கட் - ஆப் (Cut-off) தேதியை மாற்றி ராசா தவறு செய்துவிட்டார் என்ற CBI குற்றச்சாட்டு சரியா ?
ராசா டெலிகாம் மந்திரியானவுடன் யாருக்கும் ஒதுக்கப்படாமல் ஸ்பெக்ட்ரம் இருப்பதை கண்டறிந்தார்.
அதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்பட்டு வந்தது.
ராசா உடனடியாக ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார். 1-10-2007 க்குள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் ஆனது.
ஆனால் எதிர்பாராத விதமாக 575 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. கையிருப்பு வெறும் 52 MHz ஸ்பெக்ட்ரம் மட்டுமே.
எனவே கடைசி தேதி 25.9.2007 என அட்வான்ஸ் செய்யப்பட்டது.
இதைத்தான் ஊழல் என எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையில் வரப்பெற்ற 575 விண்ணப்பங்களுக்கும் எந்த லைசென்ஸும் வழங்கப்படவில்லை. அதனால் கட்ஆப் தேதி மாற்றத்தால் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.
இந்த 575 விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு பலமாதங்கள் முன்பே வந்திருந்த விண்ணப்பங்கள் சற்று தாமதமாக கண்டறியப்பட்டது.
எனவே அந்த விண்ணப்பங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவேடு மற்றும் வந்த தேதி அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் என்ன தவறு ?
அவ்வாறு வழங்கப்பட்ட கம்பெனிகளில்தான்
ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள்
வருகின்றன. இரண்டு கம்பெனிகளும் எதிரி கம்பெனிகள். இரண்டு எதிரெதிரான கம்பெனிகள் கூட்டுசதியில் எப்படி ஈடுபடுவார்கள் ?
ராசாவால் 2G லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள் அதை பயன்படுத்தி பெரிய தொகை லாபம் அடைந்து விட்டதாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் ராசாவால் வழங்கப்பட்ட அத்தனை லைசென்ஸ்களும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய கம்பெனிகளும் முதலில் தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவார்கள்.
பிறகு அதை பயன்படுத்தி புதிய பங்குகளை வெளியிட்டு அதில் பெரிய லாபம் பார்ப்பார்கள். பின்னர்தான் தொழில் தொடங்குவார்கள். அதற்குள் சில வருடங்களே ஆகிவிடும்.
இதெல்லாம் உச்ச நீதிமன்றம் அறியாததா? முழுமையாக விசாரித்து அதன் பின்னர்தானே லைசென்சை ரத்து செய்திருக்க வேண்டும்.
இதற்கு பெயர்தான் ஜனநாயகமா ?
No comments:
Post a Comment