Sunday, 31 March 2019

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள விபரங்கள்

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை கீழே தந்துள்ளேன்
திமுக மீது வீண் பழி சுமத்தும் அறிவிலிகள் இதை படித்து அறிவை பெருக்கிக் கொள்ளவும்.
இதில் முக்கியமானது (4) மற்றும் (6)
Agreement between Sri Lanka and India on the Boundary in Historic Waters
between the two Countries and Related Matters
26 and 28 June 1974
The Govermment of the Republic of Sri Lanka and the Government of the Republic of India
Desiring to determine the boundary line in the historic waters between Sri Lanka and India and to settle the related
Having examined the entire question from all angles and taken into account the historical and other evidence and legal
Have agreed as follows:
matters in a manner which is fair and equitable to both sides,
aspects thereof,
Article 1
The boundary between Sn Lanka and India in the waters from Palk Strait to Adam's Bridge shall be arcs of Great
Circles between the following positions, in the sequence given below, defined by latitude and longitude
Position 1: 10°05' North, 8003 East
Position 2 09 57 North, 79 35 East
Position 3:0940.15' North, 79 22.60 East
Position 4:09°21.80 North, 79 3070 East
Position S:09 13 North, 79 32 East
Position 6:09 06 North, 79 32 East
Article 2
The co-ordinates of the positions specified in Article I are geographical co-ordinates and the straight lines connecting
them are indicated in the chart annexed hereto which has been signed by the surveyors authorized by the two Governments,
respectively
Article 3
The actual location of the aforementioned positions at sea and on the sea-bed shall be determined by a method to be
mutually agreed upon by the surveyors authorized for the purpose by the two Governments, respectively
Article 4
Each country shall have sovereignty and exclusive jurisdiction and control over the waters, the islands, the continental
shelf and the subsoil thereof, falling on its own side of the aforesaid boundary
Article 5
Subject to the foregoing. Indian fishermen and pilgrims will enjoy access to visit Kachchativu as hitherto, and will not
be required by Sri Lanka to obtain travel documents or visas for these purposes.
Article 6
The vessels of Sri Lanka and India will enjoy in each other's waters such rights as they have traditionally enjoyed
therein
Article 7
If any single geological petroleum or natural gas structure or field, or any single geological structure or field of any
other mineral deposit, including sand or gravel, extends across the boundary referred to in Article 1 and the part of such structure
or field which is situated on one side of the boundary is exploited, in whole or in part from the other side of the boundary, the
two countries shall seek to reach agreement as to the manner in which the structure or field shall be most effectively exploited
and the manner in which the proceeds deriving therefrom shall be apportioned
Article 8
This Agreement shall be subject to ratification. It shall enter into force on the date of exchange of the instruments of
ratification which will take place as soon as possible.
Colombo, 26th June, 1974.
New Delhi, 28 June, 1974
DOALOS/OLA-UNITED NATIONS

page 21 Delimitation Treaties Infobase accessed on 18/03/2002

Friday, 29 March 2019

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் திமுக  கடந்த 2006-11 கால ஆட்சியின் செய்த சாதனைகள்


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் திமுக  கடந்த 2006-11 கால ஆட்சியின் செய்த சாதனைகள்
1)தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
பிப்ரவரி 2006 ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 13.5.2006 வரையில் ரூ.3 கோடியாக இருந்த செலவினம், தற்போது ரூ.5440.98 கோடிக்கு மேலாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 66.29 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு, 76,312 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தியதில் சிறந்த 22 மாவட்டங்களில் கடலூர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று புது டில்லியில் 2007 08 ம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் போன்ற 26 மாவட்டங்கள் 2008 09 ம் ஆண்டிற்கான விருதினையும், 2009 2010 ம் ஆண்டிற்கான தேசிய விருதினை திருவண்ணாமலை மாவட்டமும் பெற்றுள்ளது.
2)
மீண்டும் சமத்துவபுரம்
2006 ல் சமத்துவபுரம் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி, மொத்தம் 240 சமத்துவபுரங்களில் இதுவரை 210 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன; எஞ்சிய சமத்துவபுரங்களின் கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
3) நமக்கு நாமே திட்டம்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2007 2008 முதல் ரூ.106.42 கோடி மக்கள் பங்களிப்புடன் ரூ.239.51 கோடி மதிப்பீட்டில் 8,132 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு; 7,254 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.3,854.29 கோடி மதிப்பீட்டில் 33,066 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் எடுக்கப்பட்டு; 29,235 கிலோ மீட்டர் நீளச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
4)
ஊரக கட்டமைப்புத் திட்டம்
2008 2009 ம் ஆண்டு, "ஊரக கட்டமைப்புத் திட்டம்'' என்ற புதிய திட்டம் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் ரூ.380 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010 2011 ம் ஆண்டில் ரூ.380 கோடி நிதி ஒதுக்கீட்டில் 47,478 பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.
5) சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு திட்டம்
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.1 கோடியாக இருந்தது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2010 2011 ம் ஆண்டில் ரூ.1.75 கோடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 2006க்குப் பின் ரூ.1727.25 கோடி செலவில் 1,59,583 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,50,263 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
6) பாராளுமன்ற தொ.மே.திட்டம்
(MPLAD)
பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டதின்கீழ் ரூ.570 கோடி மதிப்பீட்டில் 18,500 பணிகள் மேற்கொள்ளப்பட்டு; 17,055 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
முழு சுகாதார இயக்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டமைக்காக 2006 2007 முதல் 2213 கிராம ஊராட்சிகளில் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளைப் பெற்றன. இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிச் சாதனை படைத்ததில் 2007 2008 ல் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றது.
7) மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடம் நிரப்பல்
உதவி இயக்குநர் முதல் மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடம் வரை இருந்த 17,819 காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு; 17,549 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 காலிப் பணி இடங்களை விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் தொழில் நுட்பப் பிரிவை வலுவூட்டும் வகையில் மொத்தம் 3380 அலுவலர்கள் தொழில்நுட்பப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 12,653 மக்கள் நலப் பணியாளர்களும், 1.6.2006 முதல் மீண்டும் இந்த அரசினால் நியமனம் செய்யப்பட்டனர்.
8) மகளிர் சுய உதவிக்குழுவினர்
மேம்பாடும் வளர்ச்சியும்
மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 31.12.2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 4,88,970 சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.2658 கோடி ஆகும். இவற்றுள் 26,94,682 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 1,75,493 புதிய சுயஉதவிக் குழுக்கள் ஜுலை 2006 க்குப்பின் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 43,304 சுயஉதவிக் குழுக்கள் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 23,886 சுயஉதவிக் குழுக்கள்; குழுக்கள் அதிகம் அமைக்கப்படாத கிராம ஊராட்சிகளிலும், 41,373 சுயஉதவிக் குழுக்கள் நகர்ப்புறத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
2006 07 ம் ஆண்டு முதல், நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளில் 96,699 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.96.70 கோடி சுழல் நிதி மானியமாக வழங்கப்பட்டது. 2008 09 ம் ஆண்டில் சுழல் நிதி மானியம் பெறாத, அனைத்து 1,50,000 சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிக் கடனுடன் ரூ.150 கோடி சுழல்நிதி வழங்கப்பட்டது. 2009 10ம் ஆண்டில் 70,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.70 கோடி சுழல் நிதி மானியமாக வழங்க அனுமதி தந்து, 69,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.
2010 11 ம் ஆண்டில் 50,000 ஊரக சுய உதவிக் குழுக்களுக்கும் 20,000 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கும், சுழல்நிதி மானியம் வழங்க ரூ.70 கோடி அனுமதிக்கப்பட்டு; இதுவரை, 63,967 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடனாக ஜுன் 2006 க்குப் பின் ரூ.7756.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ரூ.15.33 கோடி செலவில் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதைப் போல ஊரகப் பகுதியில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று என்ற விகிதத்தில் 86 கிராம விற்பனை மையங்கள் ரூ. 12.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.
மாநில அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாகவும், சிறந்த சுயஉதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது .

By கலைஞர்

Thursday, 21 March 2019

மின் நிலைமை சீரானதற்கு திமுக ஆட்சியே காரணம்: பொய் பரப்பிய ஜெயலலிதாவிற்கு கலைஞர் தந்த பதில்


மின் நிலைமை சீரானதற்கு திமுக ஆட்சியே காரணம்: பொய் பரப்பிய ஜெயலலிதாவிற்கு கலைஞர் தந்த பதில்
இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "25–10–2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுவுடைமை கட்சிகள் எழுப்பிய தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு; முதல்வர் ஜெயலலிதா நீண்ட விளக்கம் அளித்துள்ளார். 
முதல்வர் மின் தட்டுப்பாடு குறித்து நீண்ட விளக்கம் அளித்தது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் "முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது" என்று நம்மை குற்றம் சாட்டிய காரணத்தால்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டியவனாக நான் இருக்கிறேன். 
முதல்வர் ஜெயலலிதா 2–11–2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின்உற்பத்தி துவக்கப் படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்) 25–6–2008 அன்றும்; வல்லூர் 1–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 2–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 3–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வடசென்னை (1–ம் அலகு) (600 மெகாவாட்) 18–2–2008 அன்றும், வடசென்னை (2–ம் அலகு) (600 மெகாவாட்) 18–2–2008 அன்றும்; தூத்துக்குடி (இரண்டு அலகுகள்–1000 மெகாவாட்) 28–1–2009 அன்றும், ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு.கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான். 
முதல்வர் ஜெயலலிதா நேற்று படித்த அறிக்கையில், தி.மு.க ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் தீட்டவில்லை என்று கூறிவிட்டு, அவரே "600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப்பணிகளை பொறுத்தவரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது" என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே மேட்டூர் திட்டம் கழக ஆட்சியில் 55 விழுக்காடு முடிக்கப்பட்டதை அவரே ஒப்புக் கொள்வதுதானே? ஆனால் தி.மு.க. ஐந்தாண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது என்று ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். 
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பேரவையில் வைத்த மானிய கோரிக்கையில், மேட்டூர் திட்டம் 2012–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்கள். அவர்களே தெரிவித்தவாறு 2012–ல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் மேலும் ஓராண்டு கால தாமதம் ஆனதற்கு எந்த ஆட்சி காரணம்? 
அதைப்போலவேதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டங்கள் பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அந்த திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் அவருடைய ஆட்சியில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாகத்தான் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். 
தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டங்களை தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால்தானே இவரால் அந்த திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது. 
வல்லூர் மின்திட்டப்பணிகள் துவக்கப்பட்ட நாள் ஜெயலலிதா ஆட்சியிலே அல்ல. 13–8–2007 அன்று கழக ஆட்சியிலேதான் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ஷிண்டேவால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டம் தொடங்கிய போதே தோராயமாக மின்உற்பத்தி துவக்கம் முதல் அலகில் டிசம்பர் 2012 என்றும், இரண்டாவது அலகில் மார்ச் 2013 என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக ஜெயலலிதா கூறுகிறார். 
மற்ற திட்டங்கள் எல்லாம் கழக ஆட்சியில் இத்தனை சதவிகிதம் நடந்ததாக கூறிய ஜெயலலிதா, இதற்கு மட்டும் ஏன் எத்தனை சதவிகித பணிகள் நடைபெற்றன என்று கூறவில்லை? மேலும் அந்த திட்டத்தின் மூலமாக மின்உற்பத்தி 29–11–2012 அன்றே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இதற்கு காரணம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். 
"மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது" என்று ஜெயலலிதா நேற்று பேசும்போது தெரிவித்திருக்கிறார். இந்த 1700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலமாக கிடைத்திருப்பதுதான். இதனை யாராவது மறுக்க முடியுமா? 
"தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 1,000 மெகாவாட் அனல் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன" என்று ஜெயலலிதா நேற்று கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெறும் இந்த திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்ட நாள் 28–1–2009. அதுவும் தி.மு.கழக ஆட்சியிலேதான். 
அ.தி.மு.க. ஆட்சியிலே மின்சாரத்தைப்பெற எதுவுமே செய்யவில்லையா என்று யாராவது கேட்பீர்களேயானால், நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. செய்திருக்கிறார்கள். என்னவென்றால், பிற மாநிலங்களிலே இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் கூடுதல் மின்சாரத்தை இவ்வாறு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
ஜெயலலிதா நேற்று பேசும்போது, 2001–2006–ல் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் 2001–ம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியில் மின்உற்பத்திக்காக போடப்பட்ட திட்டங்கள்தானே?. 
தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருப்பதை ஆதாரமாக காட்டி விளக்கியிருக்கிறேன். தற்போது நான் கேட்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி 2011–ல் தொடங்கி 2½ ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின்உற்பத்தி திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட்டுள்ளது? 2011–2012–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், வடசென்னை நிலை 3, வடசென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின்நிலைய திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012–ம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா? 
உடன்குடி விரிவாக்கம், உப்பூர் அனல் மின்நிலையம், எண்ணூர் அனல் மின்நிலையம்–மாற்று, தூத்துக்குடி அனல் மின்நிலையம்–நிலை 4 ஆகிய 8,000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களை 22,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்களே, இதில் ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கிறதா? சொல்லத்தயாரா? 
"2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக்காலத்தில் கூடுதல் மின் நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டது" என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2001–2006–ம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.700 கோடிதான். ஆனால் 2006–2011–ம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக தி.மு.க. ஆட்சியில் செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? 11,700 கோடி ரூபாய். 
5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் ஒரு திட்டத்தை அறிவித்ததாக முதல்வர் நேற்று பேசியிருக்கிறார். இந்த திட்டத்தையும் ஜெயலலிதா எப்போது அறிவித்தார் என்று நான் கூறுகிறேன். 25–4–2013 அன்று ஜெயலலிதா படித்த 110–வது விதியின் கீழான அறிக்கையிலேதான் இதை குறிப்பிட்டிருந்தார். 
அறிவித்து ஆறு மாதங்களுக்குப்பிறகு நேற்றைய தினம் இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக பேரவையில் அறிவித்திருக்கிறார் என்றால் எவ்வளவு வேகமாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்பதை நான் விளக்க வேண்டுமா? 
குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்காதது ஏன்..? 
மின் உற்பத்தி பற்றி பேசிய முதல்வர், காற்றாலை மின்உற்பத்தி பற்றி வாயே திறக்கவில்லை. 2011-ம் ஆண்டு கொள்கை விளக்கக்குறிப்பில், தனியார் மூலம் 10,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். தற்போது காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்க மறுப்பதாக சொல்லப்படுகிறதே அது உண்மையா, இல்லையா? 

தற்போது மின்தேவை அதிகம் இருப்பதால் காற்றாலை மூலம் அதிகளவு தனியாரிடம் வாங்கினால், மின்வெட்டை தாராளமாகக் குறைக்கலாம். குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் அதிக விலை கொடுத்து வேறு மாநிலங்களில் இருந்து அரசு மின்சாரத்தை வாங்க முயற்சிக்கிறது என்ற தகவல் சரியா? தவறா?" என்று கலைஞர் வினவியுள்ளார்.

Wednesday, 20 March 2019

இந்தக் கலைஞர்கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

இந்தக் கலைஞர்கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

1) ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.

2) முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

3)
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.

4)
டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

5)
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.

6)
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.

7)
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.

8)
340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.

9)
கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.

10)
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.

11)
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.

12)
சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.

13)
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.

14)
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.

15)
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.

16)
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.

17)
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.

18)
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.

19)
அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.

20)
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.

21)
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.

22)
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது. 96 – 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.

23)
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.

24)
ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.
ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.

25)
ஹூண்டாய் வந்தது.

மிட்சுபிசி வந்தது.

ஃபோர்டு வந்தது.

சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.

இந்தக் கலைஞர் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா?

யாராவது அவரிடம் கேட்டார்களா?

 அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?

இவை எல்லாமே 18 ஆண்டுகளுக்கு முன்னால்…!

நன்றி :-பத்திரிக்கையாளர் திருமாவேலன்

A.Parimalam

Tuesday, 19 March 2019

ஜெயலலிதா மகளிர் என்பதால் ஓட்டுப்போட்ட மகளிரே உங்கள் வாழ்க்கை வளம்பெற கலைஞர் செய்த 25 திட்டங்கள் இங்கே பட்டியலாக உள்ளது.

ஜெயலலிதா மகளிர் என்பதால் ஓட்டுப்போட்ட மகளிரே

உங்கள் வாழ்க்கை வளம்பெற கலைஞர் செய்த 25 திட்டங்கள் இங்கே பட்டியலாக உள்ளது.

இதுபோல ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா
பெண்களே?

திமுக ஆட்சியால்தான் பெண்கள் முன்னேற்றம் கண்டனர்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்

1) 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி

2)
பெண்கள் 10ஆம் வகுப்பேனும் படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும் எனும் உணர்வோடு 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது கழக ஆட்சி.

 ஆனால், 2001இல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த இத்திட்டத்தின் நிதி உதவியை 2006இல் பொறுப்பேற்ற கழக அரசு 15,000 ரூபாய் என்றும், 2008இல் 20,000 ரூபாய் என்றும், 2010இல் 25,000 என்றும் படிப்படியாக உயர்த்தி கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற வழிவகுத்தது கழக ஆட்சி

3)
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டத்தை 1975இல் தொடங்கி, இளம் விதவை மகளிரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது கழக ஆட்சி.

4)அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

5)அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்


6) ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம்


 திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவியையும் படிப்படியாக 25,000 ரூபாய் வரை உயர்த்தி, இலட்சக்கணக்கான ஏழை மகளிர் நலம்பெற வழிவகுத்தது கழக ஆட்சி

7)
ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி


8) கிராமப்புற மகளிர்க்கு மகப்பேறு உதவிகள் எந்த நேரமும் கிடைத்திடும் வண்ணம்
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேர மருத்துவச் சேவையை உருவாக்கியது கழக ஆட்சி


9)
கிராமப்புற ஏழை மகளிர் கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக 1969ஆம் ஆண்டில், பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலேயே அரசு சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றைத் தொடங்கியது கழக ஆட்சி

10)
ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் பயன்களை 2008 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான ஏழை மகளிர் உயர்கல்வி பெற ஆவன செய்தது கழக ஆட்சி

11)
பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு நிலையான களம் அமைக்கும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் 1973இல் இந்தியாவிலேயே முதன்முறையாகக் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்து; இன்று காவல்துறையில் உயர் பதவிகள் பெற்றுப் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் பணிபுரிவதற்கு வித்திட்டது கழக ஆட்சி.


12)
ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது கழக ஆட்சி! விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட 1998இல் ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி


13)
தருமபுரியில் 1989ஆம் ஆண்டில் மகளிர் திட்டத்தைத் தொடங்கி அதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் தோன்றிடவும், அவற்றின் வாயிலாகக் கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்திடவும் வழிவகுத்தது கழக ஆட்சி


14)
1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்படப் பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை மேம்படுத்தியது கழக ஆட்சி


15)
அரசுத் துறைகளில் பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடஒதுக்கீட்டினை 1990ஆம் ஆண்டில் வழங்கிட சட்டம் கண்டு; இன்று தமிழக அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பெருவாரியாகப் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியது கழக ஆட்சி


16)
பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என 1997இல் ஆணையிட்டது கழக ஆட்சி


17)
சமூக நிலைகளில் பெண்களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 1990இல் பெண்களுக்குப் பரம்பரைத் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி


18)
அரசின் தொழில்மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 விழுக்காடு மனைகளை ஒதுக்கிட வகை செய்து, பெண்கள் தொழில்முனைவோராகிட ஊக்கம் தந்தது கழக ஆட்சி


19)
திருக்கோவில்களின் அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் கண்டது கழக ஆட்சி

20)
1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமையால் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிக்கட்டவும், அவர்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி

21)
50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது கழக ஆட்சி.


22)
 இந்தியாவிலேயே முதல்முறையாக 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து; கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று ஜனநாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது கழக ஆட்சி

23)
இவையல்லாமல் ஏழைத் தாய்மார்களின் இதயம் குளிர ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியது கழக ஆட்சி

24)
ஏழைத் தாய்மார்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது கழக ஆட்சி


25)
ஏழைத் தாய்மார்களின் உடல்நலம் காத்திட எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கியது கழக ஆட்சி


இப்படிப் பல்வேறு வகையிலும் மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு; அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை கழக ஆட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்டு

இப்படிக்கு
கலைஞர்

திமுக தேர்தல் அறிக்கை 2019 முழுவிபரம் 43 அம்சங்கள்

திமுக தேர்தல் அறிக்கை 2019
முழுவிபரம் 43 அம்சங்கள்
1.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
2.  மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
3. தனிநபர் வருமானம் ரூ. 86,689 இருந்து 1,50, 000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
4. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
5. மத்திய அரசின் மொத்தவரியில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கீடு செய்யப்படும்.
6. மத்திய நிதி குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்படும்.
7. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயக்கப்படும்.
8. பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துப்போன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லூநர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்.
9.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
10. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
11. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்.
12. சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சமாக 28 சதவிகிதம் வரை இருப்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.
13. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
14. பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேர் சாலைப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
15. சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
16. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் - அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
17. முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிற்த்தப்படும்.
18. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படும்.
19. 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
20. மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
21. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
22. 10-ம் வகுப்பு வரை படித்த 50,000  கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளராக பணி அமர்த்தப்படுவார்கள்.
23. 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பிய அகதிகள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
24. கிராமபுறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
25. உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.
26. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.
27. சென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
28. கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில்0.5 விழுக்காடு நிதி ஒதுக்கப்படும். மேலும் புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
29. கடலோர சமுதாய மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
30. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
31. சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அனுப்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.
32. காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும்.
33. நீர்வளத்தையும் நிலத்தையும் பாதிக்கும் மீத்தேன் நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.
34. விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
35. வேலையிலா திண்டாட்டத்தை போக்க, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
36. கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
37. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
38.  அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்.
39. பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
40. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
41. ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.
42. தற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் மாற்று திறனாளிகள் பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலூமாக வருமான வரியில் இருந்து விலக்களிக்கப்படும்.

43. தனியார் நிறுவனக்களில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Monday, 18 March 2019

TTV தினகரன் பாஜக எதிர்ப்பாளரா😜 !!!

TTV தினகரன் பாஜக எதிர்ப்பாளரா😜 !!!

அப்படி சொல்லிக் கொண்டு அவரை ஆதரிக்கும் முஸ்ஸீம் நண்பர்களின் கவனத்திற்கு சில விசயங்கள்

(1)மோடி கேட்காமலேயே மோடியின் காலில் விழுந்து ஆதரவு அளித்தவர் தினகரன்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு

https://tamil.indianexpress.com/tamilnadu/presidential-election-ttv-dinakaran-expressed-his-support-to-bjp/

(2)என்ன இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர், அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடாது: டிடிவி தினகரன்

https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/dinakaran-party-not-participated-in-black-flag-protest-against-pm-118041200004_1.html

(3) இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின்னர் நிருபர்கள் கேட்ட போதுகூட, மத்திய அரசுக்கு எதிராக பேசவில்லை.

‘மத்திய அரசு எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுப்பதாக தெரிந்தால் சொல்கிறேன்’ என்று வழுக்கலாக பதில் சொன்னார்.

(4) மதுரையில் முதல் பொதுக்கூட்டம் பேச இருந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர். இதழில் ‘மோடியா லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை ஞாபகப்படுத்தி, பாஜக எப்படியெல்லாம் அதிமுகவை உடைக்கிறது என்று கடுமையான விமர்சனங்களோடு கவிதை எழுந்தியிருந்தார், அந்த நாளிதழின் ஆசிரியர், அழகுராஜ் என்ற சித்திரகுப்தன்.

தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த கவிதை பெற்றுத் தந்தது. ஆனால் டிடிவி தினகரன் வேறு மாதிரி பார்த்தார்.

 ‘நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சில கருப்பு ஆடுகள் புகுந்து விட்டது. கவிதை எழுதிய சித்திரகுப்தன் பணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்’ என்று பேட்டியளித்தார்.

 மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

(5) நீட் தேர்வு போன்ற முக்கிய பிரச்னைகளின் போது கூட அவர், மத்திய அரசுக்கு எதிராக மென்மையான போக்கையே பயன்படுத்தி வந்தார்.

(6) பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாண்டு நினைவு நாளின் போது கூட, ‘திட்டம் நல்ல எண்ணத்தோடுதான் கொண்டு வரப்பட்டது. ஆனால் செயல்படுத்திய விதம்தான் சரியில்லை’ என்று மழுப்பலாக பதில் சொன்னார்.

எதிர்கட்சிகள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய போதும், டிடிவி தினகரன் அதை செய்யவில்லை.

(7) இப்போது கூட அதிமுகவில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக காரணம் இல்லை என்கிறார்.

இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்.

2016 தேர்தலின் போது பிடிபட்ட  மூன்று கண்டைனர்களில் என்ன இருந்தது என்பது மோடிக்கு நன்கு தெரியும்

சசி- தினகரன் கூட்டத்தின் மொத்த ஊழல் ஜாதகமும் மத்திய அரசிடம் உள்ளது.

அதனால்தான் தினகரன் பிஜேபியுடன் நட்பை நாடினார். மோடி மட்டும் லேசாக தலையாட்டியிருந்தால் சசி- தினகரன் கூட்டம் மோடியிடம் எப்போதோ சரணாகதி அடைந்திருந்திருப்பார்கள்.

அவ்வளவு பெரிய வீராதி வீரர்கள்
இந்த சசி- தினகரன் கூட்டம்