Wednesday, 28 June 2017

திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.? Written by Arivalagan kaivalyam

திமுகவையும் தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஏன் ஆதரிக்கிறீர்கள்.?  Written by Arivalagan kaivalyam


பாலூற்றும் சினிமா ரசிகர்களைப் போலத் தான் நடந்து கொள்கிறீர்கள் என மனைவியில் இருந்து துவங்கி, நண்பர்கள் பலர் இப்போது இப்படித்தான் சொல்கிறார்கள்

#திமுக_ல_இருக்குறதும் கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறதும் பாலூற்றித் தேங்காய் உடைக்கும் ரசிக மனநிலை இல்லீங்க, அதுக்கு #வரலாற்றுப்_பூர்வமான_காரணங்கள் பல #இருக்கு.
#அது_ஒரு_வகையான_நன்றிக்_கடனுங்கோ சாமிகளா, ஒரு புள்ளிவிவரத்தோட அதை எல்லாம் உங்களுக்குச் சொன்னால் தான் புரியும்.

1) ஆடு மாடு மேச்சுகிட்டு, விவசாயத்தைத் தவிர எதுவுமே தெரியாம அடிமை வாழ்க்கை வாழ்ந்த எங்க ஊரோட  வரலாற்றில் "பெரியார்" என்கிற மகத்தான மனிதரின் வரவுக்குப் பின்னால தாங்க படிப்போட வாசனையே வந்தது, உள்ளூர்ல இருக்குற சாதிஅரசியல் கூடத் தெரியாம இருந்த எங்க குடிசைல மார்க்சும், லெனினும், டால்ஸ்ட்டாயும், சோவியத் யூனியனும், வெள்ளை வேட்டியும், வெளி உலகமும் வந்து சேந்ததே சுயமரியாதை_இயக்கம் தோன்றிய 1925 ஆம் ஆண்டுக்குப் பின்னால தாங்க.

2) ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வி கற்பதே குற்றம்னு சொன்ன மனுநீதியின் கவசங்களை உடைத்து அப்பாவ ஊரின் முதல் முதுகலைப் பட்டதாரியா மாத்துனது இதே அண்ணாவின் தலைமயிலான திராவிட_முன்னேற்ற கழகம் கொடையளித்த இடஒதுக்கீடும், சட்டத் திருத்தங்களும் தாங்க ராசாக்களா.

3) சில நூறு ஆண்டுகளா ஐயரும், ஐயங்காரும், செட்டியாரும், முதலியாரும் இன்னும் பல ஐயாமாரும் மட்டுமே அதிகாரிங்களா இருந்த வருவாய்த் துறைல அப்பாவ சார் பதிவாளரா உக்கார வச்சு அழகு பாத்தது இதே கலைஞரோட திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஒன்றியச் செயலாளரும் தாங்க ராசா.

4) பொருளாதாரச் செழுமையையும், போட்டியிடுகிற மனதையும், நமனை அஞ்சோம் என்கிற துணிவையும் அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த வேலையும், அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த அரசியல் அறிவும் தானேங்க ஐயா எங்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

5) அதுமட்டுமில்லைங்கையா, அரசியல்ங்குறது வெறும் அதிகாரச் சண்டையோ, இல்லை, சுரண்டலோ இல்ல, அது ஒரு சக மனிதனின் வலியைப் புரிந்து கொள்கிற வாழ்க்கை முறைன்னு ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை ஊர் ஊராக புகைப்படக் கண்காட்சி வச்சு அறிமுகம் பண்ணினதும், #இலக்கியமும்_வரலாறும்_இசையும் இன்னும் எல்லாமும் கலந்தது தான் #அரசியல் என்கிற வாழ்க்கையோடு அற்புதமான பாடத்தையும் எங்களுக்குச் #சொல்லிக்_கொடுத்தது இப்பவும் "ஊழல்வாதி", ஊழல்வாதி என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி பினாத்துரீங்களே அதே தலைவர் #கலைஞர் தலைமையிலான இந்த #சமூகப்_பேரியக்கம் தான்லே அப்பரண்டிசுகளா.

6) அதுமட்டுமில்ல, தி.மு.க ல இருக்குறதும், கலைஞரைப் பின்பற்றுவதும் என்னைப் பொருத்தவரை அறிவியல் பூர்வமான வாழ்க்கை முறை, தி.மு.க ன்னு சொன்ன உடனேயே #சமூகநீதிக்கு எதிரான எவனும் உடனே எதிர்ப்பான், முக்கியமா பார்ப்பனன் பழிப்பான், கரிச்சுக் கொட்டுவான், குய்யோ, முறையோன்னு கூத்தாடுவான், ஊழல், ஹிந்தி, மொழித் தீவிரவாதம், இட ஒதுக்கீடு அது இதுன்னு நம்மளோட எப்பப் பாத்தாலும் சண்டைக்கு வருவான், அவனோட முட்டி மோதி தில்லா நிக்கும் போது ஒரு தன்னம்பிக்கையும், மிதப்பான அறிவாற்றலும் கூடவே வரும் பாருங்க, அந்த அனுபவத்துக்காகவே கலைஞரை இன்னும் பல தலைமுறைக்கு வழிபடலாம்.

7) அரசியல் மட்டுமில்லை வாழ்க்கை ஒரு தலைவனுக்கு, மொழிய சும்மா வாய் கிழியகெட்ட வார்த்தை போட்டு மேடைல பேசினாப் போதாது, தூசி தட்டி, எழுது உன் இலக்கியத்தை, படி உன் புறநானூற்றை, கற்றுக் கொள் உன் சங்கத்தமிழை என்று நெஞ்சு நிமிர்த்தி எம் உயிருக்கும் மேலான மொழியை எங்கள் கைகளில் தவழ விட்டார் பாருங்க, அதுக்காக நாங்க எங்க போனாலும் அவரைத் தலையில் வச்சுக் கொண்டாடுவோம் அப்பாடக்கர்களா, திரைப்படம், இசை, கவிதை, கதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று அறுபதாண்டு காலம் தொடர்ந்து ஒரு மொழிக்காக உழைக்கிற ஒரு மனிதனை மதிக்கக் கூட வேண்டாம்ல சுய அறிவு இல்லாத குருட்டுப் பசங்களா, வந்தேறி வடுகன்னு வாய் கூசாமச் சொல்றீங்களே, அதுக்காகவாவது அவரை நாங்க வழிபடுவோம்லே.

8) ஒருபக்கம் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கும் பார்ப்பனீய ஊடகங்கள், இப்போது எதிர்க்கும் பார்ப்பன அடிவருடி ஊடகங்கள், இன்னொரு பக்கம் எங்கே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று நம்ம சொகுசு வாழ்க்கைலயும் கை வச்சுருவரோன்னு பயந்து மக்களுக்குக் கிடைத்த நன்மையின் அலைக்கற்றை மானியத்தை 1,76,000 கோடி ஊழல், அது இதுன்னு அடிச்சு விடுற வடநாட்டு முதலாளிகளும், சுப்ரமணிய சாமிகளும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன லாபி, ஊழல் செய்வதற்காகவே ஆட்சி நடத்தும் ஜெயா, அரசியல் அரிச்சுவடியை அவரிடமே படித்து விட்டு இப்போது மக்கள் நலம் அது இதுன்னு அல்டாப் காட்டும் வை.கோ வைப் போன்ற துரோகிகள் என்று பல எதிர்ப்புக்கு இடையேயும் நின்னு விளையாடுற கிழட்டுச் சிங்கத்துகிட்ட தான்லே அரசியல் படிக்க முடியும், ஆத்தாகிட்டப் போயி அடிமைக் கூனா வாங்க முடியும்.

9) வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிற நக்கலும், நையாண்டியுமாக, நடைமுறைல சாதியையும் மத வேற்றுமைகளையும் கடந்து எல்லா மனிதர்களோடும் தலை நிமிர்ந்து வாழ்க்கையின் ஊடாக ஒரு அழகான பயணம் லேதி.மு.க காரனா இருப்பதும், கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும்......

10) எல்லாத்துக்கும் மேலே சொந்த சாதிக் கட்சியை மறந்து, மதங்களைக் கடந்து, மதவாத இந்துத்துவப் பார்ப்பணீயத்தை எதிர்த்து, எளிமையான உழைக்கும் மக்களின் பின்னே நிற்பதும், எனது இஸ்லாமிய சகோதரனின் வாழ்வுக்கு அரணாக எப்போதும் நின்று நான் ஒரு தி.மு.க  காரன் என்று சொல்வதும், கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒரு நேர்மையான நன்றிக் கடன் கொண்ட மானுட அறிவியல் என்னைப் பொருத்தவரை.

# # # ஜெயிக்கிறமோ, தோக்குறோமோ, அதெல்லாம் செக்கன்டரி பாஸ், ஓங்கி அடிச்சா சங்கத்தமிழ், ஒய்யாரமா உக்காந்தா புறநானூற்று வீரம், பார்லிமென்ட் போனா ஸ்பெக்ட்ரம் பாமரன் கைக்குப் போகும், அம்பானிக்கும், டாட்டாவுக்கும் போகாது, மொழியையும், இலக்கியத்தையும், சமூக அறிவியலையும், நக்கலையும், நையாண்டியையும் ஒரு அரசியல் கட்சில பாத்துருக்கியா ஒலகத்துல எங்கேயாச்சும், வந்து பார், வந்து பார்

Arivalagan kaivalyam. அவர்களால் எழுதப்பட்ட பதிவு

No comments:

Post a Comment