கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?
அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.
அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.
இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர்
அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றவர் ஜெயலலிதா.
இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின் வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18.10.08ல் இலங்கை அதிபருடன் பேசினார்.
ஈழப்போரை நிறுத்த திமுக 24.10.08ல் சென்னையில் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியது
26.10.08ல் பிரணாப் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.
12.11.08ல் இலங்கை போர் நிறுத்த தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும்,
4.12.08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேசச் சொன்னதும்,
அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27.12.08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும்
கலைஞர்தானே
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் கலைஞர் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டார். பிரதமரும் கலைஞரோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் கலைஞரை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தார் கலைஞர். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் தன் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார் கலைஞர்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த கலைஞர் தன் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தானாக முடிவெடுத்துச் சென்றார்
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
28.4.09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்'
"கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’'
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
"6A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams"
அப்படியென்றால் கலைஞர் மட்டும் ஏமாந்தார் என அர்த்தமா?
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
இதெல்லாம் நாடகமா?
கலைஞர் உண்ணாவிரதம்
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
"LTTE are very strong and are in brink of victory and this fast by MK is an attempt to prevent their victory "
அப்போது இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் புலிகளை பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்தது. அதை புலிகள் ஏற்கவில்லை.
தாங்கள் போரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும் கலைஞர் அதை தடுக்க பார்ப்பதாகவும் நடேசன் சொன்னாரே. அது சரியான பேட்டியா?
விரைவில் பிஜெபி ஆட்சியை பிடிக்கும். தனி ஈழ அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்த தகவலைத்தானே புலிகள் நம்பினார்கள்.
2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தால்
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
போர் உச்சநிலையின் போது மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை.
ஆனா மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே என்பீர்கள்.
அப்படியே திமுக ஆட்சியை ராஜினாமா செய்து இழந்திருந்தாலும் போர் நின்றிருக்க வாய்ப்பே இல்லையே.
பதிலாக ஈழத்தாய் 2009 லேயே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
ஆனால் இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இரண்டு ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான்.
ஆனால் மக்கள் திரும்ப திமுகவிற்கு வாக்களித்தனரா?
அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களையும் நடத்தியுள்ளது
ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்தது திமுக.
16.4.02ல் தமிழக சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?
17.1.09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறந்தது ஏன்?
பதில் சொல்லுங்க தமிழ் தேசியவாதிகளே?
சிறப்பு
ReplyDeleteஉண்மை.... நடேசன் பதிலும் விளைவும்....போலி தமிழ்தேசிய வியாதிகள் படித்து சிந்திக்கவும்...
ReplyDeleteஅய்யா, உண்மை என்ன என்பது ஈழத் தமிழருக்கு நன்றாகவே தெரியும். கலைஞருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்தச் செய்திகள், புரிந்து கொள்ளாத,புலம் பெயர்ந்த தமிழர்களால் மட்டுமே தொடர்ந்து பரப்பப்படுகின்றன என்பதே உண்மை. இலை மலர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டனவே. "ஈழத் தாயால்" ஈழம் மலர்ந்துவிட்டதா? ஜெயா ஆட்சிக்கு வருவதற்காகப் போட்ட வேடம் என்பது இன்னுமா புரியவில்லை?
ReplyDelete