Wednesday, 25 July 2018

காமராஜரை மோசமாக விமர்சித்தார் கலைஞர் என்பது எப்படி உண்மையோ அதே அளவிற்கு காமராஜரை அதிகம் மதித்தது கலைஞர்தான் என்பதும் உண்மையே

காமராஜரை மோசமாக விமர்சித்தார் கலைஞர் என்பது எப்படி உண்மையோ அதே அளவிற்கு காமராஜரை அதிகம் நேசித்தது கலைஞர்தான் என்பதும் உண்மையே

அவ்வாறே காங்கிரசார் திமுகவை, அண்ணாவை, கலைஞரை மிக மிக கேவலமாக விமர்சித்ததையும் மறந்துவிட முடியாது.

காங்கிரசில் காமராஜர் என்றால் திமுகவில் அண்ணா ஏழ்மையுடன்தான் இறந்தார்கள்

காங்கிரசில் கக்கன் ஏழை என்றால் சாதிக்பாட்சா போன்று திமுகவில்  ஏழைகளாகவே இறந்த அமைச்சர்களும் உண்டு.

காங்கிரசை விட வேறு யாரையும் விட கலைஞரும் திமுகவும்தான் காமராஜரை அவரது இறப்பிற்கு பின்னரும் அதிகம் நினைவு கூர்ந்துள்ளனர்

காமராஜர் முதலமைச்சராகி குடியாத்தம் MLA தேர்தலில் நின்ற போது அவரை ஆதரித்தது திமுகதான்.

9.10.1961 இல் சென்னை மாநாகராட்சியை திமுக கைப்பற்றியபோது பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவை கொண்டு திறந்தது திமுகதான்


1967 ல் காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா . ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

2.10.1975 இல் காமராஜர் மறைந்த பின்னர் கிண்டி காந்தி மண்டபம் அருகே காமராஜர் நினைவு மண்டபம் அமைத்து சிலை அமைத்ததும் திமுகதான்

1990 ல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் முனையம் என பெயர் சூட்டப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

1997 ல் சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர் சூட்டியதும் கலைஞர்தான்

2.10.2000 அன்று குமரியில் காமராஜர் அஸ்தி இருந்த இடத்தில்  மணி மண்டபம் கட்டித் திறந்ததும் திமுகதான்.

2006 இல் காமராஜர் பெயரில் அரசு விருதை நிறுவியதும் கலைஞரே.

2006 ல் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசாணை பிறப்பித்ததும் கலைஞர்தான்.

2010 இல் நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்டியது கலைஞரே

அண்ணா காலத்தில் இரண்டாவது உலகத்தமிழர் மாநாட்டில் வரவேற்புரை அளித்து அதை தொடங்கி வைத்தவர் காமராஜர்தான்.

எமர்ஜென்சி போதும் காவேரி போன்ற முக்கிய பிரட்சினைகளின் போதும் கலைஞர் காமராஜரை நேரில் சந்தித்து ஆலோசனைகளை பெற்றுள்ளார்
என்பதை மறுக்கமுடியுமா?

எமர்ஜென்சி போது காமராஜரை சிறையில் அடைக்க இந்திரா நெருக்கடி தந்தபோதும் காமராஜரை காத்து நின்றவர் கலைஞர் .

காமராஜர் உடல்நலிவுற்றபோது உரிய மருத்துவத்திற்கு ஏற்பாடுகள் செய்ததும் கலைஞரே.


அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.


கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைர், " நான்  சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை"  என கறாராக கூறினார் கலைஞர்.


இப்போது சொல்லுங்கள் திமுகவையும் கலைஞரையும் தவிர வேறு யாராவது காமராஜருக்கு இந்த அளவிற்கு மரியாதை தந்து இருக்கிறார்களா?


இன்று யாரெல்லாம் காமராஜர் முகமூடியுடன் அலைகிறார்களோ
அவர்களின் அப்பனுகளும் தாத்தாக்களும் காமராரை மதித்திருந்தால் காமராஜர் எப்படி விருநகரில் தோற்று இருப்பார்.


கடைசி காலத்தில் கவனிப்பாரற்று கிடந்தாரே காமரார் அப்போது உங்க தாத்தனுங்க என்னடா செஞ்சிகிட்டு இருந்தானுங்க?

நன்றி கெட்ட நாய்களடா நீங்க


இன்றும் உங்களுக்கு  காமராஜர் மீது எந்த நன்றியோ பாசமோ கிடையாது. கலைஞரை திட்ட காமராஜர் உங்களுக்கு  ஒரு கருவிதான்.

காமராஜர் முகமூடி அணிந்து கலைஞரை திட்டும் அயோக்கியர்களே

உங்க கட்சி எது?

உங்க தலைவர் யார்? காமராஜர் மாதிரி உத்தமரா?

உங்களுக்கும் காமராஜருக்கும் என்ன சம்பந்தம்?

எதற்காக காமராஜரின் முகமுடியுடன் கலைஞரையும் திமுகவையும் விமர்சிக்கிறீர்?

காமராஜருக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு உத்தமர் வேசம் போடுவது ஏனடா?

Antony Parimalam

1 comment:

  1. அய்யா காமராஜர் ஆட்சியில் தவறுகளே நடக்கவில்லையா?

    ReplyDelete