Wednesday, 6 December 2017

69% இட ஒதுக்கீட்டில் ஜெ உண்மையில் அக்கறை காட்டினாரா? அக்கறை காட்ட வைத்தவர் கலைஞருங்க.

உண்மை என்னவென்றால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ஜெய‌ல‌லிதா தானாக அக்கறை காட்டவில்லை அவரை அந்த நிலைப்பாட்டை எடுக்க வைத்தது கலைஞர்தான்.
இடஒதுக்கீடு 69சதவீதம் என்பதற்கு மாறாக 50சதவீத அளவுக்கு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.
இதன்விளைவாகத்  தொழிற்கல்விகளில் 69சதவீத அளவுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம்  மாணவர்கள்   மத்தியில்  பெரிதாக எழுந்தது.
இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில்  அரசியல்  சட்டத்தில் திருத்தம்  கொண்டு வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியது திமுகதான்.
இடஒதுக்கீடு பிரச்சனையில்  ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது.
இதற்குக்  காரணம், 1993இல் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப்பத்திரத்தில் , நீதிமன்றத்தின்  தீர்ப்பையேற்று தமிழகத்தில் 1993-1994 ஆம்ஆண்டுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்.
இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடுதான் என அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது
இடஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்ய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும், இடஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாகக்கூட்டி, அரசியல்  சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவு அளிக்கக்கோரி கலைஞர் வலியுறுத்தினார்.
அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு  கேட்டு முன்னாள் பிரதமர்வி.பி.சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அப்போது கடிதம் எழுதினார் கலைஞர்.
அந்தக்கடிதங்களுக்கு பா.ஜ.கதலைவர் வாஜ்பாய், வி.பி.சிங், இந்திரஜித்குப்தா, ஜார்ஜ்பெர்னாண்டஸ், ஹர்கிஷண்சிங்சுர்ஜித், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இடஒதுக்கீடுபிரச்சனைக்காக 1994 இல் தி.மு.க உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய -மாநிலஅரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் நடத்தப் போவதாக அறிவித்தன. 
அப்போது அதேநாளில் பந்த் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால்,எதிர்க்கட்சியினர் தங்களது மறியல் போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதற்கும்  ஜெ அரசு அனுமதி மறுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைதுசெய்து காவ‌ல்துறை பின்னர் விடுவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தி.மு.க. காட்டிய அக்கறை குறித்தும், அப்போதைய அ.தி.மு.கஅரசு நடந்து கொண்டவிதம் பற்றியும் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

திமுக ஏற்படுத்திய நிர்ப்பந்தகளாலும் அழுத்தத்தாலுமே முதலில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட  ஜெ பின்பு வேறு வழியின்றி 69% இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

No comments:

Post a Comment