Tuesday, 27 June 2017

கலைஞரும் இந்தியாவும் இலங்கை போரும்

நேற்றும் சரி இன்றும் சரி
நாளையும் சரி இந்தியா
இலங்கைக்கு சாதகமாகத்தான் இருந்துக்கொண்டிருக்கும்.**

 இந்தியா...ஏற்கனவே சைனா பாகிஸ்தானால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையை இந்தியா பகைத்துக்கொள்ளாது என்பது நிச்சயம்.

இலங்கையில் காலூன்ற சைனா திட்டமிட்டு ஏற்கனவே காலூன்றி விட்டது. 2006 இல் LTTE ஐ ஒழிக்க பெருமளவு ஆயுதங்கள் சைனா பாகிஸ்தான் நாடுகளிடமிருந்தே வந்து குவிந்தன. இந்தியா தன் பங்கிற்கு ராடார் சாதனங்களை வழங்கியது. இந்தியா அதை வழங்காவிட்டாலும் பல நாடுகள் அதை தர தயாராக இருந்தது.

இதுவெல்லாம் பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் நடைபெற்றதால் இதை தடுக்க யாராலும் முடியாது என்பதே உண்மை. உலக அளவில் LTTE ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.

பிரேமாதாசாவுடன் LTTE  இணைந்து IPKF ஐ துரத்தியடித்ததுடன் நிறுத்தியிருக்கலாம். அதன் பின்னர் ராஜீவ் கொலை நடந்தது. அப்போதிருந்தே இந்தியா LTTE ஐ பயங்கரவாத இயக்கமாகவே பார்க்க தொடங்கி விட்டது.

இதனால் உலக அளவில் LTTE தனிமை பட்டுவிட்டது. இதுதான் இவ்வியக்கத்திற்கு பேரிழப்பு.

LTTE அமைதி படையுடன் மோதாமல் ஆயுதங்களை பதுக்கி வைத்து விட்டு அமைதியாக ராஜீவுடன் நட்பு பாராட்டி சந்தர்ப்பம் வரும்போது இந்திய அமைதிப்படையை இலங்கை அரசுடன் மோதவிட்டிருக்க வேண்டும். ஜெயவர்த்தனவேயின் நரிமூளை பிரபாகரனுக்கு அன்று இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்ஈழம் சாத்தியமாயிருக்கும்.

இறுதிப் போரின் போது ஏற்கனவே சிங்கப்படை பல்லாயிரக்கணக்கில் இழைப்பை சந்தித்திருந்ததால் கொலை வெறியுடன் நடந்துக்கொண்டு புலிகளையும் தமிழர்களையும் கொன்று குவித்தனர். சர்வதேச விதிகள் மிதக்கப்பட்டன. அன்று இந்தியா வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பேச்சை ராஜபக்சே அவரது ஆட்சியில் மதித்ததேயில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரை சைனா முழுமையாக ஆதரித்ததுதான்.

இலங்கையில் இந்தியர்கள் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்கள். இந்திய அரசும் பல்வேறு கட்டுமானங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலும் காஷ்மீரில் இந்தியா பல மனித உரிமை மீறல்களை செய்து வருகிறது. எனவே இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை இந்தியா கண்டும் காணாமல்தான் இருக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் சைனா போன்ற நாடுகள் காலூன்றுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

எனவே இலங்கைக்கு இந்தியா உத்தரவு போடும் நிலையில் இல்லை. மாறாக இலங்கையுடன் நட்பு பாராட்டி வர்த்தகத்தை பெருக்குவதுடன் இலங்கையில் எந்த ஒரு அந்நிய நாடும் கால்பதித்து விடாமல் பார்த்துக் கொள்வதே இந்தியாவுக்கு முக்கியமாக உள்ளது.
இதை இலங்கை உணர்ந்துள்ளதால் இந்தியாவை அவ்வப்போது சைனாவை வைத்து சீண்டிப் பார்க்கிறது.

இந்த சூழலில் தமிழக தமிழர்களும் ஈழத்தமிழர்களும் இந்தியாவின் கண்களில் சாதாரணமே. பல விசயங்களில் கண்டும் காணாமலும் இந்தியா இருந்தாக வேண்டியுள்ளது.

இந்திய தமிழர்களின் நலனே இந்தியாவிற்கு இரண்டாம்பட்சம்தான் எனும் போது ஈழத்தமிழர்கள் நலனை இந்தியா சிந்திக்கும் நிலையில் என்றுமே இருக்காது என்பதே உண்மை.

இந்த சூழழை 2009 இல் கலைஞர்
 நன்கு அறிந்திருந்தார். தான் நிர்பந்தம் செய்தாலும்  இந்தியாவால்
போரை நிறுத்த முடியாது என்பதும் கலைஞருக்கு தெரியும்.

இருப்பினும் அப்பாவி மக்கள் போரில் பலியாவது அவருக்கு மிகப்பெரிய நெருடலாக இருந்தது. அதனால்தால் அந்த ஏழு மணிநேர உண்ணாவிரதம் நடந்தது.

போரில் கனரக ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்படாது என அவருக்கு உறுதியளிக்கப்பட்டதால் 86 வயது கிழவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இப்போதும் சொல்கிறேன் இலங்கையின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமில்லை.

இலங்கையை பகைத்துக் கொள்ள அன்றும் இந்தியா தயாராக இருந்ததில்லை .
இனியும் பகைத்துக்கொள்ள போவதில்லை.

இங்குள்ள மதிகெட்டவர்கள் கலைஞர் நிர்ப்பந்தம் செய்திருந்தால் இந்தியா போரை நிறுத்தியிருக்கும் என சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பர். அதை நம்பி ஏமாறுபவர்கள் ஏமாறட்டும்.

No comments:

Post a Comment