Monday 6 August 2018

அகதி முகாமும் திமுகவும்

அகதி முகாமும் திமுகவும்
*************************
எழுதியவர் : கணன் சுவாமி (அகதியாக தமிழகம் வந்த ஈழ தமிழர்)

இங்கு பத்மநாபா கொலையால் திமுக ஆட்சியை இழந்ததை குறிப்பிடவில்லை அதை தொடர்ந்து ராஜீவ் கொலையையும் அதன்பிறகான திமுகவின் வீழ்ச்சியையும் கண்ணால் கண்டவன்.

கலைஞர் எம்மாம் பெருமனிதன் 80க்கும் அதிகமான மீன்பிடி படகுகளை வாராவாரம் அனுப்பி அகதிகளை இலவசமாக கொண்டுவந்து சேர்த்தது திமுகவே.

அப்படி ஒரு படகில் நானும் இலவசமாக அகதியாய் வந்து பதினைந்து வருடம் அகதிமுகாமில் வளர்ந்தவன். அப்போ அகதிக்கு 57 பைசாவுக்கு அரிசியை அறிவித்தவர் கலைஞர். அந்த அரிசியை இன்றும் லட்சம் இலங்கை அகதிமக்கள் வாங்கிட்டு தான் இருக்கிறார்கள்.

இரண்டு லட்சம் பேர் அகதியாக இருந்த பொழுது 20 மெடிக்கல் சீட் 20 எஞ்சினிரிங் சீட் அறிவித்தவர் கலைஞர்.

ஜெயலலிதாம்மா காலம் அகதிமுகாம் ஜெயிலாக மாறும் கலைஞர்காலத்தில் ஒரு போலீஸ்காரன் கூட இருக்கமாட்டான்

அகதிகள் கடற்கரையோரங்களில் மீன்பிடித்தொழிலுக்கு செல்வர் ஏதோ அவனவன் அவனவன் பாடு பார்ப்பான் அதெல்லாம் ஒரு காலம் இப்போ நெனைச்சுக்கூட பார்க்க முடியாது என்னவோ போங்க கலைஞர் காலத்தில் நான் மிகவும் சுதந்திரமான அகதியாய் இருந்தேன்.

அவர் எனக்கு தன்னாலான எல்லாவற்றையும் கொடுத்து கெளரவித்தார் எங்க ஊராளுங்களில் சிலர் மரியாதை தெரியாத பயலுக அவரை எழுந்தமானாத்துக்கு தூற்றுவார்கள்.

அவர்கள் புத்தி அவ்வளவு தான் தலைவர் கலைஞரை பற்றி கேட்கணும்னா பழைய அரசியல்வாதி தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரகாசனைத்தான் கேட்கணும் இன்றுவரை மிக நெருக்கமாக இருப்பார்.

அந்த அரை நாள் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததே சந்திரகாசன் தான். தலைவர் அந்த முடிவில் சொன்னது “ தந்தை செல்வாவின் மைந்தன் போர் முடிந்தது என்று சொல்கிறார் நான் அவரை நம்புகிறேன் போர் முடிந்த பின்னர் இந்த உண்ணாவிரதத்தைதொடர்வதில் அர்த்தமில்லை” என்றார்

நன்றி Prakash JP

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment