Saturday, 30 June 2018

தமிழகத்தில் மீத்தேன்/ஹைடிரோகார்பன்/ பெட்ரோலிய மண்டலம் என்னதான் நடந்தது? ஓர் நேர்மையான அலசல்**

தமிழகத்தில் மீத்தேன்/ஹைடிரோகார்பன்/ பெட்ரோலிய மண்டலம்
என்னதான் நடந்தது?
ஓர் நேர்மையான அலசல்**

1958-59 முதல் ஆரம்பிக்கப்பட்டு 1960 ல் சர்வே செய்யப்பட்டு முதற்கட்டமாக காரைக்கால் அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் முதன்முதலாக ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984.

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.

அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.

அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளதாம்

ஆதாரம்
https://www.thehindubusinessline.com/news/national/gas-politics-may-flare-tamil-nadus-finances/article9569864.ece.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கணக்கின் படி தமிழகத்தில் 219 கிணறுகள் தோண்டப்பட்டதற்கே கணக்கு உள்ளது.71 கிணறுகளில்தான் எண்ணை எடுப்பதாகவும் கணக்கு உள்ளதாம்.

ஆனால் 181 இயங்குவதாக ONGC தெரிவிக்கிறது.

அதாவது 2013 க்கு முன்பு ONGC தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியையே பெறவில்லையாம்.

Consent to Operate (CTO) என்ற அனுமதி நடைமுறையையே 2013 க்கு பின்தான் தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாம்.

ஆதாரம்
https://www.thehindu.com/news/national/tamil-nadu/ongc-oil-wells-in-state-are-unlicensed-say-activists/article22912263.ece


*************************************
மீத்தேன் வேறு ஹைடிரோ கார்பன் வேறா?

மீத்தேன் என்பது ஒரு ஹைடிரோ கார்பன்தான்.இரண்டும் ஒன்றுதான். பெட்ரோலியம் எடுக்கும் போது கிடைக்கும் இயற்கை வாயுதான் மீத்தேன்.

மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?

திரு ஸ்டாலின் மீத்தேன் ஆய்வுக்காக GEECL என்ற கம்பெனியுடன்  செய்யப் போட்ட ஒப்பந்தம் ஒன்றே ஒன்றுதான். வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் கையெழுத்து இடவில்லை.

அந்த திட்டம் 2016 இல் ரத்து செய்யப்பட்டு கைவிடப்பட்டு விட்டது

ஆதாரம்

https://www.cmie.com/kommon/bin/sr.php?kall=warticle&dt=2016-11-11%2013:24:31&msec=163

https://en.m.wikipedia.org/wiki/Kaveri_delta_coal-bed_methane_project

*************************************
நெடுவாசல் திட்டம்*

நெடுவாசலில் ஹைடிரோகார்பன் ஆய்வு 2008 ல் ஆய்வு செய்யப்பட்டு பிறகு போதுமான எண்ணை இல்லை என்று கைவிடப்பட்டது.

ஆனால் மோடி அரசு நாடு முழுவதும் 65 இடங்களில், ‘கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வயல்களை’ (Discovered small and marginal fields), கடந்த 2017 பிப்ரவரியில் ஏலம் விட்டது. அதில் ஒன்றுதான், நெடுவாசல்.

மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் இதுவரை நடந்தவை.

*************************************
பெட்ரோலியம் மண்டலம்
இன்றைய நிலை*

1) 2007 ல் அறிவிக்கப்பட்ட பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை படி 2011 வரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.திட்ட மதிப்பீடு ஆய்வு பணிகளே நடந்தது.

2) 2012 ல் மத்திய மந்திரிசபை இந்த பெட்ரோலிய மண்டலத்திற்கு அனுமதி வழங்குகிறது.

3) 2015 டிசம்பரில் தமிழக அரசு  45 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்க தயார் என நோட்டீஸ் வெளியிட்டிருந்தது.


4) தமிழ்நாடு State Housing and Urban Development Department   2017ஜூலை 19 அன்று கடலூர் நாகப்பட்டனம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களை தமிழ்நாடு Town and Country Planning Act பிரிவு 10 இன் கீழ் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்தது.

ஆதாரம்*
https://timesofindia.indiatimes.com/city/chennai/govt-notifies-45-tn-villages-to-be-part-of-petrochemical-hub/articleshow/59708814.cms


மேற்கண்ட வ.எண் 3 மற்றும் 4 ஆகியவை தமிழக அரசால் பெட்ரோலிய மண்டலம் தமிழகத்தில் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தான்.

ஆனால் மேற்கண்ட அதிமுகவின் நடவடிக்கைகளை எதிர்த்து ராமதாஸ் & அன்பு மணி ராமதாஸ்  ஒரு வார்த்தை கூட பேசாது இருந்தது ஏன்? அப்போதே போராடி தடுத்து இருக்கலாமே.
ஏன் செய்யவில்லை?

மேற்கண்ட அதிமுக அரசின்  நடவடிக்கைகள் அடிப்படையிலேயே மத்திய அரசு  ஜனவரியில் தமிழகத்தில் 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சர்வதேச டெண்டர், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம் மூலமாக 2018 ஜனவரி 19-ந் தேதி வெளியிடப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏப்ரல் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாகை கடலூர் மாவட்டங்களில்   24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.


மேலும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை என்பது 2007 ல் ராம்விலாஸ் பாஸ்வான் காலத்திலேயே அறிவிக்கப்பட்டு பெட்ரோலிய மண்டலத்திட்டம் பரிசீலனையில் இருந்தது. அன்றைய சுகாதாரதுறை மந்திரியான அன்புமணி ராமதாசுக்கும் அது தெரியும்.

ஆனால் பாமக ராமதாசோ அவர் மகன் அன்புமணி ராமதாசோ அந்த திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

" ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன் அமைச்சரவை சகாவாக அன்றைக்கு இருந்த பெட்ரோ கெமிக்கல் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வானிடம் கூறி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியதுதானே?

அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் உருவாக்கும் கொள்கையை எதிர்க்காமல் அமைதி காத்து விட்டு, இன்றைக்கு மக்களை சந்திக்கிறேன் என்று பயணம் நடத்துவது ஏன்?

ஆனால் தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு முதலீடுகள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் கொள்கைப்படி இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்குத்தான் முயற்சிகள் எடுத்தாரே தவிர, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் ஆட்சியிலிருக்கும் வரை அந்த பகுதியை “பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக” அறிவிக்காமல் இருந்தார்.

அதற்கான அரசு ஆணைகள் எதையும் வெளியிடாமல் இருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்கள் இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு, ஊழல் அதிமுக செய்த தவறுக்கு முட்டுக்கொடுப்பதற்காக இப்படி தி.மு.க. மீது புழுதி வாரித்தூற்றும் செயலில் ஈடுபடுவது நியாயமா?"

எனக் கேட்கிறார் துரை முருகன்


எனது கருத்து :-

இந்த மீத்தேன் / ஹைடிரோ கார்பன் விவகாரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது 2011 இல் தான். அதற்கு முன் போதியவிழிப்புணர்வு அரசுக்கே கிடையாது.

இதுதான் உண்மை. இப்போதும் பழங்கதை பேசுவது அர்த்தமற்றது.

2007 ல்  நடந்த விசயத்தை சுட்டிக்காட்டுவதாலோ 1985 முதல் நடக்கும் பெட்ரோல் எடுக்கும் பணிக்கு யார் காரணம் என்று குற்றம் சாட்டுவதாலோ மக்களுக்கு ஏதாவது நியாயம் கிடைக்கப்போகிறதா?

இதெல்லாம் பாமகவின் சிறுபிள்ளைத்தனமான வேலை.
உண்மையில் பெட்ரோலிய மண்டலம் வேண்டாம் என்றால் பாமக ராமதாஸ் அதிமுக அரசு 45 கிராமங்களை 2017 ல் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை எதிர்த்திருக்க வேண்டும்.

அப்போதும் செய்யவில்லை குறைந்தபட்சம் இப்போதாவது அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

 ஆனால் 30 வருட வெட்டிக்கதை பேசி அதில் திமுகவை விமர்சித்து சந்தோசப்படுகிறார் ராமதாஸ்.

உண்மை என்னவென்றால் ராமதாஸ் அவர்களுக்கு மக்கள் மேல் உண்மையான அக்கறை கிடையாது. இருந்திருந்தால் அவரது நடவடிக்கை வேறு மாதிரியல்லவா இருந்திருக்கும்.

Antony Parimalam

Thursday, 28 June 2018

1971 ஆம் ஆண்டு மது விலக்கை ரத்து செய்தது ஏன்? தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம்

1971 ஆம் ஆண்டு மது விலக்கை ரத்து செய்தது ஏன்? தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம்

August 6 2015, 1:08

மதுவிலக்கை தி.மு.கழகம் ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது.

 அந்த முடிவை நாங்கள் எடுக்க முன்வந்த போது மூதறிஞர் ராஜாஜி அவர்களே, என் இல்லத்திற்கு வருகை தந்து, அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அவரிடம் நான் தமிழக அரசின் நிதி நிலைமைகளை எல்லாம் விளக்கிய பிறகு, அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். ஆனால் ராஜாஜி, ஏதோ கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரது வீட்டிலிருந்து கோபாலபுரத்திற்கு நடந்தே வந்ததைப் போலவும், என்னிடம் ஏதோ மன்றாடிக் கேட்டுக் கொண்டதைப் போலவும், அதை நான் கேட்கவில்லை என்பதைப் போலவும் சிலர் இப்போது பேசுகிறார்கள்.

அப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடுவதாகும். அதுபோலவேதான் கண்ணியத்திற்கு உரிய காயிதே மில்லத் அவர்களும் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அவரிடமும் நான் நிதி நிலைமையை விளக்கிக் கூறினேன்.

மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப்பேரவை யில் நான் உரை நிகழ்த்தும்போது கூட, மிகுந்த வேதனையுடன்தான் பேசினேன். "புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல, மத்திய அரசினை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும்.

கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று சட்டப் பேரவையில் பேசினேனே தவிர, மனசாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேன்.

என்னுடைய இந்தக் கருத்து அவ்வளவும் உண்மை என்பதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமேயானால், "தமிழக அரசியல் வரலாறு" என்ற தலைப்பில் சிறந்த எழுத்தாளர் ஆர். முத்துக்குமார் எழுதிய நூல் ஒன்றில், பக்கம் 282-283இல் குறிப்பிடும்போது, "தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த போது, பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது அத்தியாவசிய நடவடிக்கை என்ற பேச்சுக்கள் எழுந்தன.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டுமென்றால் மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார் முதலமைச்சர் கருணாநிதி. பலத்த யோசனைக்குப் பிறகு மதுவிலக்கு ஒத்திவைப்பு விஷயத்தில் கருணாநிதிக்கு ஆதரவு கொடுக்கத் தயாரானார் எம்.ஜி.ஆர். அதனைக் கோவையில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். மது விலக்கை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது, நிரந்தரமாக அல்ல என்றார் எம்.ஜி.ஆர். மனசாட்சி இடம் கொடுக்காத நிலையிலும் நிதி நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் கருணாநிதி.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடாக நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. நிதி நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த தமிழக அரசு தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது. ஆனால் மத்திய அரசோ கை விரித்துவிட்டது.
புதிதாக மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி உதவி; ஏற்கனவே அமலில் இருக்கும் மாநிலங் களுக்கு அல்ல என்பது மத்திய அரசு சொன்ன காரணம்" என்று அந்த எழுத்தாளர் தனது நூலில் கூறியிருக்கிறார்.

அப்போது மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் போராட்டம் நடத்தி, அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மறியல் செய்து கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டு மென்றும் நான் கூறி அவ்வாறே செய்தேன்.

29-6-1971 அன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும்போது மதுவிலக்குக் கொள்கையை தி.மு. கழகம் ஒத்தி வைத்தது பற்றித்தான் நீண்ட நேரம் விளக்கமளித்தேன். உலகத்தின் பல்வேறு நாடுகளில் என்னென்ன நிலைமை ஏற்பட்டது என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறினேன். தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த போது கள்ளச்சாராயம், வார்னிஷ் குடித்து எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துக் காட்டினேன்.

இறுதியாக, "மதுவிலக்கு தோல்வியுற்று விட்டது. அந்தச் சட்டம் இங்கே வெற்றிகரமாக நடைபெற முடியவில்லை என்பதை முன் இருந்த அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். நாங்கள் அதைத் தாராளமாக ஒத்துக் கொள்கிறோம். மாண்புமிகு உறுப்பினர்களின் - தோழமைக் கட்சி நண்பர் களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றாடிக் கேட்பதாகக் கூடச் சொன்னார்கள்.

அவர்களை எல்லாம் விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக் கிறோம். இந்தியா முழுவதற்கும் மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள் ளும் வரையில் மதுவிலக்கை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம்" என்றுதான் கூறினேன்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வந்த தமிழகம் - நமது மாநிலத்திற்கு அதனால் ஏற்பட்ட இழப்பை ஓரளவுக் காவது சரிக்கட்ட மத்திய அரசு முன்வராததாலும், அதற்காக எத்தனையோ முறை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும், அது பயனளிக்காத காரணத்தாலும், மதுவிலக்குக் கொள்கையை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத் தாததால் ஏற்பட்ட இன்னல்களுக்கு தமிழகம் உள்ளாக வேண்டியிருந்ததாலும், நிதி நிலைமையைச் சமாளிப்பதற்காக மிகுந்த மன வேதனையுடன் - 1971ஆம் ஆண்டு மது விலக்கை ஒத்தி வைப்பதாக நான் அறிவித்திருந்த போதிலும், அண்ணல் காந்தி நெறி நின்று, அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எனக்கு மதுவிலக்கை ஒத்தி வைத்ததின் காரண மாக நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது என்பதுதான் உண்மை.

என்னை உணர்ந்தவர்கள் இதனை நன்கறிவார்கள். தோழமைக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில், அன்றிருந்த பல்வேறு நிலைமைகளை விளக்கி, மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்தேன்.

1971இல் தி.மு. கழக அரசு கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் - தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது.

ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? அவ்வாறு நான் அறிவித்ததற்கிணங்க, 14-8-1974 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதல் துணை மதிப்பீடுகளை அவையிலே வைத்த போது, "பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் அன்று அதே ஆண்டிலேயே மீண்டும் தமிழகத் தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன்" என்று மகிழ்ச்சியோடு அறிவித்தேன்.

அப்படி நான் அறிவித்த போதே, "நீண்ட நெடு நாட்களாக நல்லோர் பலரின் முறையீடாக இருந்து வருவதும், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதுமான குதிரைப் பந்தயத்தை அறவே ஒழிப்பது என்று அரசு முடிவு செய்கிறது" என்ற மற்றொரு அறிவிப்பினையும் செய்தேன். தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்? தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை.

1977இல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மதுவை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்ட போதிலும், அவராலும் முடியவில்லை. எனவே 1981இல் அதே எம்.ஜி.ஆர். மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 21-3-1981 அன்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சர் நாவலர் பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இது பற்றி அறிவிக்கப்பட்டு, மதுவிலக்குச் சட்டத்திற்கு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதற்குப் பிறகு, 2001இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். எனினும், ஜெயலலிதா ஆட்சியின் அந்த ஆண்டில் மட்டும் - மதுவிலக்கு சட்டத்தின்கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, அந்நிய மது வகைகள், 100 மில்லி 15 ரூபாய் என்கிற மலிவு விலையில் 2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார்.

இந்த விவரங்களைப் பற்றி, 21-7-2015 தேதிய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, 1974ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு சாராயக் கடைகளையும், மதுக்கடைகளையும் மூடியது என்றும், 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு கள்ளுக்கடைகளைத் திறந்தது என்றும், 1982-83ஆம் ஆண்டு, அதே அ.தி.மு.க. அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது என்றும், 1987ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு மதுக்கடைகளைத் திறந்தது என்றும், 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மது விற்பனைக்காக "டாஸ்மாக்" நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது என்றும் அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

"திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கடந்த மாதம் நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு, அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள்.

ஆனால் பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ், "கலைஞர் சொல்வதைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்று அறிக்கை வெளியிட்டார். "1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது" என்றெல்லாம் வார்த்தை களை அள்ளி வீசியிருக்கிறார். 71ஆம் ஆண்டில் மது விலக்கை ரத்து செய்த தி.மு. கழகம் 1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதை வசதியாக மறைத்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார்.

டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது, மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது வைத்தது உண்டா? விழுப்புரத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, என்னையும் அங்கே அழைத்து, அந்த நாற்காலி முதல்வருக்கான நாற்காலி, அதிலே என்னை அமர வைக்கப் போவதாகப் பேசினாரே, அப்போது எனக்கு ஏற்பட்டதாகச் சொல்லும் ஞானோதயம் பற்றி எல்லாம் அவருக்குத் தெரியாமல் போய் விட்டதா?

22-12-2008 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டு மென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதேபோல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டினேன்.

மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடுவதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அது வரையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 1 மணி நேரத்தைக் குறைத்து - மதுக்கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

டாக்டர் ராமதாஸ் "கலைஞரின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்" என்று சொல்லியிருக்கிறார். எனது வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் என்று அவர் கூறுகின்ற நேரத்தில், அவருடைய வேண்டு கோளை ஏற்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு தனியாக 20 சதவிகித இட ஒதுக்கீட்டை கழக அரசு வழங்கியதே, அதுவும் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்தானா என்பதை டாக்டர் ராமதாஸ் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல.

1937இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலேகூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதேகூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந் தது.

மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன் பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது. 1948இல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத் தினார். இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி, 1939க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், மது பானங்களைத் தயாரிக்கும் உரிமம் சில கட்சிக்காரர்களுக்குக் கொடுக் கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டினை தொடர்ந்து கூறி வருகிறார்கள். செய்தியாளர்கள்கூட அதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். தமிழகத்திலே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தி விட்டால், எல்லா மதுபானத் தொழிற் சாலைகளும் மூடப்பட்டு விடும். அதிலும் கூட தமிழகத் திலே தற்போது மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் 11 இருக்கிறது என்றால், முதன் முதலாக அதற்கான உரிமம் வழங்கப்பட்டதே அ.தி.மு.க. ஆட்சியிலே தான்! இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் "மிடாஸ்" என்ற ஒரு நிறுவனம் யாருடைய நிறுவனம்? அந்த நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நிறுவனத்திலிருந்து தான் அதிக அளவுக்கு மது பானங்கள் வாங்கப்படுகின்றன என்பது அல்லவா உண்மை? 2013-2014ஆம் ஆண்டில் எந்தெந்த மதுபானத் தயாரிப்பு கம்பெனிகளிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு மது வாங்கப்பட்டது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரத்தைப் பார்த்தால், மிடாஸ் நிறுவனத்திடமிருந்துதான், மற்ற நிறுவனங்களை எல்லாம் விட அதிகமாக 2,280 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

உடன்பிறப்பே, நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்து தமிழகத்தில் மாறி மாறி வரும் மதுவிலக்குக் கொள்கை பற்றிய விவரங்களையெல்லாம் தொகுத்துக் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தி.மு. கழகம்தான் முதன் முதலாக தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கையை தளர்த்தியது என்பதே தவறான பிரச்சாரம்.

நியூட்ரினோ திட்டத்திற்கு உண்மையில் அனுமதி வழங்கியது மோடி

நியூட்ரினோ திட்டத்திற்கு உண்மையில் அனுமதி வழங்கியது மோடி அரசின் மந்திரிசபைதான் (5.1.2015)

on 19 March 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case

அதற்கு முன் Feb 2012 நியூட்ரினோவிற்கு இடம் ஒதுக்கியது அதிமுக அரசே.

காங்கிரஸ் அரசு 18 October 2010 ல் சுற்றுசூழல் அனுமதி மட்டுமே வழங்கியது.


https://en.m.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory



On 18 October 2010 the Ministry of
Environment & Forests approved both environment and forest clearance for setting up the observatory in the Bodi West Hills

As of February 2012, the land was allocated to the INO collaboration by the government of Tamil Nadu

On 5 January 2015, Union Cabinet headed by Prime Minister Narendra Modi approved to set up the India-based Neutrino Observatory (INO).

on 19 March 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case

https://en.m.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory

நீட் தேர்வுக்கு யார் காரணம்?

நீட் தேர்வுக்கு யார் காரணம்?

காங்கிரஸ் அரசு நீட் அறிவித்தது
மே 5 2013.
கலைஞர் எதிர்த்ததால் விருப்பப்படும் மாநிலங்கள் சேரலாம், கட்டாயமில்லை என அறிவித்தார் கபில் சிபல்.

உச்சநீதிமன்றம் நீட் தடை விதிப்பு தேதி ஜூலை18, 2013

மீண்டும் நீதிமன்றத்தல் அனைத்து மாநிலத்திற்கும் நீட்டை கட்டாயமாக்கி உச்சநீதி மன்றத்தில் நீட் மசோதா மனுதாக்கல் செய்து உத்தரவு பெற்றது மோடியின் BJP அரசு நாள் 2016 ஏப்ரல் 11.

தமிழகஅரசின் நீட் மசோதாவை குடியரசுதலைவருக்கு அனுப்பாததும் BJP மோடி அரசே.


முதன் முதலில் 2012 இல்தான் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிவித்தது. உடனே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் அதை எதிர்த்தன. அந்த வருடம்
தேர்வை நடத்தவில்லை.

அதன் பிறகு மத்திய அரசு முதன் முதலில் மே 5 2013 இல் நீட் தேர்வை அறிவித்தது.
அதை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை18, 2013 இல் உச்சநீதிமன்றம் NEET தேர்வுக்கு தடை விதித்தது

ஆனால் 2016 ஏப்ரல் 11 ல் ஐந்து நபர்கள் அரசியலாசன பெஞ்ச் மத்திய அரசுக்கு நீட் தேர்வை அனுமதித்து உத்தரவிட்டது.

காங் கொண்டுவந்த Neet ல் விருப்பப்பட்ட மாநிலத்துக்கு மட்டுமே என்ற சரத்தை நீக்கி அனைத்து மாநிலத்திற்கும் என கட்டாயமாக்கிய புது வரைவு நகலை தயாரித்த Bjp அரசு அதை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற ஒப்புதலையும் பெற்றுவிட்டது

காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட நீட் தேர்வை தொடர்ந்து போராடி உச்சநீதிமன்ற அனுமதி பெற்றது மோடியின் BJP அரசுதான்.

2016 இல் ஜெ ஆஸ்பத்திரியில் இருந்தபோது  நவம்பர் 23- அன்று மத்திய அரசு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறும் என அரசாணை பிறப்பிக்கிறது.

2017 இல் தமிழக அரசு
தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2017” ஆகியவற்றிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட அனுப்புகிறது.

இன்று வரை அந்த சட்டம் எங்கே உள்ளது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மத்திய அரசு நினைத்திருந்தால் அப்போதே தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று இருக்கலாம். நீட் தேர்வு வந்தே இருக்காது.

மாநில அரசோ மத்திய அரசை கேட்கும் நிலையில் இல்லை.

இப்போ தெரியுதா NEET யார் கொண்டு வந்தனர் என்று.


காங்கிரஸ் நீட் கொண்டு வர முனைந்தபோது கடுமையா எதிர்த்து கலைஞர் கடிதம் எழுதினார்

அந்த அந்த மாநிலமே நீட் தேவையா இல்லையா என்று் முடிவு செய்யலாம் என்றார் கபில்சிபில்

கலைஞரால் நீட் தமிழகத்தில் தடுக்கப்பட்டது.

2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று சட்டம் பண்ணியவர் மோடி
By
A.Parimalam


நீட் தேர்வுக்கு யார் காரணம்
விளக்குகிறார்
@edwinarockia

Chronology of events that killed Anitha, a bright student who opposed NEET

Why didn’t the TN government prepare students for NEET after OPS gave his consent for the exam last year?
       
The BJP and the AIADMK claim that it was the Congress and the DMK that brought in NEET in 2010. The opposition parties for their part have put the blame right back at BJP and AIADMK, claiming that it was the AIADMK which set aside the Tamil Nadu Assembly resolution that opposed NEET, and brought the exam into the state anyway.

So who’s right and who’s lying?

The truth is, NEET has its roots in the judgement of the Supreme Court on 22 June 1984, in the Dr Pradeep Jain and others vs Union of India case.

The Court directed that at least 30% of the open seats of MBBS and BDS courses should be made available for admission of students on an All India basis.

Following this judgement, the case has seen some interesting twists and turns for two decades now, but the most important change came in 2010, when the Medical Council of India issued a notification of December 21, amending the regulations for medical admissions, making NEET a single eligibility-cum-entrance examination across India for MBBS and BDS courses. It also gave powers to the Centre to lower the minimum mark of 50% for seats reserved on the basis of caste.

This is the reason why the BJP and AIADMK claim that it was the Congress and DMK which brought it NEET. But we must understand that MCI is just like the CAG and the Election Commission - in that it’s an independent Constitutional body. The best example is how, when CAG made humongous claims on 2G, the Central government could not do anything because CAG is a Constitutional body. The claim therefore that the Congress and DMK brought NEET in is busted.

Role of MCI and Judge Anil Dave

In the same year, MCI released its syllabus and model question bank for the exam. This was challenged by several organisations, institutions and the state governments of Tamil Nadu and Andhra Pradesh in various courts across the country. The cases were eventually transferred to the Supreme Court. Close to 178 writ petitions were filed and heard in the matter.

On July 18, 2013, the Supreme Court, in a majority judgment, set aside NEET and suggested NEET was against the Constitution. This judgement was delivered 2-1 with Justice Anil Dave (more on him later) the lone judge supporting NEET. Another judge, namely Justice Altamas Kabir who delivered “NEET not required” part of the judgement, retired thereafter.

Role of SC

On October 23, 2013, a review petition challenging the judgement was filed by the MCI and the Supreme Court issued a notice. This case changed many hands between October 2013 and March 2016, as many judges either retired or recused themselves from the case.

During the same time, SC set up a new bench called the “Indian Constitutional bench” comprising five judges, and NEET case was assigned to this bench.

The biggest irony here is that the one judge who supported NEET - Justice Anil Dave - was the person heading the bench that would re-hear the case. How could a judge who supported NEET through his earlier verdict head the same bench that re-hears this case? This scenario clearly explains how constitutional bodies like MCI had their way even in the judiciary.

Out of the five judges, Justice Banumathi was from Tamil Nadu, and she is a Vanniyar.

Judgement day

On April 7, 2016, the Supreme Court considered submissions made by the advocates of the parties and reserved the judgement. On April 11, 2016 (Jayalalithaa was ruling TN and she was healthy), Justice Anil Dave pronounced the judgement in open court, holding that prima facie there were enough grounds to recall the 2013 judgement (the one that went against his point) and hear the case afresh. The SC recalled its own earlier order by none other than the judge (Anil Dave) who supported “NEET” in its earlier verdict.

Role of Sankalp Trust

Within a few hours, there was a petition filed in SC by an NGO “Sankalp Charitable trust,” to direct the conducting of NEET exam before April 28 - within 20 days of the judgement, begging the question, why such a hurry?. Justice Anil Dave then delivered another verdict confirming that NEET should be conducted on April 28.

That was election time in TN and the state was given an exemption for one year. The then Chief Minister, Jayalalithaa, got an exemption from April 2016 to April 2017. However, Jayalalithaa was admitted to the hospital in September 2016, and O Panneerselvam (OPS) became the interim Chief Minister in November 2016. At this point, OPS gave his consent for NEET through his Education Minister, Mafoi Pandiarajan.

Even after that, the TN government was not public about this, rather they kept everything under wraps. They neither informed nor prepared the students for the impending exam. They could have said we are trying for exemption, but you prepare for the exam. That did not happen. Students were fed false promises.

Jaya passed away in December 2016 and everything changed in TN. DMK along with opposition parties intensified the agitation, asking NEET to be scrapped permanently, as the time was drawing closer for NEET. Repeated false promises were given by almost every Minister in TN and the central government. Most of the crucial time between February and April 2017 was lost by the power hungry AIADMK that split and fought among themselves while students were left in the lurch.

Central Ministers like Nirmala Seetharaman in fact went on record saying Centre has approved the notification submitted by TN for one year exemption, and it was just a matter of days. People like Anitha were happy on hearing the news.

But nothing happened. Only false promises.

NEET was forced on the students, and many who did not prepare failed or scored miserably.

So who is responsible for the death of Ariyalur Anitha?

1. Is it the Medical Council of India that acted with imperialistic attitude suggesting single common entrance disregarding diversity of this great nation?

2. Is it Justice Anil Dave who supported NEET in its original judgement?

3. Is it Supreme Court that dragged the case for three years between 2013 and 2016?

4. Is it the error on the part of the SC, which let the same judge who supported NEET head the bench that reheard the case in 2016?

5. Is it Sankalp Trust that filed a PIL in support of NEET?

6. Is it OPS (the then CM and current Deputy CM of TN) and Mafoi Pandiarajan who agreed to let NEET in after the death of Jayalalithaa?

7. Is it the TN government that did not prepare the students well for the exam even after signing up for NEET?

8. Is it the BJP government that threw the two Assembly resolutions of the TN Govt demanding abolition of NEET into the dustbin?

9. Is it the AIADMK factions (OPS and EPS) that did not set this (abolition of NEET) as a precondition for their support to NDA’s presidential candidate?

10. Or is it Vijayabaskar (current Health Minister of TN), Sengottayan (another Minister), BJP Ministers Pon Radhakrishnan and Nirmala Seetharaman who assured (false promises)  almost every day that we will get exemption from NEET?

The result is that Anitha, a meritorious student, was driven to death by the above people and system. RIP.

By

Arockia Edwin

திமுக இந்துக்களின் எதிரியா?

திமுக இந்துக்களின் எதிரியா?
இந்துக்களுக்கும் இந்து கோவில்களுக்கும் திமுக செய்த நற்காரியங்கள் எண்ணில் அடங்காது.
திமுக ஐந்து ஆண்டு( 2006-11) கால ஆட்சியில் 550 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தும் திருப்பணி வேலைகளை தொடங்கியும் வைத்துள்ளது. கலைஞரின் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து திமுக ஆட்சியில் 2010 ல் மீட்கப்பட்டன

1) சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது திமுகதான்

Temple duties started on 06/05/2000 and Kumbabishekam done on 03/15/2001.

2)Kottaimedu கோயில்
Although ADMK started the temple duties on 05/06/2003, DMK conducted the Kumbabishekam 07/03/2007. Chariot on 01/20/2011.

3)Thirunaraiyur கோயில்

Kumbabishekam took place in 2008, after 23 years. Temple duties were slow due to shortage of funds

4)Elumiyan Kottur

DMK started the temple duties in 2008. The cost of Kumbabishekam was INR 3.3 million.

5)சிதம்பரம் நடராஜர் கோயில்

There are 4 entrances. Kumbabishekams for them were conducted successively, 2006-08.

6)02/18/2010: Karuvoorar Temple Kumbabishekam
https://t.co/iy8f1kd9yV
Ayyanar Temple Pudukkotai:
https://t.co/X7M1gaHUDT
Kumbabishekam - 2010.

7)Samayapuram Mariamman Temple:
https://t.co/HNhajO6vm8
Temple duties started on 07/05/2010, but DMK was voted out in 2011.

8)Renovation of Tiruvarur's temple:
https://t.co/jjTQtRxkvX
Vadamadurai Mariamman Temple duties started 04/2010:
https://t.co/ibpsLfBFgT
...
9)Thiruvattar Temple duties started in 2009:
https://t.co/AbE9L2Kdkk
Thiruvannamalai Kumbabishekam, 2009:
https://t.co/9zkBoaAKz7
...
10)Thamarankottai Temple duties 01/28/2007:
https://t.co/bKEk4o92tK
Sankarankoil:
https://t.co/V3wvAmy2BA
Nallur: https://t.co/OY5FinW9Zr
...

This is just a very small list of Kumbabishekams, Temple duties and chariot runs conducted by the DMK govt from 2006-11, and also 1996-2001.

The DMK govt conducted much more. Nobody can ever forget this incident: Devaram sang after a very long time in the first DMK govt (1967-76). https://t.co/0pUyFk5Ytp

During 2006-11, 1,376 renovations/duties were conducted in 842 Temples.

1996-2001: An equal number of duties were conducted in Temples.

Mylapore 06/06/1996, Sriperumbudur 07/0501996, Thiruneermalai 03/23/1997, Thirupapuliyur 03/26/1997, Cuddalore 03/27/1997, Tiruvenkadu

Periyapalayam 06/07/1998, Alwaythirunagar 07/01/1998, Chennakesava Perumal 01/29/1999, Vallakottai & Tiruverkadu 03/26/1999, Kumbakonam Sarangapani 06/30/199900, b. Adi Kumbeswarar 12/12/1999

Ariyakudi Thiruvengadam 09/16/1999, Alwar Thirunagari Adinadhalvar 02/10/2000.

Chennai Kurangaleeswarar 02/11/2000, Madurai Kalamega Perumal 03/16/2000, Chennai Agatheeswarar 04/16/2000, Vedaranyam 07/14/2000.

Thottiyam Thirunarayanapuram 07/07/2000, Thiruvannamalai & Thiruvanaikaval 07/12/2000, Palani 07/05/2000, Thiruparankundram 06/11/2000.

Bhavani Shiva, Kangeyam Murugan & Thanthonri Malai Perumal Temples, all on 09/10/2000.

DMK used funds for developmental purposes. For instance, Chennai's Tidel Park. But also achieved the above!
https://t.co/R0dfD3o0s3


Thirumutam & Sivayam were conducted on 09/15/2000.

Kumbakonam Swamimalai Temple: 11/10/2000.

and many more smaller Temples.

some mischievous elements are blaming DMK for missing idols. I ask them to see this page:
https://t.co/WzQBGgkbuN

A thousand year old Narasimha statue was retrieved by cops during the DMK years 2006-11. Also see this:
https://t.co/Yh8P7iPFjV

Smuggled Lanka statue recovered.

Moreover it was JJ who specialized in stealing idols!
https://t.co/jsEGgVpIg8
Stolen 1992, retrieved 2009.

I also ask them to see this page:
https://t.co/2to9JHsxmZ
Jayalalithaa & Sasikala stole Emerald & Onyx Lingams in 1992 & 1993 respectively.

If you still doubt me, see this:
https://t.co/IwGwBC1ZPS
Temples are falling apart, after 6 years of negligence by the ADMK govt.


DMK setup 12 Thirumurai classes to revive Tamil Saivite culture. DMK also setup 4,000 Divya Prabandham classes for Tamil Vaishnavism.

DMK rescued Temple properties from illegal encroachments. They also insured the families of priests and temple workers.

Valluvar Kottam:
https://t.co/HCSonYRQpE
1,330 Thirukkural verses inscribed in it. Built by DMK, early 1970s.

Highlight of Tamil culture. https://t.co/fV3F9nM9KV

நன்றி @HardFastAndFree

பிரபாகரன் கடைசி இண்டர்வியூ

பிரபாகரன் கடைசி இண்டர்வியூ
https://m.rediff.com/news/2008/oct/26ltte2.htm

LTTE chief V Prabhakaran speaks out

October 26, 2008 18:03 IST

Liberation Tigers of Tamil Eelam supremo V Prabhakaran has asked India to lift the ban on his outfit in order to 'fulfil the aspirations of Tamil people', while admitting that Lankan forces have made inroads into the Tiger areas and were at the doorstep of their key town Kilinochchi.

'We expect that it (India) would lift the ban on our organisation and support us to fulfil the long awaited aspirations of the Tamil people,' the 53-year old leader of the LTTE said in an interview.

Conceding that security forces had closed in on the rebel strongholds and had even entered key areas, Vellupillai Prabhakaran, however, said capturing the Tigers administrative capital Kilinochchi was still a distant dream for them.

'The Sri Lankan forces have entered parts of our homeland and are stationed in close proximity to Kilinochchi town. But, capturing Kilinochchi is just a day dream of (Sri Lankan President Mahinda) Rajapaksa,' he said.

In an e-mail interview to Chennai-based Tamil magazine Nakkeeran, Prabhakaran hailed Tamil Nadu Chief Minister M Karunanidhi's stand of seeking quick relief measures for displaced Tamils.

The LTTE leader also expressed dejection over All India Anna Dravida Munnetra Kazhagam leader J Jayalalitha distancing herself from the Tamil problem, while praising other leaders of the state for taking up the ethnic issue in the island state.

'Tamil Nadu Chief Minister, Kalaignar is a Tamil nationalist. He has not only voiced his concern against the Sinhala state terrorism in Tamil Eelam, but has also showed it in action. Today, it makes us happy to see him taking a stance in support of the Tamils when they face untold sufferings. We expect such support in the future as well,' Prabhakaran said.

'Jayalalitha had also voiced her support. But, if she has changed her stand now, what could we say about it,' he said replying to a query.

Showering praise on Tamil Nadu leaders taking up the ethnic issue in Sri Lanka, Prabhakaran said the support 'will definitely give us more strength'.

While accusing Sri Lankan forces of 'carrying out genocidal attacks on Tamils', Prabhakaran also claimed that the military was facing 'severe losses' due to the attacks launched in Northern Sri Lanka.

'The forces are carrying out indiscriminate attacks on civilian areas. More than 100,000 Tamils have fled their homes and are continuously on the move as refugees, seeking safe areas,' he said.

The rebel leader said the Sri Lankan forces had attacked the political headquarters of LTTE, but that no damage was suffered.

'No one was there at the time of the attack,' he said.

The LTTE chief also termed reports that India was providing military equipment and training to the Sri Lankan forces as 'saddening'.

'The media also reported to the world that Indian experts were involved in providing training to operate the radar instrument in Vavuniya, which is very saddening,' Prabhakaran said.

On whether he expected a change in the current environment and any prospects for holding talks, Prabhakaran said, 'We can only expect such a situation depending on the politics within the government and its military stance.'

'We do not carry out attacks on innocent Sinhala civilians. Ours is a liberation organisation fighting for the liberation of the Tamil people. We have continuously called upon the Indian political analysts and policy makers to clearly understand this,' he said.

On Sri Lankan President Mahinda Rajapaksa's observation that he (Prabhakaran) could be handed over to India, if he surrenders or is captured, the LTTE supreme said, 'this is one of the many dreams of Rajapaksa'.

Asserting that he was not living in bunkers, Prabhakaran said, 'We are living among the people, fighting for them and carrying out our freedom struggle. It is a common phrase used by the military during the last 30 years'.

On whether he still persisted with the demand for a separate nation for Sri Lankan Tamils, Prabhakaran said, 'The Tamil people have at every election since 1977, indicated what their political aspirations are. That would be the permanent solution for the ethnic crisis.'





நெடுஞ்சாலைகளில் மதுக்கடைக்கு தடை வந்ததற்கு மூல காரணம் ஹர்மான்சிங் சித்து என்பவர்தான். "

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைக்கு தடை வந்ததற்கு மூல காரணம் ஹர்மான்சிங் சித்து
என்பவர்தான்.   "ArriveSAFE  "             என்ற NGO உடன் இணைந்து  பஞ்சாப்& ஹரியானா உயர்நீதிமன்றத்தில்  டிசம்பர் 2012 போட்ட வழக்குதான் மூலக்காரணம்.

வழக்கு தொடுக்கும் முன்பு RTI மூலம் நெடுஞ்சாலை விபத்துகள் பற்றிய முழு தகவல்களை திரட்டியவரும் இவர்தான்.

அந்த தகவல்கள் அடிப்படையில்தான் முதலில் பஞ்சாப் உயர்நீதிமன்றமும் பின்னர் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் நெடுஞ்சாலை சாராயக்கடைகளுக்கு தடைவிதித்தது.

https://www.dailyo.in/variety/supreme-court-liquor-ban-road-safety-drunk-driving-harman-sidhu/story/1/16480.html

https://www.hindustantimes.com/india-news/harman-sidhu-the-man-behind-the-liquor-ban-on-highways-loves-his-drink/story-AQDi1rJtcKwVTIbvUfCHpM.html

http://www.arrivesafe.org/highway-liquor-ban/

சீமானின் சரித்திரமும் பூகோளமும்

சீமானின் சரித்திரமும் பூகோளமும்

https://nizalkal.wordpress.com/2016/05/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B0/amp/?__twitter_impression=true
ஈழப்போரில் கலைஞர் பொத்திகிட்டு இருந்தார் என்று சொல்லும் சீமான் குஞ்சுகளுக்கு சீமானை பற்றிய இந்த Link சமர்ப்பணம்

சீமானும் அவரது கட்சியும்  சீமான் தும்பிகளும் ஈழப்போரின் போது என்ன செய்தீர்கள்?

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே

நீங்களும் பொத்திகிட்டு தானே இருந்தீங்க?

2009-2018 வரையும் தொடர்ந்து பொத்திகிட்டேதானே இருக்கீங்க

நீ ஈழத்தமிழருக்கு செய்தது என்ன?

ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செஞ்சிட்டாருன்னு குலைக்கிற நாய்களே

நீங்க ஈழத்தமிழனுக்காக போர் ஆரம்பித்த 2006 முதல் 2018 வரை என்னடா செஞ்சிருக்கீங்க?

வெளிநாட்டு தமிழனை ஏமாற்றி பணம் வாங்கி  தோட்டம், கார், பங்களான்னு வசதியாக இருங்கீங்களே.

இதுவரை நீங்க ஈழத்தமிழனுக்கு செய்தநன்மை என்ன?

2006ல் ஈழப்போர் ஆரம்பம்

இன்னைக்கு குதிக்கிற பய எல்லாம் இளைஞர்களை திரட்டி புலிகள் படையில் சேர்ந்து சிங்களனை எதிர்த்து போரிட்டிருந்தா ஈழமக்களை காப்பாற்றி இருக்க முடியுமே

ஈழத்தமிழனுக்காக ஒரு துரும்பை கூட அசைக்காத நீயெல்லாம் கலைஞரை துரோகின்னு சொல்லலாமா?
அதற்கு உனக்கேது யோக்கியதை?

ஈழக்கதை பகுதி(4)

புலிகள் தோல்விக்கு யாரை காரணம் சொல்வீர்கள். ஒரு சாதாரண முதலமைச்சாரால் உலக அளவிலான பிரட்சினையை
தீர்க்க முடியுமா? #ஈழக்கதை பகுதி(4)

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

 போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை  காப்பாற்றி இருக்க முடியுமா?  கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள்.  நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

 போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில்  சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்?   கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.
(முற்றும்)

ஈழக்கதை பகுதி(3)

ராஜீவை கொன்றவர்களுக்கு கருணை பெற்று தர ராஜீவின் குடும்பத்திடமே கோரிக்கை வைத்த கலைஞர்.**
 #ஈழக்கதை பகுதி(3)

இறுதிப்போருக்கான காரணம் இலங்கையா?

LTTE மாவிலாறு அணையை 21 July 2006 மூடியதே இறுதிப்போருக்கான காரணமாக அமைந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 15000 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போர் மூண்டது. 2009 இல் முடிவுக்கு வந்தது.

கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..

விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.

இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..

அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கனிமொழி கடைசி நேரத்தில் புலிகளை காப்பாற்ற முயற்சித்தது உண்மைதான்.

அவர் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசியதும் உண்மைதான். அவர் பேசிய நேரம் எல்லாம் கை மீறி போய்விட்டதும் உண்மைதானே.

சரணடைதல் எப்படி நடந்தது தெரியுமா?

 நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:

*   மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடங்கள்.'

* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'

* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'

* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார்.  "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'

* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.

* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக் குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.

* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.

* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.

* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.

* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.

* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.

* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.

கோத்தபய்யா உத்தரவின் பேரில் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாதான் இப்படுகொலைகளை நிகழ்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் தொடர்ச்சியினை முற்றாக அழிப்பதே கோத்தபய்யாவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்பு களோடு பேசினார்கள் என் பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தை களில் நேரடியாக சம்பந்தப் பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சரணடைதலில் அரசியல் செய்ய அவரது ஆளுமையால் இயலாது.

#தொடர்ச்சி பகுதி4

#ஈழக்கதை பகுதி( 2)

பிரபாகரனால் பழிக்கு மேல் பழி சுமந்த கலைஞர்
#ஈழக்கதை பகுதி( 2)

மிக நீண்ட காலத்திற்கு பின் திமுக 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1990 ஜூன் 19 இல் EPRLF தலைவர்கள் பத்மநாபா உட்பட 13 பேர் இலங்கையிலிருந்த வந்த LTTE யினரால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது கலைஞருக்கு பேரிடியாய் அமைந்தது. கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேசப்பட்டு திமுக ஆட்சி இரண்டே வருடத்தில் கலைக்கப்பட பிரபாகரனே காரணமாயிருந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." என சுப்பிரமணியன் சுவாமி
('விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012) இல்
தெரிவித்தை கொண்டு திமுக ஆட்சியில் LTTE யினர் வளமாக இருந்ததை புரிந்துக் கொள்ளலாம்.

சீருடைக்கு உதவி செய்தார் என்பதற்காகத்தான் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜகதீசன் சிறையில் அடைக்கபட்டார்

1990 இல் அன்று முதல்வராக இருந்த கலைஞர் இலங்கை தமிழர்களை கொன்ற இந்தியப்படையை வரவேற்க முடியாது என திடமாக மறுத்தார் கலைஞர் அவர்கள்.

1991இல் LTTE இயக்கத்தை ஆதரித்ததற்காக கலைஞரின் திமுக அரசை ஜெயலலிதா கலைக்க போராடினார். திமுக அரசும் கலைக்க பட்டது.

அதன்பின்னர்1991மே 21 இல் ராஜீவ் காந்தி LTTE யால் கொல்லப்பட்டபோது அன்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை திமுக இழந்ததுடன் பிரபாகரனால் திமுக ராஜீவ் கொலைப்பழியையும் சுமக்க நேர்ந்தது.

திமுக ஆட்சியை இழந்து
மதிமுக ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்கனவேயிருந்த கள்ளத்தோனி உறவை பிரபாகரனுடன் பலப்படுத்திக் கொண்டார் வைக்கோ.

வைக்கோவின் அறிவுரைப்படி நடந்த பிரபாகரன் அதன் பின்னர் கலைஞரின் ஆலோசனையை காது கொடுத்து கேட்டதில்லை.

தன் அரசியல் சுயநவத்திற்காக பிரபாகாரனுக்கும் கலைஞருக்கும் இடையே எந்த நட்பும் புரிதலும் வராது பார்த்துக்கொண்டனர் வைக்கோ & கோ

கலைஞரை என்றுமே லட்சியம் செய்யாத பிரபாகரன் போரை துவங்கும் போதாவது அல்லது நடந்த போதாவது கலைஞரை தொடர்பு கொண்டதுண்டா ?
ஏன் செய்யவில்லை ?

தொrடரும்.பகுதி 3

பழிக்கு மேல் பழி சுமந்த கலைஞர் #ஈழக்கதை பகுதி(1)

பழிக்கு மேல் பழி சுமந்த கலைஞர் #ஈழக்கதை பகுதி(1)
ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்

LTTE இயக்கம் 5 May 1976 உமா மகேஸ்வரனை தலைவராகவும் பிரபாகரனை கமேன்டராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் உமா மகேஸ்வரன் ஊர்மிளா என்னும் பெண்ணை காதலித்ததால் அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி 1979 இல் பிரபாகரன் தானே தலைவரானார். உமா மகேஸ்வரன் PLOT என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.
EROS (1975), TELO (1979), PLOTE (1980), EPRLF (1980) and TELA (1982) போன்ற இயக்கங்களும் உருவாயின.

'70 களில் கலைஞருடன் ஈழ மிதவாத தலைவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

அப்போது Tamil Eelam Liberation Organisation (TELO) தலைவர் சபாரத்தினம் கலைஞரோடு நெருக்கமாக இருந்தார்.

கலைஞருக்கு எதிராக செய்யவேண்டும் என்பதற்காக ஆட்சியில் இருந்த M.G.R தானும் ஈழ ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள LTTE யுடன் நெருங்கினார். அதனால் விடுதலைப்புலிகள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கலைஞர் ஈழவிடுதலை ஆதரவுநிதிதிரட்டி அனைத்து இயக்கங்களுக்கும் பகிர்ந்தளித்தபோது அதை வாங்கமறுத்தவர் பிரபாகரன். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும்தொகையினை நிதியாக பெற்றிருந்தார் பிரபாகரன். எனவே கலைஞர் கொடுத்த நிதியை பெற மறுத்துவிட்டார் பிரபாகரன்.

1986 இல் LTTE க்கும் TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு புலிகளால் அழிக்கப்பட்டனர்.

1986ல்ஈழவிடுதலைஇயக்கங்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி என்டிராமராவ்,ஃபரூக்அப்துல்லா,
பிஜுபட்நாயக் என பல பெருந்தலைவர்களை அழைத்து மதுரையில் ஈழ ஆதரவுமாநாடு நடத்தினார் கலைஞர்.மறுவாரமே சிறீசபாரத்னத்தையும்அவரதுபடையணியினரையும் சதிசெய்து கொன்றனர் LTTEயினர்.

தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE ஆல் கொல்லப்படவர்களில்
சிலர்.

மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார். ஆனால் அதையெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாக கூட மதித்ததேயில்லை.

#தொடர்ச்சி பகுதி 2

திமுக மீது பாமகவா அல்லது பாமக மேல் திமுகவா? யார் மீது யார் சவாரி செய்தது?

திமுக மீது பாமகவா அல்லது பாமக மேல் திமுகவா?  யார் மீது யார் சவாரி செய்தது?

Read 👇
பாமக வாங்கிய ஓட்டு விபரம்

தனித்து
1989 MP.   15,36,350    (0)
1991 MLA 14,52,982    (1)
1991 MP   12,69,690   (0)
1996 MLA 10,42,333   (4)
1996 MP     5,52,118     (0)

கூட்டணி
1998 MP 15,48,976   (4) அதிமுக
1999 MP 22,36,821  (5)திமுக
2001 MLA 15,57,500(20) அதிமுக
2004 MP 19,27,367 (6) திமுக
2006 MLA 18,63,749(18)திமுக
2009MP  19,44,619 ( 0)அதிமுக
2011MLA19,27,783(3)திமுக 5.23%

தனித்து நின்று பாமக வாங்கியது
2016 MLA 23,00,775 ஓட்டுகள்.
232 தொகுதிகளில் வாங்கிய ஓட்டு சதவீதம் 5.3 % மட்டுமே.212 இடங்களில் ஜாமீன் இழப்பு.

இதே பாமக 1999 ல் திமுக& பிஜேபி கூட்டணியில் 5 தொகுதிகளில் வென்று வாங்கிய ஓட்டு 22,36,821.

இதே பாமக 2009 தேர்தலில் அதிமுக அணியில் பெற்ற ஓட்டுகள்19,44,619. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2011 இல் திமுகவுடன் இணைந்து பாமக பெற்ற வாக்குகள் 5.23% .

2016 ல் பாமக தனியே போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 5.3% மட்டுமே.

இதே பாமக 2006 இல் திமுக துணையுடன் பெற்ற வாக்குகள்
18,63,749. ஆனால் வென்ற தொகுதிகளோ 18.

தனித்து நின்று பாமக 1989 to 1996 வரை நடைபெற்ற 5 தேர்தல்களில் 5 MLA தொகுதிகளில் மட்டுமே பாமக வென்றது .

ஆனால் அதே பாமக 1998 to 2011 வரை நடந்த 7 தேர்தல்களில்  கூட்டணியால் பாமக வென்ற தொகுதிகள் 56 ஆகும்.

அதாவது பாமக தனியே நின்ற போது வாங்கிய அதே வாக்குகளைத்தான் கூட்டணியிலும் பெற்றுள்ளது.

ஆனால் தனித்து நின்று 2016 வரை வென்றது 5 தொகுதிகள் மட்டுமே.
ஆனால் கூட்டணியால் வென்றது
56 தொகுதிகள்.

திமுகவுடன் வென்றது 32 தொகுதிகள்

அதிமுகவுடன் வென்றது 24 தொகுதிகள்

அதாவது அதிமுகவை விட திமுக மேல்தான் பாமக ஏறி சவாரி செய்து பெரும் பலன் பெற்றுள்ளது.

இந்த புள்ளி விபரங்கள் சொல்வது என்னவென்றால் கூட்டணியால் லாபம் அடைந்தது பாமக மட்டும்தான்.

ஆனால் அவர்கள் திராவிடத்தால் வீழ்ந்து விட்டார்களாம்.

அவர்கள் அப்படியே வீழ்ந்து கிடக்கட்டும்.

மீண்டும் திராவிடக் கட்சிகள் (குறிப்பாக திமுக) பாமகவை தூக்கிவிட முயற்சிக்காமல் இருப்பதே நன்று.

A.Parimalam 

Wednesday, 27 June 2018

ராதாசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கேள்வி

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி? - டாக்டர் பாரிவேந்தர் கேள்வி
http://ijkparty.org/newsinner.php?id=206

டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையில் பெற்றுக்கொண்டு,  அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா..?

மேலும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்து விட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி அவர்கள் இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது ஊர் அறிந்த உண்மை அல்லவா..?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா..?

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் – ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா..? அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா..?

     எதிரியின் மீது குற்றம் சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும் போது, மற்ற மூன்று விரல்களும் தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணர வேண்டும். .

சீமானின் ஈழத்தாய் ஈழத்திற்காக செய்த தியாகங்கள்*

தமிழ் தேசிய குஞ்சுகளுக்காக சீமானின் ஈழத்தாய் ஈழத்திற்காக செய்த தியாகங்கள்*

அம்மா ஆட்சியில் அமர்ந்தால் ஈழத்தை தான் முதலில் பெற்று தருவார் என ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தனர் பழ.நெடுமாறன், சீமான், வை.கோ, தமிழருவிமணியன் உட்பட பலர். முதல்வாரன ஜெ முள்ளிவாய்க்கால் நினைவாக தஞ்சை அருகே அமைக்கப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க நீதிமன்றத்தை நாடி தோல்வியை தழுவினார். ஈழ துயரத்தின் வரலாறு என பிரச்சாரம் செய்யப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க முயலும் ஜெவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாமல் இருந்தனர் ஈழத்துக்காக துடிக்கும் இந்த தமிழ்தேசியவாதிகள்.

இன்றும் ஈழத்தாய் என போற்றி புகழ்கிறார்கள். உண்மையில் ஈழ நலனுக்காக சிறிதளவாவுது உழைத்துள்ளாரா என கேட்டால் இல்லை என வார்த்தைகளில் சொல்வதை விட ஜெ வின் கடந்த கால, நிகழ்கால நடவடிக்கைகளை பார்த்தால் புரியும்.

எம்.ஜீ.ஆர் இறப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த ஜெவுக்கு ஆரம்பம் முதலே விடுதலைப்புலிகளை பிடிக்காது. ஏன் பிடிக்காது?. இராஜிவ்காந்திக்கு பிடிக்காது, சோ, இந்து ராம், சுப்பிரமணியசாமி போன்ற அவா வகையறாக்களுக்கு பிடிக்காது. அதிமுகவை புரமோட் பண்ணிய உளவு அமைப்புகள், ஆங்கில பத்திரிக்கைகளுக்கு பிடிக்காது. அதனால் அவரது மனதில் விடுதலை புலிகள், ஈழம் பற்றிய நெகட்டிவ் தகவல்களே அவரது மனதில் பதிவாகின. இதனால் புலிகளை கண்டால் பிடிக்காது.

1989 தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியை கலைக்க விரும்பினார் ராஜிவ்காந்தி. காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திய சந்திரசேகர், அப்போது அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமி போன்றோர் பெரும் பங்காற்றினர். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக விடுதலைபுலிகளின் நண்பர் கருணாநிதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட காரணம் விடுதலைபுலிகளுக்கு கருணாநிதி செய்யும் உதவிகள் தான் என ஜெ அறிக்கைகளாக விட்டார்.

ஆட்சி பொறுப்புக்கே வராத எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெ, தன்னை விடுதலைப்புலிகள் கொல்ல பார்க்கிறார்கள் என பீதியை கிளப்பினார். தன் கட்சி தொண்டனையே விடுதலைபுலிகள் என காவல்துறையினரிடம் பிடித்து தந்தார். ஜெ ஆட்சி பொறுப்பில் இல்லாத போதும், முதல்வராக இருந்தபோது விடுதலை புலிகள் மீது அவதூறு பரப்பிய தகவல்களை தொகுத்தால் தனி புத்தகமே போடலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளது. அதில் சில……

திமுக ஆட்சியை கலைப்பதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தமிழகத்திற்க்கு பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என குரல் கொடுத்தார் ஜெ.

இராஜிவ்காந்தி கொலையால் அனுதாப அலையில் வெற்றி பெற்ற ஜெ ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், தமிழகத்தில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டம், நோட்டீஸ் அடிச்சடிப்பது உட்பட அனைத்துக்கும் தடை போட்டார். ஈழ பகுதி மீது பொருளாதார தடையை சிங்கள அரசு விதித்த போது பசி பட்டினியால் வாடிய மக்களுக்கு தமிழகத்தில் இருந்து மறைமுகமாக பொருட்கள் செல்ல தடை ஏற்படுத்தினார். ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்கு தரப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். அவர்கள் படிக்க முடியாமல் செய்தார். ஈழ அகதிகள் அனைவரையும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கினார். ஈழ அகதிகளை வலுகட்டாயமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி கப்பலில் அனுப்பி வைத்தார்.

இதனை கண்டித்தும், ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகள் தமிழகத்தின் சில பகுதிகளில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டங்கள் நடத்த முயன்ற போது அவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார் ஜெ.

முதல்வாரன என்னை புலிகள் கொல்லப்பார்க்கிறார்கள், தற்கொலை படை வீரர்கள் தமிழகத்தில் புகுந்துள்ளார்கள் என சட்டமன்றத்தில் கூறினார் ஜெ. விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும்மென மத்திய டெல்லி காங்கிரஸ் அரசை நிர்பதித்து வெற்றி பெற்றவர் ஜெ. ( இந்த தடையை நீக்கத்தான் அம்மா விசுவாசிகள் நீதிமன்றத்தில் 21 ஆண்டுகளாக போராடுகிறார்களாம் ).

திமுக ஆட்சி கலைக்க காரணமாக இருந்த பத்மநாபா கொலை வழக்கை விசாரிக்கிறோம் என கிளம்பிய ஜெ அரசு, திமுக ஆட்சியின் போது உள்துறை செயலாளராக இருந்தவர், விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டது. பத்மநாபாவை கொன்ற புலிகளை திமுக அரசுதான் கைது செய்ய வேண்டாம் என்றது என அரசு சாட்சியாக இருந்து பதிவு செய்ததால் திமுக முக்கிய பிரமுகர் சுப்புலட்சுமி அவரது கணவர் ஜெகதீசன், திக வழக்கறிஞர் ஒருவர் என 3 பேரை தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

அவர்கள் மட்டுமல்ல நெடுமாறன், ராமதாஸ், கொளத்தூர்மணி, ராமகிருஷ்ணன், பெருஞ்சித்தனார், சுப.வீரபாண்டியன், மணியரசன், தியாகு போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு ஜெ வந்தபோது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியா கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்து பாஸ் செய்தார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய ஆன்டன்பாலசிங்கத்துக்கு அனுமதி தரக்கூடாது என அதிமுக மத்தியரசுக்கு கடிதம் எழுதி வெற்றி பெற்றது.

வை.கோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் உட்பட பலர் ஈழத்தை, விடுதலை புலிகளை ஆதரித்து பேசினார்கள் என பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒராண்டுக்கு மேல் சிறை வைக்கப்பட்டார்கள்.

விடுதலைபுலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து துரோகியாகி இன்றைய அவலத்துக்கு காரணமான கருணாவை கேரளாவில் தங்க வைத்துள்ளது பாதுகாத்த மத்திய புலனாய்வு பிரிவு. கருணா தமிழகம் மறைமுகமாக வந்தபோது ஆதரித்தார் ஜெ என்றும் கூறப்படுகிறது.

திமுக ஆட்சியின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான தமிழ்செல்வன் விமான தாக்குதலில் பலியான போது, கலைஞர் இரங்கற்பா எழுதினார். ஒரு முதல்வர் எப்படி எழுதலாம் ஆட்சியை கலைத்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என்றார்.

2008ல் ஈழ போரை தடுக்க வேண்டுமென வை.கோ, நெடுமாறன், சினிமா அமைப்பில் சீமான், அமீர் போன்றோர் ரோட்டில் இறங்கி மறியல், போராட்டம் என போராடிய போது, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, ஒரு நாட்டின் இளையான்மைக்கு எதிராக போராயடிவர்களை ஏன் கைது செய்யவில்லை என ஜெ விட்ட தொடர் அறிக்கையால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார் கலைஞர். அதே ஜெ, 2009ல் ஈழம் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என தன் ஈழ பாசத்தை காட்டியவா தான் ஜெ.

2011ல் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெ முன் நின்றது ராஜிவ்கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்ற ஆணையை அனுப்பியது மத்திய காங்கிரஸ் அரசு. முதல்வாரன ஜெவும் தலையசைத்தார். எல்லா தரப்பும் போராடியது. சுட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில் உச்சநீதி மன்ற தீர்ப்பு, மத்திய உள்துறை உத்தரவு, ஜனாதிபதி கருணை நிரகாரிப்பு போன்றவற்றால் இந்த முடிவு எனச்சொல்லி தன் ஈழ பாசத்தை காட்டினார் இந்த ஈழத்தாய். பின் காஞ்சிபுரம் செங்கொடி தீ குளிப்பு வேண்டா வெறுப்பாக தூக்கு எதிரான கருத்தை சொன்னார். இதன்பின் தான் ‘அம்மா’வுக்கு ஈழத்தாய் என்ற பட்டத்தை சீமான் தந்து நாடு போற்ற ஈழத்தாய் என்ற பதத்தை தமிழகம் முழுவதும் பரப்ப தொடங்கினார்.

அந்த ஈழத்தாய் தான் தற்போது தஞ்சை அருகே அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சியை நீதிமன்றம் மூலம் தடுக்கிறார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளகூடாது என தமிழக இயக்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்க பலர் அதில் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமானவர் கொளத்தூர் மணி. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் போட்ட பேனர் வைக்க தடை, நோட்டீஸ் தர தடை, பேச தடை மீறினால் வழக்கு பாய்கிறது.

ஆனால் இதனை ‘ஈழத்தாய்’ பட்டம் தந்த சீமான் அவரது தம்பிகள், உள்நாட்டு -  வெளிநாட்டு தமிழர்களின் ‘தலைவராக’ புரமோட் செய்யப்படும் நெடுமாறன், போன்ற பலர் இதனை கண்டிக்காமல் செலக்ட்டிவ் அம்னிஷியா தாக்கியவர்களாக ஆட்சி பொறுப்பிலே இல்லாத திமுக தலைவரை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஈழ நலனுக்கு எதிராக ஜெ அப்போதும் செயல்பட்டார். இப்போதும் செயல்படுகிறார். எப்போதும் செயல்படுவார். அது அவரது சுபாவம்.

இதை ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் மறக்கலாம். வரலாற்றின் பக்கத்தில் பதிவானதை மறைக்க பார்க்கலாமா ?

Written by
#Rajpriyan

படித்ததில் பிடித்தது

பாமக கட்சியை பற்றிய உண்மைகளை விளக்கும் கட்டுரைகள்

தொடர்ந்து திமுகவை ஆபாசமாக விமர்சிக்கும் பாமக கட்சியை பற்றிய உண்மைகளை விளக்கும் கட்டுரைகள்

படிங்க👇

ராமதாஸ் யார்?

தீரன் ராமதாசிடம் எழுப்பும்
கேள்விகள்
https://kizhumathur.wordpress.com/2006/05/27/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A/

ராமதாஸ் பற்றி வன்னி அரசு
எழுதிய கட்டுரைகள்.
http://vanniarasu.blogspot.com/2014/10/blog-post_10.html?m=1

http://vanniarasu.blogspot.com/2015/02/blog-post_22.html?m=1

http://vanniarasu.blogspot.com/2014/11/blog-post.html?m=1

அன்புமணி ஊழல்
https://m.facebook.com/story.php?story_fbid=1230562966957860&id=1024521057562053

ராமதாஸ் பற்றி வேல்முருகன்

https://tamil.oneindia.com/news/2012/01/09/tamilnadu-velmurugan-questions-dr-ramadoss-commitment-aid0091.htmlju

பாமக வரலாறு

https://puthiyavasagan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/

மனசாட்சியை விற்று விட்ட சுயநலவாதிகள்தான் பாமகவினர்

மனசாட்சியை விற்று விட்ட சுயநலவாதிகள்தான் பாமகவினர்

திராவிடத்தாலே வீழ்ந்தோம் என்று கதை சொல்லும்
பாமக ராமதாஸிடம் சில கேள்விகள்.

https://myjosejose.wordpress.com/

1) சுமார் 10 ஆண்டுகள்
மத்திய அமைச்சசரவையில் இருந்தீர்களே..
என்னென்ன புதிய திட்டங்களை கொண்டு வந்து வன்னிய சமூக மக்கள் எத்தனைப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தீர்கள்?


2)2006-ல் துவங்கிய சரஸ்வதி அறக்கட்டளை மூலம்
உங்க சமூக மக்கள் எத்தனைபேர் இலவசக் கல்வி பெற்றனர்?

கல்வி, வேலைவாய்ப்பை இலவசமாக தன் சொந்த சரஸ்வதி அறக்கட்டளை மூலமாக வழங்கமுடியாத ராமதாசும், அன்புமணியும்
எப்படி தமிழகத்திற்கு வழங்குவார்கள்?


3) எல்லோரையும் குறையடிக்கிறீங்களே..
பாமகவினர் 10 வருசம் மத்திய அமைச்சர்களா இருந்தாங்களே தமிழக மக்களுக்கு அவர்கள் செய்த சாதனை பட்டியல்களை வெளியிட  தயாரா ?

4)அன்புமணி மீது
இந்தூர், லக்னோ மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கியதில்
லஞ்சம் பெற்றதாக
CBI 2 வழக்குகள் உள்ளது.

இந்தூர்,  லக்னோ மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் CBIவழக்கில் தப்பிக்க
மோடியை பிடித்து
தப்பித்துக் கொண்டிருக்கும் BJP அடிமை பாமகவினர் மற்றவர்களை குறை சொல்லலாமா?

5)அன்புமணி
இந்தூர், லக்னோ மருத்துவக்கல்லூரி
அனுமதி ஊழல் வழக்கை
விசாரிக்காம கிடப்பில் போட..,
தண்டனை கிடைக்காமல்
தப்பிக்க வைக்க 2014 ல்
பாமக  பாஜகவுடன் கூட்டணி வைத்ததை ஊரே அறியுமே.

டெல்லி கோர்ட்டில் தன் மீதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க
மனு போட்டு வாய்தா வாங்காமல் நடத்தி நிரபராதி என தீர்ப்பு வாங்குவாரா அன்புமணி ராமதாஸ்?

6)அரசியலில் எந்த தியாகமும் செய்யாத அன்புமணி  DMK தயவால் கொல்லைப்புறமாக MP ஆகி  மந்திரியானதுடன்  நேரடியாக தமிழகத்தின் முதல்மந்திரி என  தமிழகமெங்கும் மாற்றம் முன்னேற்றம் போஸ்டர் ஒட்டி
அனைத்து தமிழகநாளிதழ்களிலும் முதல்பக்க விளம்பரம் செய்ய
உங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

7) 2016 தேர்தலில்
மாற்றம் முன்னேற்றம் போஸ்டர்
மாநாடுகள்
பல நூறு கோடி செலவிட்டது எப்படி?
தமிழகமெங்கும் 16 மாநாடுகள் நடத்த பணம் எங்கிருந்து வந்தது?

8) இந்த செய்திக்கு பாமக பதில் என்ன?
https://www.vikatan.com/amp/news/tamilnadu/127042-amit-shahs-operation-north-tamilnadu-bjps-check-for-pmk.html?__twitter_impression=true


9) 1998 MP - ADMK
1999 MP - DMK
2001 MLA - ADMK
2004 MP- DMK
2006 MLA - DMK
2009 MP- ADMK
2011 MLA - DMK

இப்படி மாறி மாறி கூட்டணி வைத்து திராவிட கட்சிகளால் ஜெயித்து MLA, MP பதவி சுகம் அனுபவித்துவிட்டு
திராவிடத்தால் வீழ்ந்தோம் எனச்
பாமக ராமதாஸ் மற்றும் அன்புமணி சொல்வது பச்சை துரோகம் இல்லையா?

10)ஆளும் அரசுக்கெதிரான மக்களின் மனநிலையை அறிந்துக் கொண்டு வெறும் 5% ஓட்டு மட்டுமே உள்ள பாமக
பலமான திமுக அல்லது அதிமுக கட்சிகயை சேர்த்து கூட்டணி வைத்து வெற்றி பெற்று
பதவிகளை பெற்றுக் கொள்வீர்கள்.
வென்ற பின் பாமகவால் தான் அந்த கூட்டணி ஜெயித்தது என
தம்பட்டம் அடித்துக் கொள்வீர்கள்!

உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?

11) அன்புமணிக்கு ராஜ்யசபாMP, Cabinet  மந்திரி பதவி வாங்க..,
மக்கள் TV, தமிழ் ஓசை பத்திரிக்கை அனுமதி,
சரஸ்வதி அறக்கட்டளை துவக்கம் .., என எல்லாவற்றுக்கும் திமுக உதவி தேவைப்பட்டது பாமகவிற்கு. அப்போதெல்லாம் சர்க்காரியா கமிஷன்,  திமுக திராவிட கட்சி என்தெல்லாம் நினைவுக்கு வரவில்லையா ராமதாஸ் அவர்களுக்கு?

12)  2016 தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவிற்கு 212 தொகுதிகளில் ஜாமின் போனதை மறந்து திமுக தங்களால்தான் தோற்றது எனத் தம்பட்டம் அடிப்பது கேவலமாக இல்லையா?

13) கலைஞரின் நண்பர் விபி.சிங் கொண்டு வந்த OBC க்கான 27% இட ஒதுக்கீட்டிற்கு நீங்க சொந்தம் கொண்டாடுவது உங்களுக்கே நகைச்சுவையாக இல்லையா?

14) தாம்பரம் சித்த மருத்துவமனை ஒன்பதாவது 5 ஆண்டு திட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டது. 1999 ஜனவரியில் National Institute of Siddha ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் 27.3.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.

தாம்பரம் சித்த மருத்துவமணை அமைந்ததில் 90% பங்கு திமுகவிற்கு எனும் போது அது திமுகவின் சாதனை மட்டுமே. வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது.

முழு விபரமும் கீழே 👇

https://en.m.wikipedia.org/wiki/National_Institute_of_Siddha

எந்த அடிப்படையில் பாமக சொந்தம் கொண்டா முடியும்?

15)   சேலம் மல்டி ஸ்பெஸாலிட்டீ ஆஸ்பத்திரியை தான் கொண்டுவந்ததாகவும் திரு ஸ்டாலின் பொய் சொல்வதாகவும் சொன்ன அன்புமணி ராமதாசின் பொய் அம்பலம் ஆகிவிட்டது.

2003 ஆம் ஆண்டு திரு ஆ.ராசா Minister of state for Family health and welfare மந்திரியாக இருந்த போது The Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY
என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

திரு வீரபாண்டி ஆறுமுகம் 10.8.2010 இல் அளித்த பேட்டி

https://tamil.oneindia.com/news/2010/08/10/anbumani-ramadoss-veerapandi-arumugam.html

16)108 ஆம்புலன்ஸ் திட்டம்

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.

மொத்தத்தில் நீங்க மனசாட்சியை விற்று விட்ட சுயநலவாதிகள்


(@gokula15sai) உடன்

Antony Parimalam

மத்திய மந்திரி சபையில் இடம் பெற்ற திமுகவால் தமிழகம் அடைந்தது என்ன என்று கேட்பவர்களே இதோ பட்டியல்👇

மத்திய மந்திரி சபையில் இடம் பெற்ற திமுகவால் தமிழகம் அடைந்தது என்ன என்று கேட்பவர்களே
இதோ பட்டியல்👇

1. Indian Maritime University, Chennai - 11/14/2008.
https://t.co/hqUuwCxlDG

2. Tiruvarur Central University (CUTN) - 03/20/2009.
https://t.co/oBZx17cgQf

3. Indian Institute of Management Trichy - 2011.
https://t.co/1J0BizLev6

4. National Institute for Empowerment of Persons w/ Multiple Disabilities, Chennai - 2005. First in Asia.
https://t.co/yOZ1pwTS3N
https://t.co/BJl75NI1AY

5. NSG hub at Chennai.
https://t.co/LtVx3qx8Bv
https://t.co/sDDG7dlArg

6. Nat'l Law School Trichy.
https://t.co/UyMbJTcGHS

7. Global Automotive Research Center (GARC - NATRIP) - Oragadam, Chennai. Started in 2011.
https://t.co/0iw1RzbUYy

8. Salem Super Specialty Hospital.
https://t.co/nTqB6NpINo
And a new railway station there as well.

9. Chennai Maduravoyal flyover.
https://t.co/9ORt6hIZTt

10. Ram Setu project that could've saved India billions to trillions of forex reserves, scuttled by BJP.
https://t.co/33LTLosoR6

11. Nemmeli plant to remove salt from seawater.
https://t.co/JbO9s06Yle

12. Building railway bridges and broadening rail routes throughout TN.

13. Chennai Metro.
https://t.co/LNrjzOFLE8

14. Hogenakkal Drinking Water Project.
https://t.co/mvZUnhuTFe

15. Expansion of airports at Chennai, Trichy, Madurai and Coimbatore.

16. Salem Steel Rolling Mills.
https://t.co/Q9Cu5wgTmp
Cold rolling mills.
https://t.co/bPtrha5FEn

17. Innumerable National and State Highways - TR Baalu.

18. Murasoli Maran's defense of the developing world at WTO Doha, 2001.
https://t.co/VJ7SRqirMM

19. The telecom revolution of Dhayanidhi Maran & A Raja:
https://t.co/bnvotzNk0X

20. Flyovers at Kathipara, Padi & Koyambedu.

(படித்ததில் பிடித்தது)


Tuesday, 26 June 2018

108 ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது யாரால் கொண்டுவரப்பட்டது?


108 ஆம்புலன்ஸ் திட்டம் எப்போது யாரால் கொண்டுவரப்பட்டது?

2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.

அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.

மற்றபடி இதன் முன்னோடி காங்கிரஸ் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டி

முதன் முதலில் 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு EMRI நிறுவனம் இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது

இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 108ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 4535. இதன் மூலம் ஆண்டுக்குப் பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக EMRIஇன் அறிக்கை சொல்கிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது

இந்த திட்டத்தை விரும்பிய மாநில முதல் மந்திரிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். கலைஞர் மனது வைக்காதிருந்தால் இத்திட்டம் தமிழகத்தில் வந்தே இருக்காது

அன்புமணி காலத்தில் வந்தது அவ்வளவுதான்.

Monday, 25 June 2018

சட்டசபையில் திரு. ஸ்டாலின் பொய் சொன்னாரா? அன்புமணி ராமதாசின் பொய் பித்தலாட்டம் அம்பலம்* பகுதி (3)

சட்டசபையில் திரு. ஸ்டாலின் பொய் சொன்னாரா? அன்புமணி ராமதாசின் பொய் பித்தலாட்டம் அம்பலம்* பகுதி (3)

கீழே உள்ள பேட்டியில் திரு ஸ்டாலின் பாமகவின் சாதனைகளை திமுகவின் சாதனையாக சட்டசபையில்  பொய் சொன்னதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை அளித்துள்ளார்.

 http://youtu.be/CaSQl01a_S8

திமுகதான் தாம்பரம் சித்த மருத்துவமனையும் சேலம் மல்டி ஸ்பெசாலிடி மருத்துவமனையையும் கொண்டு வந்தது என கீழ்கண்ட பதிவுகளில் ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=1547526738707069&id=100003492741526

https://m.facebook.com/story.php?story_fbid=1547532558706487&id=100003492741526

அடுத்தது மத்திய அரசில் OBC க்கு 27% இட ஒதுக்கீடு தொடர்பானது.

23.5.2005 இல் சோனியா வீட்டில் ஐ.மு.கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்ததாம். அதில் OBC க்கு 27% இடஒதுக்கீட்டை முடக்கிப்போட முயற்சி எடுக்கப்பட்டதாம். அதை  ராமதாஸ் தனி ஆளாக காப்பாற்றினாராம். அதாவது 5 MP க்கள் வைத்திருந்த பாமகவை பார்த்து பயந்து விட்டாராம் சோனியா.

நல்ல நகைச்சுவை கதை.

2001 இல் ஊழல்ராணி ஜெ வை அன்பு சகோதரியாக ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா டாஸ்மாக்கை விரிவு படுத்தியதையும் மிடாஸ் கம்பெனி திறந்ததையும் வேடிக்கை பார்த்தவர் மருத்துவர் ராமதாஸ்.

தன் மகனுக்கு MP சீட் தராததால் திமுகவுடன் சேர்ந்து திமுக உதவியால் தன் மகனை ராஜ்யசபா MP ஆக்கியவர் ராமதாஸ். அதன் பின்னர் திமுக வீரபாண்டி ஆறுமுகம்  பரிந்துரையால்தான் சுகாதார மந்திரி பதவியை மகனுக்கு வாங்கினார்.

இந்த லெட்சணத்தில் ஐ.மு.கூட்டணியையே ராமதாஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல் அன்புமணி கதையளக்கிறார்.

மண்டல் கமிசன் பரிந்துரையை முதன் முதலில் அமல் படுத்த முயன்றவர் கலைஞரின் நண்பர் VP சிங் அவர்கள்தான்.

டிசம்பர் 1, 1989ல் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் கூட்டணியின் பிரதமராக ஜார்கண்ட் ஜாட் தலைவரான ஜோதி லாலை முன்னிறுத்தினார் வி.பி.சிங். ஆனால், ஜோதிலால் மறுத்துவிடவே இந்தியாவின் ஏழாவது பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார். அந்த காலத்தில் அவரோடு இருந்தவர்கள் தான் இன்னமும் இந்திய அரசியலில் தனிப்பெரும் ஆளுமைகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் கருணாநிதி, லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், ஓம் பிரகாஷ் சவுதாலா, பிஜூ பட்நாயக், ராம் விலாஸ் பாஸ்வான், என்.டி.ராமா ராவ் என்று பெரும் பட்டாளமே அவரோடு இருந்தது. அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலம் பதினோறே மாதங்கள் தான். ஆனால் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வொளி

 மொரார்ஜி தேசாய் காலத்தில் 1978ல் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்கிற மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்சிக்கு சமூக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தீர்வாக முன்வைத்த மண்டலின் பரிந்துரை பத்தாண்டுகளுக்கு மேல் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் அதை தூசுதட்டி எடுத்தார் வி.பி.சிங். இந்தியாவின் அத்தனை சக்திகளும் அவரை எதிர்த்து களமிறங்கின. ஊடகங்கள் மிகக்கடுமையாக விமர்சித்து எழுதின. நாடெங்கும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. கோஸ்வாமி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். நீதிமன்றமும் வி.பி.சிங்கின் முடிவுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது.

அந்த நெருக்கடியான காலத்தில் அவரோடு முழுமையாக துணை நின்ற அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்களின் உதவியுடன் எல்லாவற்றையும் எதிர்கொண்டார். பதவியே போனாலும் பரவாயில்லை மக்கள் நலனே முக்கியம் என்று  ஆகஸ்ட் 8, 1990 ல் மண்டல் கமிசனை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டமியற்றினார். வி.பி.சிங். பட்டியலின மக்களின் இடப்பங்கீடு பாதிக்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இடப்பங்கீட்டை உறுதுபடுத்திய அவரை, சாதியின் பெயரால் வி.பி.சிங் இந்தியாவை பிளவுபடுத்திவிட்டார் என்று விமர்சித்தன ஊடகங்கள். ஆனாலும் அவம் பின்வாங்கவில்லை. இதன் மூலம் அமுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின் வளர்ச்சிக்கான விதையை தூவினார்.

இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்யாயத்தின் முன்னுரையை எழுதிய வி.பி.சிங்கிறகு ‘சமூக நீதி காவலர்’ என்று கலைஞர் கருணாநிதி கம்பீரமான பட்டத்தை அளித்தார்.

அத்வானியின் ரதயாத்திரையை பீகாரில் தடுத்து, கைது செய்தார் லல்லு பிரசாத் யாதவ். அதை காரணம் காட்டி தனது ஆதரவை திரும்பப்பெற்றது பா.ஜ.க. அதன் விளைவாய் நவம்பர் 11, 1990ல் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவில் தோற்கடிக்கப்பட்டது வி.பி.சிங் அரசு.

அன்று அவர் பேசிய நாடாளுமன்ற உரை இந்தியாவின் ஒவ்வொரு மக்களும் படிக்க வேண்டிய பாடம். அவர் எதிர்கட்சிகளை நோக்கி கேட்ட கேள்வி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கேள்வி. அந்த உரையின் தொடக்கத்திலேயே பெரியாருக்கும், அம்பேத்கருக்கும், ராம் மனோகர் லோகியாவிற்கும் நன்றி சொன்னார் வி.பி.சிங்.

பதவியை இழந்தபோதும், இடப்பங்கீட்டு உரிமையை நிலைநிறுத்திய திருப்தியுடன் பதினோறே மாதத்தில் ஒரு சகாப்தமாய் உருபெற்ற வி.பி.சிங் பதவி விலகினார்.

அதன் பின்னர் வழக்குகளை சந்தித்து மீண்டு வந்தது 27 % இட ஒதுக்கீடு. அதற்கு ஆபத்து அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது என்று கதை கட்டுவது மிகப்பெரிய நகைச்சுவை.

இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும்  சோனியா உட்பட யாரும் திமுகவையும் கலைஞரையும் கேட்காமல் எடுக்க வாய்ப்பேயில்லை.

27% இட ஒதுக்கீட்டில் விபி சிங் அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று ஆதரவளித்தது கலைஞர்தான் என்பதை நாடே அறியும்.

எனவே அன்புமணி அவர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புமணியின் பொய் நம்பர் (2) அம்பலம்*

அன்புமணியின் பொய் நம்பர் (2) அம்பலம்*

சேலம் மல்டி ஸ்பெஸாலிட்டீ ஆஸ்பத்திரியை தான் கொண்டுவந்ததாகவும் திரு ஸ்டாலின் பொய் சொல்வதாகவும் சொன்ன அன்புமணி ராமதாசின் பொய் அம்பலம் ஆகிவிட்டது.

2003 ஆம் ஆண்டு திரு ஆ.ராசா Minister of state for Family health and welfare மந்திரியாக இருந்த போது The Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY
என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 6 AIIMS மருத்துவமணைகளுக்கு இணையான மருத்துவமனைகளை உருவாக்கவும் 13 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதில் திரு ஆ.ராசாவால்  தமிழகத்தில் திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமணைதான் முதலில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வற்புறுத்தலால் 2004 ல் அமைச்சரான அன்புமணி 2006 ல் திருச்சிக்கு பதிலாக சேலத்தை பட்டியலில் இணைத்தார்.

இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.31 கோடி திமுக மாநில அரசு தந்தது. அது இல்லாமல்  229 கோடி மதிப்புள்ள நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை தமிழக திமுக அரசுதான் ஒதுக்கித்தந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த மருத்துவமனைக்கு Recurring expenditures மட்டுமே ஆண்டுக்கு
35 கோடி.

அன்புமணி அமைச்சராகவே இல்லாவிட்டாலும் இந்த மருத்துவ மணை திருச்சியிலோ சேலத்திலோ வந்துதான் இருக்கும்.

திமுகவால் MP திமுகவின் ஒத்துழைப்பால் அமைச்சரான அன்புமணி திரு ஸ்டாலினை அவமரியாதை செய்வது கேடுகெட்ட செயலும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்

http://pmjandhanyojana.co.in/pradhan-mantri-swasthya-suraksha-yojana/

திரு வீரபாண்டி ஆறுமுகம் 10.8.2010 இல் அளித்த பேட்டி

https://tamil.oneindia.com/news/2010/08/10/anbumani-ramadoss-veerapandi-arumugam.html

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004 ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.

அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்பு தான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.

இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.

பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.

அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது.

தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி தான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.

நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்பு கூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.

ஆனால், தான் தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரி ஆகவே நான் தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர் தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.

பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார்? என்றார் வீரபாண்டியார்.


தாம்பரம் சித்தமருத்துவ மணை கொண்டு வந்தது திமுகதான்.

அன்புமணி பொய் நம்பர் (1)
அம்பலம்.
தாம்பரம் சித்தமருத்துவ மணை கொண்டு வந்தது திமுகதான்.

தாம்பரம் சித்த மருத்துவமனை ஒன்பதாவது 5 ஆண்டு திட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டது. 1999 ஜனவரியில் National Institute of Siddha ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

 திமுக ஆட்சியில் 27.3.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.

30.9.2000 முதல்  2003 வரை Minister of State (Health and Family Welfare) ஆக இருந்தது ஆ.ராசா தான். இந்த திட்டத்திற்கு 2002 இல் ராசா காலத்தில் ஜனவரி 2002 ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2003 ஜனவரியிலேயே வேலையும் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த மருத்துவமணைக்கு
இடம் ஒதுக்கித் தந்து 40% நிதியை மாநில அரசுதான் தந்துள்ளது. மத்திய அரசின் நிதி 60% மட்டுமே.

அன்புமணி அமைச்சரானதோ 2004 மே 22 இல்தான்.

2005 செப்டம்பர் 3 இல் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மனை திறப்பு விழாவிற்கு அமைச்சர் என்ற முறையில் பிரதமருடன் வந்து விட்டு தான்தான் செய்ததாக புளுகுகிறார் அன்புமணி.

திட்ட மதிப்பீடு 49 கோடி
திட்டத்திற்கு கட்டுமான செலவை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்திலும் நடைமுறை செலவை 75:25 என்ற விகிதத்திலும் பிரித்துள்ளன.

திட்டத்திற்கு மத்திய அரசின் இறுதி தவணையை தந்து விட்டு தானே முழு தொகையையும் விடுவித்ததாக கதை விடுகிறார் அன்புமணி.  அதுவும் ஏற்கனவே திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைதான் விடுவித்தார் அன்புமணி.

மேலும் செப்டம்பர் 2010 ல் திமுக ஆட்சியில் தான் டெல்லியில் இயங்கி வந்த Central Council of Research in Siddha (CCRS) சென்னை தாம்பரத்தில் முறைப்படி அமைக்கப்பட்டது.

 தாம்பரம் சித்த மருத்துவமணை அமைந்ததில் 90% பங்கு திமுகவிற்கு எனும் போது அது திமுகவின் சாதனை மட்டுமே. வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது.




முழு விபரமும் கீழே 👇

https://en.m.wikipedia.org/wiki/National_Institute_of_Siddha

In the 7th five year Plan, the Government of India then decided to establish the National Institute of Siddha (NIS) at Chennai at an estimated cost of ₹ 470 million spread over a period of 6 years. The proposal was approved, in principle, during the 9th Five Year Plan period and a society of NIS was registered in January 1999.The capital cost of ₹ 360 million was shared by the Government of India and Government of Tamil Nadu in the ratio of 60:40 and the recurring expenditure of ₹ 110 million was shared in the ratio of 75:25. The foundation for the institute was laid on 27 March 1999. The project was cleared in January 2002 and work started a year later.

The institute was inaugurated on 3 September 2005 by Manmohan Singh, Prime Minister of India.
Till 2010, the research council of Siddha was functioning under the CCRAS in New Delhi, which was established in 1978. In March 2010, the Ayush Department of the Union Health Ministry decided to bifurcate CCRAS to create an exclusive body for Siddha research called the Central Council of Research in Siddha (CCRS), after a long period of pressure from the Siddha community in Tamil Nadu and elsewhere. The new council was decided to be headquartered in Chennai, and the council was officially formed in September 2010.


Sunday, 17 June 2018

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில் ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? உண்மையில்
ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனை படைத்தாரா?
இட ஒதுக்கீடு வரலாறு*
இடஒதுக்கீடுக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சியும், பெரியாரின் போராட்டங்களுமே.
இதன் தொடர்ச்சியாக  எந்தவித ஆதாயமும், சுயநலமும், நிர்பந்தமும் இல்லாமல் இடஒதுக்கீடை மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தியது கலைஞர்தான். மற்றவர்கள் நிர்பந்தத்தால் செய்தனர்.
1969 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்பு சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தபட்டோர் நலக்குழு அமைக்கிறார் கலைஞர்.
அதன் அறிக்கையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 25% இடஒதுக்கீட்டை 31% எனவும்,பட்டியல் இனத்தவருக்கு இருந்த 16% இடஒதுக்கீடை 18% எனவும் உயர்த்தினார் கலைஞர்
அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் பார்ப்பணர் தூண்டுதலால் இடஒதுக்கீடில் 'வருமான வரம்பு முறையை' புகுத்துகிறார்.
இதனால் ஆத்திரமுற்ற  மக்கள்  அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் MGR ஐ படுதோல்வி அடைய செய்கின்றனர்.
தான் தோற்றதற்கு முக்கிய காரணமே   வருமான வரம்பு முறையை கொண்டு வந்ததுதான் என்பதை உணர்ந்த MGR உடனேயே வருமான வரம்பு முறையை விலக்கிக்கொண்டு மீண்டும் பழைய இட ஒதுக்கீடு முறையையே கொண்டு வருகிறார்.
மேலும் தன் தவறை மறைக்க மக்களை திருப்தி படுத்த ஏற்கனவே கலைஞரால் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்கான இடஒதுக்கீடை 31% லிருந்து,50% மாக உயர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதாவது இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது
1989 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அந்த 1 % இடஒதுக்கீடை மலைசாதி,பழங்குடி இனத்தவருக்கு வழங்குகிறார் கலைஞர்.
இதை தொடர்ந்து  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 % தனி இடஒதுக்கீடை வழங்குகிறார் கலைஞர்
ஆக அந்த 69 % இடஒதுக்கீடு கலைஞரால் BC-30 %, MBC-20 %, SC-18 %, ST-1 % என்று மாறுகிறது.
69% இடஒதுக்கீடு முறையினை எதிர்த்து விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.1992ல் அதனை ஏற்று இந்த நடைமுறைக்கு தடை விதிக்கிறது உச்சநீதிமன்றம்.
இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுகின்றன.
வேறு வழியின்றி அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார்  ஆட்சியிலிருந்த ஜெயலலிதா.
"அரசியல் பிரிவு 31-சி யின் கீழ் புதிய சட்டமொன்று இயற்றி இந்த 69 % இடஒதுக்கீடு முறையை தக்க வைக்கலாம்" என ஆசிரியர் வீரமணி  யோசனை சொல்ல அனைவரும் ஏற்கின்றனர்.
ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யபடுகிறது.
இதில் முக்கிய விசயம் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த 18 கட்சிகளுக்கும் தனித்தனியே கடிதம் எழுதி  மசோதா நிறைவேற அவர்களின் ஆதரவை பெற்றவர் கலைஞரே.
இப்படித்தான் 1994 ல் புதிய சட்டதிருத்ததின் படி தமிழகத்திற்கான 69% இடஒதுக்கீடு காக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.
ஜெ செய்தது ஒன்றே ஒன்றுதான்
அதுவும் வேண்டா வெறுப்பாக திமுக அப்போது பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததால் செய்தார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 69 % இடஒதுக்கீடை சட்டமியற்றி உறுதிப்படுத்தும் முயற்சியை செய்தார், அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற கட்டாயத்தினால் மட்டும்தான்.
Antony Parimalam

தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்

தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற நன்மைகள்

1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 15.9.2007 ல், அறிவிப்பு. இதன் காரணமாக அரசு பணியில் 1774 அலுவலர்கள்/பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தொழில் நுட்பகல்வியில் 16518 மாணவ/மாணவியர்களும் மற்றும் மருத்துவக் கல்வியில் 306 மாணவ/மாணவியர்களும் ஆக மொத்தம்18598 அரசு பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வாணைய குழுத்தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைத்து முதல்வர் கலைஞர் 29.01.2011 அன்று உத்தரவிட்டார்.
3. கல்வி உதவி
தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு ரூ 1867.07லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ 729.86 லட்சம் செலவில் 2820 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 39 விழுக்காடு ஆகும்.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் 67683 சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரை ரூ.2315.90 லட்சம் செலவில் 34637 இஸ்லாமிய மாணவ/மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இது மொத்த செலவினத்தில் 46 விழுக்காடு ஆகும்.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 350042 மாணவ/மாணவியருக்கு 4098.24 லட்சம் செலவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ2104.20 லட்சம் செலவில் 178659 இஸ்லாமிய மாணவ/மாணவியர் பயனடைந்துள்ளனர். இது மொத்தத்தில் 51 விழுக்காடு ஆகும்
. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு சேர்க்கைக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ 500/-ம், கற்பிப்புக்கட்டணமாக ரூ 3500/-ம் விடுதிகளில் தங்கி படிப்போருக்கு மாதம் ரூ600/-ம் வழங்கப்படுகிறது.
11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2007-08 ல் ரூ 94/- லட்சமும், தொடர்ச்சியான ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ 247/-லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டம் தொழில் மட்டும் தொழில் நுட்பம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு ரூ435.48/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்
திண்டுக்கல் , வேலூர், கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
5. திறன் வளர்ப்பு பயிற்சி
சிறுபான்மையின மக்கள் தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை, காலணிகள் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்பதற்கு நடப்பு ஆண்டில் ரூ 2.50/- கோடி செலவிடப்பட்டுள்ளது.
6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்
சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு, தமிழ்நாடு சிறுபான் மையிர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 1999-ல் துவங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அ. தனி நபர் கடன் திட்டம்
சிறுபான்மையினர் தொழில் தொடங்கிட ரூ 1 லட்சம் வரை கடன். கடந்த 4 ஆண்டுகளில் 7331 பயனாளிகளுக்கு ரூ 3107.13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4836 முஸ்லிம்கள்- கடன் தொகை ரூ 2143.97
ஆ. சிறுகடன் திட்டம்
சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்பு பயில வருடம் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 40.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு ரூ 14.53 லட்சம். இ. 60 விழுக்காடுகளுக்குக் குறையாமல் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்
ஈ. ஆட்டோ ஓட்டுநர் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுபான்மையினருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்
உ. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரு கலப்பின பசுக்கள் வாங்குவதற்கு ரூ.50,000 வரையிலும், இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
ஆதரவற்ற, கணவனால் கை விடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 23.4.2007 முதல் துவக்கப்பட்டுள்ளது.
இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதராத்திற்கு இணையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ஷ�பூ அரசு மானியம் வழங்கி வருகிறது.
8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்
உலமாக்கள் மற்றும் பணியாளர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 60 வயது வரை ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், முஅத்தின் மற்றும் இதர பணியாளர்கள் உறுப்பினர்களாக இருந்து பயனடையலாம்.
முதியோர் ஓய்வூதியம், இறுதிச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முடக்க ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு இந்த நலவாரியத்திலிருந்து உதவி பெறலாம்.
கடுமையான வலியில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, 38 நாள் ஓய்வுக்குப் பிறகு 2009 மார்ச் 14-ல் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் கலைஞர் கையெழுத்திட்ட முதல் கோப்பே உலமாக்கள் பணியாளர் நலவாரியம் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
9. தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், நிர்வாக செலவினங்களுக்கும், தணிக்கை கட்டணமாகவும் நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.
பள்ளிவாசல்கள், தர்காக்கள், மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் மராமத்து பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 82 லட்சம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனால் 207 வக்ஃப் நிறுவனங்கள் பயனடைந்தன.
10. கபரஸ்தான் பாதுகாப்பு:
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலங்கள் வக்ஃப் செய்யப்பட்ட கபரஸ்தான்கள் ஆண்டு தோறும் 20 தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சுற்றுச்சுவர் மற்றும் முள்கம்பி வேலி அமைப்பதற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கி வருகிறது.
11. உலமா ஓய்வூதியத்திட்டம்
ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2200 லிருந்து 2400 ஆக அரசு உயர்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ரூ 250/- ஆக இருந்த ஓய்வூதியம் இன்று ரூ 750/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஓய்வூதியத்திற்கு அரசு ரூ 2.16 கோடி வழங்கியுள்ளது. உலமாக்களுக்கு இலவச மிதிவண்ட 3 கோடியில் வழங்கப்படுகிறது.
12. மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு
மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச்செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு
சென்னை பட்டினப்பாக்கம் சேக்மதார் அவுலியா தர்கா முதற்கொண்டு திருவள்ளூர், தஞ்சை, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
14. மறுவாழ்வு திட்டம்
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஊசி�ட்க்�வூதுறூஙு�ஸ்ன், சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் மறுவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலா ரூ.10,000 இதற்கு நிதி உதவி வழங்கப்படும்.
இதை தவிர
15. சிறுபான்மையினர் நல ஆணையம்
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நல ஆணையம், அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து.
16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்
17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்
18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்
19. உர்தூ அகாடமி
20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.
21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.
22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்
23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை, 1969-ல் கொண்டுவந்த நடைமுறையை 2001-ல் அ.தி.மு.க அரசு ரத்து செய்த போது 15.11.2006-ல் மீண்டும் விடுமுறை என அறிவிப்பு.
24. கட்டாய மதமாற்க்ஷித் தடைச்சட்டம் ரத்து
25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பு 26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 648 பணியாளர்கள் ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம் வழங்கும் என அறிவித்து 26.2.2011 அன்று அரசு ஆணை. இதற்காக ஆண்டு தோறும் ரூ.331 கோடி அரசு ஒதுக்குகிறது என்ற அறிவிப்பு.
1991-92 க்குப்பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு மட்டுமின்றி 1999 – க்குப்பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் அரசு நிதி அளிப்பது பற்றி அடுத்த கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும் என தேன் சொட்டும் அறிவிப்பு. அடடா! யாருடைய ஆட்சியில் இப்படிப்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்க முடியும்!!
இந்த சாதனைப் பட்டியல் முற்றுப்பெற்று விடவில்லை. இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமின்றி 26.3.2011 அன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில் உறுதி மொழி அளித்துள்ளார் கலைஞர்.