Sunday, 26 July 2020

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு


திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு
திமுக இந்து மதத்திற்கு செய்த நன்மைகள் போல வேறு எந்த அரசும் செய்ததில்லை
இது தொடர்பான எனது Tweets 👇
(1)
கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை 2009 ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர்
அந்த திமுவா இந்துக்களின் எதிரி?
(2)
திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971)
(3)
பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது,
1969ல் முதல்வராகி 1970 ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே
(4)
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,... அர்ச்சகர்களுக்கு....
ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை
முதல்வர் கலைஞர் கருணாநிதி 18.10.2010 அன்று வழங்கினார்
(5)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்!!!!
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(6)
அனைவரும் கடவுளை தொடலாம்
அனைவரும் அர்ச்சகராகலாம்
அனைத்து மொழியிலும் மந்திரம் சொல்லலாம்!
அனைவரும் கற்பகிரகத்திற்குள் போகலாம்!
அனைவருக்கும் கோயில் சொந்தம்
என திமுகசொன்னதால் அது இந்துக்களின் எதிரி என அவாள்கள் பொய்யுரைப்பது நியாயமா?
நீதியா?
(7)
முருகனை திமுக இழிவு செய்ததா? ?
பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் அமைத்தது திமுக!
கோயில்களில் கருணை இல்லங்கள்,  நூல்லையங்கள், திருமண மண்டங்கள் அமைத்தது திமுக
அந்த திமுகவா இந்துக்களின் எதிரி?
(8)
திமுகவா இந்து மக்களை 4 வர்ணங்களாக பிரித்தது?
திமுகவா தீண்டாமை  செய்தது??
திமுகவா இந்து மக்களை  கோவில் கருவறைக்குள் விடாமல் தடுக்குது?
திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
இதையெல்லாம் செஞ்சவன் திமுகவை இந்துக்கள் எதிரி என்கிறான்
(9)
கலைஞர் தனது 90வது வயதிலும் ‘ராமானுஜர்’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு கதை எழுதினார்
சமத்துவ சமூகத்திற்காக போராடிய 11வது நூற்றாண்டை சேர்ந்த சீர்த்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கதையாக்கினார்
நல்லவர்களை திமுக ஆதரிக்கும்
(10)
குறிஞ்சி நில தமிழ் கடவுள் முருகனை இழிவாக சித்தரிப்பது யார்?
ஆபாச புராணங்களை எழுதியவர்தானே முருகனை இழிவாக சித்தரித்துள்ளர்
திமுகவினர் இந்துக்களின் எதிரி என்றால் 2006-11 ல் 550 கோடிகள் செலவில் 5000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்களா?
(11)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(12)
கிராம கோவில் பூசாரிகள்_நலவாரியம்
உருவாக்கியவர் கலைஞர்
பூசாரியின் மனைவி/மகள் மகப்பேறு உதவி - 6000
பூசாரியின் குழந்தை கல்விக்கு 1000 - 6000 வரை
பூசாரி அல்லது அவர் குழந்தை திருமணத்திற்கு நிதியுதவி
ஈமச்சடங்கிற்கு 2000 முதல் 15,000 வரை
(13)
திமுகவா NEET தேர்வு கொண்டு வந்து ஏழை இந்து மக்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுத்தது?
திமுகவா உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது?
திமுகவா OBC மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை மறுத்து கடந்த 5 வருடமா இந்துக்களை ஏமாற்றுது?
(14)
திமுக சமூகநீதிக்கான  கட்சி
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பிழைக்கும் கேவலமான கட்சி அல்ல
கடவுள் பெயரையும் மதத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிச்சையெடுக்கும்
கட்சியல்ல
உண்மையான இந்துக்கள் என்றென்றும் திமுகவைதான் ஆதரிப்பர்
(15)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(16)
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள் செய்தது திமுக
திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரியது திமுக. சுற்று சுவர்கள் கட்டியது
(17)
சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
தஞ்சை பெரிய கோயில்
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்குகள் எல்லாமே
திமுக செய்தது
(18)
பரம்பரை பரம்பரையாக ஒரே சாதி அனுபவித்த
பரிவட்ட மரியாதை நிறுத்தம்
அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
இந்து சமயத்தில் சமதர்மத்தை ஜனநாயகத்தை
கொண்டு வந்த திமுக இந்துக்களின் எதிரியா?
(19)
2006-2008 கலைஞர் ஆட்சி காலத்தில் மட்டும் 2,190 கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன
2006-2011-ம் ஆண்டு காலத்தில் 5000க்கும் மேற்பட்ட  குடமுழுக்கும் நடத்தப்பட்டன. 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன
(20)
2008-ல் கோயில்களில் புனரமைப்பு பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சத்திலிருந்து மூன்று கோடியாக உயர்த்தியவர் கலைஞர்
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன
(21)
கலைஞரின் 2006-2011 ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதிமுக. ஜெயலலிதா 2001-2006 ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 
இப்போது புரியுதா இந்துக்களின் நண்பன் திமுக என்பது...
(22)
இந்து_சமய_அறநிலையத்துறை (1971)
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக #எம்_கண்ணப்பனை நியமித்தார்.
(23)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(24)
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது எனத் தடுத்தது தீட்சிதர்கள்
அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. 
அவருக்கு உதவியது திராவிடர் கழகம்
அவருக்கு பென்சன் தந்தவர் கலைஞர்
By

Antony Parimalam

Thursday, 4 June 2020

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 கொண்டுவரப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர்.

நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது.

அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25 % லிருந்து 31% மாகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை 16 % லிருந்து 18 % மாகவும் அரசு அதிகரித்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில், காவல் துறை ஆணையம் ஒன்றை அமைத்தார் கலைஞர். அதன் அறிக்கையைத் தொடர்ந்து, காவலர் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருது வழங்குவது தொடங்கியது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். 1971 மே 27 அன்று ஒப்படைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மேலும் கூடுதலான கூட்டாட்சி சார்ந்த அரசமைப்பு சாசனத்தை நோக்கிச் செல்வதற்கான சாலை வரைபடத்தை அளிக்கின்றன

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் புத்தாடைகளாக வழங்கப்பட்டன. இதேபோல், 100% மாணவர் வருகையை நிலைநாட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில் 1974-75ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் 9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 1969 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத் தொகை அடிப்படையிலான திட்டங்கள், கடன் வசதிகள், கல்வி உதவித்தொகைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1970இல் ஓர் அரசாணை மூலம், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய வகுப்பு (பியுசி) வரையில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களின் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 1972இல் அரசாணை ஒன்றின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. 1970-71 முதல் 1974-75 வரையில் 377 மாணவர்கள் இத்திட்டத்தால் பலனடைந்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.4,46,200 வழங்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பட்டியலின மாணவர்களில் ஐந்து பேர் வழக்குரைஞர் பயிற்சி பெறவும், ஐந்து பேர் கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிக்க மையங்கள் 4 லிருந்து  1973-74இல் 30 ஆக அதிகரிக்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம், சமமான வாரிசுரிமைகளை உறுதியாக்கியது. , பெண்கள் இயல்பாகவே குடும்பத்துக்குள் பொருளாதாரப் பங்காளிகளானார்கள், முடிவெடுக்கிற இடத்தைப் பெற்றனர். தேசிய அளவில், இத்தகைய சட்டத் திருத்தம் 2005இல்தான் கொண்டுவரப்பட்டது.



மாற்றுத்திறனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் கலைஞரே முன்மாதிரி.

 2007இல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்டது, 2009ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்றே ஒரு தனித் துறை ஏற்படுத்தப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

மாற்றுப் பாலினத்தவர்களுக்காக என தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின் கீழ் 2008, ஏப்ரல் 15 அன்று திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. திருநங்கையர் சமூகத்துக்குப் பாதுகாப்பையும் சமூக மதிப்பையும் உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகிற பணி இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட 1970இல் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிறுவப்பட்டதானது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 730 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை உருவாக வழி செய்தது.

இந்த நடவடிக்கையால் 107 புதிய தொழில் நிறுவனங்கள் உதயமாகின, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பெருந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஒரு முக்கியத் தேவை என்பதால், 1998இல் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது முன்னோடி நடவடிக்கையாகும்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்), எல்காட் (தமிழ்நாடு மின்னணுக் கழகம்) ஆகிய இரண்டு அரசுத் துறைகளுக்கும் இடையேயான கூட்டுத் திட்டமாக, நவீன தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை கலைஞர் அரசு ஏற்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 2000, ஜூலையில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்துவைத்த டைடல் பூங்கா, மென்பொருள் நிறுவனங்கள் மிகவும் விரும்பி நாடுகிற இடமாக சென்னையை மாற்றியது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், சட்டத்தின் ஆட்சி, செயல்திறன்மிக்க அதிகாரிகள், அனைத்து மட்டத்திலுமான சமூக உள்கட்டமைப்பு ஆகியவையுமாகச் சேர்ந்து, தமிழகம் முதலீடுகளுக்கு இணக்கமான மாநிலமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்தின.


2008ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 23% லாரிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் 15% சென்னை, ஓசூர் நகரங்களிலிருந்து வந்தவை

அந்த ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள்

தயாரிப்புத் துறையில் ஒரு தலைமையிடத்தை பிடித்த சென்னை மாநகரம் 'தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட்' என்று பெயர் பெற்றது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர்

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

2006-2010- ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்







Monday, 23 March 2020

கலைஞரே சாதனைகளின் தலைவன் by நித்யா






கலைஞரே சாதனைகளின் தலைவன்

“நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி” – திராவிட பேரரசன் #கலைஞர் 💥
கலைஞர் அப்படி என்ன கிழித்து விட்டார் என மனசாட்சியின்றி கேட்கும் மடையவர்களுக்கு இந்த மலைப்போன்ற பட்டியலை காணிக்கை ஆக்குகிறேன்
உருவாக்கம் :- @nithya_shre





01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கித் தந்த #கலைஞர்
அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது
3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது




15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”
3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது
யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது
பார்வையற்றோர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள்




“சென்னை #அண்ணா_மேம்பாலம்”
ஜூலை 1, 1973
தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.





நவம்பர் 13, 1973
திருநெல்வேலி “திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்”
*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்
*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)
*குறள் போன்று இரண்டு அடுக்கு திருவள்ளுவர் பெயர்




ஏப்ரல் 17, 1973
“#பூம்புகார் சுற்றுலா நகரம்” சிலப்பதிகார கலைக் கூடம்.
இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் “பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்”
பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைப்பு.




“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்”
இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே




ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் 96அடி , 360டன்
“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா” என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் வசதிகள் செய்து 1970ல் ஓடச்செய்தார்




இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். 20 லட்சம் மக்கள் பயன் பெற.




குளித்தலை – முசிறி “தந்தை பெரியார் காவேரி பாலம்” கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்)



:)

Friday, 20 March 2020

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா? கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா?
கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?
தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன. அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, 1922-ம் ஆண்டு, இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்ததையடுத்து, கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின. 1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது. 
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக எம்.கண்ணப்பனை நியமித்தார்.
கலைஞரின் முதல் ஆட்சிக்காலத்தில், திருக்கோயில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அமைத்தார். 
தந்தை பெரியார் இருந்தபோதே பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து தகுதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று (2.12.1970) சட்டம் இயற்றினார் கலைஞர்.
உடனே சில அமைப்பினர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தச் சட்டத்தை நிறுத்தினார்கள்.
36 ஆண்டுகள் கழித்து, `அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்' என்று திமுக அரசு முடிவுசெய்து அவசரச் சட்டம் ஒன்றை, 12.8.2006 அன்று சட்டப் பேரவையில் கொண்டுவந்தது.
அதன்படி சைவ, வைணவ ஆகமப் பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இன்றைக்கும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் சட்டச் சிக்கலில் இருக்கிறது. 
திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான நிலங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டவை.
2006-2008 காலகட்டத்தில் மட்டுமே கருணாநிதி அரசின் சார்பில் 2,190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
2006-11-ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகாலத்தில் மொத்தமாக 5,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் திருப்பணியும் குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 240 திருக்கோயில் தேர்கள் புதுப்பிக்கப்பட்டன. 
ஆசியாவின் பெரிய தேர்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் 1948-ம் ஆண்டுக்குப் பிறகு இயக்கப்படவில்லை. அதை பழுதுபார்த்து, புனரமைத்து 1970-ம் ஆண்டு மீண்டும் தேரோட்டத்தை நடத்தினார் கலைஞர்.
25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்தத் தேரோட்டத்தில் 3 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேர் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நகர்ந்தது.
திருச்சி பெல் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக் கொண்ட, இரும்பினால் ஆன எந்திரத்தைக் கொண்டு தேர் இழுக்கப்பட்டது.
மேலும் இந்தக் கோயிலின் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ.30 லட்சம் செலவில் புதிதாகச் செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம்  27-4-2008 அன்று நடைபெற்றது.
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
2006-ம் ஆண்டு கிராமக் கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் 65,000 க்கும் மேற்பட்ட கிராமப் பூசாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தப் பூசாரிகளின் வாரிசுகள் திருமணத்துக்கு நிதியுதவி, மகப்பேறு நிதி, படிப்பு உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி போன்றவை வழங்கப்பட்டு வந்தன.
2008-ம் ஆண்டு திருக்கோயில்களில் புனரமைப்புப் பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
புராதனச் சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
கலைஞர் ஆட்சிக்காலத்தில் பழைமையான சிலைகள் பலவும் மீட்கப்பட்டன. 2010-ம் ஆண்டு மட்டும் 11 சிலைகள் மீட்கப்பட்டன.
ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்த கருணாநிதி `தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லை' என்று வருத்தப்பட்டுப் பேசினார்.
`கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு ஏன் இந்தக் கவலை? என்றார் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி. உடனே கருணாநிதி `கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும்தானே போகிறார்கள்!' என்றார்.
எளிய மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றவகையில் கோயில்களை மாற்றியமைத்தவர் கருணாநிதி.
தமிழக மக்கள் தெய்வமாக வணங்கும் அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கரின் கதையை தனது அழகுத் தமிழில் வடித்துத் தந்தவர் கருணாநிதி.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமாநுஜரின் முற்போக்குச் சிந்தனைகளை ஒன்றிணைத்த கருணாநிதி தனது இலக்கிய கைவண்ணத்தில் ராமாநுஜ காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியம் தொலைக்காட்சியில் வந்ததைப்பார்த்த திருப்பதி தேவஸ்தானம், அதை தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கேட்டது. அதற்கு சம்மதித்ததோடு அந்தத் தொடரை இலவசமாக மொழிமாற்றம் செய்துகொள்ளவும் அனுமதித்தார். 
கலைஞர் தனது வீட்டைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் தந்து பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ``எனது பள்ளிப் பருவத்தில், திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோயில் திருப்பணி என்று ஆங்காங்கே  எழுதப்பட்டிருக்கும். நடமாடும் கோயில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று அர்த்தமில்லை. மனிதனின் உடலே நடமாடும் கோயில். அதில் உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பதைத்தான் திருப்பணி என்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்பது மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார். அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது'' என்றார். அதுதான் கலைஞர்!
By மு.ஹரி காமராஜ்
August 09, 2018 at 6:24 PM

Wednesday, 18 March 2020

திமுககேள்விக்குஎன்னபதில்No1 டுபாக்கூர் சொத்துப்பட்டியலுடன் சில்லறைகள்

கலைஞர் குடும்பச் சொத்துபட்டியல் என திட்டமிட்டு ஒரு நீண்ட கற்பனை பட்டியலை வாட்ஸ்அப்பில் பரப்பி வரும் திருட்டு பொறுக்கிகளிடம்  திமுகவினர் கேட்க வேண்டிய எதிர்
கேள்விகள் இதோ 👇

கேள்வி எண் (1)

15 வருசமா கலைஞர்சொத்து என்ற பட்டியல் வாட்ஸ்அப்பில் உலவுதே?

கலைஞரின் அக்கா மகன்
மாறனின் குடும்ப சொத்துக்கள் எப்படிடா கலைஞர் சொத்தாகும்?

1993 SUN tv போலிகம்பெனி அல்ல
ஒரு ரூபா ஊதியத்தில் ஆரம்பிக்கலடா

உன் அக்கா மகனின் சொத்தை உன் பேரில் எழுதிக்குவியா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (2)

கலைஞர் குடும்ப சொத்து பட்டியல் நீளமாயிருக்கே"

அது கப்சா பட்டியல்😜
நீளமாத்தான்டா இருக்கும்

மாறன் குடும்பம் உழைப்பில் வந்த
19100கோடி சொத்துப் பட்டியலும் நீளமாதான் இருக்கும்😁

அப்படியே
அம்பானி 3,80,700Cr சொத்தை கலைஞர் குடும்பத்து சொத்தா மாற்றலாமே?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (3)

"வாட்ஸ் அப்பில் கலைஞர் சொத்து பட்டியல் உலவுதே"

2006ல் இருந்தே உலவுது

2011-20 அதிமுக ஆட்சி
2014-20 பிஜேபி ஆட்சி

பட்டியல் உண்மையெனில்
WhatsAppல் ஏன் அவதூறு பண்ற?
லஞ்ச ஒழிப்பு அமலாக்க,வருமான வரித்துறைக்கு அனுப்பலாமே?

உன் நோக்கம் அவதூறு பரப்புவதானே

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (4)

"கலைஞர் சயின்டிபிக்கா ஊழல் பண்ணிட்டார்"

Scientific என்றால் நிரூபிக்கத்தக்க என்று பொருள்
நிரூபிக்க வேண்டியதானே

1977முதல் 30 வருசம் ADMK ஆட்சி நடந்திருக்கே

FIR இல்லாம மேம்பால ஊழல் என அசிங்கப்பட்டது யாரு
கேவலம்..ஒரு Petty case கூட போட முடியாதது ஏன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (5)

"கலைஞர் கண்டுபிடிக்க முடியாம ஊழல் பண்ணிட்டார்"

கலைஞர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் திறமையால்தானே ஜெயலலிதாவின் மேல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுத்தார்

அதே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஜெயலலிதா 2001,2011ல் கலைஞர் மீது வழக்கு போட முடியாததேன்?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (6)

1976 முதல் 43 வருசமா யாராலுமே கண்டு பிடிக்க முடியாதபடி
கலைஞர் ஊழல் பண்ணிட்டார்

இப்படி எவனாவது சொன்னா நமது லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்க பிரிவு, வருமானவரித்துறை,CBI திறமையற்ற அமைப்புகள் என்பதாக பொருள்

அவன் மீது சட்டப்படி ஏன் நடவடிக்கை
எடுக்கக் கூடாது?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (7)

"கலைஞர் சொத்து சேர்த்துட்டார்"

சொத்து எதுக்குடா சேர்ப்பாங்க?
ஆடம்பர வாழ்க்கைக்காகத்தானே

கலைஞர் என்ன கொடநாடு மாதிரியான பங்களாவிலா வாழ்ந்தார்?

கடைசிவரை
சாதா வீட்டில்தானே

தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனைக்கு தானமாக தந்தவரா ஊழல்வாதி?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (8)

கலைஞரை ஊழல்வாதியாக சித்தரித்தவர்கள்

இந்திரா
MGR
ஜெயலலிதா
ஆகியோர்

ஆனால் இந்த மூவருமே ஊழல் வழக்கில் சிக்கிய சிகாமணிகள்

கலைஞரால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கையில் கலைஞர் ஊழல் செய்ததாக சிறு ஆதாரம் சிக்கியிருந்தால் கலைஞரை ஒழித்திருக்கமாட்டாரா?

யோசிங்க

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண்(9)

யார் திருந்தாத ஜென்மங்கள்?

ஒரு பக்கம் வழக்கு..

இன்னொரு பக்கம்
மிடாஸ் கம்பெனி
1000 கோடி பீனிக்ஸ் தியேட்டர்
540 கோடி கண்டைனர் லாரிகள்
பணமதிப்பின் போது சொத்துக் குவிப்பு

மறைந்து விட்ட கலைஞரின் சொத்து பட்டியல் போடுறவன்
இதையெல்லாம் பேசாதது ஏன்?
💦

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (10)

கலைஞர் சொத்து பற்றி பட்டியல் போட்டவுடன் கலைஞர் தனக்கு சொத்து எப்படி வந்தது என்பதை தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டார்

அந்த யோக்கியதை இங்கேயுள்ள எந்த தலைவனுக்கு இருக்கு?

சொல்லுங்கடா

இதோ அவரது தெளிவான விளக்கம்

https://t.co/Td0nZBsh9h

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (11)

கிறுக்கன் :- கலைஞர் சொத்து எப்படி வந்தது?

பதில்:- மடப்பயலே..இதுக்கு அவர் ஏற்கனவே
விபரமா பதிலும் கொடுத்திருக்கார்

வருமான வரித்துறைக்கு கணக்கும் கொடுத்திருக்கார்

உனக்கு சந்தேகம் இருந்தால் வருமானவரித்துறையிடம் உன் பட்டியலை கொடு
நடவடிக்கை எடுப்பர்

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

கேள்வி எண் (12)

கலைஞர் குடும்ப சொத்துப்பட்டியல் இருந்தா
அதை வைத்து வழக்கு போட வேண்டியதுதானே
சம்பந்தப்பட்டவர்கள் வழக்கை சந்திப்பர்

ஏன் டுபாக்கூர் பட்டியலை வாட்ஸ்அப்பில் போட்டு ஊரை ஏமாத்துற?

கலைஞர் ஜெ மீது வழக்குதானே போட்டார்

பட்டியல் தீர்ப்பில் வந்ததா இல்லையா?

#திமுககேள்விக்குஎன்னபதில்No1

By Antony Parimalam

Friday, 28 February 2020

தமிழ்நாட்டை கடன்கார நாடாக மாற்றியது திமுகவா...அதிமுகவா..அதிர்ச்சி அளிக்கும் உண்மை நிலை

தமிழ்நாட்டை கடன்கார நாடாக மாற்றியது திமுகவா...அதிமுகவா..அதிர்ச்சி அளிக்கும் உண்மை நிலை
2020-21 க்கு தமிழக அரசின் சொந்த வரி வருமானம்  ₹1,33,530.30 கோடி என கணிக்கப்படுகிறது.  இதில் 2020-21 ஆம் ஆண்டிற்கு  37,120.33 கோடி வட்டியாக மட்டும் தமிழகம் செலுத்த வேண்டியுள்ளது.
தமிழக அரசின் வட்டி (கோடிகளில்)
2017-18. ...26011.5 (Gross)
2018-19....28703.9 (RE)
2019-20.....32461
மேலும் நம்முடைய வரி வருவாயில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம் வருவதை கணக்கில் கொள்க.
இப்போது தமிழக அரசிற்கு இவ்வளவு கடன் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்
1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் 453.21 கோடி Public debt இருந்தது
திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்
முழு விபரம்( கோடிகளில்)
1967-76...368.79 (822-453.21)Public Debt only
1989-91...1606 (5501-3895)Public debt only
1996-2001...19407 (34541-15134) Total liability
2006-2011 ....50622 (114470-63848 )
Total liability
ஆக மொத்தம் திமுகவின் 21 வருட ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் 72003.79 கோடிகள் மட்டுமே.
மேலும் MGR ன் ஆட்சியில்1977-1987 வரை 2535 கோடிகள் (3445-910)
ஜெயலலிதா 1991-96 ஆட்சியில் 8090(15134-7044) கோடிகள் கடனும் 2001-2006 ஆட்சியில் 29307(68848-34541)கோடிகள் கடனும் வாங்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2021 வரை மட்டும் தமிழக அரசு 342190 கோடிகள் கடன் வாங்கவிருக்கிறது
2011 ல் தமிழக கடன் 114470 கோடிகள் 2021 ல்  456660 கோடிகளாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது அதிமுக ஆட்சியில் மட்டும்
ஒட்டுமொத்தமாக கீழ்கண்டவாறு கடன்கள் வாங்கப்பட்டுள்ளது
1977-88.  ...2535 கோடிகள்
1991-96.....8090.      "
2001-06....29307.      "
இத்துடன் உரிய புள்ளிவிபரங்கள் அட்டவணை மற்றும் இணைப்புகள்
உள்ளது





Monday, 13 January 2020

சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்.. 

சென்னை மாநகரில் திமுக கட்டிய பாலங்கள்..
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சமர்பித்த பட்டியல்*
நெடுஞ்சாலைத் துறையே தமிழகத்தின் சமூக, பொருளாதார தொழில் வளர்ச்சிகளுக்குத் தேவையான அடித்தளங்களை உருவாக்கிடும் முயற்சிகளில் சாலை வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகுமென கருதியதன் விளைவாக 01-08-1996இல் தனித்துறையாகவும், 26-03-1998இல் அதற்கான தனி அமைச்சகமும் அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான்.
பின்னர் அத்துறையின் வாயிலாக, தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை எடுத்துரைத்தால் ஏடுகள் போதாது.
பொதுப்பணித்துறை*
1996இல், ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றும் வரை மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவற்றை கட்டமைக்கும் பணி மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இவற்றின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வந்தது.
மேயருக்கே அதிகாரம்*
இந்த நிலையினை மாற்றி, மக்களே நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுத்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மாநகராட்சியின் வாயிலாகவே முதன் முறையாக பத்து மேம்பாலங்கள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு,
பீட்டர்ஸ் சாலை, பாந்தியன் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட ஒன்பது சாலை சந்திப்புகளில் புதியதாக மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
தொழிநுட்பம் சார்ந்த காரணங்களால் பெரம்பூரில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாலப் பணி மாத்திரமே, தடைப்பட நேர்ந்தது.
மீதி பணம் திருப்பி கொடுத்தோம்
மேற்கண்ட பாலங்கள் கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகை 94.50 கோடி ரூபாயில் 60.70 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு, 33.72 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படாமல் மீண்டும் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டதும், அத்தகையப் பாலங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலையில் அமைக்கப்பட்ட பாலத்தின் சிறந்த வடிவமைப்பைப் பாராட்டி மும்பையைச் சார்ந்த ‘Indian Institute of Bridge Engineers' எனும் நிறுவனம் ‘Best of Bridge' எனும் சிறந்த பாலத்திற்கான விருது வழங்கியது.
பெரம்பூர் மேம்பாலம் திறப்பு*
தொடர்ந்து 2006இல், மீண்டும் சென்னை மாநகராட்சியைத் திமுக கைப்பற்றியப் பிறகு தடைப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தின் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 28-3-2010இல் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு மாத்திரமல்லாமல் 30-3-2008இல், 9 கோடியே 72 லட்சம் செலவில், வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை சந்திப்பிலும்;
14-8-2008இல் 19 கோடியே 80 லட்சம் செலவில் துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பிலும்;
29-12-2008இல், 16 கோடியே 50 லட்சம் செலவில் கோபதி நாராயணா சாலை - திருமலைச் சாலை சந்திப்பிலும்;
11-12-2009இல், 19 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் செனடாப் சாலை - டர்ன்புல்ஸ் சாலையில் ‘திரு. ஜி.கே. மூப்பனார் பெயரிலும்';
11-12-2009இல், ரூபாய் 6 கோடியே 3 லட்சம் செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே சைதை மார்க்கெட் -கிண்டி தொழிற்பேட்டையை இணைக்கும் வகையில் ஆலந்தூர் சாலையில் ‘மிசா ஆபிரகாம்' பெயரிலும்
மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டு அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த வணக்கத்திற்குரிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆற்றுப்பாலங்கள்*
மேலும் 12 கோடியே 20 லட்சம் செலவில் கத்திவாக்கம் நெடுஞ்சாலை காக்ரேன் பேசின் சாலை,
இரயில்வே இருப்புப் பாதையினைக் கடக்கும் வகையில் மேம்பாலமும்,
3 கோடியே 52 இலட்சம் செலவில் கிருஷ்ணமூர்த்தி நகர் - மகாகவி பாரதி நகர் இடையே செல்லும் கேப்டன் காட்டன் கால்வாயின் குறுக்கே ஒரு பாலமும்,
2 கோடியே 9 லட்சம் செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே, எம்.எஸ்.கே. நகர் மற்றும் நரசிம்மா நகரை இணைக்கும் பாலமும்,
3 கோடியே 38 லட்சம் செலவில் கூவம் ஆற்றின் குறுக்கே, மேத்தா நகர் ஆபிசர்ஸ் காலனி முதல் தெருவையும் - வெங்கடாசலபதி தெருவையும் இணைக்கும் பாலமும்,
2 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் ஓட்டேரி நல்லா ஆற்றின் குறுக்கே இணைப்புப் பாலமும்,
3 கோடியே 12 இலட்சம் செலவில் அடையார் இந்திராநகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இணைப்புப் பாலமும்,
1 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே வளைவுப் பாலமும் அமைக்கப்பட்டது.
மத்திய கைலாஷ் பாலம்*
மேலும் 10 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில், மணியக்காரச் சத்திரத் தெருவில் ஒரு சுரங்கப்பாதையும்,
4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒரு சுரங்கப்பாதையும்,
13 கோடியே 39 லட்சம் செலவில், வில்லிவாக்கம் ரயில் பாதையைக் கடப்பதற்கான ஒரு சுரங்கப்பாதையும் கட்டப்பட்டது.
1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வாலாஜா சாலை பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைந்த பாலமும், 2 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மத்திய கைலாஷ் அருகில் இருந்த பாலமும் அகலப்படுத்தப்பட்டது.
போராடி திறந்தோம்
மேலும் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் ரங்கராஜபுரம் ரயில் பாதையின் குறுக்கே கட்டத் தொடங்கிய மேம்பாலம் 80 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்பாலம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தி.மு. கழக நிர்வாகத்தின்போது 23 கோடி ரூபாய் செலவில் தங்கச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணி நிறைவடையும் தருவாயில் இருந்தது.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகும், அப்பாலம் திறக்கப்படாததால் தி.மு. கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக அப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கத்திப்பாரா மேம்பாலம்*
மத்திய அரசில் தி.மு. கழகம் அங்கம் வகித்ததன் விளைவாக, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அம்பத்தூர் அருகே அமைந்த பாடி மேம்பாலமும்,
கோயம்பேட்டில் அமைந்த மேம்பாலமும்,
மீனம்பாக்கத்தில் அமைந்த மேம்பாலமும்,
பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவரும் வியந்து பார்க்கும் வகையில் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவில் அமைந்த கத்திப்பாரா மேம்பாலமும் தி.மு.கழகத்தின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது.
பல பாலங்கள்
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அண்ணாநகரில் ஒரு மேம்பாலமும்
வடபழனியில் ஒரு மேம்பாலமும்,
மேற்கு அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் ஒரு மேம்பாலமும்,
வடச்சென்னை மூலக்கடை அருகில் ஒரு மேம்பாலமும்,
வியாசர்பாடி கொல்கத்தா நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது.
போரூர் அருகில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி தற்போது முடிவுறும் தறுவாயில் உள்ளது.
இவற்றில் பல மேம்பாலங்கள் அன்றைய உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டார்
இது தொடர்பாக, சட்டசபையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அன்றைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, ஒரே ஒரு எடுத்துக்காட்டாக, கொருக்குப்பேட்டை காக்ரேன் பேசின் சாலை மேம்பாலம் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்.
அதுவும் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை எடுத்துக்கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டது இன்றளவும் அவைக் குறிப்பில் உள்ளது.
ஆதாரம்