நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக வரி விதிப்பு இருக்கும்.
ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும்போது, சிஜிஎஸ்டி (CGST), எஸ்ஜிஎஸ்டி (SGST) மற்றும் ஐஜிஎஸ்டி (IGST) என 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைக்கு வரும்.
இதில் சிஜிஎஸ்டி என்பது மத்திய அரசின் ஜிஎஸ்டி (Central GST). இந்த வருவாய் ழுழுவதும் மத்திய அரசுக்குச் செல்லும். அடுத்தது, எஸ்ஜிஎஸ்டி என்பது மாநில அரசின் ஜிஎஸ்டி (State GST). இது மாநிலங்களில் நடைபெறும் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மொத்தமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குச் செல்லும். அடுத்தது, ஐஜிஎஸ்டி என்பது மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (Inter-State GST). இது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மத்திய, மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இறுதியில் எந்த மாநிலத்தில் ஒரு பொருள் விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.
உதாரணத்துக்கு, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை அதே மாநிலத்திலுள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800 வரியாகச் செலுத்துகிறார். இந்தத் தொகையானது கர்நாடகா அரசின் பங்கு ரூ.900 மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.900.
இப்போது, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்குச் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை விற்று உள்ளார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800யை ஐஜிஎஸ்டி வரியாகச் செலுத்துகிறார். இங்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகியவற்றைச் செலுத்த வேண்டி இருக்காது. இந்த வரி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இங்கு ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஐஜிஎஸ்டி-ல் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.
GST யால் தமிழகம் எப்படி பாதிக்கப்படுகிறது?
தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம். இங்கு உற்பத்தியாகும் கார் முதலான அனைத்து உற்பத்தி பொருட்களையும் வேறு மாநிலத்திற்கு விற்க 2% வரியை தமிழக அரசு தற்போது வசூலிக்கிறது. ஆனால் இனி வசூலிக்க முடியாது.இதனால் மட்டுமே சில ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.
மாநிலங்களுக்கு இடையே நடக்கும் விற்பனையின் வரித் தொகை முழுவதும் இனி IGST மூலம் மத்திய அரசே வசூலிக்கும்.
ஜிஎஸ்டி வந்தால், இந்த வருவாய் இழப்பு ஏற்படும். வேறு பல வரிகளையும் தமிழகம் இழக்கும், எனவே, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் கணக்கு.
இதனை மத்திய அரசு முழுமையாக தரவேண்டும் என்று தமிழகம் கேட்கிறது. மேலும் GST அமல்படுத்துவதால் மாநிலங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதையும் தமிழகம் எதிர்க்கிறது.
இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது.
ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. இது தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை

Nice explanation
ReplyDeleteSuper sir.. நல்லா புரிஞ்ச திட்டம் போட்டாலே பல்லாயிரக்கணக்கான கோடி சுருட்டுவாங்க... இந்த திட்டம் பெரும்பாலான மக்களுக்கு புரியல.. செம்ம ஊழல் பன்ன போறாங்க என்பது உறுதி....
ReplyDelete