Wednesday, 28 June 2017

2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில் டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா?

2G அலைக்கற்றையை ஏலம் விட்டதில்
டெலிகாம் துறைக்கு லாபமா இல்லை நஷ்டமா  ? ராசா செய்தது சரியா இல்லை தவறா?

1) உண்மையில் சமீபத்திய 2015 இல் நடந்த ஏலத்தால் டெலிகாம் துறைக்கு கிடைத்தது ஒரு MHz க்கு 290 கோடி மட்டுமே.

2007-08 ஆம் ஆண்டிலேயே  ராஜா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்  டெலிகாம் துறைக்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  வருமானத்தை  பெற்று தந்துள்ளார்.

2) மேலும் ஏலமுறையில் ஒரு முறைதான் டெலிகாம் துறைக்கு வருமானம் வரும்.

ஆனால்  ராஜாவின் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் லைசென்ஸ் பீஸ் முதலில் வாங்கப்படும். அதன் பின்னர் லைசென்ஸ் பெற்ற அந்த கம்பெனி ஒவ்வொரு ஆண்டும் தான் செய்யும் வியாபாரத்தை பொறுத்து டெலிகாம் துறைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
இதனால் டெலிகாம் துறைக்கு இரண்டு விதத்தில் வருமானம் வந்தது.

3) ஏலமுறை வந்ததால் சிறிய நிறுவனங்களால் ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.

 எந்த வித போட்டியும் இல்லாததால்
பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் உடன்பாடு செய்து கொண்டு மனம் போன போக்கில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்தி கொண்டே உள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் ராஜா செய்தது சரியா ..தவறா.,

No comments:

Post a Comment