போது அந்த விபரம் கலைஞரை பழிவாங்க காத்திருந்த உளவுத் துறையையே கையில் வைத்திருந்த  அவர்களுக்கு தெரியாதா?

ஏனென்றால் கலைஞர் சொத்துக்கள் என நீங்கள் போட்ட பட்டியலே டுபாக்கூர்தான்.

 18 வயது முதல் 90 வரை 72 வருடங்கள் ஆண்டுகள் உழைத்தவருக்கு சொத்துக்கள் இல்லாமலா இருக்கும்?

அவற்றுக்கு முறையாக கணக்கு காண்பித்திருந்ததால்தான் ஜெயாவினால் கலைஞர் மீது ஒரு
FIR கூட போடமுடியவில்லை.

கலைஞரால் 20 வருடம் நிம்மதியிழந்த சகல அதிகாரம் படைத்த ஜெயலலிதாவாலேயே
எதுவும் செய்ய முடியாத போது
இந்த சில்லரை கட்சி மூடர்கள் தினம் தினம் கலைஞரை பற்றி கதை கட்டுவது கேடு கெட்ட
#மொள்ளமாரித்தனமே

Monday, 3 July 2017

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? இதோ அவரே விளக்கம் தருகிறார் மூடர்களே

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது?
இதோ அவரே விளக்கம் தருகிறார்
மூடர்களே
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.

முரசொலி தொடங்கி முதல் கார் வரை...

எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.

அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.

அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.

நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.

அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.

அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.

75 படங்கள்...

இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.

வசதியற்ற வீடு...

1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.

இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.

நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ரூ.100 கோடி...

முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.

வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

செம்மொழி மாநாடு...

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.

உளியின் ஓசை...

2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.

23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.

25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

பிறந்தநாள் விழா...

என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.

நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.

சொத்துகளே வாங்கவில்லை...

இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். 'சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.

நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.

தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்தவரை, என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்வராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.

சிபாரிசுக்கு இணங்கவில்லை...

இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது.  முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.

நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!

கலைஞர் கருணாநிதி

2010 டிசம்பர் 2 இல் கலைஞர்
தனக்கு எப்படி  சொத்து வந்தது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த துணிச்சலும் நேர்மையும் தமிழகத்தின் வேறு எந்த அரசியல்வாதிக்காவது வந்தது உண்டா?


Sunday, 2 July 2017

உங்களுக்கு #திராவிடம் என்ற வார்த்தை பிரட்சினையா? இல்லை #திராவிட_கட்சிகள் பிரட்சினையா? இல்லை #திராவிடக்கொள்கைகள் பிரட்சினையா?....தமிழ் தேசிய குஞ்சுகளே

 உங்களுக்கு #திராவிடம் என்ற வார்த்தை பிரட்சினையா?  இல்லை #திராவிட_கட்சிகள் பிரட்சினையா? இல்லை #திராவிடக்கொள்கைகள் பிரட்சினையா?....தமிழ் தேசிய குஞ்சுகளே

உன்னுடைய நோக்கம் ஆட்சிக்கு வருவது மட்டுமே. அதற்கு திராவிட கட்சிகள் தடையாக உள்ளது. அதற்கு ஏன் திராவிடம் என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தத்தை கண்டுபிடித்து களங்கத்தை கற்பிக்கிறாய்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு வரலாற்றில் அர்த்தம் தேடி பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள் தமிழ்தேசிய மூடர்கள்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கு மட்டுமல்ல எவருக்குமே தெரியாது. ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு ஏற்றபடி யானையை குருடன் தடவி பார்த்து கருத்து சொன்னது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் திராவிட கட்சிகளால் உனக்கு கிடைத்த #சமத்துவத்தையும் #சமூகநீதியையும் நீ இல்லையென சொல்லிவிட முடியுமா?

சூத்திரனாகவும் பஞ்சமனாகவும் தீண்டாமையால் கைக்கட்டி வாழ்ந்த நீ இன்று IAS IPS அதிகாரிகளானது எப்படி? அதை தந்தது நீதிகட்சி ,திக, திமுகதான்.
அதிமுகவை இதில் சேர்க்க முடியாது. அது ஆரியர்களால் திராவிட அடிமைகளை வைத்து உருவாக்கப்பட்ட கட்சி.

ஆரியர்கள் திராவிடம் என்ற வார்த்தையை வெறுப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் திராவிடத்தால் பலன் பெற்ற நீ அந்த வார்த்தையால் வீழ்ந்தோம் எனச் சொல்வது கேடு கெட்டதனம் இல்லையா?

#ஆரியம் என்பது அடிமைத்தனத்தை மதத்தின் பெயரால் உருவாக்கும் கருவி
#திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைந்தெறிந்து சமத்துவத்தை உருவாக்கும் கருவி.

திராவிட ஆட்சியில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். திராவிட தலைவர்கள் மீதும் ஆயிரம் குறைகள் இருக்கலாம். அதை நீ சுட்டிக்காட்டி ஓட்டு வாங்கு. அதை விட்டு விட்டு திராவிடம் என்ற வார்த்தைக்கு வரலாற்றில் அர்த்தம் தேடி என்ன செய்யப்போகிறாய்?

திராவிடம் என்ற சொல்தான் உனக்கு சமத்துவம் தந்தது. எனவே இன்றைய சூழலில் திராவிடம் என்றால் சமத்துவமே என்றே பொருள் கொள்க.

இன்று நாம் தமிழன் என்பாய்
நாளை நாம் தேவர் , நாம் நாடார் என்பாய். பின்னர் நாம் சென்னை, நாம் கன்னியாக்குமரி என்பாய்.
இப்படியே போனால் வட்டாள் நாகராஜ் மாதிரி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியதுதான்.

ஒரு உண்மையை சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தில் உங்கள் கணக்குப்படி 70% பேர் வந்தேறிகளே. அவர்கள் ஓட்டு இல்லாமல் நீங்கள் ஆட்சிக்கே வரமுடியாது.

தமிழ் தேசிய குஞ்சுகளே .....

நீங்கள் கலைஞரின் சாதியை பேசுவீர்கள். ஆனால் ஜெ யின் சாதியை பேசமாட்டீர்கள். மாறாக ஈழத்தாய் பட்டம் கொடுத்து அவர் காலில் விழுந்து பெருமையடைவீர்.

45 வருடம் முன்பு நடந்த சர்க்காரியா கமிசனை பற்றி வாய் கிழிய பேசுவீர்கள். ஆனால் சொத்து குவிப்பு வழக்கென்றால் அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொள்வீர்கள்.

2G இழப்பு என்பதை 176000 கோடி ஊழல் என்று திரிப்பீர்கள்.
ஆனால் 2011-17 வரை அதிமுக அடித்த பகல் கொள்ளை பற்றி பேசாமல் வாய் மூடி மௌனம் சாதிக்கிறீர்கள்.

திமுகவை குடும்பக்கட்சி என்பீர்கள். ஆனால் சசிகலா குடும்பம் கண்ணுக்கே தெரியாது. அப்படித்தான் ராமதாஸ் குடும்பம்தான் பாமாகா.
பாமகாதான் குடும்பமே.

ஏன் இந்த இரட்டை வேடம்?

இதெல்லாம் பெட்டி படுத்தும் பாடா? இல்லை செலக்டிவ் அம்னீசியா?

கலைஞரை தளபதி ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் நேர்மையான வழிகள் உள்ளனவே. அதில் ஒன்றை தேர்தெடுக்கலாமே!  அதை விட்டு விட்டு திராவிடம் என்ற வார்த்தையை நோண்டுவது அறிவிலிகள் செய்யும் வேலை.

இன்றைய சூழலில் அதிமுக என்ற அடிமைகள் கூட்டம் திக்குத் தெரியாத காட்டில் சுழன்று திரிகிறது. சாதி வெறியர்களும் மத வெறியர்களும் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் தமிழ்தேசியம் பேசி வெட்டியாக பொழுதை போக்காமல் அடிமைகளை திருத்தி திமுகவிற்கு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட நல்ல அமைப்பை நல்ல கட்சியை உருவாக்க முயற்சி செய்யுங்கள்

வரவேற்கிறோம்
வாழ்த்த தயாராக இருக்கிறோம்.

By Antony Parimalam

1972 முதல் தினமலர் தினமனி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற எண்ணற்ற அவாள் சார்பு பத்திரிக்கைகள் பார்த்த பார்ப்பு வேலைகள்**

1972 முதல் தினமலர் தினமனி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற எண்ணற்ற அவாள் சார்பு பத்திரிக்கைகள் பார்த்த பார்ப்பு வேலைகள்**

தமிழகத்தின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம் இவர்களே.
அய்யகோ கலைஞர் வந்துட்டாரே.... இனி நமது சித்து வேலைகளுக்கு முடிவு வந்துடுமே என நினைத்து பதுங்கி கிடந்த அந்த ஆதிக்கசாதியினருக்கு தெய்வம் போல கிடைத்தவர் MGR.

இந்திராவின் மிரட்டலுக்கு அஞ்சி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆரை நம்பி பெரிய சினிமா ரசிக கூட்டமும் பெண் ரசிகைகளும் பட்டியலின மக்களில் பெரும்பகுதியினர் என பெருங்கூட்டமே அவருடன் சென்றனர். தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள MGR கையில் எடுத்த ஆயுதம்தான் "கலைஞர் ஊழல்வாதி " என பொய் பரப்புரை.

எப்போது கலைஞரை ஒழித்துக்கட்டலாம் என காத்திருந்த அவாள் கையிலிருந்த ஆதிக்க ஊடகங்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்ஜிஆரை உத்தமராகவும் கலைஞரை ஊழல்வாதியாகவும் முத்திரை குத்தி தொடர்ந்து பிரட்சாரம் செய்ய ஆரம்பித்தன.

10 வருசம் ஆட்சியில் இருந்தும் சர்க்காரியா கமிசன் அறிக்கையை வைத்து எம்ஜிஆரால் , கலைஞர் மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லாததால் , எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அதை மறைக்க சயின்டிபிக் கதைகளை அவிழ்த்து விட்டனர் ஊடகத்தினர். அந்த சயின்டிபிக் கதையை வைத்துதான் 45 வருசமாக இன்றும் ஓடிக்கொண்டுள்ளனர் பொறுக்கி ஊடகத்தினர்.

MGR உத்தமர் வேடம் பூண்டிருந்ததால் பத்திரிக்கைகள் அவர் மீதான சாராய ஊழல் முதல் எண்ணற்ற ஊழல்களை மூடி மறைத்தனர்.

அவர்களது ஒரே எண்ணம் எம்ஜிஆர் ஜெயலலிதா பன்னீர் எடப்பாடீ ஆகியோர்களை திராவிடர்களாக முன்னிறுத்தி ஆரியர்கள் ஆட்சியை மறைமுகமாக நடத்துவது.

இதற்காக இந்த ஆரியஊடகங்கள் 45 வருடங்களாக செய்து வரும் பார்ப்பு வேலைகள் பல்லாயிரங்களை தொடும்.

1) திமுக ஊழல் கட்சி என தொடர்ந்து பிரட்சாரம் செய்தால்
அதிமுக சுத்தமான கட்சின்னு மக்கள் மனதில் பதிய வைத்தனர்

2) திமுகவில் மாறன் குடும்ப சொத்துக்களை பட்டியலிட்டு கலைஞர் சொத்துக்கள் என நம்ப வைத்தனர்.
அதே சமயம் ஜெ பெயரில் உள்ள சொத்துக்களை மட்டும் காட்டிவிட்டு அவரது உடன் பிறவா சகோதரியின் பல லட்சக் கோடி சொத்துக்களை மறைத்தனர்.

3) கலைஞர் தள்ளு வண்டியில் முடங்கி விட்டார் எனவும் வயதாகி விட்டதால் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் செயல்படமாட்டார் எனவும் செல்வி ஜெயாதான் ஆரோக்கியமானவர் எனவும் 2016 தேர்தலில் மக்களிடம் பரப்பினர்.

4)திமுக குடும்ப கட்சின்னு நம்ப வச்சு சசி & கோ மற்றும் அமைச்சர்களின்  குடும்பங்கள் அடிச்ச கொள்ளைகளை மூடி மறைத்தன ஊடகங்கள்.

5) ஜெயலலிதாவை மிகச்சிறந்த நிர்வாகியாகவும் எதை கண்டும் அஞ்சாதவராகவும் ஒரு பிம்பத்தை உருவாக்கியதே இந்த ஊடகங்கள்தான்.

6)2G ன்னு இல்லாத ஒன்றை, இருப்பதாய் நம்ப வைத்ததிலும் ஆ.ராசா போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவைகள் பலமுறை நடத்திய ரெய்டுகளில் ஒத்த ரூபாய கூட கைப்பற்றபடவில்லை என்ற போதிலும் 176000 கோடி இழப்பு என்பதை ஊழலாக மாற்றி
மக்கள் மனதில் பதிய வைத்ததிலும் ஊடகங்களின் பங்குதான் பிரதானமானது.இன்றும் தொடருகிறது.

7) அதிமுகவை சேர்ந்த கரூர் அன்புநாதன் தொடங்கி, சேகர் ரெட்டிவரை, அதிமுக தலைவர்களின் பினாமிகளிடமிருந்து நேரடியாக பிடிபட்டுள்ளவைகள் பல நூறு கோடி ரொக்க பணம் & கிலோ கணக்கிலான தங்கம் ஊடகங்கள் நேர்பட பேசுவதேயில்லை

8)கலைஞர் மீதோ ஸ்டாலின் மீதோ எந்த ஊழல் வழக்கும் நிலுவையில் கூட இல்லை.

ஆனால் OPS, எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்ன்னு எல்லா அதிமுக அமைச்சர்களும் ஆயிரக்கணக்கான கோடிகள குவிச்சத ஊடகங்கள் விவாதிப்பதேயில்லை.

9)40 வருசமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் மீது குடும்ப வாரிசு அரசியல் பட்டம்.
ஆனால் சசி தீபா போன்றவர்களை ஜெயாவோட வாரிசுகளாக மாற்றவும் ராமதாசின் வாரிசாக அன்புமணியை காட்டவும் ஓடி ஓடி உழைக்கின்றன இந்த பார்ப்பு ஊடகங்கள்

10) கடந்த 6 வருடங்களில் தமிழகத்தில் நடந்த சில லட்சக்கோடி  மெகா ஊழல்கள் பற்றி விகடன் தினகரன் பத்திரிக்கைகள் தவிர எந்த ஒரு ஊடகமும் வாய்திறக்கவில்லை.

அவர்களுக்கு வியாபாரம்தான் முக்கியம். அவாள் ஊடகங்களுக்கு திமுக என்றால் அலர்ஜி.
ஆனால் மற்ற ஊடகங்கள்?

எந்த ஆதாரமும் இன்றி 45 வருடங்களாக கலைஞர் மீது ஊழல்வாதி முத்திரை குத்தும் ஊடங்கள் கடந்த 6 வருடங்களாக வெளியே வந்த எந்த ஊழலை பற்றியும் விவாதிக்காதது ஏன்?

Friday, 30 June 2017

யாருடா தமிழன் ? யாருடா "இனத்துரோகி " ? கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?

 யாருடா தமிழன் ? யாருடா  "இனத்துரோகி " ?
கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?

பெரியாரியவாதியாக சொல்லிக்கொண்டு, கலைஞரை "இனத்துரோகி" என்று சொல்லிக்கொண்டு திரியும் முண்டங்களுக்கே இந்த பதிவு.

ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தாரே பிரபாகரன் அவரை "பிள்ளை பிடி பிரபாகரன்" என்று ஈழத்தமிழர்கள் சொல்வதுபோல நாமும் சொல்லலாமா?

அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக் குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா?

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா, அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின்படி தமிழ் இனமா?

இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத் தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா?
2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத் தமிழ் கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா?

இலங்கைக்குள் இருந்த அந்த மலையகத்தமிழ் கட்சிகள் கூட பிரபாகரனுக்கு ஆதரவாக ராஜபக்ஷே அரசில் இருந்து விலகவில்லை என்றாவது உங்களுக்குத் தெரியுமா?

 இலங்கையில் இருக்கும் மலையகத் தமிழனிடம்.
அந்த மலையகத் தமிழ் கட்சிகளைப் பார்த்து இனத்துரோகி என்று சொல்லிப்பாரேன். செருப்பால் அடிப்பான். அதுவும் பிய்ந்த செறுப்பால் சாணியில் முக்கி எடுத்து அடிப்பான்.

ஏனென்றால் பிரபாகரனின் பிள்ளைபிடி போராட்டம் பற்றி உன்னைவிட அவனுக்கு நன்கு தெரியும். புலிகளிடமிருந்து சொந்தப்பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தமிழ் குடும்பங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

அதைவிட முக்கியமாக மலையகத்தமிழனை சக மனிதனாகக் கூட மதிக்காத யாழ்ப்பாணத்தமிழன்தான் பிரபாகரன் என்பதை பட்டுத்தெளிந்தவன் மலையகத் தமிழன்.

அதுமட்டுமல்ல, இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து குடியுரிமை பறித்து இலங்கையில் இருந்து விரட்டிவிட்ட லட்சக்கணக்கான மலையகத்தமிழனை வரவேற்று வாழவைத்தவர் கலைஞர் என்ற தமிழினத் தலைவர் என்கிற வரலாறு மற்றவனை விட நேரடியாகப் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழனுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமாடா முண்டங்களே?

மலையகத்தை விடு. கிழக்கு இலங்கைத் தமிழனையாவது சேர்த்துக் கொண்டாரா உன் பிரபாகரன்?
இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்கிறீர்களே? இலங்கை வரலாற்றில் வடக்கும் கிழக்கும் என்றாவது ஒன்றாக இருந்தது உண்டாடா ஞான சூனியங்களே?
இருந்ததே இல்லையடா முண்டங்களா!

அப்படி ஒன்றாக இல்லாத வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்கியது இந்திய இலங்கை ஒப்பந்தம்.

 ராஜீவ் காந்தியை கொல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப் பயல்களே!!அதெல்லாம் யாரால்? பிரபாகரனால்.

ராஜீவ் கொலைக்கு கருணாநிதியும், திமுகவும் தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஓட்டுக்கேட்டு முதல்வரான ஈனப்பிறவி ஜெயலலிதா உங்களுக்கு ஈழத்தாயாடா?

ராஜீவ் கொலையை வைத்தும், கொலையாளிகளை வைத்தும் 25 ஆண்டுகளாக அரசியல் செய்தது யார்? ஜெயலலிதாவா? கலைஞரா?

இதே நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக கலைஞர் அவர்கள் குறைத்தபோது அதை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் யார்? இதே ஜெயலலிதா தானே?

கலைஞருக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று சொல்லி திமுக ஆட்சியை தேசத்துரோக ஆட்சி என்று சதிராட்டம் போட்டவர் சாட்சாத் இதே ஜெயலலிதா தானே?

கலைஞரை இனத்துரோகி என்பவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவன் "இனம்" என்று எதைச்சொல்கிறான் என்பதை முதலில் வரையறுக்கவேண்டும். அடுத்து அந்த "இனத்துக்கு" கலைஞர் என்ன "துரோகம்" செய்தார் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த "இனத்துக்கு" பிரபாகரன் செய்த நன்மைகள் என்ன என்றும் அவர்கள் பட்டியலிடவேண்டும்.

செய்யமுடியுமாடா?

(இந்த பதிவு #எதிரொலி என்ற பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது)