Wednesday, 28 June 2017

இந்தி எதிர்ப்பு ஏன்?


திமுக இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு திராவிடம் ஆங்கிலத்தை திணித்து விட்டதா? இல்லை ...இந்தி படிப்பதை திராவிடம் தடுத்துவிட்டதா? ***

தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பம்
இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டது,

இன்றும் இந்தி விருப்பத்தின் பேரில் தமிழர்களால் கற்கப்பட்டுதான் வருகிறது. அதை எந்த திராவிடமும் எதிர்க்கவில்லை.

ஏற்கனவே தமிழில் வடமொழி சொற்களும் ஆங்கிலமும் கலந்து மக்கள் தமிழை வித்தியாசமாக பேசிவரும் நிலையில் இந்தியும் கட்டாயமாக்கப்பட்டால் தமிழ் தன் உருவத்தை இழந்துவிடும்.
காலப்போக்கில் மறைந்தேவிடும்

தமிழ் மொழி மற்றும் இனத்தின் மேல் உள்ள அக்கறையால் திராவிடம் இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறதே தவிர
இந்தியை அல்ல.

அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்த்தோ அல்லது
இட ஒதுக்கீட்டை எதிர்த்தோ போராட்டம் வந்துள்ளதா?

இன்று தமிழக மக்கள் தங்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து தன்னிச்சையாக போராடுகிறார்கள்
 என்றால் அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு வரக்காரணம் திராவிடம்தானே. சினிமாவில் கூட திராவிட முகம்தானே
ஜெயிக்கிறது.

67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். இதை திராவிடம்தானே செய்தது.

நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.

நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த #இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது.

ஒரு சாதாரண நபர் கூட அரசியலுக்கு வரலாம் முதலமைச்சர் ஆகலாம் என்பதும் திராவிடத்தால்தானே சாதிக்க முடிந்தது.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் பெரியாரை போன்ற தலைவர்கள் இல்லை. பல்வேறு மாநிலங்களில் அநீதிக்கு எதிராக தலைவர்கள் தோன்றியிருந்தாலும் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஜெயலலிதாவால் காஞ்சி சங்கராச்சாரியாரை பொம்பள பொறுக்கியாக உருவகம் செய்ய முடிந்ததே, அவரை கைதும் செய்து அடைக்க முடிந்ததே , இதை வடமாநிலங்களில் செய்திருந்தால் ஜெ நிலைமை என்ன ஆகி இருக்கும்?

(பதிவின் சில விபரங்கள் எழுத்தாளர் திரு. A.S.Panneerselvan கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை)











திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.? Written by Arivalagan kaivalyam

திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.?  Written by Arivalagan kaivalyam


பாலூற்றும் சினிமா ரசிகர்களைப் போலத் தான் நடந்து கொள்கிறீர்கள் என மனைவியில் இருந்து துவங்கி, நண்பர்கள் பலர் இப்போது இப்படித்தான் சொல்கிறார்கள்

#திமுக_ல_இருக்குறதும் கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறதும் பாலூற்றித் தேங்காய் உடைக்கும் ரசிக மனநிலை இல்லீங்க, அதுக்கு #வரலாற்றுப்_பூர்வமான_காரணங்கள் பல #இருக்கு.
#அது_ஒரு_வகையான_நன்றிக்_கடனுங்கோ சாமிகளா, ஒரு புள்ளிவிவரத்தோட அதை எல்லாம் உங்களுக்குச் சொன்னால் தான் புரியும்.

1) ஆடு மாடு மேச்சுகிட்டு, விவசாயத்தைத் தவிர எதுவுமே தெரியாம அடிமை வாழ்க்கை வாழ்ந்த எங்க ஊரோட  வரலாற்றில் "பெரியார்" என்கிற மகத்தான மனிதரின் வரவுக்குப் பின்னால தாங்க படிப்போட வாசனையே வந்தது, உள்ளூர்ல இருக்குற சாதிஅரசியல் கூடத் தெரியாம இருந்த எங்க குடிசைல மார்க்சும், லெனினும், டால்ஸ்ட்டாயும், சோவியத் யூனியனும், வெள்ளை வேட்டியும், வெளி உலகமும் வந்து சேந்ததே சுயமரியாதை_இயக்கம் தோன்றிய 1925 ஆம் ஆண்டுக்குப் பின்னால தாங்க.

2) ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வி கற்பதே குற்றம்னு சொன்ன மனுநீதியின் கவசங்களை உடைத்து அப்பாவ ஊரின் முதல் முதுகலைப் பட்டதாரியா மாத்துனது இதே அண்ணாவின் தலைமயிலான திராவிட_முன்னேற்ற கழகம் கொடையளித்த இடஒதுக்கீடும், சட்டத் திருத்தங்களும் தாங்க ராசாக்களா.

3) சில நூறு ஆண்டுகளா ஐயரும், ஐயங்காரும், செட்டியாரும், முதலியாரும் இன்னும் பல ஐயாமாரும் மட்டுமே அதிகாரிங்களா இருந்த வருவாய்த் துறைல அப்பாவ சார் பதிவாளரா உக்கார வச்சு அழகு பாத்தது இதே கலைஞரோட திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஒன்றியச் செயலாளரும் தாங்க ராசா.

4) பொருளாதாரச் செழுமையையும், போட்டியிடுகிற மனதையும், நமனை அஞ்சோம் என்கிற துணிவையும் அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த வேலையும், அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த அரசியல் அறிவும் தானேங்க ஐயா எங்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

5) அதுமட்டுமில்லைங்கையா, அரசியல்ங்குறது வெறும் அதிகாரச் சண்டையோ, இல்லை, சுரண்டலோ இல்ல, அது ஒரு சக மனிதனின் வலியைப் புரிந்து கொள்கிற வாழ்க்கை முறைன்னு ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை ஊர் ஊராக புகைப்படக் கண்காட்சி வச்சு அறிமுகம் பண்ணினதும், #இலக்கியமும்_வரலாறும்_இசையும் இன்னும் எல்லாமும் கலந்தது தான் #அரசியல் என்கிற வாழ்க்கையோடு அற்புதமான பாடத்தையும் எங்களுக்குச் #சொல்லிக்_கொடுத்தது இப்பவும் "ஊழல்வாதி", ஊழல்வாதி என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி பினாத்துரீங்களே அதே தலைவர் #கலைஞர் தலைமையிலான இந்த #சமூகப்_பேரியக்கம் தான்லே அப்பரண்டிசுகளா.

6) அதுமட்டுமில்ல, தி.மு.க ல இருக்குறதும், கலைஞரைப் பின்பற்றுவதும் என்னைப் பொருத்தவரை அறிவியல் பூர்வமான வாழ்க்கை முறை, தி.மு.க ன்னு சொன்ன உடனேயே #சமூகநீதிக்கு எதிரான எவனும் உடனே எதிர்ப்பான், முக்கியமா பார்ப்பனன் பழிப்பான், கரிச்சுக் கொட்டுவான், குய்யோ, முறையோன்னு கூத்தாடுவான், ஊழல், ஹிந்தி, மொழித் தீவிரவாதம், இட ஒதுக்கீடு அது இதுன்னு நம்மளோட எப்பப் பாத்தாலும் சண்டைக்கு வருவான், அவனோட முட்டி மோதி தில்லா நிக்கும் போது ஒரு தன்னம்பிக்கையும், மிதப்பான அறிவாற்றலும் கூடவே வரும் பாருங்க, அந்த அனுபவத்துக்காகவே கலைஞரை இன்னும் பல தலைமுறைக்கு வழிபடலாம்.

7) அரசியல் மட்டுமில்லை வாழ்க்கை ஒரு தலைவனுக்கு, மொழிய சும்மா வாய் கிழியகெட்ட வார்த்தை போட்டு மேடைல பேசினாப் போதாது, தூசி தட்டி, எழுது உன் இலக்கியத்தை, படி உன் புறநானூற்றை, கற்றுக் கொள் உன் சங்கத்தமிழை என்று நெஞ்சு நிமிர்த்தி எம் உயிருக்கும் மேலான மொழியை எங்கள் கைகளில் தவழ விட்டார் பாருங்க, அதுக்காக நாங்க எங்க போனாலும் அவரைத் தலையில் வச்சுக் கொண்டாடுவோம் அப்பாடக்கர்களா, திரைப்படம், இசை, கவிதை, கதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று அறுபதாண்டு காலம் தொடர்ந்து ஒரு மொழிக்காக உழைக்கிற ஒரு மனிதனை மதிக்கக் கூட வேண்டாம்ல சுய அறிவு இல்லாத குருட்டுப் பசங்களா, வந்தேறி வடுகன்னு வாய் கூசாமச் சொல்றீங்களே, அதுக்காகவாவது அவரை நாங்க வழிபடுவோம்லே.

8) ஒருபக்கம் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கும் பார்ப்பனீய ஊடகங்கள், இப்போது எதிர்க்கும் பார்ப்பன அடிவருடி ஊடகங்கள், இன்னொரு பக்கம் எங்கே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று நம்ம சொகுசு வாழ்க்கைலயும் கை வச்சுருவரோன்னு பயந்து மக்களுக்குக் கிடைத்த நன்மையின் அலைக்கற்றை மானியத்தை 1,76,000 கோடி ஊழல், அது இதுன்னு அடிச்சு விடுற வடநாட்டு முதலாளிகளும், சுப்ரமணிய சாமிகளும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன லாபி, ஊழல் செய்வதற்காகவே ஆட்சி நடத்தும் ஜெயா, அரசியல் அரிச்சுவடியை அவரிடமே படித்து விட்டு இப்போது மக்கள் நலம் அது இதுன்னு அல்டாப் காட்டும் வை.கோ வைப் போன்ற துரோகிகள் என்று பல எதிர்ப்புக்கு இடையேயும் நின்னு விளையாடுற கிழட்டுச் சிங்கத்துகிட்ட தான்லே அரசியல் படிக்க முடியும், ஆத்தாகிட்டப் போயி அடிமைக் கூனா வாங்க முடியும்.

9) வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிற நக்கலும், நையாண்டியுமாக, நடைமுறைல சாதியையும் மத வேற்றுமைகளையும் கடந்து எல்லா மனிதர்களோடும் தலை நிமிர்ந்து வாழ்க்கையின் ஊடாக ஒரு அழகான பயணம் லேதி.மு.க காரனா இருப்பதும், கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும்......

10) எல்லாத்துக்கும் மேலே சொந்த சாதிக் கட்சியை மறந்து, மதங்களைக் கடந்து, மதவாத இந்துத்துவப் பார்ப்பணீயத்தை எதிர்த்து, எளிமையான உழைக்கும் மக்களின் பின்னே நிற்பதும், எனது இஸ்லாமிய சகோதரனின் வாழ்வுக்கு அரணாக எப்போதும் நின்று நான் ஒரு தி.மு.க  காரன் என்று சொல்வதும், கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒரு நேர்மையான நன்றிக் கடன் கொண்ட மானுட அறிவியல் என்னைப் பொருத்தவரை.

# # # ஜெயிக்கிறமோ, தோக்குறோமோ, அதெல்லாம் செக்கன்டரி பாஸ், ஓங்கி அடிச்சா சங்கத்தமிழ், ஒய்யாரமா உக்காந்தா புறநானூற்று வீரம், பார்லிமென்ட் போனா ஸ்பெக்ட்ரம் பாமரன் கைக்குப் போகும், அம்பானிக்கும், டாட்டாவுக்கும் போகாது, மொழியையும், இலக்கியத்தையும், சமூக அறிவியலையும், நக்கலையும், நையாண்டியையும் ஒரு அரசியல் கட்சில பாத்துருக்கியா ஒலகத்துல எங்கேயாச்சும், வந்து பார், வந்து பார்

Arivalagan kaivalyam. அவர்களால் எழுதப்பட்ட பதிவு

உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா? மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **


உழைப்பால் உயர்ந்த கலைஞர் ஊழல்வாதியா?
மாறன் சொத்துக்களை கலைஞர் பெயரில் காண்பிக்கும் கேணயர்கள் **

75 சினிமா படங்களுக்கு கதை வசனம் எழுதியும் 21 படங்களுக்கு பாடல்கள் எழுதியும்
29 சினிமா படங்களை சொந்தமாக தயாரித்தும் வீடு கார் வசதிகளுடன் வாழ்ந்த கலைஞரை பார்த்து அசிங்கம் பிடித்த அற்பர்கள் கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது கேட்கிறார்கள்.

தலைவர் கலைஞர் தனது 24 வயதிலேயே மலைக்கள்ளன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். 28 வயதில் 1952 - ல் பாரதிர்ந்த "பராசக்தி" மூலம் பட முதலாளிகளின் பார்வையை தன்பக்கம் ஈர்த்தவர். இதற்கும் முன்பே, எத்தனைப் படங்கள். எம்.ஜி.ஆரை ஹீரோவாக்க மறுத்த இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கனோடு, கலைஞர் வாதம்புரிந்து வென்றதை எத்தனைபேர் அறிவார்? 1957 - ல் தனது 33 - வது வயதில்தானே எம்.எல்.ஏ வானார். அதற்கும் முன்பே படவுலக முதலாளிகளின் வசூல்பட வசனகர்த்தாவாக வலம் வந்தவர் கலைஞர்!

புதையல், பராசக்தி படங்களுக்கு முன்பாகவே ‘மணமகள்’ படத்தின் திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞருக்கு படத்தயாரிப்பாளரான கலைவாணர் கார் வாங்கித் தந்ததுடன், அப்போது பெட்ரோல் தட்டுப்பாடு இருந்த காரணத்தால் அதற்குரிய டோக்கன்களையும் கொடுத்துவிட்டார். எழுத்தின் மூலமாக கார் சம்பாதித்த முதல் தமிழ்ப் படைப்பாளி அநேகமாக கலைஞராகத்தான் இருக்கும்.

கலைஞர் ஆட்சி 1969 -74 இல் ஊழல் நடந்ததாக எம்ஜிஆர் புகார் தந்த அடிப்படையில் சர்க்காரியா கமிசனை அமைத்தார் இந்திரா.

எம்ஜிஆர் 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety)  என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது  சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு அறிவுரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள். 
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்.

1974 க்கு பின் 1989-91மற்றும் 1996-2001 திமுக ஆட்சியில் திமுக மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது.

2006-11 திமுக ஆட்சியில் 2 G விவகாரத்தை ஊதி பெருக்கி ஊழல் என்றார்கள். ஆனால் ராசா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இது வரை நிருபிக்கப்படவேயில்லை. அவர் வீட்டில் இருந்து வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் எதுவுமே கைப்பற்றப்படவில்லை. விரைவில் 2G தீர்ப்பு வெளி வந்து உண்மையை உணர்த்தும்.

மாறன் குடும்பத்தினர் சொத்துக்களை கலைஞர் பெயருக்கு எழுதி வைத்து கலைஞர் சொத்துக்கள் என்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

அதிமுகவின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் உண்மை நிலையும்***


அதிமுகவின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் உண்மை நிலையும்***
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்!

2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக் கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு
2.4 சதவீதம் மட்டுமே.

2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செய லாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான்.

2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக் கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான்.

2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமேநிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.

கலைஞரும் மதுவிலக்கும்....உண்மையில் நடந்தது என்ன?

கலைஞர் ஆட்சியில் 1971 முதல் 1974 வரை மதுவிலக்கு நீக்கப்பட்டது.அச்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்தது. அதிகப்படியானவர்கள் கள்ள சாராயம் அருந்தி இறப்பதை தவிர்க்கவே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 
ஆனால் கலைஞர் அவர் ஆட்சியிலேயே 1974 இல் மீண்டும் மதுவிலக்கை அமல் படுத்திவிட்டார்.

ஆனால் சுமார் 9 ஆண்டுகள் கழித்து 1983 இல் எம்ஜி ஆர் மதுவிலக்கை ரத்து செய்ததுடன் 
TASMAC மற்றும் TASCO நிறுவனங்களை ஆரம்பித்தார். அதுவரை அரசுதான் உற்பத்தி மற்றும் விற்பனையை கவனித்து வந்தது. ஆனால் 1987 இல் தான் தனியார் நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டு பெரிய அளவில் மது விற்பனை அதிகரிக்க தொடங்கியது. அதிமுக ஆட்சி வந்தபோதெல்லாம் மிடாஸ் கொடி கட்டி பறந்தது.

By 1987 though, TASCO was abandoned and private companies were allowed to manufacture liquor. Around the same time tenders were issued for private shops to retail alcohol, which until then was only available at expensive hotels. It was the era of licence raj where even the consumer had to have a permit for a drink.
2003 இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில்தான் உண்மையான மது சாம்ராஜ்யம் ஆரம்பமானது. சாராய ஆறு ஓட ஆரம்பித்தது.
2002 இல் மிடாஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன்தான் தமிழக அரசின் மதுக்கொள்கையும் 2003 இல் மாறுகிறது. 
In November 2003, the then chief minister J Jayalalithaa announced that the government would take over private retail sales of alcohol in the state — with TASMAC having the monopoly to buy liquor from manufacturers and sell it to consumers.
The state government's coffers began to fill — TASMAC contributed Rs 3,800 crore in revenues in 2002-03. Its revenues would grow massively each year — around 20% every year — to reach Rs 21,000 crore in 2012-13. Next year's (unofficial) target is estimated to be Rs 25,000 crore.
இப்போது சொல்லுங்கள் யார் மதுவை போற்றி வளர்க்கிறார்கள் என்று ????

கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ?

அறிவு ஜீவிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி கலைஞர் டிவிக்கு 200 கோடி எங்கிருந்து வந்தது ? என்ற கேள்விதான்.

பச்சமுத்து டிவிக்கும் ஜெயா டிவிக்கும் எப்படி பணம் வந்ததோ அதே மாதிரித்தான் கலைஞர் டிவிக்கும் பணம் வந்தது என பதில் சொன்னால் சரியாக இருக்குமா ? தவறாக போய்விடாதா? 

எனவே கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு சில கேள்விகளை அவர்களிடமே திருப்பிக் கேட்டு அவர்களுக்கு பதில் அளிப்போம்.

1) 200 கோடி பணம் வந்ததை உடனடியாக வருமானவரி துறைக்கு கலைஞர் டிவி நிர்வாகம் தெரிவித்தது தெரியுமா தெரியாதா ?

2) 200 கோடியை எதற்காக காசோலை மூலமாக வங்கி வரைவோலையாக வாங்க வேண்டும் ? பணமாக பெறுவதில் என்ன கஷ்டம்? 

3) மற்ற டிவிக்காரனுங்க செய்வது போல திருட்டுத்தனமாக பணம் வாங்கி கருப்புபணமாக தங்கள் டிவியில் முதலீடு செய்வதில் கலைஞர் டிவிக்கு என்ன கஷ்டம் ? என்ன பிரட்சினை? 

3) வந்த கடன் பணத்தை கலைஞர் டிவி தங்களது ஆண்டு கணக்குகளில் காண்பித்து Balance sheet லும் காண்பித்து உள்ளனர். முறையாக கணக்கு காண்பித்ததே தவறா? 

4) 2G லைசென்ஸ் கொடுத்து ஒரு வருடம் கழித்துதான் கலைஞர் டிவி 200 கோடி கடன் வாங்கியது. லஞ்ச பணம் என்றால் உடனடியாக வந்திருக்குமே.
ஒரு வருடம் கழித்து வந்த பணத்தை எதை வைத்து லஞ்சப்பணம் என்கிறீர்கள் ?

5) நான்கு கம்பெனி வழியாக பணபரிமாற்றம் நடைபெற்றதற்கு விளக்கத்தை பணம் கொடுத்தவர்கள்தான் விளக்க வேண்டும். கலைஞர் டிவி அதற்கு பதில் சொல்ல என்ன அவசியம்? 

கலைஞர் டிவி யாரிடம் பணம் பெற்றார்களோ அவர்களுக்கும் கலைஞர் டிவிக்கும் மட்டும்தான் சம்பந்தம்.

இந்த கேள்விக்கு உரிய பதிலை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

6) கடன் தொகை 200 கோடி லஞ்சப்பணம்தான் என்பதற்கு இதுவரை CBI எந்த ஆதாரத்தை சமர்பித்துள்ளது ?

ஆதாரத்தை நீங்களாவது சொல்லுங்கப்பா அறிவு ஜீவிகளே.

இந்த வழக்கு 
Money laundering act இன் கீழ்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு :- கலைஞர் டிவி 200 கோடியை திருப்பி வழங்கிவிட்டது. அதற்கான பணம் (வங்கி கடன் உட்பட) எந்தெந்த வழிகளில் பெறப்பட்டது என்ற முழு விபரத்தையும் CBI கோர்ட்டில் கலைஞர் டிவி சமர்ப்பித்துள்ளது.

திமுக அப்படி என்னதான் தமிழர்களுக்கு செய்தது என கேட்கும் மூடர்களுக்கான பதிவு

திமுக அப்படி என்னதான் தமிழர்களுக்கு செய்தது என கேட்கும் மூடர்களுக்கான பதிவு

என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ..
*******
1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம்
போன்றவைகளை கொண்டுவந்தவர்
கலைஞர்.
3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக
்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும்
சாலை வழித்தடம் அமைத்து தந்தவர்
கலைஞர்.
10) மின்சாரம்
அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர்
கலைஞர்.
12.போக்குவரத்து துறை என்ற
துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்டோருக்கென
துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்
டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக
உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச
கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய
பொது விடுமுறையாய் அறிவித்தவர்
கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள்
நாயகத்தின் பிறந்த
நாளை விடுமுறை தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
19.முதல் விவசாயக்
கல்லூரியை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம்
தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான
ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர்
கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும்
திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான
கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம்
இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர்
கலைஞர்.
25. நில
விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர்
கலைஞர்.
26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்
உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
27.பெட்ரோல் மற்றும் ரசாயன
தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30.உருது பேசும்
இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர்
கலைஞர்.
31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
கொண்டுவந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல்
நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
35. கொங்கு வேளாளர்
இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்
சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%
தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச
கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக
விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம
உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில்
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக
கால்நடை மற்றும் விலங்குகள்
அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில்
ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.

இணைத்தவர் கலைஞர்.

தமிழ்நாடு நுகர் பொருள்
வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.
52.
கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
53. பெண்கள் சுய
உதவிகுழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம்
அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல்
கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33%
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர
செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ் சென்னையாக்கியது
கலைஞர்.
62. முதல் முறையாக
விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில்
இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான
வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர்
கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள்
தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட்
சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ
சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற
மாணவர்களுக்கு 15% இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ்
சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக
டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர்
கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ்
மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர்
கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
77.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர்
சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில்
அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும்
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில்
வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர்
கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய
பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய
கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில்
உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர்
கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய
மாவட்டாச்சியர்
அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில்
சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள்
நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000
சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.
97. சென்னையில்
போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350
துணை மின்நிலையங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு
ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

01. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமார
ியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர்
கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம்
சமையல் எண்ணை மற்றும் பல
வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.
104: free professional education (engg,medical,l
aw,...) For first generation graduates : Plan
implemented by @kalaignar89 @pugalmani55
104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000
கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.
106. சரியான நேரத்தில்
வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர்
கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக
உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல்
விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி-
குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம்
தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-
கருமேனியாரு-நம்பியாரு நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த
நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத்
தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ்
கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள்
புனரமைத்து கும்பாபிஷேகம்
பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச
சைக்கிள் வழங்கியவர் கலைஞர்.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச
மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கர
ைநோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108
ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர்
கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090
கோடி முதலீடை கொண்டுவந்தவர்
கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
124. 5 லட்சம்
இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.
125. புதிய டைடல் பார்க்
திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர் கலைஞர்.
126. அனைத்து கிராம
முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000
புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3%
தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர்
கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள்
உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர்
ஆகும் உரிமையை பெற்று தந்தவர்
கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர்
கலைஞர்.
133.
ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல்
ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135.
சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான்
நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரம
க்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
141. முதல் உலக தமிழ்
செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்
கலைஞர்.
143. 119 புதிய
நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும்
விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில்
உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண
தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
149. முதல்
பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4
ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல்
கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட
ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
151. இலவச
எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார
கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.
# ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க
்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல்
கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது நண்பர்களே #தமிழக
மக்களின் நலமே கலைஞரின் நலம்.
# நன்றி.