Tuesday, 1 May 2018

அதிமுகவிடம் ஊடகங்களும் சில்லுண்டி சில்லரை கட்சிகளும் கேட்க மறந்த கேள்விகள்😁



அதிமுகவிடம் ஊடகங்களும் சில்லுண்டி சில்லரை கட்சிகளும் கேட்க மறந்த கேள்விகள்😁

1)1972-77 வரை இந்திராவுடன் நெருக்கமாக இருந்த MGR காவேரி பிரட்சினையை தீர்க்க எடுத்த முயற்சிகள் என்ன?

2)இந்திரா முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் 1977 ல் ஆட்சிக்கு வந்த MGR காவேரி வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் போடலாம் என்ற உரிமை இருந்தும் ஏன் வழக்கு போடவில்லை?

3)1977 முதல் 1987 வரை MGR ஏன் நடுவர் மன்றம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?

1983 ல் மன்னார்குடி ரெங்கநாதன் போட்ட வழக்கில் கூட 1986 வரை MGR அரசு தன்னை
இணைந்துக் கொள்ளாதது ஏன்?

4)பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய  கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998 இல் தானே தி.மு.கழக ஆட்சியில், இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

காவேரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை பெற அப்போது 1991-96 வரை காங்கிரசுடன் நெருக்கமா இருந்த  ஜெயலலிதா ஏன் முயற்சிக்கவில்லை?

1991-1996 மற்றும் 2001-06 ஆட்சியிலிருந்த ஜெயலலிதா காவேரி பிரட்சினையை தீர்க்க செய்த முயற்சிகள்தான் என்ன?

5) 2007 நடுவர் தீர்ப்பு வந்தவுடன் கர்நாடகா CIVIL APPEAL NO. 2453 OF 2007 வழக்கை தமிழக அரசு மீது போட்டது

கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கர்நாடக அரசு மீது CIVIL APPEAL NO. 2456 OF 2007 போட்டது

கேரள அரசு CIVIL APPEAL NO. 2454 of 2007 மூலம் தமிழக அரசு மீது வழக்கு போட்டது.

இந்த வழக்கெல்லாம் முடிவுக்கு வராத நிலையில் கலைஞரால் எப்படி காவேரி பிரட்சினையை தீர்த்திருக்க முடியும்?

6)காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் வெளிவர அடிப்படையே
கலைஞர் போட்ட Civil Appeal No. 2456 of 2007 தான் காரணம்.

மேலும் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட நீதிமன்றத்தை  ஜெயலலிதாவா கோரினார்?

நீதிபதிதானே தமிழக அரசிடம்
நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட மனுதாக்கல் செய்ய சொன்னார்.

பிறகு எந்த அடிப்படையில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட ஜெயலலிதா காரணம் என்கிறீர்கள்?

7) 2011 முதல் 2018 வரை அதிமுகதானே ஆட்சியில் இருந்துள்ளது. அப்படியிருந்தும் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி யிலிருந்து 177.25 டி.எம்.சி யாக குறைக்கப்பட்டதற்கு அதிமுக சரியாக வாதாடவில்லை என்பதுதானே காரணம். இதை மறுக்க முடியுமா?

8) கடந்த 27 ஆண்டுகளில் வழங்கப்படாத இறுதி தீர்ப்பு 2018ல் தானே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வழங்கப்பட்ட எந்த தீர்ப்பும் இறுதி தீர்ப்பு கிடையாதே.

பிறகு எந்த அடிப்படையில் கலைஞரை குறையடிக்கிறீர்கள்?

காவேரிக்காக எதுவுமே செய்யாத அதிமுக இறுதி தீர்ப்பை அமல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மற்றவர்களை குறை கூறியும் விமர்சித்தும் பொழுது போக்குவது ஏன்?

 

No comments:

Post a Comment