அந்தர்பல்டி ஆறுமுகம்,
தமிழகத்தின் அரசியல் காமெடியன் #ஜைக்கோவின் அரசியல் கேனத்தனங்களில் சில.
படித்துவிட்டு வாய்க்கு பதில் வேறு வழியே சிரிக்கவும்
1) எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.
*2) பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.
*3) "காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க 'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.
* 4) 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
*5) 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.
*5) தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டார்.
*6) "இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். கூடச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.
*7) "தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..?' எனச் சொந்தக் கட்சிக்காரர்களே கொஞ்சம் அரண்டுதான் போயினர்.
*8) விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்!
*9) ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.
*10) அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..?' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.
11)அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
*12) 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..!' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..?' என மக்களே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.
*13) மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..!'ன்னு சொல்லுவாரோ என்னவோ..?( நன்றி Vikadan)
யார் இந்த வைக்கோ?
இவர் செய்வது அரசியலா?
இல்லை வியாபாரமா?
1994 ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி.
96 ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி.
98 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி
99 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி
2001 ல் ரெண்டு பேருமே எதிரி
2004 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி
2006, 2009 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி
2011 ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி
2014 ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி
2016 ல் ம.ந.கூட்டணி
2019 இல் யார் அறிவார்?
அவருக்கே தெரியாதே

No comments:
Post a Comment