Saturday 28 December 2019

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*
2011 திமுக ஆட்சியின் முடிவில்
மத்திய அரசின் புள்ளிவிவர நிறுவனம் செய்த ஆய்வில், மொத்த முதலீடு, தொழில் உற்பத்தி, தொழிற்சாலைகள் வரிசையில், தமிழகம் மூன்றாம் இடம் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
"வால்ஸ் ஸ்டீரிட் ஜேனல்' என்ற வெளிநாட்டு பத்திரிகையும், ஆக்ஸ்போடு அனாலிட்டிகா என்ற பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனமும், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளன. 
ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியில்
வணிகத்துறையில் பதினான்காவது இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு.
வியாபாரம் செய்வதற்கு எளிய திட்டங்கள் வகுப்பதும், தொழிற்சாலை வளர்ச்சி விகிதங்களும், சிறு தொழிற்கூடங்களையும் கணக்கில் கொள்ளும் இந்தத் துறையில் தமிழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதில், முதல் இடத்தில் ஜார்க்கண்டும், இரண்டு மூன்றாம் இடங்களைத் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவும் தெலங்கானாவும் பிடித்துள்ளன.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் ஆகிறது. இரண்டாம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5.85 லட்சம் கோடி ரூபாய் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை எந்த முதலீடும் வராத நிலையில் இந்தத் துறையில் பெரிய அடி வாங்கியுள்ளது தமிழகம்.(https://www.vikatan.com/government-and-politics/policies/good-governance-index-for-states-released-by-central-government)
2017-ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கர்நாடகம் எட்டாவது இடத்தையும், இராஜஸ்தான் 9-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
 தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. 
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற தொழில்துறையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பின்னால் 15-ஆவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் 18-ஆவது இடத்தில் இருந்தது.
 இப்போது சில  இடங்கள் முன்னேறியுள்ளது என்றாலும் கூட, இது போதுமானதல்ல.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்தது தமிழ்நாடு.
2016-ஆம் ஆண்டு  ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை.



Tuesday 3 December 2019

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?
திமுக சாதியை ஒழிக்கவில்லை ஏன்??
ஒரு பாஜக பிரமுகரின் கேள்விக்கான பதில் (1)


தென்னிந்திய மக்களிடம் சாதிகள் உருவானதே ஆரியர்களின் படையெடுப்புக்கு பின்னர்தான் என்பதை அறிவீர்.
சாதியை உருவாக்கியது ஆரியர்களான நீங்கள்தானே...உங்களின் வேதங்கள்தானே...
அப்படியெனில் சாதி அமைப்பின் வேர்கள் ஆரிய வேதங்களும் அதை உருவாக்கிய ஆரியர்களும்தானே.
உங்களது வேதங்களும் அவை சொல்லும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உயிரோடு இருக்கும் பொழுது சாதி எப்படி ஒழியும்?
நீங்கள் அவ்வளவு எளிதாக சாதியை  ஒழிக்க அனுமதித்து விடுவீர்களா?
சாதியை வைத்து குளிர்காயும் கூட்டமே நீங்கள்தானே
நீங்கள் நான்கு வர்ணங்களாக திராவிடர்களை கூறுபோட்டதே ...அவர்களே ...அவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று அடித்துக் கொண்டு அழிய வேண்டும் என்பதற்காகத்தானே...
அதுதானே இப்போதைய சாதிசண்டைகளுக்கு காரணம்.
ஆரியர்கள் எந்தக் காலத்திலும் நேரடியாக யாருடனும் மோதுவதில்லை என்பது ஊருக்கே தெரியும்.. ராஜகுரு பணி உங்களுடையதுதானே. தூண்டி விட்டு சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதானே தங்களது பரம்பரை வழக்கம்.
திடீரென சாதியை திமுக ஒழிக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?
1947 க்கு பின் திமுக ஆட்சி என்பது வெறும் 21 வருடங்கள்தான். அதுவும் தொடர்ச்சியாக கிடையாது. 1500 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி வெறும் 21 வருட ஆட்சியில் மறைந்து விடுமா?
இல்லை ..ஆரியர்களாகிய நீங்கள் சாதி ஒழிய விட்டுவிடுவீர்களா?
சாதிய ஒழிப்பு என்பது சாதிச்சான்றிதழ் ஒழிப்பில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். இருந்தும் சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழிந்து விடும் என்ற பொய்யை பரப்புகிறீர்கள்.
இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இன்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவும் பொருளாதார நிலையும் படுபாதாளத்தில் உள்ளது. அவர்களுக்கு கல்வியை தந்து வேலை வாய்ப்பை தந்து அதிகாரத்தை பகிர்ந்து தந்து பொருளாதாரத்தில் மேம்பட செய்ய கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தர சாதிச் சான்றிதழில் அடிப்படையாக தேவைப்படுறது.
ஆனால் அவர்கள் கல்வியில் முன்னேறினால் பொருளாதாரத்தில் மேம்பட்டால் ஆரியர்களின் இன்றைய ஆதிக்கம் மண்ணோடு மண்ணாகிடும் என்பதால்தானே நீங்கள் விபரம் அறியா இடைச்சாதியினரை தூண்டிவிட்டு சாதிச் சான்றிதழ் ஒழிப்பை பற்றி பேசுகிறீர்கள்.
(1)
சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள
ஆரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு பூணூல் அணுவித்துக் கொண்டு உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமை படுத்தி காண்பித்துக் கொள்வது ஏன்?
(2)
சாதி ஒழிப்பில் ஆரியர்களாகிய உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் அதை கோயில் கருவறையிலிருந்து ஆரம்பிக்கலாமே.
அனைத்து சாதியினரையும் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கலாமே? அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாமே?
நீங்களே முன்னுதாரமாக இருந்து அதை செய்து காட்டுங்கள் முதலில்.
(3)
தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் அக்கறையுள்ளதாக காண்பித்துக் கொள்ளும் ஆரியர்களே ..அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சணையும் தமிழ் பாடல்களுடன் தமிழ் வழிபாடுகளை ஆரம்பிக்கலாமே
(4)
சாதியை ஒழிக்க பிராமணர்களே கலப்பு திருமணங்களை செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டலாமே
இதையெல்லாம் நீங்கள் செய்தால் ஆரியர்கள் சாதிய ஒழிப்பில் அக்கறையுள்ளவர்கள் என்பதை ஏற்கிறேன்.
வெறும் 21 வருடம் ஆட்சி செய்த திமுகவை கைகாட்டும் உமது கையின் மற்ற நான்கு விரல்கள் ஆரியர்களாகிய உங்களைத்தானே கைக்காட்டுகிறது.
1967-1975 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெரும் சமுதாய சீர்திருத்தம் கண்டுதானே ஆரியர்களாகிய நீங்கள் உங்களது பினாமியான அதிமுகவை உருவாக்கி அதை இன்றுவரை போன்றி பாதுகாத்து வருறீர்கள்.
அதிமுக வழியாக இன்றும் நீங்கள்தான் ஆட்சி நடத்துகிறீர்கள்.
இந்தியா முழுவதும் ஆட்சி செய்வது அரசியல்வாதிகள் அல்ல. உயர் அதிகாரிகளாக இருக்கும் ஆரியர்கள்தான்.
பிரதமரும் ஜனாதிபதியும் ஆட்சி செய்வதாக மக்களை நீங்கள் ஏமாற்றலாம். ஆனால் ஆட்சியை நடத்துவது அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் உயர்சாதினர்தான்.
உங்களது ஆலோசனையின்றி அனுமயின்றி அரசியல்வாதிகள் நினைத்தாலும் செயல்பட முடியாது
இந்தியாவின் அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களே சாதிகளை ஒழிக்க நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?
சாதிய ஒழிப்பில் உங்களது பங்களிப்புதான் என்ன?

பதில் (2)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுக தெலுங்கர்களை வந்தேறி என்று அழைத்ததா !!!!!
இதுதான் மிகப்பெரிய காமெடி. பாஜகவின் வளர்ப்பு பிள்ளையான நாம் தமிழர் கட்சிதான் தமிழகத்தில் வாழும் மற்ற மொழி பேசுபவர்களை வந்தேறி என பிரிவினை பேசி வருகிறது.
அவர்களை தூண்டி விட்டு திராவிடகட்சியான திமுகவை இழிவு செய்வது பாஜகதான்.
திமுக என்பது மதங்களுக்கும் சாதியினருக்கும் அப்பாற்பட்ட கட்சி.
பிராமணர்களாகிய நீங்கள் திமுகவை எதிர்ப்பது என்பதே திமுகவின் சமநீதி சாதி ஒழிப்பு கொள்கைகளுக்காகத்தானே.
நீங்கள் 3% எதிர்ப்பதாலேயே திமுக மற்ற 97% க்கான கட்சி என்பது தெளிவு.
பதில்(3)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுகவா தாலி அறுப்பு போராட்டம் நடத்தியது.
தி.க வினர் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களது அனைத்து செயல்களுக்கும் திமுக பொறுப்பேற்க முடியுமா?
எந்த நீதிமன்றமாவது தந்தை செய்த தவறுக்கு மகனுக்கு தண்டனை வழங்கியுள்ளதா?
தி.க வினரின் போராட்டம் என்பது பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. பெண்களை அடிமை என்னும் வேதங்களை போற்றுபவர்கள் நீங்கள். அதை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை 
பதில் (4)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுகவை விட இந்து மதத்தின் மேல் அக்கறையுள்ள கட்சியை காட்டத் தயாரா?
திமுக பிராமணர்களை எதிர்க்கவில்லை
பிராமணீயத்தையே எதிர்க்கிறது.
எனவே உண்மையை மறைத்து அப்பாவிகளை ஏமாற்ற வேண்டாம்
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்துக்களுக்கு நன்மை செய்து வருவது திமுகவா?
பாஜகாவா?
️திமுக எல்லா இந்துக்களையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற திராவிட இயக்கத்துக் கட்சி
கோவில்கள் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போராடும் கட்சி திமுக
திமுக இந்துக்கள் அனைவரும்  படிக்க இடஒதுக்கீடு வாங்கித்தந்து அனைத்து இந்துக்களும் படித்து முன்னேற வழிவகுத்த கட்சி.
️திமுக இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் கிறுஸ்தவர்களும் ஒன்று பட்டு  வாழ வேண்டும் என நினைக்கும் கட்சி.
️திமுக இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தக் கட்சி.
திமுக இந்துக்களின் எதிரியென்றால் கீழ்கண்ட கோவில் பணிகளே நடந்திருக்காதே.
2006-2011 ல் திமுக ஆட்சியில் நடந்த திருப்பணிகள் பட்டியல் இதோ..
இந்துக்களுக்கும் இந்து கோவில்களுக்கும் திமுக செய்த நற்காரியங்கள் எண்ணில் அடங்காது.
திமுக ஐந்து ஆண்டு( 2006-11) கால ஆட்சியில் 550 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தும் திருப்பணி வேலைகளை தொடங்கியும் வைத்துள்ளது. கலைஞரின் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து திமுக ஆட்சியில் 2010 ல் மீட்கப்பட்டன
1) சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது திமுகதான்
Temple duties started on 06/05/2000 and Kumbabishekam done on 03/15/2001.
2)Kottaimedu கோயில்
Although ADMK started the temple duties on 05/06/2003, DMK conducted the Kumbabishekam 07/03/2007. Chariot on 01/20/2011.
3)Thirunaraiyur கோயில்
Kumbabishekam took place in 2008, after 23 years. Temple duties were slow due to shortage of funds
4)Elumiyan Kottur
DMK started the temple duties in 2008. The cost of Kumbabishekam was INR 3.3 million.
5)சிதம்பரம் நடராஜர் கோயில்
There are 4 entrances. Kumbabishekams for them were conducted successively, 2006-08.
6)02/18/2010: Karuvoorar Temple Kumbabishekam
https://t.co/iy8f1kd9yV
Ayyanar Temple Pudukkotai:
https://t.co/X7M1gaHUDT
Kumbabishekam - 2010.
7)Samayapuram Mariamman Temple:
https://t.co/HNhajO6vm8
Temple duties started on 07/05/2010, but DMK was voted out in 2011.
8)Renovation of Tiruvarur's temple:
https://t.co/jjTQtRxkvX
Vadamadurai Mariamman Temple duties started 04/2010:
https://t.co/ibpsLfBFgT
...
9)Thiruvattar Temple duties started in 2009:
https://t.co/AbE9L2Kdkk
Thiruvannamalai Kumbabishekam, 2009:
https://t.co/9zkBoaAKz7
...
10)Thamarankottai Temple duties 01/28/2007:
https://t.co/bKEk4o92tK
Sankarankoil:
https://t.co/V3wvAmy2BA
Nallur: https://t.co/OY5FinW9Zr
...
This is just a very small list of Kumbabishekams, Temple duties and chariot runs conducted by the DMK govt from 2006-11, and also 1996-2001.
The DMK govt conducted much more. Nobody can ever forget this incident: Devaram sang after a very long time in the first DMK govt (1967-76). https://t.co/0pUyFk5Ytp
During 2006-11, 1,376 renovations/duties were conducted in 842 Temples.
1996-2001: An equal number of duties were conducted in Temples.
Mylapore 06/06/1996, Sriperumbudur 07/0501996, Thiruneermalai 03/23/1997, Thirupapuliyur 03/26/1997, Cuddalore 03/27/1997, Tiruvenkadu
Periyapalayam 06/07/1998, Alwaythirunagar 07/01/1998, Chennakesava Perumal 01/29/1999, Vallakottai & Tiruverkadu 03/26/1999, Kumbakonam Sarangapani 06/30/199900, b. Adi Kumbeswarar 12/12/1999
Ariyakudi Thiruvengadam 09/16/1999, Alwar Thirunagari Adinadhalvar 02/10/2000.
Chennai Kurangaleeswarar 02/11/2000, Madurai Kalamega Perumal 03/16/2000, Chennai Agatheeswarar 04/16/2000, Vedaranyam 07/14/2000.
Thottiyam Thirunarayanapuram 07/07/2000, Thiruvannamalai & Thiruvanaikaval 07/12/2000, Palani 07/05/2000, Thiruparankundram 06/11/2000.
Bhavani Shiva, Kangeyam Murugan & Thanthonri Malai Perumal Temples, all on 09/10/2000.
DMK used funds for developmental purposes. For instance, Chennai's Tidel Park. But also achieved the above!
https://t.co/R0dfD3o0s3
Thirumutam & Sivayam were conducted on 09/15/2000.
Kumbakonam Swamimalai Temple: 11/10/2000.
and many more smaller Temples.
some mischievous elements are blaming DMK for missing idols. I ask them to see this page:
https://t.co/WzQBGgkbuN
A thousand year old Narasimha statue was retrieved by cops during the DMK years 2006-11. Also see this:
https://t.co/Yh8P7iPFjV
Smuggled Lanka statue recovered.
Moreover it was JJ who specialized in stealing idols!
https://t.co/jsEGgVpIg8
Stolen 1992, retrieved 2009.
I also ask them to see this page:
https://t.co/2to9JHsxmZ
Jayalalithaa & Sasikala stole Emerald & Onyx Lingams in 1992 & 1993 respectively.
If you still doubt me, see this:
https://t.co/IwGwBC1ZPS
Temples are falling apart, after 6 years of negligence by the ADMK govt.
DMK setup 12 Thirumurai classes to revive Tamil Saivite culture. DMK also setup 4,000 Divya Prabandham classes for Tamil Vaishnavism.
DMK rescued Temple properties from illegal encroachments. They also insured the families of priests and temple workers.
Valluvar Kottam:
https://t.co/HCSonYRQpE
1,330 Thirukkural verses inscribed in it. Built by DMK, early 1970s.
Highlight of Tamil culture. https://t.co/fV3F9nM9KV
By.  A.PARIMALAM

Thursday 31 October 2019

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்

1997 திருச்சி மருத்துவக்கல்லூரி
2000 தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
2001வேலூர் மருத்துவக்கல்லூரி

2010திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆரம்பம்

2007 தர்மபுரி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது

2011 விழுப்புரம் மருத்துவக்கல்லூரி

2009 அரசு ஆயூர்வேத மருத்துவக்கல்லுரி கோட்டார்
நாகர் கோயில்

26.2.2011 ல் 400 கோடி ஒதுக்கி
அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகள்

சிவகங்கை
விருதுநகர்
புதுக்கோட்டை
திருவண்ணாமலை

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டம் கொண்டு வந்ததே திமுகதான்

நாகர்கோயில் மருத்துவமனை அடிக்கல் 2001ல் நாட்டியது திமுக

 கடலூர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி 2011ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது
1988ல் அடிக்கல் நாட்டப்பட்ட சேலம் மருத்துவகல்லூரிக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்து  மருத்துவமனை Super specialty ஆக மாற்றியதும் திமுக

2010 பெரம்பலூர் மருத்துவ கல்லூரி இடம் கையகப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்து  அடிக்கல் நாட்டப்பட்டதும்  திமுக ஆட்சியில்தான்


திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை தொடங்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு  சொன்னதற்கான ஆதாரம்



Monday 28 October 2019

ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?

(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு
தேர்தலை புறக்கணித்ததால்தானே
ரணில் விக்ரமசிங்கே தோற்றார்

ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?

(7) மாவிலாறு அணையை மூடி போரை தொடங்கியது ஏன்?

(8) புலிகள் தங்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கலைஞரை ஆலோசித்ததில்லை.

கலைஞரின் வேண்டுகோளையோ அவரது ஆலோசனையையோ கேட்டு தங்களது நடவடிக்கைகளை நிறுத்தியதும் இல்லை.

கலைஞர் தமிழர் தலைவர் அவர்  போரை நிறுத்திருக்கனும் எனப் புலம்புகிறீர்களே புலிகள் ஏன் கலைஞரிடம் எந்த சூழலிலும் எந்த ஆலோசனையையும் பெறவில்லை?

இந்த கேள்விக்கு பதில் என்ன?

(9) 1991 க்கு பின் புலிகளுக்கும் கலைஞருக்கும் எந்த நேரடி உறவும் அல்லது மறைமுக உறவும் இல்லாத பொழுது  கலைஞரால் போரை( தடுக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி) தடுக்க வேண்டிய அவசியம் எப்படி வரும்?

(10) போரில் புலிகளை காப்பாற்ற கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த சமயம் போரை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்ததை உலகறியும். அதன் பின்னர் இலங்கை தன் அறிவிப்பில் இருந்து பின் வாங்கியது.

அதற்கு கலைஞர் எப்படி பொறுப்பாவார்?

இருந்தும் கலைஞரை தூற்றுவது ஏன்?

(11) உச்சக்கட்ட போரின் போது பாராளுமன்ற தேர்தல் நடந்தது. திமுக MP க்களின் பதவிக் காலமே முடியும் தருவாயில் அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம் இல்லையா?


(12) கலைஞரின் அரசு 1991 ல் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய நேரத்தில் அதை கெடுத்தது யார்?

யாருக்காக ஏன் கலைஞர் தனது மாநில அரசை 2009 ல் கலைத்திருக்க வேண்டும்?. அதனால் யாருக்கு என்ன நன்மை?

(13) கலைஞருக்கும் புலிகளுக்கும் உறவு என்ற ஒன்றே இல்லாதபோது அங்கே துரோகம் வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே.

பரஸ்பர நம்பிக்கையே இல்லாத போது துரோகம் எங்கிருந்து வரும்?

(14) எந்த ஒரு போரின் தோல்வியும் ஒரு சில நாட்களில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஈழப்போர் 1983 ல் தொடங்கி 2009 ல் முடிந்துள்ளது. 26 வருடங்களில் நடந்த போருக்கும் புலிகளின் வெற்றி தோல்விகளுக்கும் கலைஞருக்கும் எந்த தொடர்பாவது எப்போதாவது இருந்ததுண்டா?

2009 போரில் மட்டும் கலைஞரை சம்பந்தப்படுத்துவதும் அவர் மேல் சேற்றை வாரி இறைப்பதும் ஏன்?

கலைஞர் புலிகளுக்கு எதிராக என்றுமே பேசியதில்லை

அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஈன எச்சப் பொறுக்கிகள்  வேண்டுமென்றே கலைஞரை அவதூறு செய்கிறார்கள்

நாசமா போவீங்கடா






Wednesday 9 October 2019

திராவிடமும் திராவிடர்களும்

இந்தியாவில் ஆரியர்கள் நுழைவதற்கு

முன்பே ஒரு இனம் குடியேறி வாழ்ந்து வந்தது.

அந்த இனத்தை திராவிடர் என பெயரிட்டு

அழைத்தார்கள். அந்த இனம் பேசிய 72-80

மொழிகளிலும் தமிழ் கலந்துள்ளதால் அந்த

இனத்தின் தலைமையாக தமிழும் தமிழனும்

பார்க்கப்படுகிறான்.

யார் ஏற்றாலும் ஏற்காவிடிலும் தமிழனே திராவிட

இனத்தின் தலைவன். தமிழே திராவிட

மொழிகளின் தலைமை மொழி.

திராவிடர்களுக்கு பின் இந்தியாவில் குடியேறிய

ஆரியர்கள் திராவிட இனத்தை தங்களின் முதல்

எதிரியாக பாவித்து அவர்கள் மீது போர்தொடுத்து

திராவிட இன மக்களை அடிமையாக்கி

வேதங்களை ..புராணங்களை உருவாக்கி

அவர்களது கலாட்சாரம் மற்றும் அவர்களது

மொழியான சமஸ்கிருதத்தை திராவிட

மொழிகளோடு கலந்து திராவிட மொழிகளை

திராவிட கலாட்சாரத்தை சிதைத்தனர் ஆரியர்கள்

திராவிடர்களை ஏமாற்றி நான்கு வர்ணங்களை

உருவாக்கி அதன் மூலம் மன்னர்களை

அடிமைபடுத்தி ராஜகுருக்களாக மொத்த திராவிட

இனத்தையும் சீரழித்தனர்

தங்களின் சொந்த அடையாளத்தை மறந்த

திராவிட இனத்தோர் இன்று முழுமையாக

ஆரியர்களின் அடிமையாக இந்தியா முழுவதும்

குறிப்பாக தென் இந்தியாவில் வாழ்கின்றனர்

ஆங்கிலேய ஆட்சியில் ஆரியர்களின்

அடக்குமுறையை எதிர்த்து மதராஸ்

சமஸ்தானத்தில் திராவிடர்கள் அடிமைகளாக

வாழ்வதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட

இயக்கத்திற்கு திராவிட இயக்கம் என

பெயரிடப்பட்டது.

ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவே
 " திராவிடம் " என்ற தத்துவம் உருவானது

மொழி அடிப்படையில் தமிழ்நாடு உருவான பின்

திராவிடத்தை தன் பெயரில் வைத்துள்ள திமுக

" திராவிடம்" என்ற தத்துவத்தை முன்னெடுத்து

செயல்பட்டு வருகிறது.

இதை பெரிய தவறாக காண்பிக்கவும் திராவிடம்

மற்றும் திராவிடர் போன்ற வார்த்தைகளை

தவறான இழிவான வார்த்தைகளாக காட்ட சிலர்

முயற்சிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

Monday 23 September 2019

சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?  நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது? என்ன மருந்து சாப்பிடலாம்?

சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?

நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது?

என்ன மருந்து சாப்பிடலாம்?


நாம் உணவு சாப்பிட்டவுடன்  நம் உணவில் உள்ள  குளுக்கோஸ் குடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.

ஆனால் அந்த குளுக்கோஸை நம் உடலில் உள்ள செல்களால் நேரடியாக ஏற்க முடியாது.

செல்கள் குளுக்கோசை ஏற்றுக் கொள்ள இன்சுலின் தேவை. இன்சுலினை கணையம்தான் உற்பத்தி செய்யனும்.

இன்சுலின் இரண்டு வேலை செய்கிறது

1) உடலில் உள்ள செல்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோசை ஏற்று அதை சக்தியாக மாற்ற உதவுகிறது

2) இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் சேமிக்க உதவுகிறது.

கல்லீரல்தான் குளுக்கோஸை
glycogen என்ற பொருளாக மாற்றி கல்லீரலிலேயே சேமிக்கிறது.

கணையம் போதுமான இன்சுலீனை சுரக்காவிடில் இரத்தில் உள்ள குளுக்கோஸ் சிறுநீராக வெளியேறி விடும்.
இதுதான் Type 2 சர்க்கரை நோய்.

கணையம் இன்சுலீனை கொஞ்சமும் சுரக்காவிடில் அது Type 1 சர்க்கரை நோய். அதற்கு Insulin Injection மட்டுமே தீர்வு

(Insulin helps control blood glucose levels by signaling the liver and muscle and fat cells to take in glucose from the blood. Insulin therefore helps cells to take in glucose to be used for energy.
If the body has sufficient energy, insulin signals the liver to take up glucose and store it as glycogen.
The liver can store up to around 5% of its mass as glycogen.)


இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமானால் அதை
hyperglycemia என்பர்.
மிகவும் குறைந்தால் என்பர் hypoglycemia.

கணையம் இன்சுலினை சுரக்க வைக்க என்ன மருந்து.?

glibenclamide (Daonil)  என்ற மருந்துதான் அதிகமாக பயன்படுகிறது. இது கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.

(Daonil lowers high blood glucose by increasing the amount of insulin released by your pancreas)

சர்க்கரை நோய் உண்டாக இரண்டாவது முக்கிய காரணம் என்ன?

ஒரு ஆரோக்கியமான மனிதன் உணவு உண்ணாத போது அவனுடைய கல்லீரல் தான் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸ் ஆக மாற்றி  இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் நம் உடல் செல்களுக்கு தேவையான Energy ஐ குளுகோஸ்தான் தருகிறது.


அதே மனிதன் உணவு சாப்பிட்டவுடன் அந்த மனிதன் சாப்பிடும் உணவில் இருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலக்கிறது. உடனே அவனுடைய கணையம்(known as beta cells)
இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கிறது

கணையத்தில் உள்ள  CBP என்ற புரோட்டின் கல்லீரலிடம் குளுக்கோசை இரத்தத்தில் கலக்கும் வேலையை நிறுத்தச் சொல்கிறது.

உடன் கல்லீரல் குளுக்கோசை இரத்தத்தில் கலப்பதை நிறுத்துகிறது.

ஆனால் சிலருக்கு இந்த CBP புரோட்டின் குறைவால் கணையத்தில் இருந்து கல்லீரலுக்கு செய்தி போவதில்லை.
அதனால் கல்லீரல் தொடர்ந்து குளுக்கோஸை இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும்.
the liver fails to sense insulin and continues to make glucose.


இதனால் இரத்தத்தில் அதிகமான குளுக்கோஸ் சேர்ந்து Type 2 சர்க்கரை நோய் உண்டாகிறது.

இதைத்தான் insulin resistance என்கிறோம்.

(In healthy people, the liver produces glucose during fasting to maintain normal levels of cell energy production. After people eat, the pancreas releases insulin, the hormone responsible for glucose absorption. Once insulin is released, the liver should turn down or turn off its glucose production, but in people with Type 2 diabetes, the liver fails to sense insulin and continues to make glucose. The condition, known as insulin resistance, is caused by a glitch in the communication between liver and pancreas)


இந்த" insulin resistance" என்ன மருந்து சாப்பிலாம்?

Metformin (metformin hydrochloride)
என்ற மருந்தே 1950 முதல்
சர்க்கரை வியாதியினர் உபயோப்படுத்தி வருகிறார்கள்.

இந்த மருந்துதான் கணையம் சொல்லும் செய்தியை கல்லீரலுக்கு சொல்லி கல்லீரல் இரத்தத்தில்  வெளியிடும் குளுக்கோசை நிறுத்த வைக்கிறது

அதாவது கணையத்தில் உள்ள CBP
புரோட்டின் செய்ய வேண்டிய வேலையை இந்த மருந்து செய்கிறது

தற்போது அதிநவீன மருந்துகள் வந்து விட்டது. எனினும் மிகவும் எச்சரிக்கையாக அதை வாங்கி சாப்பிடுங்கள். பல மருந்துகள் மிகவும் ஆபத்தானவையே.

Most medications for type 2 diabetes are oral drugs. However, a few come as injections. Some people with type 2 diabetes may also need to take insulin.


1)Alpha-glucosidase inhibitors*


These medications help your body break down starchy foods and table sugar. This effect lowers your blood sugar levels.
For the best results, you should take these drugs before meals. These drugs include:

Voglibose*

Voglibose delays the absorption of glucose thereby reducing the risk of macrovascular complications.

acarbose *

Acarbose works by slowing the action of certain chemicals that break down food to release glucose (sugar) into your blood. Slowing food digestion helps keep blood glucose from rising very high after meals.

miglitol *



2)Biguanides*

Biguanides decrease how much sugar your liver makes. They decrease how much sugar your intestines absorb, make your body more sensitive to insulin, and help your muscles absorb glucose.


The most common biguanide is metformin

Metformin can also be combined with other drugs for type 2 diabetes. It’s an ingredient in the following medications:

metformin-alogliptin

metformin-canagliflozin

metformin-dapagliflozin

metformin-empagliflozin

metformin-glipizide

metformin-glyburide

metformin-linagliptin

metformin-pioglitazone

metformin-repaglinide

metformin-rosiglitazone

metformin-saxagliptin

metformin-sitagliptin



3)Dopamine agonist*

Bromocriptine is a dopamine agonist.
It’s not known exactly how this drug works to treat type 2 diabetes. It may affect rhythms in your body and prevent insulin resistance.


3A) Dipeptidyl peptidase-4 (DPP-4) inhibitors*

DPP-4 inhibitors help the body continue to make insulin. They work by reducing blood sugar without causing hypoglycemia (low blood sugar).

These drugs can also help the pancreas make more insulin.

 These drugs include:

alogliptin

alogliptin-metformin

alogliptin-pioglitazone

linagliptin

linagliptin-empagliflozin

linagliptin-metformin

saxagliptin

saxagliptin-metformin

sitagliptin

sitagliptin-metformin

sitagliptin and simvastatin



4)Glucagon-like peptide-1 receptor agonists (GLP-1 receptor agonists)*

These drugs are similar to the natural hormone called incretin.
They increase B-cell growth and how much insulin your body uses. They decrease your appetite and how much glucagon your body uses. They also slow stomach emptying.
These are all important actions for people with diabetes.
For some people, atherosclerotic cardiovascular disease, heart failure, or chronic kidney disease may predominate over their diabetes. In these cases, the American Diabetes Association (ADA)recommends certain GLP-1 receptor agonists as part of an antihyperglycemic treatment regimen.

These drugs include:

albiglutide

dulaglutide

exenatide

exenatide extended-release

liraglutide

semaglutide



5)Meglitinides*

These medications help your body release insulin. However, in some cases, they may lower your blood sugar too much.
These drugs aren’t for everyone. They include:

nateglinide

repaglinide

repaglinide-metformin



6)Sodium-glucose transporter (SGLT) 2 inhibitors*

Sodium-glucose transporter (SGLT) 2 inhibitors work by preventing the kidneys from holding on to glucose. Instead, your body gets rid of the glucose through your urine.
In cases where atherosclerotic cardiovascular disease, heart failure, or chronic kidney disease predominate, the ADA recommends SGLT2 inhibitors as a possible treatment option.

dapagliflozin

dapagliflozin-metformin

canagliflozin

canagliflozin-metformin

empagliflozin

empagliflozin-linagliptin

empagliflozin-metformin

ertugliflozin

7)Sulfonylureas*

These are among the oldest diabetes drugs still used today. They work by stimulating the pancreas with the help of beta cells. This causes your body to make more insulin.

These drugs include:

glimepiride

glimepiride-pioglitazone

glimepiride-rosiglitazone

gliclazide

glipizide

glipizide-metformin

glyburide

glyburide-metformin

chlorpropamide

tolazamide

tolbutamide


8)Thiazolidinediones*

Thiazolidinediones work by decreasing glucose in your liver. They also help your fat cells use insulin better.

These drugs come with an increased risk of heart disease. If your doctor gives you one of these drugs, they’ll watch your heart function during treatment.

Options include:

rosiglitazone

rosiglitazone-glimepiride

rosiglitazone-metformin

pioglitazone

pioglitazone-alogliptin

pioglitazone-glimepiride

pioglitazone-metformin

Other drugs*

People with type 1 and type 2 diabetes often need to take other medications to treat conditions that are common with diabetes.
These drugs can include:

aspirin for heart health

drugs for high cholesterol

high blood pressure medications

Talk with your doctor....



By Antony Parimalam

Friday 20 September 2019

திமுகவிற்கு ஒரு நியதி மற்ற கட்சிகளுக்கு ஒரு நியதி - சில்லறைகளின் அலம்பல்

ஸ்டாலினுக்கு சட்டசபையில் சட்டை கிழிக்கப்பட்டதை கிண்டலடிப்போர்
ஜெயலலிதா சட்டசபையில் தலையை பிய்த்துக் கொண்டு நடத்திய நாடகத்தை பேசமாட்டார்

சர்க்காரியா கமிசன் பற்றி தினம் பேசுபவர்கள்
MGR ஆரின் ரே கமிசன்,  பால் கமிசன், பால்டிகா ஊழல் , ஜெ/சசி மெகா ஊழல் பற்றி பேசமாட்டார்

சில்லறைகள் 💦

ஜெயலலிதா மேடைக்கு மேடை முழு பேச்சையும்

எழுதி வைத்து படிப்பதைப் பற்றி பேசாதாவர்கள்

திரு. ஸ்டாலின் முக்கிய குறிப்புகளை துண்டு

 சீட்டில் எழுதி வைத்து படித்தால் வயித்துலேயும

வாயிலேயும் அடிச்சுக்கிறாங்க

என்னாங்கடா உங்க நியாயம்?

சில்லறைகளே💦

திமுகவின் சாதனைகளை பல்லாயிரக்கணக்கில் எடுத்து வைத்தாலும் திமுக என்ன கிழித்தது என நம்மிடமே திரும்பக் கேட்பார்கள்.

ஆனால் அதிமுகவின் 30 ஆண்டு ஆட்சியில்
ஏதாவது செய்தார்களா என்று என்றைக்குமே
எந்த நபரும் கேட்டதேயில்லையே ஏன்?

அவனுக்கு பேர்தான் சில்லறை 💦

1970 களில் பெரும் ஊழல் நடந்ததாக இன்றும்
அவதூறு பரப்புவோர்களே

நீங்கள் 2011-2019 காலத்தில் பத்திரிக்கைகள் வெளியிட்ட பல நூறு ஊழல்களை பற்றி வாயே திறவாதது ஏன்?

பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையை வருசம் பூரா வாயிலேயே வைச்சிகிட்டு இருக்கிறீர்களா?

சொல்லுங்க சல்லறைகளே 💦

திமுககாரன் இந்தி எதிர்ப்பு முதல் எதை
முன்னெடுத்தாலும் அதை கிண்டலடிப்பவர்களே..

மத்திய அரசின் கல்வி கொள்கை முதல் இந்தி திணிப்பு வரை எந்த நடவடிக்கை பற்றியும் வாயே திறக்காமல் சத்தமின்றி RSS க்கு மறைமுக
துணை போகும் ஆளும் கட்சியை விமர்சிக்காமல்
திமுக முதுகை சொறிவதேன்

சில்லறைகளே💦

Sunday 15 September 2019

1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்: 

1967 முதல் 2011 வரை
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்: பட்டியலிட்டு முதல்வருக்கு துரைமுருகன் பதில்
பட்டியல்
தும்பலஹள்ளி,
சின்னாறு,
குண்டேரிப் பள்ளம்,
வறட்டுப்பள் ளம்,
பாலாறு,
பொருந்தலாறு,
வரதமா நதி,
வட்டமலைக்கரை ஓடை,
பரப்பலாறு,
பொன்னியாறு
மருதா நதி,
பிளவுக்கல் (பெரியாறு)
கடானா
ராமாநதி,
கருப்பாநதி
சித்தாறு-1,
சித்தாறு - 2,
மேல் நீராறு
கீழ் நீராறு,
பெருவாரிப்பள்ளம்,
மோர்தானா,
ராஜாதோப்பு,
ஆண்டியப்பனூர் ஓடை
குப்பநத்தம்,
மிருகண்டா நதி,
செண்பகத்தோப்பு,
புத்தன்,
மாம் பழத்துறையார்,
பொய்கை,
நல் லாறு,
வடக்கு பச்சையாறு,
கொடு முடி,
அடவிநயினார்,
சாஸ்தா கோவில்,
இருக்கன்குடி,
சென்னம் பட்டி
கிருதமால்,
நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியார்,
வரட்டாறு வள்ளி மதுரை, பச்சைமலை,
ஆனைவிழுந்தான் ஓடை
என்று  முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும்.
தூர்வாரும் பணிகள்,
நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான்.
1)தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்,
2) காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்,
3)காவிரி டெல்டாவில் 378 தூர்வாரும் பணிகள்,
4)காவிரி கட்டுமானங்களை சீரமைக்கும் 225 பணிகள், 3,117 ஏரிகள், 534 அணைகளை புதுப்பித்து 5,774 கி.மீட்டர் தொலைவுக்கு நீர் வரத்துக் கால்வாய்கள் அமைத்தது

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் ரூ.62,349 கோடி முதலீடு களைப் பெற்று, அதன்மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

Tuesday 10 September 2019

தமிழர்களை குடிகாரர்களாக மாற்றியது யார்?

திமுக ஆட்சியில்1971 இல் மதுக்கடை திறக்கப்பட்டு 1974 இல் மூடப்பட்ட மதுக்கடைகளை 7 வருடம் கழித்து 1981ல் மீண்டும் திறந்தது MGRதான்

1983 இல் டாஸ்மாக் உருவாக்கியது MGRதான்

சாராய ஊழலில் சிக்கி ரே கமிசனில் மாட்டியது MGRதான்

2001 இல் மீண்டும் மதுக்கடைகளை திறந்தது
ஜெயலலிதாதான்

1981வெறும் 101 கோடிதான் மது விற்பனை. அதை
2003-04 ல் அரசின்  மதுவிற்பனையை ஆரம்பித்து மது வருமானத்தை 3639.93 ஆக உயர்த்தியது ஜெயலலிதாதான்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை 6000 க்கு உயர்த்தியது ஜெயலலிதான்

இன்று மதுவிற்பனையால் 2018-19 ல் தமிழக அரசின் வருமானம் 31157.83 கோடி.

1971 ல் மது குடித்தவர்கள் சில ஆயிரம். இன்று சில கோடி பேர்.
ஆனா கலைஞரால்தான் எல்லா பயல்களும் குடிகாரன் ஆகிவிட்டார்களாம்.

😄😄😄😄😄

Saturday 24 August 2019

ஜெயலலிதாவின் கட்சத்தீவு கப்சாக்களுக்கும் அவர் வடித்த நீலி கண்ணீருக்கும் கலைஞர் தந்த பதிலடி*

ஜெயலலிதாவின் கட்சத்தீவு கப்சாக்களுக்கும் அவர் வடித்த நீலி கண்ணீருக்கும் கலைஞர் தந்த பதிலடி*
கச்சத் தீவும், "கச்சடா” கேள்வியும்
என்ற தலைப்பில் ஜெ.க்கு கலைஞர் July 20 2013 தேதிய அறிக்கை
கச்சத்தீவை தாரைவார்க்க தாம் உடந்தையாக இருந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் மறுத்துள்ளார்.
1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மவுனமாக இருந்தார். இப்போது உச்சநீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் கலைஞர் என்னென்ன செய்ய தவறியிருந்தார் என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்கு பதிலடியாக மிக நீண்ட அறிக்கை ஒன்றை கலைஞர்  வெளியிட்டுள்ளார். "கச்சத்தீவும் கச்சடா கேள்வியும்" என்ற தலைப்பிலான கலைஞரின் அறிக்கை விவரம்:
தமிழக மக்கள்
இளிச்சவாயர்களா?**
இது தொடர்பாக கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதலமைச்சர் ஜெயலலிதா கொடைநாட்டிலே ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்' என்று எங்கே பத்திரிகைக்காரர்கள் எழுதிவிடப் போகிறார்களோ என்பதற்காக, அன்றாடம் ஏதாவதொரு அறிக்கையை அவர் பெயரால் நாளேடுகளில் வருமாறு பார்த்துக் கொள்கிறார்.
கொடைநாட்டில் அமர்ந்து கொண்டு, அதிகாரிகளோடு கலந்தாலோசித்து, அம்மையார் அறிக்கை களைத் தயாரித்து அனுப்புகிறார் என்று தமிழ் நாட்டு மக்கள் எண்ணிக் கொள்ள வேண்டுமாம்!
தமிழ்நாட்டு மக்கள் என்ன அவ்வளவு இளித்தவாயர்களா என்ன? அவர்களுக்கு உண்மை தெரியாதா என்ன?
அறிக்கைக்கு ‘பொருள்’ கிடைக்கவில்லை**
அந்த வரிசையிலே தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்தும், அந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றியும் அறிக்கை மூலமாகவே தீர்த்து வைத்த நமது முதல் அமைச்சருக்கு நேற்றையதினம் அறிக்கை விடுவதற்குப் பொருள் கிடைக்க வில்லை போலும்!
எட்டு பக்க அறிக்கை**
அது மாத்திரமல்ல; 17ஆம் தேதிய நாளேடுகளில் எல்லாம் - 'இந்து' நாளிதழ் உட்பட, 'கச்சத்தீவினைத் திரும்பப் பெறுவது பற்றி உச்ச நீதி மன்றத்தில் நான் தொடுத்த வழக்கினை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசினைப் பதில் கூறுமாறு உத்தரவிட்டுள்ளது' என்று விரிவாகச் செய்தி வெளி யிட்டதைப் பார்த்தவுடன், பொறுக்க முடியவில்லை! எடுத்தார் பேனாவை; எழுதித் தள்ளி விட்டார் எட்டு பக்கத்திற்கு கச்சத்தீவு பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக! இந்தப் பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக 'அம்மையார்' இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித் தான் பார்க்க வேண்டும்! ஒவ்வொரு முறையும், கச்சத்தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாக புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்!
தொடரும் அவதூறு**
முதலமைச்சர் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் யாராவது பேசினால் போதும்; உடனே 'அவதுhறு வழக்குகள்' பாய்ந்து வரும். ஆனால் அவர் எதிர்க்கட்சிக் காரர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறாகப் பேசுவார். அதைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. கருணாநிதியின் முதல் துரோகம், இரண்டாவது துரோகம், மூன்றாவது துரோகம் என்று பட்டியல் போடுவார்; கபட நாடகங்கள் என்பார்; கண்துடைப்பு நாடகங்கள் என்பார்; சுய நலம் என்பார்; கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்; ஒப்புக்கு சப்பாணி என்பார்; இதெல்லாம் அவரது அரசியல் பண்பாட்டில் பிறந்து அடிக்கடி பயன்படுத்தும் 'அழகு தமிழ்ச் சொற்கள் (?) அவருக்கே வழக்கில் வந்த வார்த்தைகள்! இத்தனை பக்கங்கள், இவ்வளவு கடுமையானது;ம கசப்பானதுமான அர்ச்சனைகளை முதலமைச்சர் ஜெயலலிதா என் மீது வாரி இறைத்திருக்கிறாரே; என்ன காரணம்?
நான் செய்தது வழக்கு தொடர்ந்துதான்!**
கச்சத் தீவில் அவர் எதுவுமே செய்ய வில்லை என்று நான் எழுதினேனா என்றால் இல்லை! அவர் பிரச்சினைக்கே நான் செல்லவில்லை. நான் செய்ததெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் கச்சத் தீவு பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்தது தான்! அது கூடக் குற்றம் இல்லை. அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு, அதைப்பற்றிச் செய்தி ஏடுகளில் வெளி வந்து விட்டது. அவரைப் பற்றிய செய்திகள் தவிர, என் தொடர்பான செய்திகள் வரலாமா?
எனக்கு அர்ச்சனை**
எப்படியோ கச்சத் தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக முதலமைச்சர் எட்டு பக்க அறிக்கை விடுத்தபிறகு, அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டாமா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 3-5-2013 அன்று திடீரென்று கச்சத் தீவுப் பற்றி பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து, அவரே அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நேரம் பேசி நிறைவேற்றப்பட்டது. அந்த உரையில்; தொடக்கம் முதல் முடிகின்ற வரையில் எனக்குச் செய்யப்பட்ட 'அர்ச்சனை' தான்!
டெசோ கூட்டமே காரணம்!**
அப்போது திடீரென்று கச்சத்தீவு பற்றிய தீர்மானம் அம்மையாருக்கு எப்படி நினைவுக்கு வந்தது தெரியுமா? 15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 'டெசோ' அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் காரணம்.' அந்தத் தீர்மானத்தின் இறுதியாக '1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், 'டெசோ' அமைப்பின் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டது தான் காரணம்.
வழக்கு தொடுத்தது துரோகமா?**
கச்சத்தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை விட்ட அம்மையாரைக் கேட்கிறேன்; கச்சத்தீவை மீட்பதற்காக நான் எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறீரே, தற்போது அம்மையாரின் கோபத்திற்குக் காரணமான உச்ச நீதி மன்ற வழக்கை இந்தக் கச்சத் தீவினை மீட்க வேண்டும் என்பதற்காகத் தானே நான் தொடுத்துள்ளேன். இதுவும் ஒரு துரோகமா?
22 வருஷமா என்ன கிழிச்சார்?**
'கச்சத் தீவை மீட்டே தீருவேன்' என்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா உரையில் சூளுரைத்ததைப் போல நானா சூளுரைத்தேன்? அவர் சபதம் செய்து தான் 22 ஆண்டுகள் ஓடிவிட்டனவே! என்ன செய்து கிழித்து விட்டார்? 15-8-1991 அன்று ஜெயலலிதா என்ன பேசினார்? 'கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது' என்று முழங்கியது நானா? ஜெயலலிதாவா? அப்படிச் சவால் விட்டு விட்டுத் தற்போது என்னைப் பார்த்து, ஏன் போராடவில்லை என்றும், துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்றும் குற்றம் சாட்டுவது என்ன வகை நியாயம்?
கச்சத்தீவு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்**
20-4-1992 அன்று இதே சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, 'கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை' என்று கச்சத்தீவுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதைப் போலக் கூறியது உண்டா? இல்லையா? அவரே பேரவையில் அவ்வாறு பேசி விட்டு, கச்சத் தீவை மீட்பதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று அறிக்கை விடுவதற்கு என்ன பெயர்?
தாரை வார்க்க உடன்படவில்லை**
நேற்றையதினம் ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்சினை பற்றி என்மீது கூறிய குற்றச்சாட்டுகளை எல்லாம், இரண்டு மாதங்களுக்கு முன்பு பேரவையிலே அவர் பேசிய போதே; நான் அவரது குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக பதில் எழுதியிருந்தேன். அந்தப் பதிலிலேயே கச்சத் தீவைத் தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை என்றெல்லாம் விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்பி யிருக்கிறார் என்றால், அது சரியா?
நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம்-பதில் எங்கே?**
எனது அந்த விளக்கத்தில் ஒன்றை எழுதியிருந்தேன். 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத் தான்' - என்று அப்போதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை நியாயப்படுத்தி குறிப்பிட்டது உண்டா இல்லையா என்று கேட்டிருந்தேனே, அதற்கு ஏன் இன்று வரை பதிலளிக்கவில்லை.
1974-ல் அனைத்துக் கட்சி கூட்டம்**
முதலமைச்சர் ஜெயலலிதா தனது உரையில்; 'ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கப் போவது தெரிந்திருந்தும் ஏன் எந்தவிதமான நடவடிக்கையையும் கருணாநிதி உடனே எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதே கேள்வியை இதுவரை ஜெயலலிதா எத்தனை முறை தான் கேட்டிருக்கிறார். ஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது உண்மையா இல்லையா?
கையெழுத்திட மறுத்த அதிமுக**
ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்து விட்டது. அதே 29-6-1974 அன்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இது தான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான ஆதாரமா? இது தான் நான் துரோகம் செய்ததற்கான அடையாளமா?
கண்டனப் போராட்டங்கள்**
24-7-1974 அன்று கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது பொய்யா? தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த நானே கலந்து கொள்ளவில்லையா?
பார்லியில். கச்சத்தீவு**
23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை வந்த போது, 'தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என்று அப்போது தி.மு. கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா. செழியன் குறிப்பிட்டாரா இல்லையா? 'தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும்' என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தாரா இல்லையா?
சட்டசபையில் கச்சத்தீவு**
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே, அதாவது 21-8-1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், 'இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது' என்பதாகும். இதெல்லாம் துரோகத்திற்கான ஆதார ஆவணமா?
ஷரத்துகளை சேர்த்தேன் என்ற ஜெ.**
அடுத்து ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையில் எடுத்து வைத்திருக்கும் மற்றொரு வாதம் - '1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன்' என்கிறார். ஆனால் '2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித் தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்' - என்பதாகும். இதே கருத்தினை வார்த்தை மாறாமல் கடந்த மே மாதம் பேரவையில் பேசி, அதற்கும் நான் விரிவான பதிலை அப்போதே எழுதினேன். இருந்தாலும் மீண்டும் நேற்றைய அறிக்கையிலே இதைச் சொல்லியிருக்கிறார்.
ஷரத்துகளை சேர்த்தது திமுக கழக அரசு**
15-4-2013 அன்று 'டெசோ' சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், '1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன' என்று கூறப்பட்டுள்ளது.
வெறுப்பு விஷத்தை கக்கியவர்**
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், 'கருணாநிதி ஆட்சி அதிகாரம் போன பிறகு அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே 'டெசோ' அமைப்பைப் புதுப்பித்து, கூட்டங்களை நடத்துவது, தீர்மானம் நிறைவேற்றுவது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல், தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி' என்றெல்லாம் வெறுப்பு விஷத்தைக் கக்கியிருக்கிறார். நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல் அல்ல; தமிழ் மக்கள் நலனைக் காப்பாற்றும் செயல்களாகும்.
இதுதான் துரோகச் செயல்**
'விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்' என்று பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து விட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறாரே; அது தான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற துரோகச் செயல்!
அதுதான் ஏமாற்றுகிற செயல்**
இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, 'போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்' என்று பேரவையில் ஜெயலலிதா முழங்கிவிட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்காகவும், கச்சத் தீவுக்காகவும் பரிந்து பேசி அறிக்கை விடுகிறாரே, அது தான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல்!
ஏன் பதில் இல்லை?**
தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதலும் ஜெய லலிதா தானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்குத் தனது நீண்ட அறிக்கையில் ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை?
நானும் வழக்கு தொடுத்துள்ளேன்**
இதே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். 'டெசோ' அமைப்பின் சார்பில் நானும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறேன்.
ஏமாற்ற முடியாதுதான்!**
'தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது' என்கிறார் ஜெயலலிதா; ஆம், உண்மைதான்; தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்! என்று கலைஞர் கூறியுள்ளார்.

Friday 23 August 2019

இந்தியாவில் இந்த பொருளாதார தடுமாற்றம் ?

இந்தியாவில் இந்த பொருளாதார தடுமாற்றம் ?

" ஏன் ஓட்டலில் டீ க்கு வரி விதிக்கிறீர்கள் எனக் கேட்டால் வீட்டிலேயே டீ போட்டு குடிங்க" என அரசு சொன்னால் ஓட்டல் தொழில் வளருமா?

ஒரு தொழிலை ஒழிக்க வேண்டுமென்றால் அதிகமாக வரி விதிக்க வேண்டும்.

அதிக வரி விதித்தால் அந்த பொருளின் விலை கூடும்.

விலை அதிகமானால் மக்கள் வாங்குவது குறையும்.அதாவது விற்பனை குறையும்

விற்பனை  குறைந்தால் அந்த பொருளின் உற்பத்தி குறையும்

தொழிலாளர்கள் வேலை இழப்பர்.
வேலை இல்லா திண்டாட்டம் பெருகும்.

மக்களிடம் பணமில்லாததால் அவர்களின் வாங்கும் திறன் குறையும்.

வாங்கும் திறன் குறைவு, பணப்புழக்கம் இல்லாததால் தொழில் நஷ்டமடையும்.

தொழில் நஷ்டமடைந்தால் அரசுக்கு செலுத்தப்படும் வரி குறையும். அரசுக்கு வரி இழப்பே ஏற்படும்.

அரசு பணமதிப்பு இழப்பு செய்ததால் மக்களிடையே பணப் புழக்கம் குறிப்பாக Illegal transfer of money குறைந்தது.

மேலும் GST வரி விதிப்பு என்பது மிகவும் கடுமையாக தொழில்களை பாதித்து விட்டது.

ஆரம்பத்தில் அதிகப்படியான GST வரிவிதிப்பால் அதிக வருமானம் அரசுக்கு வந்ததாக புள்ளி விபரம் வந்தாலும் நீண்ட காலத்திற்கு அது Negative விளைவுகளையே ஏற்படுத்தும்

அதுதான் இப்போது நடந்துள்ளது.

மாறாக வரிகளை குறைத்தால் தொழில்கள் பெருகும். லாபம் கிடைப்பதால் முதலீடு அதிகமாகும்.
வேலைகள் உருவாகும். அதிக பணப்புழக்கம் ஏற்படும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். அதனால் அரசின் வரி வருவாய் அதிகமாகும்

இதுதாங்க பொருளாதாரம்

By Antony Parimalam


Monday 22 July 2019

நுழைவு தேர்வை ரத்து செய்த கலைஞர்

2006 ல் அண்ணா யூனீவர்சிட்டி பல்கலைக்கழக துணை வேந்தர் Dr.அனந்த கிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைத்தார் கலைஞர்

அதன் அறிக்கைபடி 6.12.2006 அன்று மசோதா எண்: 39/2006 மூலம் Tamilnad Professional Education Institution Admission Act 2006 என்ற நுழைவு தேர்வு தடுப்புச் சட்டம் கொண்டு வந்தார்.

பிறகு அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 3.3.2007ல் அந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது

அதை எதிர்த்து தொடரப்பட்ட "அஸ்வின் குமார்" வழக்கில் அந்த சட்டம் செல்லும் செல்லும் என தீர்ப்பு வந்ததும் திமுக ஆட்சியில்தான். மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமே நிராகரித்தது




Sunday 16 June 2019

கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்

கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்
காலம் கடந்தும் அனைவரின் வாழ்விலும் நீங்காத இடம் பெற்றிருக்கும் கருணாநிதி தமிழர்களுக்கும் தமிழுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஒரு பார்வை
கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் :
கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் காலடி வைத்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக தலைவராக  பொன்விழா கண்ட பின்பே திராவிட நாயகனை காலன் அவரை அழைத்துக் கொண்டான்.
திமுகவும் அதன் கழகக் கொள்கைகளும் இன்றைய தமிழகத்தின், ஏனைய இந்தியாவில் இருந்து முற்போக்குடன் சிந்திக்கும் தமிழகத்தின் முதுகெலும்பு என்பதில் யாருக்கும் மறுப்பேதுமில்லை.
கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட சலுகைகள் திட்டங்கள் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழுக்கும் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் கலைஞர் கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் ஒரு பார்வை.
கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
2. கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தார்.
3. சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.
4. சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.
5. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது
6. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
7. சேலத்தில் உருக்காலை கொண்டு வரப்பட்டது
8. தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது
9. தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது
10. தமிழகம் வளர்ச்சியின் பாதையில் செல்ல கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
1997ல் தரமணி டைடல் பார்க் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.
11. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதாகும்
12.  108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது
13. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.
14. சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
15. மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்
16. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.
17. தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
18. மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
19. அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் பழக்கம் ஆகியவற்றையும் கூட கருணாநிதி கொண்டுவந்தார்.
விவசாயிகளுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
20. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் (இந்தியாவிலேயே இது போன்ற திட்டம் உருவாக்கப்பட்டது அப்போது தான்)
21. உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.
22. விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது.
23. விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது
24. கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக்கப்பட்டது.
25. கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண்களுக்கான திட்டங்கள்
26. திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக  ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்
27. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி.
28. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
29. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
30. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
31. 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
32. கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
33. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது
34. 1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.
தமிழுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்
35. இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு வைக்கப்பட்டது 133 அடி உயரமுள்ள சிலை.
36. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்துவர் கருணாநிதி.
37. கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் படை சூழ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது செம்மொழி மாநாடு.
38. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
39. தமில் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார்
40. சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டாலும் தைத்திருநாளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது
41. மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ் நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது
42. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து 1970களில் இருந்து அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டது.
43. ஆளுநர்கள் இல்லாமல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்தவர் கலைஞர்.
44. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி
பொதுவுடமை
45. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கருணாநிதி.
46. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகை உயர்த்தப்பட்டது.  அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.
47. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
48. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டன
49. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்
50. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.
51. ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டது
52. கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு
கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள்
53. பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.
54. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.
55. அதிமுக அல்லது திமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மத்திய உணவுத்திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தியது கிடையாது. 2006ம் ஆண்டு ஆட்சியின் போது மாணவர்களுக்கு மத்திய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணை வெளியிட்டார்.
56. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
57. தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.
58. நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.
கருணாநிதி அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள்
59. நில விற்பனை வரையறை சட்டம்
60. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
61. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
62. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர் கருணாநிதி
63. பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது
64. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்தார்
65. ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
66. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
67. மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
68. அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.
69. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தினையும் அமைத்துக் கொடுத்தது திமுக தலைமை
70. மொழிப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது
71. சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தது
72. ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் இவரது ஆட்சியில் இருந்து தான் தரப்பட்டது
.
73. சீரான போக்குவரத்து வசதிகளை மக்கள் அடைய நான்கு வழிச் சாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டன.
74. போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கியது மற்றுமின்றி அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்
75. நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது.
76. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
77. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது
78. இஸ்லாமியர்களுக்காக உருது அகாதெமி உருவாக்கப்பட்டது.
79. தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கருணாநிதி
80. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுமார் 23 மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
81. ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
.
82. மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியப்படுத்தப்பட்டது
.
83. காமராஜரின் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர்
84. 420 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது
85. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது
86. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.
87. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது.
88. ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
89. இவர் ஆட்சியின் கீழ் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
90. பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்த்தப்பட்டது கிடையாது
91. இலவச வண்ண தொலைக்காட்சிகளை கொடுத்தார்
92. உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் படி புதிய அறிவிப்புகளை எப்போதும் வெளியிடுவார் கருணாநிதி.
93. 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது
94. சுயமரியாதை என்ற பெயருக்கு சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்கும் கருணாநிதி சுயமரியாதை தமிழகத்தை தமிழர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்

திமுக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள்
ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது
இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.


ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் கலைஞர் அடிக்கல் நாட்டினார்


இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.


2வது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.
மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது.


1995-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.



மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.

Saturday 8 June 2019

திமுக மீதான சில வீண் பழிகளும் அதற்கான சில பதில்களும்

அப்பப்பா ...
எத்தனை எத்தனை அபாண்டங்கள்  எத்தனை எத்தனை அவதூறுகள்  எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின்  மேல்  அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே  ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட  பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா...
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
(1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில்  அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார்.  மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர  கலைஞரை அல்ல.
கண்ணதாசன் 8th Grade dropout.
கலைஞர் SSLC ல் தோல்வி
கண்ணதாசன்  8th grade dropout என்றும் தன்னை நான் என்று சொல்லாமல் "அவன்" என்றே வனவாசம் புத்தகம் முழுவதிலும் சொல்கிறார்.
தான் திருட்டு ரயிலேறி சென்றதையும் தன் சுயசரிதையில் விளக்கியுள்ளார்
பொறுக்கிகள் அதை அப்படியே திரிச்சிட்டானுங்க https://t.co/JLHb187HAU
(2) பாவாடை நாடா அவதூறு**
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட... கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
(3) மாதவிடாய் கதை**
இந்திரா நெற்றியில் மாதவிடாய்   என கலைஞர் விமர்சித்ததாக சொன்னார்கள் .
இந்திராவுக்கு சிறு காயம் கூட படவில்லை என்கிறார் நெடுமாறன்  அவரது பேட்டியில்.  காயமே படாத போது ரத்தம் எப்படி வந்திருக்கும் .  என்ன ஒரு பொறுக்கித்தனம் பாருங்கள்.
(4) விஞ்ஞான ஊழல் கப்சா**
இந்திரா மத்திய அமைச்சர் ஓம் மேத்தா என்பவரை தூதுவராக 1975 வருட இறுதியில் கலைஞரை சந்திக்க அனுப்புகிறார்.
கலைஞரை சந்தித்த மத்திய அமைச்சர் கலைஞர் எமர்ஜென்சியை ஆதரித்தால் கலைஞரின் அரசை மேலும் ஒரு வருடம் நீடித்து தருவதாக கலைஞரிடம் தெரிவிக்கிறார்.
கலைஞர் திட்டவட்டமாக எமர்ஜென்சியை ஆதரிக்க மறுக்கவே அதன் பிறகே கலைஞர் அரசும் கலைக்கப்பட்டு 1972 MGR புகாரை தூசிதட்டி 1976 ல் சர்க்காரியா கமிசன் போடப்படுகிறது.
சர்க்காரியா கமிசனில் எந்த இடத்திலும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையே இல்லாதபோதும் கலைஞர் மீது அவதூறு இன்றும் பரப்பப்படுகிறது.

பொறுக்கிகள்
24 மணி நேரமும் சர்க்காரியா கமிசன் பத்தி பேசுவர்.
MGR மீதான பால் கமிசன், ரே கமிசன், ராபின்சன் ஊழல், பால்டிகா கப்பல் பேர ஊழல், சாராய ஊழல், ஏரிகள் தாரை வார்ப்பு, மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு ஊழல், ஜெ-சசி கூட்டுக் கொள்ளை பற்றி பேசவே மாட்டான்.
அவன்தான்
தமிழ்தேசிய பார்ப்பனீய அடிமை.
(5) GAIL பைப் லைன் திரிப்பு**
GAIL பைப் லைன் ஜெயலலிதா முன்னிலையில்தான் 2012 ல்
கையொப்பம் ஆனது என்பதற்கான ஆதாரம் இதுதான்
படிக்க. 👇
(6) மீத்தேன் வீண் பழி**
மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?
திரு.ஸ்டாலின் கையொப்பமிட்டது ஒரே ஒரு மீத்தேன் திட்டம்தான். அது GEECL கம்பெனியுடன் போடப்பட்ட MOU மட்டுமே. அது ஆய்வுக்காக போடப்பட்டது
அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்
கீழே உள்ளது
வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் திரு.ஸ்டாலின்  கையெழுத்து இடவில்லை.
👇
மீத்தேன் இரண்டு வழிகளில் எடுக்கப்படுகிறது
1)Conventional method
2)UnConventional method
திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்பது unconventional method.
அது தமிழகத்தில் நடைபெறவில்லை.
உண்மை நிலவரம் இதோ👇
https://t.co/c5iUorwZxM
(7) கட்சத்தீவு கப்சா கதை**
ஒரு முதல்வரால் எப்படிடா கட்சத்தீவை தாரை வார்க்க முடியும்?
கட்சத்தீவு ஒப்பந்தத்தை கலைஞரை தவிர வேறு யாருமே எதிர்க்காத போது கலைஞரை கைக்காட்ட எவருக்கும் யோக்கியதை இல்லை
1974 கட்சத்தீவு ஒப்பந்தம் article 8 இன் படி பார்லிமென்டால்
அங்கீகரிக்கப்படாததால் அந்த ஒப்பந்தம் செல்லாது
அதில் உள்ள உரிமைகள்
Atl 5 pilgrimage
Atl 6 traditional rights
எமர்ஜென்சியில் கலைஞர் ஆட்சிக் கலைப்பிற்கு பின்1976 ல் எல்லை நிர்ணயம் போதே கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் போனது.
1974 ஒப்பந்தமே செல்லாது என்பதும் 1976 எல்லை நிர்ணயத்தால்தான் கட்சத்தீவு இந்திராவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பதுமே உண்மை
1976 ல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லை
புளுகினி பொறுக்கிகள் கலைஞர் தாரை வார்த்தார் என புளுகி தள்ளுறானுங்க.
ஆட்சியிலேயே இல்லாத போது எப்படிடா தாரை வார்த்தார்?
(8)நில அபகரிப்பு டுபாக்கூர் புகார்**
நிலஅபகரிப்பை செய்தது யார்?
A) கொட நாடு நிலத்தை மிரட்டி நில அபகரிப்பு செய்தது ஜெ -சசி கும்பல்
B) இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கியதும் அதே கும்பல்தான்
C) சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்டது யாரால்?
4) பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரே அது யாரால்?
5) புதுப்படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பட்டியல் தெரியுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தையே குறைந்த விலைக்கு
அபகரித்தவர்கள் இந்தக் கும்பல்தான்
இந்த உத்தமர்கள்தான் திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு நடந்ததாக கூறி அதற்காக தனி பிரிவையே காவல் துறையில் ஏற்படுத்தினர்.
அதன் மூலம் எத்தனை திமுகவினர் தண்டனை பெற்றனர் என்பதை யாராவது சொல்லமுடியுமா?
ஆனால் கொடநாட்டு வழக்கில் தீர்ப்பு வந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது தெரியுமா இல்லை தெரியாதா குருடர்களே
(9) நியூட்ரினோ பித்தலாட்ட கதை**
நியூட்ரினோக்கு அனுமதி வழங்கியது மோடி மந்திரிசபை
(5 Jan2015).
On 19 Mar 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case
அதற்கு முன் Feb 2012 நியூட்ரினோவிற்கு இடம் ஒதுக்கியது ADMK அரசே
காங்கிரஸ்18 Oct 2010ல் சுற்றுசூழல் அனுமதி மட்டுமே வழங்கியது https://t.co/CsxsW438BT
(10) "இடுப்புகிள்ளிதிமுக" என பொறுக்கிகள் சொல்றானுங்க
யாருன்னு பார்த்தா
பூரா பொம்பள பொறுக்கி பயலுக
இடுப்பை கிள்ளியதாக சொன்ன பெண் காவல்துறையில் தன்னை யாரும் கிள்ளவில்லை என்று எழுதி தந்துள்ளது
ஒழுங்கு மரியாதையா அந்த வழக்கில் திமுககாரன் மீது அதிமுக போலிஸ் எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கடா


11)ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?
1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஜெயலலிதாவின் Cash for Vote
Story 

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது
2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது
இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.


கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசுகிறார்கள்.
அதுபோல எம்ஜிஆர் ஜெயலலிதா சீமான் வாழ்க்கையை பற்றி பேசினால் என்ன ஆகும்?
ரொம்ப கேவலமாக அல்லவா போய்விடும்
இன்னும் பல நூறு கட்டுக் கதைகள்
உள்ளது. பதில் சொல்லி தீராது

Antony Parimalam 

Friday 7 June 2019

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇

திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்ன ஆனது? உண்மை நிலவரம் இதோ👇


ஹைடிரோ கார்பன் எடுக்கும் பணி ONGC யால் தொடங்கப்பட்ட ஆண்டு 1984

1985 ல் நரிமணம் மற்றும் களப்பால் ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு( மீத்தேன்) மற்றும் பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 1986 ல் மத்திய மாநில அரசுகளால் எண்ணை எடுக்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
1989 முதல் எண்ணை உற்பத்தி வியாபார ரீதியில் தொடங்கப்படுகிறது.


அதன் பின்னர் இன்று வரை 712 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் 181 கிணறுகளில் எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த 181 கிணறுகளில் கதிராமங்கலமும் ஒன்று.
அதற்காக ONGC தமிழக அரசுக்கு ராயல்டியாக ரூ250-350 கோடி வரை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்   ரூ1,816.43 கோடி தமிழக அரசிற்கு ராயல்டி மற்றும் வாட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது


தற்போதைய அதிமுக அரசு 2017 லேயே டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து உத்தரவு போட்டு விட்டது.

மே 12, 2019ல் காவேரி டெல்டா பகுதியில்
மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது.


274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும்.


 நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.


இவ்வாறு மீத்தேன் எடுக்கும் தொழில்நுட்பத்தை "Conventional natural gas reservoir Method" என்பர்.


ஆனால் 2011 ஜனவரி 5 ல் திரு ஸ்டாலின் ஆய்வு மட்டுமே MOU கையொப்பம் இட்டது
"Unconventional natural gas" தொழில் நுட்ப முறையில் Coalbed methane
எடுப்பதற்காக GEECL என்ற கம்பெனியுடன். 


Coalbed methane is an unconventional natural gas, and its reservoir has distinctly different characteristics compared with the conventional natural gas reservoir.


இத்திட்டம் விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.


மேலும் இத்திட்டத்தால் சுற்று சூழலும் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்ததால்
திரு.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


செப்டம்பர் 2012 ல்  மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் தலைமையில் COALBED மீத்தேன் எதிர்ப்பு கிளம்பியதால் ஜெயலலிதா இத்திட்டத்தை 2013 லேயே நிறுத்தி விட்டார்.

 GEECL கம்பெனியும் விலகிவிட்டது.


10 நவம்பர் 2016 ல் தர்மேந்திர பிரதான் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார்.
இத்துடன் ஸ்டாலின்-GEECL  ஒப்பந்தம் முடிந்து விட்டது


திரு ஸ்டாலின் ஒப்புதல் அளித்த முதல் மற்றும் கடைசி ஒப்பந்தம் இன்று நடைமுறையில் இல்லை.


அதாவது COALBED மீத்தேன் பணி தமிழகத்தில் எங்குமே தொடங்கப்பட வில்லை.


ஆனால் 1986 முதல்
"Conventional natural gas reservoir Method" மூலம் மீத்தேன் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதிதான் டெல்டாவை
பெட்ரொலிய மண்டலமாக அறிவித்து 274 இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்காக தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனுமதி.


வித்தியாசம் புரியுதா

A.Parimalam

Monday 3 June 2019

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? 

கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி

கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?

என். ராம் : ''விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.

''இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர்.

 அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.''

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".

''ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு" என்றேன்.

''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்''. எப்படி? என கேட்டார்.

''ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.''

''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.

''சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.

''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.''

''ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.

''ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''

''இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.''

''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''