Saturday, 8 August 2020

கலைஞரும் - மின்சாரத்துறையும் :

 கலைஞரும் - மின்சாரத்துறையும் :

திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது!

காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும்.

அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம்,

1️⃣. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970

2️⃣. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970

3️⃣. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971

4️⃣. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971

5️⃣. வைகை 6 MW மின் திட்டம், 1990

6️⃣. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990

7️⃣. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998

8️⃣. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000

9️⃣. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001

🔟. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011

1️⃣1️⃣. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011

1️⃣2️⃣. 7 சர்க்கரை ஆலைகளில் 162 MW திறன் கொண்ட இணைமின்  உற்பத்தி திட்டங்கள்

1️⃣3️⃣. திருவண்ணாமலை அருணாசலம் சர்க்கரை ஆலையில் 19 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்

1️⃣4️⃣. காஞ்சிபுரம் பழைய சீவரம் 12 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்

1️⃣5️⃣. ஈரோடு வேலம்பாளையம் 10 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டம்

1️⃣6️⃣. சூரிய சக்தி மூலம் 165 KW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள் 

1️⃣7️⃣. பேசின் பிரிட்ஜ் 196 MW திறன் கொண்ட டீசல் என்ஜின் மின் உற்பத்தி திட்டம்

1️⃣8️⃣. சாத்தனூர் 7.5 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்

1️⃣9️⃣. Parsan's Valley 30 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டங்கள் 

2️⃣0️⃣. திருமூர்த்தி 1.95 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்

2️⃣1️⃣. முக்குருத்தி 0.70 MW  திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம் 

2️⃣2️⃣. நெய்வேலி 250 MW திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி கூடுதல் மின் உற்பத்தி திட்டம்

2️⃣3️⃣. ஜெயங்கொண்டம் 500 MW திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டம் 

2️⃣4️⃣. சாமல்பட்டி 106 MW மின் திட்டம்

2️⃣5️⃣. பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 MW  மின் திட்டம்

2️⃣6️⃣. சமயநல்லூர் 106 MW  மின் திட்டம்

2️⃣7️⃣. திருவாரூர் 107 MW  மின் திட்டம்

2️⃣8️⃣. எண்ணூர் 330 MW  அனல் மின் திட்டம்

இந்த திட்டங்கள் அனைத்தும் 1️⃣9️⃣6️⃣9️⃣-1️⃣9️⃣7️⃣6️⃣ & 1️⃣9️⃣9️⃣6️⃣-2️⃣0️⃣0️⃣1️⃣ திமுக ஆட்சிக்காலம் வரை உருவானவை. 1️⃣9️⃣9️⃣6️⃣ல் திமுக ஆட்சி தொடங்கும் போது நுகர்வோரின் தேவையை ஈடு செய்த உச்ச மின் அளவு 4424 MW ஆகா இருந்தது, 2️⃣0️⃣0️⃣1️⃣ல் 5932 MW என்று உயர்ந்திருக்கிறது, அதாவது 1508 MW உயர்வு (மூன்றில் ஒரு பங்கு உயர்வு).

காற்று, சூரிய சக்தி, கரும்பு சக்கை போன்ற இணைமின் உற்பத்தி திட்டங்களுக்கு முழு வரிவிலக்கும் அளித்திருக்கிறார் கலைஞர்.

#SCADA திட்டம்:

சென்னையில் உள்ள 96 துணை மின்நிலையங்களையும் ஒன்றாக இணைத்து எங்கெங்கு கூடுதல் மின்சாரம் இருக்கிறதோ அதை அங்கிருக்கும் மின்மாற்றி மூலம் மின்சாரம் தேவைப்படும் இடத்திற்கு மாற்றி மின்னோட்டத்தை சீராக்குவதற்காக சென்னையில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் தான் Supervisory Control & Data Acquisition System (SCADA).

அதற்கடுத்து 2️⃣0️⃣0️⃣1️⃣-2️⃣0️⃣0️⃣6️⃣ அதிமுக ஆட்சி. எத்தனை மின் திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு  ஜெயலலிதா தொடங்கினார் என்பதை யாரேனும் அதிமுக தொண்டர்களிடம் பட்டியலிட சொல்லுங்களேன்..?

2️⃣0️⃣0️⃣6️⃣-2️⃣0️⃣1️⃣1️⃣ல் மீண்டும் திமுக ஆட்சி. அந்த 5 ஆண்டுகளில் கலைஞர் அமல்படுத்திய திட்டங்கள்.

1️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2007

2️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2007

3️⃣. ராமநாதபுரம் 92 MW எரிவாயு மின் திட்டம், 2008

4️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2008

5️⃣. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2008

6️⃣. மேட்டூர் 500 MW அனல் மின் நிலையம், 2008

7️⃣. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 3), 2009

8️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2009

9️⃣. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2009

🔟. உடன்குடி 1600 MW அனல்மின் நிலையம்,2009

இது போக சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக 21 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள், மின் பகிர்மானத்துக்கு 233 துணை மின் நிலையங்கள் என்று திமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது.

கலைஞரின் மின் உற்பத்தி திட்டங்களுக்கெல்லாம் மகுடம் போன்றது காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்.

வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான மூலாதாரம்.

அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.

20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.

அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.

இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப்படுகிறது. அது தான் 400 MW திறன் கொண்ட "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும்.

தமிழ்நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தியான 2284 MW-ல் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மட்டும் மொத்தம் 866 MW உற்பத்திக்கான திட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அதாவது 3ல் ஒரு பங்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கலைஞர் உருவாக்கியதே!

இதை Tangedco இணையதளத்தில் Hydro Stations பக்கத்தில் போய் பார்க்கலாம்.

இப்படியெல்லாம் மின் உற்பத்தி, மின் பகிர்மான திட்டங்களை கொண்டுவந்த தலைவர் கலைஞர் இதன் மூலம் மக்களுக்கு என்ன திட்டங்களை தந்திருக்கிறார்?

♦ அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், 1969-76

♦ குடிசைக்கு ஒரு மின்விளக்கு திட்டம், 1969-76

♦ விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 1989-91

♦ இலவச மின்சாரம் விரயமாவதை தடுத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக மின் மோட்டார்

♦ பெரு விவசாயிகளுக்கு 50% மானியமாக  மின் மோட்டார்

♦ கைத்தறி & விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

♦ ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்

ஆக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் போது மின்வெட்டு என்று இனியும் யாரேனும் குற்றம் சொன்னால் அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி மாண்புமிகு புரட்சித்தலைவி இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் 15 ஆண்டு பொற்கால ஆட்சியில் (1991-96, 2001-06 & 2011-16) தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் எத்தனை என்பது மட்டும் தான்.

#FatherofModernTamilnadu

ByA Sivakuma

தமிழ்நாடு மின்கழக தொ‌ழிலாள‌ர் முன்னேற்ற சங்கம்

Sunday, 26 July 2020

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு


திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு
திமுக இந்து மதத்திற்கு செய்த நன்மைகள் போல வேறு எந்த அரசும் செய்ததில்லை
இது தொடர்பான எனது Tweets 👇
(1)
கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை 2009 ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர்
அந்த திமுவா இந்துக்களின் எதிரி?
(2)
திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971)
(3)
பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது,
1969ல் முதல்வராகி 1970 ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே
(4)
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,... அர்ச்சகர்களுக்கு....
ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை
முதல்வர் கலைஞர் கருணாநிதி 18.10.2010 அன்று வழங்கினார்
(5)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்!!!!
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(6)
அனைவரும் கடவுளை தொடலாம்
அனைவரும் அர்ச்சகராகலாம்
அனைத்து மொழியிலும் மந்திரம் சொல்லலாம்!
அனைவரும் கற்பகிரகத்திற்குள் போகலாம்!
அனைவருக்கும் கோயில் சொந்தம்
என திமுகசொன்னதால் அது இந்துக்களின் எதிரி என அவாள்கள் பொய்யுரைப்பது நியாயமா?
நீதியா?
(7)
முருகனை திமுக இழிவு செய்ததா? ?
பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் அமைத்தது திமுக!
கோயில்களில் கருணை இல்லங்கள்,  நூல்லையங்கள், திருமண மண்டங்கள் அமைத்தது திமுக
அந்த திமுகவா இந்துக்களின் எதிரி?
(8)
திமுகவா இந்து மக்களை 4 வர்ணங்களாக பிரித்தது?
திமுகவா தீண்டாமை  செய்தது??
திமுகவா இந்து மக்களை  கோவில் கருவறைக்குள் விடாமல் தடுக்குது?
திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
இதையெல்லாம் செஞ்சவன் திமுகவை இந்துக்கள் எதிரி என்கிறான்
(9)
கலைஞர் தனது 90வது வயதிலும் ‘ராமானுஜர்’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு கதை எழுதினார்
சமத்துவ சமூகத்திற்காக போராடிய 11வது நூற்றாண்டை சேர்ந்த சீர்த்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கதையாக்கினார்
நல்லவர்களை திமுக ஆதரிக்கும்
(10)
குறிஞ்சி நில தமிழ் கடவுள் முருகனை இழிவாக சித்தரிப்பது யார்?
ஆபாச புராணங்களை எழுதியவர்தானே முருகனை இழிவாக சித்தரித்துள்ளர்
திமுகவினர் இந்துக்களின் எதிரி என்றால் 2006-11 ல் 550 கோடிகள் செலவில் 5000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்களா?
(11)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(12)
கிராம கோவில் பூசாரிகள்_நலவாரியம்
உருவாக்கியவர் கலைஞர்
பூசாரியின் மனைவி/மகள் மகப்பேறு உதவி - 6000
பூசாரியின் குழந்தை கல்விக்கு 1000 - 6000 வரை
பூசாரி அல்லது அவர் குழந்தை திருமணத்திற்கு நிதியுதவி
ஈமச்சடங்கிற்கு 2000 முதல் 15,000 வரை
(13)
திமுகவா NEET தேர்வு கொண்டு வந்து ஏழை இந்து மக்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுத்தது?
திமுகவா உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது?
திமுகவா OBC மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை மறுத்து கடந்த 5 வருடமா இந்துக்களை ஏமாற்றுது?
(14)
திமுக சமூகநீதிக்கான  கட்சி
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பிழைக்கும் கேவலமான கட்சி அல்ல
கடவுள் பெயரையும் மதத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிச்சையெடுக்கும்
கட்சியல்ல
உண்மையான இந்துக்கள் என்றென்றும் திமுகவைதான் ஆதரிப்பர்
(15)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்
Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்
2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(16)
ஆதிதிராவிடர்,பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள் செய்தது திமுக
திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரியது திமுக. சுற்று சுவர்கள் கட்டியது
(17)
சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
தஞ்சை பெரிய கோயில்
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்குகள் எல்லாமே
திமுக செய்தது
(18)
பரம்பரை பரம்பரையாக ஒரே சாதி அனுபவித்த
பரிவட்ட மரியாதை நிறுத்தம்
அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
இந்து சமயத்தில் சமதர்மத்தை ஜனநாயகத்தை
கொண்டு வந்த திமுக இந்துக்களின் எதிரியா?
(19)
2006-2008 கலைஞர் ஆட்சி காலத்தில் மட்டும் 2,190 கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன
2006-2011-ம் ஆண்டு காலத்தில் 5000க்கும் மேற்பட்ட  குடமுழுக்கும் நடத்தப்பட்டன. 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன
(20)
2008-ல் கோயில்களில் புனரமைப்பு பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சத்திலிருந்து மூன்று கோடியாக உயர்த்தியவர் கலைஞர்
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன
(21)
கலைஞரின் 2006-2011 ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதிமுக. ஜெயலலிதா 2001-2006 ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 
இப்போது புரியுதா இந்துக்களின் நண்பன் திமுக என்பது...
(22)
இந்து_சமய_அறநிலையத்துறை (1971)
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக #எம்_கண்ணப்பனை நியமித்தார்.
(23)
2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
இதெல்லாம் திமுக செய்தது
(24)
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது எனத் தடுத்தது தீட்சிதர்கள்
அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. 
அவருக்கு உதவியது திராவிடர் கழகம்
அவருக்கு பென்சன் தந்தவர் கலைஞர்
By

Antony Parimalam

Thursday, 4 June 2020

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

சமூகச்சீர்திருத்தமும் கலைஞரும்

தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களைச் சுரண்டும் நிலவுரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியாயக் கூலிச் சட்டம் – 1969 கொண்டுவரப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு குறைப்பு) சட்டம் -1970 நிறைவேற்றியது கலைஞர்.

நில உரிமைகளில் இருந்த பாகுபாட்டைக் குறைப்பதற்கான அந்தச் சட்டம் 30 ஏக்கர் என்ற உச்சவரம்பை 15 ஏக்கர் எனக் குறைத்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969ல், குத்தகை விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது.

அது, முதன்முறையாக, வருவாய்த் துறைப் பதிவேடுகளில் குத்தகை விவரங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25 % லிருந்து 31% மாகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை 16 % லிருந்து 18 % மாகவும் அரசு அதிகரித்தது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில், காவல் துறை ஆணையம் ஒன்றை அமைத்தார் கலைஞர். அதன் அறிக்கையைத் தொடர்ந்து, காவலர் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரைப் பாராட்டி ஆண்டுதோறும் விருது வழங்குவது தொடங்கியது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழு அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். 1971 மே 27 அன்று ஒப்படைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மேலும் கூடுதலான கூட்டாட்சி சார்ந்த அரசமைப்பு சாசனத்தை நோக்கிச் செல்வதற்கான சாலை வரைபடத்தை அளிக்கின்றன

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகள் புத்தாடைகளாக வழங்கப்பட்டன. இதேபோல், 100% மாணவர் வருகையை நிலைநாட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில் 1974-75ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கென ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கலைஞர் ஆட்சியில் 9, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசுத் திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 1969 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத் தொகை அடிப்படையிலான திட்டங்கள், கடன் வசதிகள், கல்வி உதவித்தொகைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1970இல் ஓர் அரசாணை மூலம், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய வகுப்பு (பியுசி) வரையில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களின் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 1972இல் அரசாணை ஒன்றின் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. 1970-71 முதல் 1974-75 வரையில் 377 மாணவர்கள் இத்திட்டத்தால் பலனடைந்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.4,46,200 வழங்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பட்டியலின மாணவர்களில் ஐந்து பேர் வழக்குரைஞர் பயிற்சி பெறவும், ஐந்து பேர் கணக்குத் தணிக்கையாளர் பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்குப் பயிற்சியளிக்க மையங்கள் 4 லிருந்து  1973-74இல் 30 ஆக அதிகரிக்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம், சமமான வாரிசுரிமைகளை உறுதியாக்கியது. , பெண்கள் இயல்பாகவே குடும்பத்துக்குள் பொருளாதாரப் பங்காளிகளானார்கள், முடிவெடுக்கிற இடத்தைப் பெற்றனர். தேசிய அளவில், இத்தகைய சட்டத் திருத்தம் 2005இல்தான் கொண்டுவரப்பட்டது.



மாற்றுத்திறனாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் கலைஞரே முன்மாதிரி.

 2007இல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்டது, 2009ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்றே ஒரு தனித் துறை ஏற்படுத்தப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

மாற்றுப் பாலினத்தவர்களுக்காக என தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின் கீழ் 2008, ஏப்ரல் 15 அன்று திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. திருநங்கையர் சமூகத்துக்குப் பாதுகாப்பையும் சமூக மதிப்பையும் உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகிற பணி இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிட 1970இல் தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ) ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிறுவப்பட்டதானது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 730 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை உருவாக வழி செய்தது.

இந்த நடவடிக்கையால் 107 புதிய தொழில் நிறுவனங்கள் உதயமாகின, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

தொழில் நிறுவனங்களின் வேகமான, முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் வகையில், 1997ஆம் ஆண்டில், தமிழ்நாடு தொழிற்சாலை நகரிய வட்டார மேம்பாட்டு ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பெருந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவது ஒரு முக்கியத் தேவை என்பதால், 1998இல் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது முன்னோடி நடவடிக்கையாகும்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்), எல்காட் (தமிழ்நாடு மின்னணுக் கழகம்) ஆகிய இரண்டு அரசுத் துறைகளுக்கும் இடையேயான கூட்டுத் திட்டமாக, நவீன தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை கலைஞர் அரசு ஏற்படுத்தியது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 2000, ஜூலையில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திறந்துவைத்த டைடல் பூங்கா, மென்பொருள் நிறுவனங்கள் மிகவும் விரும்பி நாடுகிற இடமாக சென்னையை மாற்றியது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், சட்டத்தின் ஆட்சி, செயல்திறன்மிக்க அதிகாரிகள், அனைத்து மட்டத்திலுமான சமூக உள்கட்டமைப்பு ஆகியவையுமாகச் சேர்ந்து, தமிழகம் முதலீடுகளுக்கு இணக்கமான மாநிலமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்தின.


2008ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 23% லாரிகள் மற்றும் இருசக்கர வண்டிகளில் 15% சென்னை, ஓசூர் நகரங்களிலிருந்து வந்தவை

அந்த ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள்

தயாரிப்புத் துறையில் ஒரு தலைமையிடத்தை பிடித்த சென்னை மாநகரம் 'தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட்' என்று பெயர் பெற்றது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

1972 -ம் ஆண்டு தமிழக மாணவர்கள் விவசாயப் பொறியியல் கற்க தென்னிந்தியாவில் முதன் முதலில் விவசாயக் கல்லூரி ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

கால்நடைப் பிரிவை தனியாகப் பிரித்து, 1989-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் கலைஞர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

 1969 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் பதினைந்து ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்குக் கொடுத்தார் கலைஞர்

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணம் 2000-2001-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2006-ம் ஆண்டு 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தது. 2009-2010-ம் ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர் காப்பீடு செய்தனர்.

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்

2006-2010- ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி. 1 லட்சத்து 57 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது

#சமூகச்சீர்திருத்தமும்_கலைஞரும்







Monday, 23 March 2020

கலைஞரே சாதனைகளின் தலைவன் by நித்யா






கலைஞரே சாதனைகளின் தலைவன்

“நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி” – திராவிட பேரரசன் #கலைஞர் 💥
கலைஞர் அப்படி என்ன கிழித்து விட்டார் என மனசாட்சியின்றி கேட்கும் மடையவர்களுக்கு இந்த மலைப்போன்ற பட்டியலை காணிக்கை ஆக்குகிறேன்
உருவாக்கம் :- @nithya_shre





01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கித் தந்த #கலைஞர்
அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது
3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது




15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”
3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது
யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது
பார்வையற்றோர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள்




“சென்னை #அண்ணா_மேம்பாலம்”
ஜூலை 1, 1973
தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.





நவம்பர் 13, 1973
திருநெல்வேலி “திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்”
*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்
*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)
*குறள் போன்று இரண்டு அடுக்கு திருவள்ளுவர் பெயர்




ஏப்ரல் 17, 1973
“#பூம்புகார் சுற்றுலா நகரம்” சிலப்பதிகார கலைக் கூடம்.
இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் “பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்”
பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைப்பு.




“தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்”
இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே




ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் 96அடி , 360டன்
“ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா” என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் வசதிகள் செய்து 1970ல் ஓடச்செய்தார்




இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)
இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். 20 லட்சம் மக்கள் பயன் பெற.




குளித்தலை – முசிறி “தந்தை பெரியார் காவேரி பாலம்” கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்)



:)

Friday, 20 March 2020

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா? கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?

நீதிக்கட்சியும் கலைஞரும் இந்துக்களுக்கு செய்த எண்ணற்ற பணிகள் தெரியுமா?
கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்த கலைஞரா  இந்துக்களின் எதிரி?
தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன. அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக, சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, 1922-ம் ஆண்டு, இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்ததையடுத்து, கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின. 1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது. 
திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக எம்.கண்ணப்பனை நியமித்தார்.
கலைஞரின் முதல் ஆட்சிக்காலத்தில், திருக்கோயில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அமைத்தார். 
தந்தை பெரியார் இருந்தபோதே பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து தகுதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று (2.12.1970) சட்டம் இயற்றினார் கலைஞர்.
உடனே சில அமைப்பினர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தச் சட்டத்தை நிறுத்தினார்கள்.
36 ஆண்டுகள் கழித்து, `அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம்' என்று திமுக அரசு முடிவுசெய்து அவசரச் சட்டம் ஒன்றை, 12.8.2006 அன்று சட்டப் பேரவையில் கொண்டுவந்தது.
அதன்படி சைவ, வைணவ ஆகமப் பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இன்றைக்கும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் சட்டச் சிக்கலில் இருக்கிறது. 
திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான நிலங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டவை.
2006-2008 காலகட்டத்தில் மட்டுமே கருணாநிதி அரசின் சார்பில் 2,190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
2006-11-ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகாலத்தில் மொத்தமாக 5,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் திருப்பணியும் குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 240 திருக்கோயில் தேர்கள் புதுப்பிக்கப்பட்டன. 
ஆசியாவின் பெரிய தேர்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் 1948-ம் ஆண்டுக்குப் பிறகு இயக்கப்படவில்லை. அதை பழுதுபார்த்து, புனரமைத்து 1970-ம் ஆண்டு மீண்டும் தேரோட்டத்தை நடத்தினார் கலைஞர்.
25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்தத் தேரோட்டத்தில் 3 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேர் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் நகர்ந்தது.
திருச்சி பெல் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக் கொண்ட, இரும்பினால் ஆன எந்திரத்தைக் கொண்டு தேர் இழுக்கப்பட்டது.
மேலும் இந்தக் கோயிலின் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ.30 லட்சம் செலவில் புதிதாகச் செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம்  27-4-2008 அன்று நடைபெற்றது.
தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழா 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
2006-ம் ஆண்டு கிராமக் கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் 65,000 க்கும் மேற்பட்ட கிராமப் பூசாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தப் பூசாரிகளின் வாரிசுகள் திருமணத்துக்கு நிதியுதவி, மகப்பேறு நிதி, படிப்பு உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி போன்றவை வழங்கப்பட்டு வந்தன.
2008-ம் ஆண்டு திருக்கோயில்களில் புனரமைப்புப் பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
புராதனச் சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
கலைஞர் ஆட்சிக்காலத்தில் பழைமையான சிலைகள் பலவும் மீட்கப்பட்டன. 2010-ம் ஆண்டு மட்டும் 11 சிலைகள் மீட்கப்பட்டன.
ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்த கருணாநிதி `தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லை' என்று வருத்தப்பட்டுப் பேசினார்.
`கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு ஏன் இந்தக் கவலை? என்றார் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி. உடனே கருணாநிதி `கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும்தானே போகிறார்கள்!' என்றார்.
எளிய மக்களின் வழிபாட்டுக்கு ஏற்றவகையில் கோயில்களை மாற்றியமைத்தவர் கருணாநிதி.
தமிழக மக்கள் தெய்வமாக வணங்கும் அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கரின் கதையை தனது அழகுத் தமிழில் வடித்துத் தந்தவர் கருணாநிதி.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமாநுஜரின் முற்போக்குச் சிந்தனைகளை ஒன்றிணைத்த கருணாநிதி தனது இலக்கிய கைவண்ணத்தில் ராமாநுஜ காவியம் ஒன்றை இயற்றினார். அந்தக் காவியம் தொலைக்காட்சியில் வந்ததைப்பார்த்த திருப்பதி தேவஸ்தானம், அதை தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கேட்டது. அதற்கு சம்மதித்ததோடு அந்தத் தொடரை இலவசமாக மொழிமாற்றம் செய்துகொள்ளவும் அனுமதித்தார். 
கலைஞர் தனது வீட்டைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் தந்து பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ``எனது பள்ளிப் பருவத்தில், திருவாரூர் கோயில் சுவர்களில் நடமாடும் கோயில் திருப்பணி என்று ஆங்காங்கே  எழுதப்பட்டிருக்கும். நடமாடும் கோயில் திருப்பணி என்றால், நடமாடுகின்ற கோயில் கட்டப் போகிறார்கள் என்று அர்த்தமில்லை. மனிதனின் உடலே நடமாடும் கோயில். அதில் உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பதைத்தான் திருப்பணி என்கிறோம். நடமாடும் கோயில் திருப்பணி என்பது மருத்துவம்தான் என்று எனது ஆசிரியர் சொன்னார். அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது'' என்றார். அதுதான் கலைஞர்!
By மு.ஹரி காமராஜ்
August 09, 2018 at 6:24 PM