திமுக இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு திராவிடம் ஆங்கிலத்தை திணித்து விட்டதா? இல்லை ...இந்தி படிப்பதை திராவிடம் தடுத்துவிட்டதா? ***
தமிழ் மக்கள் ஆங்கிலம் படிப்பது அவர்களது விருப்பம்
இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டது,
இன்றும் இந்தி விருப்பத்தின் பேரில் தமிழர்களால் கற்கப்பட்டுதான் வருகிறது. அதை எந்த திராவிடமும் எதிர்க்கவில்லை.
ஏற்கனவே தமிழில் வடமொழி சொற்களும் ஆங்கிலமும் கலந்து மக்கள் தமிழை வித்தியாசமாக பேசிவரும் நிலையில் இந்தியும் கட்டாயமாக்கப்பட்டால் தமிழ் தன் உருவத்தை இழந்துவிடும்.
காலப்போக்கில் மறைந்தேவிடும்
தமிழ் மொழி மற்றும் இனத்தின் மேல் உள்ள அக்கறையால் திராவிடம் இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறதே தவிர
இந்தியை அல்ல.
அடுத்ததாக அதிகாரப் பங்கீடு. இந்த அதிகாரப் பங்கீடு என்பது வி.பி.சிங்கின் மண்டல் கமிஷனோடு நடந்து முடிந்து விட்டது. இனி யார் வந்தாலும் அதை மாற்ற முடியாது. அதிகாரப் பங்கீடு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்து இருந்தாலும் அடிப்படை என்பது நிறுவப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்த்தோ அல்லது
இட ஒதுக்கீட்டை எதிர்த்தோ போராட்டம் வந்துள்ளதா?
இன்று தமிழக மக்கள் தங்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து தன்னிச்சையாக போராடுகிறார்கள்
என்றால் அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு வரக்காரணம் திராவிடம்தானே. சினிமாவில் கூட திராவிட முகம்தானே
ஜெயிக்கிறது.
67ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. 74ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பெரியார் பேச்சுகள் பாடமாக்கப்படுகிறது. தவிரவும் பார்ப்பனரல்லாதவர்கள் 80களுக்குப் பிறகுதான் இந்த எழுத்துத்துறைக்குள் வருகிறார்கள். இதை திராவிடம்தானே செய்தது.
நேருவையும் கலைஞரையுமே ஒப்பிட்டுப் பாருங்கள். கலைஞர் திருவாரூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் பிறகு எழுத்து, நாடகம் என அவரது பயணம் தொடங்குகிறது. பெரிய படிப்பெல்லாம் அவருக்கு இல்லை.
நேரு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமான ‘ஹேரோ’விலும், அடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. அந்த #இடைவெளி இப்போதுதான் நிரம்ப ஆரம்பித்துள்ளது.
ஒரு சாதாரண நபர் கூட அரசியலுக்கு வரலாம் முதலமைச்சர் ஆகலாம் என்பதும் திராவிடத்தால்தானே சாதிக்க முடிந்தது.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் பெரியாரை போன்ற தலைவர்கள் இல்லை. பல்வேறு மாநிலங்களில் அநீதிக்கு எதிராக தலைவர்கள் தோன்றியிருந்தாலும் பெரியார் ஒருவர் தான் மிகப் பிரம்மாண்டமாய் எழுந்தார். அவர் ஒருவர் தான் சாதி என்ற அமைப்பையே எதிர்த்தார். (பார்ப்பனர் Vs பார்ப்பனரல்லாதவர்) என அவர் பிரித்தது தான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.
ஜெயலலிதாவால் காஞ்சி சங்கராச்சாரியாரை பொம்பள பொறுக்கியாக உருவகம் செய்ய முடிந்ததே, அவரை கைதும் செய்து அடைக்க முடிந்ததே , இதை வடமாநிலங்களில் செய்திருந்தால் ஜெ நிலைமை என்ன ஆகி இருக்கும்?
(பதிவின் சில விபரங்கள் எழுத்தாளர் திரு. A.S.Panneerselvan கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை)
No comments:
Post a Comment