Thursday 29 March 2018

கலைஞர் & திமுக யோக்கியமா? அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

கலைஞர் & திமுக யோக்கியமா?
அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

1) கலைஞர் ஆட்சி 19 வருடம்தான்
MGR மற்றும் ஜெயலலிதா ஆட்சி 12 + 17 = 29 வருடம் நடந்திருக்கு.
அத்தனை அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் பழிவாங்கல்களும் நடந்திருக்கு.
கேவலம் ஒரு FIR கூட கலைஞர் மேல் போடமுடியவில்லையே
ஏன்?

2) ஏறத்தாழ 13 வருசம் இந்திராவை எதிர்த்துதான் கலைஞர் அரசியல் செய்தார். இடையிலே எமர்ஜென்சி வேறு.
இந்திராவிற்கு சிறிய ஆதாரம் கிடைத்திருந்தால் அப்போதே
எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞரை இருந்த இடம் தெரியாமல் செய்திருப்பாரே.
ஏன் வெட்டியா சர்க்காரியா கமிசன் போடனும்?

3) ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல கலைஞர் மேலும்
வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே
ஏன் போடமுடியல?

46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதான்.
இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு கீழே இறங்கியவரும் ஜெயாதான்

கலைஞரால் நிம்மதியின்றி 20 வருடம் வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஊழல் செய்தார் என சிறு துரும்பு
ஆதாரம் கிடைத்திருந்தாலும் அதை தூணாக மாற்றி கலைஞரை பழிவாங்கியிருக்கமாட்டாரா ஜெயலலிதா?

இதையெல்லாம் சொன்னால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்காத சர்க்காரியா சயின்டிபிக் ஊழல் என்று சொன்னாதாக இவனுங்களா கதை விடுவானுங்க.

சயின்ஸ் என்றாலே சோதனையில் நிரூபிக்கக் கூடிய ஒன்று என்றே அர்த்தம். சயின்டிபிக் ஊழல் என்றால் சோதனையின் மூலம் நிரூபிக்க வேண்டியதுதானே.
ஏன் முடியல?

குப்பிற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை கதைதான்.

கலைஞரே தனக்கு சொத்து வந்த கதையை விளக்கியிருக்கிறார்
http://antonyparimalam.blogspot.in/2017/07/blog-post_3.html?m=1


இதை படித்து அறிவை வளர்த்துங்க மூடர்களே

By A.Parimalam / The News man

No comments:

Post a Comment