ANTONY PARIMALAM

Saturday, 7 July 2018

திராவிடமா? தமிழ்தேசியமா? எது தேவை? ஏன்?

திராவிடமா?  தமிழ்தேசியமா?
எது தேவை? ஏன்?

பெரியார் திராவிடர்களுக்காக குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிலை என்ன?

எல்லாவற்றிலும் மூடம்பிக்கைகள், சாதிவெறி,சூத்திரப்பட்டத்துடன் படிப்பறிவின்றி வீழ்ந்து கிடந்தனர் மக்கள்.

திராவிடம் வரும் முன்பே வீழ்ந்து கிடந்த தமிழர்களை எப்படி திராவிடத்தால் வீழ்ந்தார்கள் என்று சொல்கிறீர்கள் தமிழ்தேசியவாதிகளே.?

பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே கிடையாதே.  சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழிகளை உள்ளடக்கிய இராஜ்யம் என்பதால்தான் பொதுவான பெயராக இனத்தின் அடிப்படையில் திராவிடம் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

திராவிடத்தின் முக்கிய நோக்கமே ஆரியர்கள் உருவாக்கிய ஏற்றத்தாழ்வை சிதைப்பதும் சமதர்ம சமநீதியுள்ள சமுதாயத்தை உருவாக்குவதுதானே.

மொழி அடிப்படையில்  அதாவது தமிழ் தேசிய அடிப்படையில் தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்றால் அதில் ஆரியர்களையும் சேர்த்துதானே ஆக வேண்டும்.

ஆரியர்களை உடன் வைத்துக்கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூகநீதியை முன்னெடுக்க முடியுமா தமிழ் தேசியவியாதிகளே?

தமிழில் இருந்து பிரிந்ததுதான் மற்ற திராவிட மொழிகள் எனும் போது தமிழ்தேசியம் என்ற பெயரில் மற்ற திராவிடமொழிகள் பேசுபவர்களை பிரித்து பார்ப்பது என்பது திராவிட இனத்தை கூறு போடுவதாகாதா? வட இந்திய ஆரியர் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை உரிமைக்குரல்களை நீர்த்துப் போகச் செய்யாதா? ஒரே இனத்தை சேர்ந்தவர்களையே கூறு போட வேண்டுமா?

ஒரே குடும்பத்தில் சகோதரர்களே சொத்துக்காக அடித்துக் கொண்டு கொலைகளே நடக்கிறது எனும் போது திராவிட நாடுகள் இடையே வரும் நதி நீர் பிரட்சினையெல்லாம் பெரிய விசயமா?

 தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா?

வெளிநாடுகளில் வாழும் தமிழ்  பேசத்தெரியாத தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?

தமிழ் பேசும் வட இந்தியர்களை தமிழர்கள் என ஏற்குமா தமிழ்தேசியம்?

சமஸ்கிருதத்தை தேவபாஷையாக அதன் கலப்பு மொழியான இந்தியை தாங்கி பிடிக்கும்  தமிழில் பேசும் பார்ப்பணர்களை தமிழர்கள் என ஏற்க முடியுமா?

தமிழை திராவிட இனத்தை சிதைத்தது யார்?

தமிழ்மொழி சிதைவடைந்தே கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி, மராட்டி என மாறியதற்கு காரணம் ஆரிய சமஸ்கிருதம்தானே.

சாதியற்று வாழ்ந்த ஒரே திராவிட இனத்தில் தனது மொழியை திணித்து சாதிகளை உண்டாக்கி ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தி இயற்கை தெய்வங்களை வணங்கிய திராவிடர்கள் மீது ஆரிய மதத்தை திணித்து அதன் அடிப்படையில் மூடநம்பிக்கைகளை உருவாக்கியது ஆரியம்தானே.

அந்த ஆரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இன்றுவரை திராவிடர்கள் மீளவில்லையே.
மேலும் மேலும் திராவிடர்களின் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிவருகிறதே.

எனவேதான் திராவிடத்தின் தேவை ஆரிய அடக்குமுறைகளை எதிர்க்க இன்றும் தேவைப்படுகிறது.

என்று சமநீதியும் சம உரிமைகளும் எல்லோருக்கும் கிடைக்கிறதோ அது வரை திராவிடம் தேவைதான்.

Antony Parimalam
Posted by Antony Parimalam at 00:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 5 July 2018

1976 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மை காரணங்களும் கவர்னர் அறிக்கையும்

திமுக ஆட்சி 1976 இல் கலைக்கப்பட்ட பின்னணியும் கவர்னர் அறிக்கையும்

திமுக ஆட்சி கலைக்கப்பட திட்டமிட்டே பல காரணங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று முறையற்ற ஆட்சி. அதில் வீராணம் திட்டமும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதை கமிசன் அமைத்து விசாரிக்கலாமே. ஆட்சியை கலைக்க வேண்டியதில்லையே.

உண்மையான காரணம் கலைஞர் எமர்ஜென்சிக்கு ஒத்துழைப்பு தராததும் அதை எதிர்த்ததும்தான்

திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்கள்

1)இந்திரா தேர்தல்  வெற்றி சட்டப்பூர்வமாக செல்லாது என்று ஷோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கிற்கு 1975 ஜுன் 12 ம் நாள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தஞ்சைமாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், இந்திராகாந்தி ராஜினாமா செய்யவேண்டுமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்தார்.

2) 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.


அதே ஆண்டு ஜூன் 27ம் தேதி தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த செயற்குழுவில், எமெர்ஜென்சிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 6ம் தேதி சென்னை கடற்கரையில், தலைவர் கலைஞர் தலைமையில் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.

3) தலைவர் கலைஞரும், பெருந்தலைவர் காமராஜரும், பூந்தமல்லி சாலையில் உள்ள டாக்டர் அண்ணாமலை அவர்கள் இல்லத்தில் தனியாகச் சந்தித்து இதுகுறித்து நீண்ட் ஆலோசனையும் நடத்தினர். அப்போது கலிவரதன் உடன் இருந்தார். பெருந்தலைவர் காமராஜர், "தேசம் போச்சு தேசம் போச்சு" என்று வேதனையோடு கூறியதை அனைவரும் அறிவார்கள்.

4) ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் துவங்கியதும் தி.மு.க உறுப்பினர்களாக இருந்த இரா. செழியன் மக்களவையிலும், மாரிச்சாமி மாநிலங்களவையிலும் அவசரநிலையினை எதிர்த்து கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர்.

5) இந்திராகாந்தி அந்த சமயத்தில், இந்தியாவில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று தி.மு.க தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் நடக்கும் குஜராத் மாநிலம் என்று கூறி இந்த இரண்டு மாநில ஆட்சிகளையும் குறிவைத்து கடுமையாக எச்சரிப்பதுபோல பேசினார்.

6)  திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 1975 ஆகஸ்ட்9,10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல்லை மாநாட்டிலும், அதே ஆண்டு கோவையில் டிசம்பர் 28ல் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் அவசரநிலை குறித்து தி.மு.கவின் கண்டன தீர்மானமும், தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சும் அமைந்தது.

இம்மாநாடுகளுக்குப் பிறகு, பம்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது, ஆர்.எஸ்.எஸ், ஆனந்தமார்க் , நக்சலைட் இயக்கங்கள் போன்று தி.மு.கவும் தடைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 26 இயக்கங்கள் அவசர நிலைகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.

7) சஞ்சீவ ரெட்டியும் அடிக்கடி வந்து தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திப்பது உண்டு. ஜார்ஜ் பெர்னாட்டஸும் தலைவர் கலைஞர் அவர்கள் உதவியால் சென்னையில் வந்து தங்கியிருந்ததால் மத்திய அரசால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. அவர் கல்கத்தாவிற்கு ரயிலில் சென்ற போதுதான் எம்.கே.நாராயணன் மூலமாக உளவறியப்பட்டு தமிழக எல்லைக்கு வெளியே கைது செய்யப்பட்டார்.

8) அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,"என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்" என்று பாராட்டிச் சொன்னார்.

அப்போதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் நிர்மாணித்த, வள்ளுவர் கோட்டம் அமையும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் மீது வன்மம் கொண்டு இந்திராகாந்தியின் தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31-நாளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

(நன்றி K.S. ராதாகிருஷ்ணன்)

****
உண்மையில் ஆளுனர் அறிக்கை
யாரால் தயாரிக்கப்பட்டது.?

1971 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக கே.கே.ஷா பொறுப்பேற்றார். இவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூகநீதி திட்டங்களில் மனதை பறிகொடு்ததார். அதனால்தான் தனது பெயருக்கு முன் உள்ள கே.கே. என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களுக்கு கலைஞர் கருணாநிதி என்று விளக்கம் அளித்தார். அதாவது தனது பெயரை கலைஞர் கருணாநிதி ஷா என்று அழைப்பதை பெருமையாக நினைப்பதாக கூறினார். அந்த அளவுக்கு மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நல்லுறவு இருந்தது.


ஆனால், அத்தகைய ஆளுநரிடம் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்க 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இந்திரா தலைமையிலான மத்திய அரசு வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றது. இதை அவரே பின்னர் தெரிவித்திருக்கிறார். திமுக ஆட்சி கலைப்புக்கு பிறகு மேலும் 5 மாதங்கள் அந்த பொறுப்பில் நீடித்தார்.

கவர்னர் அறிக்கையின் முழுவிபரம்

(1) முறையற்ற ஆட்சி (Maladministration)

இதன் கீழ் 7 குற்றச்சாட்டுகள் திமுக மீது சுமத்தப்பட்டது

அ)..வீராணம் திட்டம் முறைகேடு

ஆ) 1973 ல் மத்திய அரசு தந்த வறட்சி நிவாரண நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது
( AG Report)

இ). தமிழக மருத்துவக் கல்லூரிகளின் Admission ஐ
centralize செய்தது திமுக. இதனால்  முறைகேடுகள் நடைபெற வாய்ப்ளித்தது


ஈ) நான்காவது ஐந்தாண்டு திட்ட நிதியை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியது

எ) On account of the administrative interference, Shri Kattur Gopal, President of the Dravidian Labour
Progressive Federation, which is the Labour Front ofthe DMK Party was installed as President of the 10,000 strong Simpson Group workers and Staff Union, displacing
Gurumurthy of INTUC (Indian National Trade Union
Congress). This action sparked off unprecedented trouble in
the Simpson Group offactories.

ஏ). The Government machinery of the State was liberally employed for collection offunds for the party.

ஐ) There were numerous instances of interference and misuse
of Government machinery including the use of Police force
for the purpose of furtherance of party interests.



(2) பத்திரிக்கை தணிக்கையினை சரியாக செய்யாதது

 Immediately after the Proclamation of Emergency by Mrs. Indira Gandhi in 1975, the State Government issued its own censorship orders under mle 48 of Defense and Internal Security ofIndia Rules (Acts), 1971.

 When the Central Government issued detailed basic censorship order, the State Government officials did not faithfully carry out censorship according to the guidelines issued by the Centre.

 This resulted in the free circulation of a lot ofliterature including newspapers containing exhortations and public speeches highly critical of emergency
measures. These publications found their way to the neighbouring states also and complaints were received from Kerala and Pondicherry about the difficulties faced by them by the flow of such literature from Tamil
Nadu.

(3)அவசரநிலையை சரியாக
அமல்படுத்தாமை மற்றும்
எதிர் கட்சி பத்திரிக்கைகளை தவறாக பயன்படுத்தல்

Apart from the laxity in the implementation of emergency
measures, there were glaring instances of misuse ofpower.

 For instances the power vested in the State Government under rule 47(1) of Defence and Internal Security of India Rules, 1971 was misused to muzzle news media belonging to opposition parties.



(4)தனித்தமிழ்நாடு கோரிக்கை

 Under cover of demand for State autonomy, DMK leaders
including the Chief Minister Mr. M. Karunanidhi and other Ministers
from time to time held out veiled threats of session in case the desired autonomy was not granted. Sinister comparisons were made in their public utterances with the events in Bangaladesh and the fate of Mujibur Rehman.


 Some ofthe DMK leaders gave a threat of revolution in Tamil Nadu ifthe life ofthe State Assembly was net extended. In the Fifth State Conference ofDMK held from 25 to 28th December, 1975 at Coimbatore,4 it was underlined that if the party’s demand for State
autonomy was not conceded, the DMK would have no alternative but to revive its earlier demand for 'Separate Tamil Nadu’.


The sustained campaign involving propaganda, agitational approach and indirect encouragement of a climate of violence on the part ofthe DMK party to achieve the above purpose was against the concept of national
integration.

Antony Parimalam


Posted by Antony Parimalam at 02:53 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 4 July 2018

மோனோ ரெயிலும் மெட்ரோ ரெயிலும்

மோனோ ரெயிலும்
மெட்ரோ ரெயிலும்

மோனோ ரயில் உலகம் முழுவதும் தோல்வியான திட்டம்

மோனோ ரயில் திட்டத்தை ஜெ தன் ஆட்சி முடிவில் 2006 ல் அறிவித்தார். நிதி எதுவும் ஒதுக்கவில்லை. வாயாலேயே 110 ன் கீழ் அறிவிப்புகளை அள்ளி வீசி சாதனை படைத்தவராச்சே ஜெயலலிதா.  அவருக்கு மோனோ ரயில் திட்டம் பத்தோடு பதினொன்று  அவ்வளவுதான்.


திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 2007-08 இல் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

2007-08 தமிழக அரசு மெட்ரோ ரெயில் திட்ட ஆரம்பக்கட்ட பணிகளுக்கு 50 கோடி ஒதுக்குகிறது.பிராஜெக்ட் தயாரிப்பு பணிDelhi Metro Rail Corporation னிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தமிழக மந்திரி சபை நவம்பர் 7, 2007 இல் ஒப்புதல் அளித்து
Chennai Metro Rail Limited (CMRL)
துவங்கப்படுகிறது

ஏழு வழித்தடங்கள் தேர்வாகி திட்டமிடப்படுகிறது

2008 ஏப்ரல் 16 ஆம் தேதி மத்திய திட்ட கமிஷனின் ஒப்புதல் பெறப்படுகிறது.

  21 November 2009, அன்று Japan Banking Corporation உடன் கடன் ஒப்பந்தம் ஏற்படுகிறது


 February 2009 இல் ஹைதராபாத்-Soma Enterprise க்கு ரூ199.2 ஒப்பந்தம் வழங்கப்படுகிறது  (4.5 கிமீ)

 10 June 2009ல் கோயம்பேடு அண்ணாநகர் இடையே பணிகள் ஆரம்பம்

 மார்ச் 2011 இல் சென்னை மெட்ரோவுடன் ஜப்பான் அரசு 2932.6 கோடி கடன் ஒப்பந்தம் போடுகிறது.

மேலும் ஒப்பந்த பணிகள்
Larsen and Toubro
Consolidated Construction Consortium Limited.
Alstom
Johnson Lifts and SJEC Corporation
வழங்கப்பட்டு பணிகள் 2010-11 இல் நடைபெற துவங்கி விட்டன.


2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க முயற்சித்தார். பிறகு வேண்டா வெறுப்புடன் திட்டத்திற்கு ஆதரவளித்தார்.

அதே சமயம் மோனோ ரயில் திட்டத்தை மெட்ரொ ரயிலுக்கு போட்டியாக அறிவித்தார்.

நல்லவேளை நிதி ஒதுக்கி வேஸ்ட் அடிக்கவில்லை.
Posted by Antony Parimalam at 07:43 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது

2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது
3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது

4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம்

6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது

7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது

8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது

9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீடுகள் கட்டும் பணியை நிறைவேற்றியது.

10) சுனாமியால் பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கத் திட்டம் அறிவித்ததும் திமுக ஆட்சியில்தான்.

11)மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தொலைத்தொடர்பு கோபுரப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல், வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்து, ஊழல் செய்துள்ளது. இதன் காரணமாகத்தான் மீனவர்களுக்கான வாக்கி டாக்கி பயன்பாடு இதுவரை முழுமை பெறாமல் உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில், பல அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அதே நிலை தான் தற்போதைய அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.

 தேர்தல் வாக்குறுதியிலும், சட்டப் பேரவையிலும் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் அளித்ததும், சொன்னதைச் செய்ததுடன், சொல்லாததையும் செய்தது திமுக அரசு மட்டும்தான்.

By Thiru M.K. Stalin திமுக செயல்தலைவர்

Posted by Antony Parimalam at 04:40 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 3 July 2018

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா கட்சியினரே

கலைஞரின் சொத்தை பற்றி கேள்வி கேட்கும் அதிமுக பாமாகா ,நாம் தமிழர், பாஜா கட்சியினரே...... தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

தங்கள் தலைவர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பு என்ன சொத்து வைத்திருந்தனர்.?

இன்று அவர்களிடம் என்ன சொத்துக்கள் உள்ளது என என்றாவது சிந்தித்தது உண்டா?
அதை அறிந்துக் கொள்ள முயன்றது உண்டா?

ஆட்டு மந்தைகள் போலத்தானே இருக்கிறீர்கள்.

உங்கள் தலைவர்கள் அக்மார்க் யோக்கியர்கள் என்பதை உறுதி செய்த பின்தானே நீங்கள் மற்றக் கட்சித் தலைவர்களை கேள்வி கேட்க முடியும்?

உங்கள் தலைவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதை மறக்க வேண்டாம் ஆட்டு மந்தைகளே.

கொஞ்சம் மூளையை உபயோகிங்க.

1)1976 ஜனவரியில் திமுக ஆட்சியை கலைத்த இந்திராவால் ஏன் எமர்ஜென்சி காலத்திலேயே கலைஞர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை? ஏன் வெட்டித்தனமா கமிசன் போடனும்? ஒரு FIR கூட போட முடியாதது ஏன்?

2) 10 வருசம் ஆட்சியிலிருந்த MGR ரால் கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதது ஏன்?

3)1991 இல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா பழிவாங்காத ஆளே கிடையாதே.
கலைஞர் மீது 1996 வரை எந்த நடக்கையையும் எடுக்க முடியாதது ஏன்?

4) 1996 முதல் 2016 வரை சொத்துக்குவிப்பு வழக்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜெ மற்றும் சசி குடும்பத்தினர்  கலைஞர் மீது மிக மோசமான கோபத்தில் இருந்திருப்பார்கள்.

10 வருட ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே இருந்தது.

 கலைஞர் குடும்பச்சொத்தை நீங்களெல்லாம் பதிவு போடும் போது அந்த விபரம் கலைஞரை பழிவாங்க காத்திருந்த உளவுத் துறையையே கையில் வைத்திருந்த  அவர்களுக்கு தெரியாதா?

ஏனென்றால் கலைஞர் சொத்துக்கள் என நீங்கள் போட்ட பட்டியலே டுபாக்கூர்தான்.

 18 வயது முதல் 90 வரை 72 வருடங்கள் ஆண்டுகள் உழைத்தவருக்கு சொத்துக்கள் இல்லாமலா இருக்கும்?

அவற்றுக்கு முறையாக கணக்கு காண்பித்திருந்ததால்தான் ஜெயாவினால் கலைஞர் மீது ஒரு
FIR கூட போடமுடியவில்லை.

கலைஞரால் 20 வருடம் நிம்மதியிழந்த சகல அதிகாரம் படைத்த ஜெயலலிதாவாலேயே
எதுவும் செய்ய முடியாத போது
இந்த சில்லரை கட்சி மூடர்கள் தினம் தினம் கலைஞரை பற்றி கதை கட்டுவது கேடு கெட்ட
#மொள்ளமாரித்தனமே
Antony Parimalam
Posted by Antony Parimalam at 21:27 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 1 July 2018

கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா?

Skip to content








கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா?

கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா?
தடுக்க முயற்சிக்கான ஆதாரம்👇
https://indiankanoon.org/doc/1945849/
உச்சநீதிமன்றம் காவேரி வழக்கில் 22 November, 1991 வழங்கிய தீப்பில் பாரா (6) ல்
கலைஞர் அரசு கர்நாடக அரசு கட்டிக்கொண்டிருந்த அணைகளை தடுக்க இடைக்கால தீர்ப்பு கோரியதை 25.1.1971 தீர்பில் ஏற்காமல் டிஸ்மிஸ் செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது
Tamil Nadu moved this Court by means of a suit under Article 131 of the Constitution being Suit No. 1 of 1971 seeking a direction to the Union Government to constitute a Tribunal and to refer the dispute to it. In the said suit, Tamil Nadu applied for an interim order to restrain the State of Karnataka from proceeding with and executing the projects mentioned therein. This Court by its Order of 25th January, 1971 dismissed the application for interim relief.
ANTONYPARIMALAM88021ST JULY 2018EDIT

Leave a Reply

Logged in as antonyparimalam8802. Log out?
 
 

Post navigation

PREVIOUSPrevious post:ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்? திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?


Blog at WordPress.com.
Posted by Antony Parimalam at 12:02 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்? திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?

ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?

1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.

1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.

ஆதாரம்.

http://dev.newindianexpress.com/states/tamil-nadu/2017/apr/11/when-price-tag-of-a-vote-was-just-re-1-upma-and-coffee-in-tamil-nadu-1592329--1.html

MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்

The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.

In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well

ஆதாரம்
https://www.thestatesman.com/opinion/when-queen-bee-dies-1487633366.html

ஜெயலலிதாவின் Cash for Vote
Story 👇

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது

2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது

இதற்கு பிறகு 2009 ல்  தான் திருமங்கலம் தேர்தல்.

1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?

திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.

அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.


Antony Parimalam

Posted by Antony Parimalam at 00:14 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

About Me

Antony Parimalam
View my complete profile

Blog Archive

  • ▼  2022 (1)
    • ▼  February (1)
      • நீட் தேர்வு ஏன் தேவையில்லை?
  • ►  2020 (11)
    • ►  December (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2019 (33)
    • ►  December (2)
    • ►  October (3)
    • ►  September (4)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (5)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (7)
    • ►  February (2)
    • ►  January (4)
  • ►  2018 (107)
    • ►  December (6)
    • ►  October (1)
    • ►  September (10)
    • ►  August (26)
    • ►  July (21)
    • ►  June (29)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (2)
  • ►  2017 (67)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  July (12)
    • ►  June (48)
Simple theme. Powered by Blogger.