Sunday 22 July 2018

1980 ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி வர யார் காரணம்?

1978 கடைசியில் சிக்மகளூர், தஞ்சாவூர் MP சீட் காலியாக இருந்தது. இந்திரா தஞ்சையில் போட்டியிட விரும்ப MGR அன்றைய மத்திய அரசுக்கு பயந்து அதை ஏற்கவில்லை. பிறகு சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இந்திரா.

அதன் பிறகே இந்திரா கலைஞருக்கு கூட்டணி அமைக்க தூது அனுப்பினார். கலைஞர் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அதில் உறுதியாக இருந்தார் என பாராட்டினார்

அதற்கு பதில் அளித்த கலைஞர், நெருக்கடி நிலைக் கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவித்தால் கூட்டணி அமைப்பது குறித்து பேசலாம் என்றார். இதையடுத்து நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ததற்கு வருத்தம் தெரிவித்த இந்திரா, இனி இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரவே வராது என்று உறுதியளித்தார்.


கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திரா காந்தி அம்மையார் சென்னை கடற்கரையில் பேசியது சுருக்கமாக

"நங்கள் தவறு செய்துள்ளோம். அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, அந்த தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் மனிதர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான்! தவறுகள் செய்த பிறகு அதை உணர்ந்து, தவறுகளில் இருந்து தங்களை மாற்றிகொள்ள்கிறார்களா என்றேதான் நீங்கள் பார்க்கவேண்டும். தவறுகளை செய்த நான் மக்களுக்கு உறுதிமொழி தருகிறேன். அன்று நடைப்பெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது. என்னுடைய கவனத்திற்கு வராமல் நிறைய காரியங்கள் நடந்தேறியது. பிரதமர் என்ற முறையில் அந்த தவறுகளுக்கு முழு அளவில் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் உறுதியாக இருப்பவர். ஒரு நோக்கத்தைவைத்து, இலட்சியத்தை வைத்து, தேசிய அடிப்படையில் மக்கள் நல்வாழ்விற்கு காங்கிரஸ் திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து செயல் படவேண்டும்"

காங்கிரஸை ஆதரித்து அதை கைவிட்ட எம்ஜியார் ஜனதாக் கட்சியின் அடிமையாக இருந்தார்

அதன் பிறகே 1980 இல் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது.

இந்த முட்டாள்கள் கலைஞர் வழிய போய் இந்திராவை வாழ்த்தி வரவேற்றது போல் பேசுகிறார்கள்

No comments:

Post a Comment