Sunday 1 April 2018

மக்கள் எதிர்ப்பை மீறி பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால அறிவிப்புகள்

#வானதியின்_பொய்கள்

திரு ஸ்டாலின் 2011 இல்
Great Eastern Energy Corporation Limited (GEECL) என்ற கம்பெனிக்கு மட்டும் மன்னார்குடியில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்.
அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்த்ததால் தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டது. அந்த திட்டம் தவிர வேறு எந்த திட்டத்திற்கும் திரு.ஸ்டாலின் கையொப்பமிடவில்லை.

ஆனா வழக்கம் போல ஒட்டுமொத்த ஹைடிரோ கார்ப்பனுக்கும் திமுக அனுமதித்தது போல் பொய் பரப்புகிறர்.

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் ONGCயால் தோண்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.


2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது  தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா ?

இதெற்கெல்லாம் திமுகவா காரணம்?

கடந்தகாலங்களில் மீத்தேன் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கிடையாது.
தற்போது மக்கள் எதிர்க்கிறார்கள்.

ஆனா BJP யோ கடந்தகால அனுமதிகளை காட்டி இன்று தமிழக மக்களுக்கு தான் செய்யும்
துரோகங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது.

ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டபோது எந்த அளவிற்கு சுற்று சூழல் பாதிக்கும் என்பதை மக்களோ அரசோ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று பாதிக்கப்பட்டோர் போராடுகிறார்கள். அதனால் ஸ்டாலின் உட்பட அனைவரும் ஸ்டெரிலைட்டை மூட ஆதரவு தருகிறார்கள். அதை தவறு என்று எப்படி சொல்லமுடியும்?

எந்த கட்சி எந்த திட்டம் கொண்டு வந்திருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்று கருதினால் தாங்கள் கொண்டு வந்த அனுமதித்த திட்டத்தை கைவிடுவதே ஒரு நல்ல கட்சிக்கு அழகு.

ஆனால் மத்திய அரசோ NEET ஐ தமிழக மக்கள் மீது திணித்தது போல மக்கள் விரும்பாத திட்டங்களை மேலும் மேலும் திணிக்கிறது.

#இதைத்தான்_திமுக_எதிர்க்கிறது

மக்கள் எதிர்ப்பை மீறி
பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால
அறிவிப்புகள்

1)தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் புதிதாக 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க BJP அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2)நியூட்ரினோ திட்டத்திற்கு மார்ச் 2018 இல் பிஜேபி Ministry of Environment and Forests (MoEF) தானே environmental clearance வழங்கியிருக்கு.
மக்கள் எதிர்ப்பை மீறி
ஏன் வழங்கினீர்கள்?

3) தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய மண்டலம்*
நெல்லை, எண்ணூர், சென்னை அருகே வல்லூர், ஆசனூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4)நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது. 

No comments:

Post a Comment