திமுக ஆட்சியிலிருந்த சுமார் 21 ஆண்டுகளில் திமுக பட்டியலின மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டதா?
நிச்சயமாக இல்லை. ஆனால் தமிழகத்தை ஆண்ட மற்ற எல்லா கட்சிகளையும் விட பல மடங்கு அதிகமாக திமுகதான் செய்துள்ளது.
தாட்கோ நிறுவப்பட்டது 1974 இல் திமுக ஆட்சியில்தான்.
இந்நிறுவனம் மூலமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பயன் பெறுகிறார்கள். எல்லாவற்றிலும் 50% மானியம் உண்டு. பல திட்டங்கள் இலவசம்.
(Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) was incorporated in 1974 under the Companies Act, 1956 with a objective to improve socio economic status in Tamilnadu of Adi Dravida people)
தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த ஆதிதிராவிட பள்ளிகளை உருவாக்குதல்,
ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல்,
தாட்கோ & குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல்,
உயர்கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித் தொகை மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி -
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் நியமனம்
ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள்.
2007-ல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.
அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான கொள்கை முடிவு கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.
அனைத்து மத்திய மாநில அரசுத் திட்டங்களிலும் ஆதிதிராடர்களுக்கு 33% ஒதுக்கீடும் சிலவற்றில் 50% மும்
கட்டாயம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
பெரியார் சமத்துவபுரம் கொண்டு வந்து அனைரும் சமம் என்பதை நிறுவவில்லையா?
இன்னும் செய்வதற்கு ஏராளம் இருப்பினும் 21 வருட ஆட்சியில் இதைத்தான் செய்யமுடியும்.
ஆனால் அதிமுக பிரிந்த பின் 75% ஆதி திராவிடர்கள் அதிமுகவில்தானே உள்ளனர். மீதி உள்ளவர்கள் தலித் இயக்கங்களில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் அம்மக்கள் மிகவும் அலட்சியப்படுத்தப்பட்டாலும் அவர்கள் அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களே இன்றும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உயர்சாதியினர் திமுகவை வெறுக்க முக்கிய காரணங்கள்
1) திமுக கலப்பு திருமணத்தை ஆதரிப்பது
2) தீண்டாமையை எதிக்கிறது
3) திமுக சாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது
நடுத்தர சாதியினரில் சிலரும் உயர்சாதியினர் பலரும் திமுக சாதி ஒழிப்பிற்கான கட்சி என நினைத்து திமுகவிற்கு ஓட்டே போடுவதில்லை.
#திமுக_என்னும்_மத்தளத்திற்கு_இரண்டு_பக்கமும்_இடிதான்
No comments:
Post a Comment