Saturday, 12 May 2018

உண்மையில் ஓட்டுக்கு பணம் என்பது காமராஜர் பார்முலா தம்பிகளா.

உண்மையில் ஓட்டுக்கு பணம் என்பது காமராஜர் பார்முலா தம்பிகளா.

1962 ல் காமராஜர் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க பஸ்முதலாளி நடேசமுதலியாரை நிறுத்த அவர் வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்கி ஓட்டுக்கு 10ரூ தந்து 9190 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

2003 ல் சாத்தான்குளம் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுக்கு வீடு பணம் தந்து வென்றார்
2005 பிப்ரவரியில் காஞ்சிபுரம், கும்மிடிபூண்டியில் ஓட்டுக்கு மூக்குத்தி கொடுத்தது ஜெயலலிதாதான்.

https://thewire.in/politics/wiping-out-tamil-nadus-cash-for-votes-syndrome-is-no-easy-task-for-election-commission

ஓட்டுக்கு பணம் தந்த காமராஜரையும் ஜெயலலிதாவையும் விட்டு விட்டு திருமங்கலத்தில்தான் முதன் முதலில் பணம் கொடுத்தது போல திமுகவை குறையடிக்கின்றனர் கபட மதியுள்ளோர்.

2011 ல் நாங்கள் செய்த சாதனைகளுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என இருந்தது திமுக. மின்சார பிரட்சினை,  2G திமுகவை காலை வாரிவிட்டது.

2016 ல் ஜெயலலிதா பல ஆயிரம் கோடிகளை தந்துதான் வென்றார். திமுக வேட்பாளர்களில் சிலர் பணம் தந்தனர். அது அதிமுகவுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. பல திமுக வேட்பாளர்கள் வெற்றி உறுதி என நினைத்து கட்சி தந்த பணத்தை கூட செலவு செய்யாது அமுக்கி விட்டனர்.

விளைவு அதிமுக ஆட்சி.

அடுத்த முறையும் மதுவை ஒழிப்பேன் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என திமுக நினைத்தால் விளைவு எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.

By A.Parimalam

No comments:

Post a Comment