Thursday, 5 July 2018

1976 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மை காரணங்களும் கவர்னர் அறிக்கையும்

திமுக ஆட்சி 1976 இல் கலைக்கப்பட்ட பின்னணியும் கவர்னர் அறிக்கையும்

திமுக ஆட்சி கலைக்கப்பட திட்டமிட்டே பல காரணங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று முறையற்ற ஆட்சி. அதில் வீராணம் திட்டமும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதை கமிசன் அமைத்து விசாரிக்கலாமே. ஆட்சியை கலைக்க வேண்டியதில்லையே.

உண்மையான காரணம் கலைஞர் எமர்ஜென்சிக்கு ஒத்துழைப்பு தராததும் அதை எதிர்த்ததும்தான்

திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்கள்

1)இந்திரா தேர்தல்  வெற்றி சட்டப்பூர்வமாக செல்லாது என்று ஷோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கிற்கு 1975 ஜுன் 12 ம் நாள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தஞ்சைமாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், இந்திராகாந்தி ராஜினாமா செய்யவேண்டுமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்தார்.

2) 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.


அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த செயற்குழுவில், எமெர்ஜென்சிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 6ம் தேதி சென்னை கடற்கரையில், தலைவர் கலைஞர் தலைமையில் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.

3) தலைவர் கலைஞரும், பெருந்தலைவர் காமராஜரும், பூந்தமல்லி சாலையில் உள்ள டாக்டர் அண்ணாமலை அவர்கள் இல்லத்தில் தனியாகச் சந்தித்து இதுகுறித்து நீண்ட் ஆலோசனையும் நடத்தினர். அப்போது கலிவரதன் உடன் இருந்தார். பெருந்தலைவர் காமராஜர், "தேசம் போச்சு தேசம் போச்சு" என்று வேதனையோடு கூறியதை அனைவரும் அறிவார்கள்.

4) ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் துவங்கியதும் தி.மு.க உறுப்பினர்களாக இருந்த இரா. செழியன் மக்களவையிலும், மாரிச்சாமி மாநிலங்களவையிலும் அவசரநிலையினை எதிர்த்து கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர்.

5) இந்திராகாந்தி அந்த சமயத்தில், இந்தியாவில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று தி.மு.க தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத் மாநிலம் என்று கூறி இந்த இரண்டு மாநில ஆட்சிகளையும் குறிவைத்து கடுமையாக எச்சரிப்பதுபோல பேசினார்.

6)  திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 1975 ஆகஸ்ட்9,10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல்லை மாநாட்டிலும், அதே ஆண்டு கோவையில் டிசம்பர் 28ல் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் அவசரநிலை குறித்து தி.மு.கவின் கண்டன தீர்மானமும், தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சும் அமைந்தது.

இம்மாநாடுகளுக்குப் பிறகு, பம்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது, ஆர்.எஸ்.எஸ், ஆனந்தமார்க் , நக்சலைட் இயக்கங்கள் போன்று தி.மு.கவும் தடைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 26 இயக்கங்கள் அவசர நிலைகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.

7) சஞ்சீவ ரெட்டியும் அடிக்கடி வந்து தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திப்பது உண்டு. ஜார்ஜ் பெர்னாட்டஸும் தலைவர் கலைஞர் அவர்கள் உதவியால் சென்னையில் வந்து தங்கியிருந்ததால் மத்திய அரசால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. அவர் கல்கத்தாவிற்கு ரயிலில் சென்ற போதுதான் எம்.கே.நாராயணன் மூலமாக உளவறியப்பட்டு தமிழக எல்லைக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.

8) அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,"என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்" என்று பாராட்டிச் சொன்னார்.

அப்போதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் நிர்மாணித்த, வள்ளுவர் கோட்டம் அமையும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31-நாளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

(நன்றி K.S. ராதாகிருஷ்ணன்)

****
உண்மையில் ஆளுனர் அறிக்கை
யாரால் தயாரிக்கப்பட்டது.?

1971 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக கே.கே.ஷா பொறுப்பேற்றார். இவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூகநீதி திட்டங்களில் மனதை பறிகொடு்ததார். அதனால்தான் தனது பெயருக்கு முன் உள்ள கே.கே. என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களுக்கு கலைஞர் கருணாநிதி என்று விளக்கம் அளித்தார். அதாவது தனது பெயரை கலைஞர் கருணாநிதி ஷா என்று அழைப்பதை பெருமையாக நினைப்பதாக கூறினார். அந்த அளவுக்கு மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நல்லுறவு இருந்தது.


ஆனால், அத்தகைய ஆளுநரிடம் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்க 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இந்திரா தலைமையிலான மத்திய அரசு வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றது. இதை அவரே பின்னர் தெரிவித்திருக்கிறார். திமுக ஆட்சி கலைப்புக்கு பிறகு மேலும் 5 மாதங்கள் அந்த பொறுப்பில் நீடித்தார்.

கவர்னர் அறிக்கையின் முழுவிபரம்

(1) முறையற்ற ஆட்சி (Maladministration)

இதன் கீழ் 7 குற்றச்சாட்டுகள் திமுக மீது சுமத்தப்பட்டது

அ)..வீராணம் திட்டம் முறைகேடு

ஆ) 1973 ல் மத்திய அரசு தந்த வறட்சி நிவாரண நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது
( AG Report)

இ). தமிழக மருத்துவக் கல்லூரிகளின் Admission ஐ
centralize செய்தது திமுக. இதனால்  முறைகேடுகள் நடைபெற வாய்ப்ளித்தது


ஈ) நான்காவது ஐந்தாண்டு திட்ட நிதியை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியது

எ) On account of the administrative interference, Shri Kattur Gopal, President of the Dravidian Labour
Progressive Federation, which is the Labour Front ofthe DMK Party was installed as President of the 10,000 strong Simpson Group workers and Staff Union, displacing
Gurumurthy of INTUC (Indian National Trade Union
Congress). This action sparked off unprecedented trouble in
the Simpson Group offactories.

ஏ). The Government machinery of the State was liberally employed for collection offunds for the party.

ஐ) There were numerous instances of interference and misuse
of Government machinery including the use of Police force
for the purpose of furtherance of party interests.



(2) பத்திரிக்கை தணிக்கையினை சரியாக செய்யாதது

 Immediately after the Proclamation of Emergency by Mrs. Indira Gandhi in 1975, the State Government issued its own censorship orders under mle 48 of Defense and Internal Security ofIndia Rules (Acts), 1971.

 When the Central Government issued detailed basic censorship order, the State Government officials did not faithfully carry out censorship according to the guidelines issued by the Centre.

 This resulted in the free circulation of a lot ofliterature including newspapers containing exhortations and public speeches highly critical of emergency
measures. These publications found their way to the neighbouring states also and complaints were received from Kerala and Pondicherry about the difficulties faced by them by the flow of such literature from Tamil
Nadu.

(3)அவசரநிலையை சரியாக
அமல்படுத்தாமை மற்றும்
எதிர் கட்சி பத்திரிக்கைகளை தவறாக பயன்படுத்தல்

Apart from the laxity in the implementation of emergency
measures, there were glaring instances of misuse ofpower.

 For instances the power vested in the State Government under rule 47(1) of Defence and Internal Security of India Rules, 1971 was misused to muzzle news media belonging to opposition parties.



(4)தனித்தமிழ்நாடு கோரிக்கை

 Under cover of demand for State autonomy, DMK leaders
including the Chief Minister Mr. M. Karunanidhi and other Ministers
from time to time held out veiled threats of session in case the desired autonomy was not granted. Sinister comparisons were made in their public utterances with the events in Bangaladesh and the fate of Mujibur Rehman.


 Some ofthe DMK leaders gave a threat of revolution in Tamil Nadu ifthe life ofthe State Assembly was net extended. In the Fifth State Conference ofDMK held from 25 to 28th December, 1975 at Coimbatore,4 it was underlined that if the party’s demand for State
autonomy was not conceded, the DMK would have no alternative but to revive its earlier demand for 'Separate Tamil Nadu’.


The sustained campaign involving propaganda, agitational approach and indirect encouragement of a climate of violence on the part ofthe DMK party to achieve the above purpose was against the concept of national
integration.

Antony Parimalam


1 comment:

  1. அண்ணா எஸ்எலெண்ட் ஆர்டிகள்

    ReplyDelete