Tuesday, 27 June 2017

2G வழக்கும் சொத்துக்குவிப்பு வழக்கும் ***

2G வழக்கும் சொத்துக்குவிப்பு வழக்கும் ***

1) சொ.கு.வழக்கில் அதிமுக தலைவி ஜெதான் முதல் குற்றவாளி.மேலும் 3 பேருடன் ஜெ கூட்டுசதி நிரூபணம்.

2G யில் கலைஞர் மீதோ தளபதி மீதோ எந்த வழக்கும் இல்லை.

மத்தியில் அமைச்சராக இருந்த ஆ. ராசா மீதும் MPஆக இருந்த கனிமொழி மீதுமே வழக்கு உள்ளது.

2) ஜெ வருமானத்திற்கு அதிகமா 211 % சொத்துக்குவித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது

2G வழக்கில் திரு.ஆ. ராசாவிடம் ஒரு ரூபாய் கூட வருமானத்திற்கு அதிகமாக சொத்து இருந்ததாக CBI கண்டறியவில்லை.

3)ஜெ பத்தொன்பது வருடமாக வழக்கை வாய்தா வாங்கி இழுத்தடித்தார். ஆ.ராசா வோ ஒரு முறை கூட வாய்தா வாங்கவில்லை.

4) 176000 கோடி இழப்பு என்பதே கற்பனை கணக்குதான்.வழக்கு முடிந்து நிலையில் CBIஆல் ராஜாவால் ஏற்பட்ட இழப்பு என எதையுமே நிரூபிக்க முடியவில்லை.

5) அவ்வாறே கலைஞர் டிவி வாங்கிய கடன் வருமானவரித்துறைக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு அந்த ஆண்டு Balance sheetஇல் தெரிவிக்கப்பட்டு Audit செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆ.ராசா லைசென்ஸ் கொடுத்து ஒரு வருடத்திற்கு பின்னரே கலைஞர் டிவி கடன் வாங்கியுள்ளது.

கலைஞர் டிவிக்கு வந்தது லஞ்சப் பணம் என்றால்
கலைஞர் டிவி நினைத்திருந்தால்   லஞ்சத்தை பணமாக வாங்கி பினாமிகள் மூலம் கலைஞர் டிவியில் முதலீடு செய்திருக்க முடியுமே .கடனாக வாங்க வேண்டிய அவசியமே இல்லையே.

பல நிறுவனங்கள் வழியே பணம் கொடுத்தற்கான காரணம் வரி ஏய்புக்காக பணம் கொடுத்தவர்கள் செய்திருக்கலாம். அதை நிரூபிக்க வேண்டியது கலைஞர் டிவிக்கு பணம் தந்த நிறுவனத்தின் பொறுப்பு தானே தவிர கலைஞர் டிவியை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

மேலும் கலைஞர் டிவி கடன் வாங்கியபோது கலைஞர் டிவியின் எந்த பொறுப்பிலும் திருமதி கனிமொழி இருந்திருக்கவில்லை.
அவர் வெறும் Sleeping Partner மட்டுமே.

கனிமொழி - ஜாபர்சேட் உரையாடல்களில் அவர்கள் பணம் சம்பந்தமாக பேசுவது எல்லாமே கலைஞர் டிவிக்கு வாங்கிய கடனை அடைக்க பணம் கடன் பெறுவது தொடர்பானது. கலைஞர் டிவி வாங்கிய கடன்
பல வங்கி கடன்கள் மூலமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விபரங்களும் CBI கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

CBI சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை ராசா மற்றும் கனிமொழி மீதான எந்த குற்றமும் CBI ஆல் நிரூபிக்க முடியவில்லை. இரண்டு வழக்குகள் போடப்பட்டு இறுதிவாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்புதான் வரவேண்டும்.

தீர்ப்பில் எப்படி வந்தாலும் ஆ.ராசாவிற்கு தன் மீது குற்றமில்லை என நிரூபிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் ஜெ & Co தான் குற்றவாளி என இறுதி தீர்ப்பே வந்துவிட்டது.

எனவே கேனத்தமான ஒப்பீடுகள் வேண்டாம் அடிமைகளே

Antony Parimalam

No comments:

Post a Comment