Sunday 29 April 2018

கடந்த 70 ஆண்டுகளில் திமுக ஆட்சி வெறும் 21 ஆண்டுகளே என்ன காரணம் தெரியுமா?



கடந்த 70 ஆண்டுகளில் திமுக ஆட்சி வெறும் 21 ஆண்டுகளே
என்ன காரணம் தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்களின் காவேரி பேச்சை உற்றுக் கேளுங்கள். உண்மை புரியும்.

ஒரே பொய்யை திரும்ப திருப்ப சொல்லி மக்களின் மனதில் அதை உண்மை போல பதிய வைப்பதே அதிமுக மற்றும் திமுக எதிரிகள் செய்யும் முக்கிய வேலை. அதுவே அவர்களின் கடந்தகால வெற்றிகளின் ரகசியம்.


1972 முதல் இதுதான் நடக்குது. ஆனா இதை எதிர்கொள்வதில் MGR காலம் முதலே திமுக தோல்வியைதான் சந்தித்து இருக்கிறது. தான் திருடுவதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக கலைஞரை ஊழல்வாதியாக சித்தரித்து சினிமா கவர்ச்சி மூலம் மக்களை நம்பவைத்தார் MGR.


அதே வழியை பின்பற்றிய ஜெயலலிதா ஊழல் செய்து மாட்டிக்கொண்டாலும் சாகும்வரை தன்னை உத்தமியாகவே காட்டிக்கொண்டார்.


ஜெ வழியைதான் தமிழகத்தில் உள்ள சில்லரை சில்லுண்டி கட்சிகளும் இன்றும் பின்பற்றி வருகின்றன.


இன்று ஆட்சி செய்வது அதிமுக. ஆனால் சில்லரை கட்சிகள் அதிமுகவை கண்டுக்கொள்ளாமல் திமுக மீது பழி சுமத்துவதையே திட்டுமிட்டு செய்கின்றன.


ஆனால் திமுகவோ தனக்கு எதிரான அவதூறுகளை  சரியான முறையில் எதிர்கொண்டதேயில்லை என்பதே உண்மை.


கலைஞர் நல்ல நிலையில் இருந்தபோதாவது அவ்வப்போது நீண்ட அறிக்கைகள் வரும். ஆனால்  அதுவும் இப்போது வருவதில்லை.


காவேரி பிரட்சினை, மீத்தேன்/ ஹைடிரோ கார்பன், கச்சத்தீவு, கெயில்,  நியூட்ரினோ, சர்க்காரியா கமிசன்,ஈழப்பிரட்சனை என அனைத்திலும் திரும்ப திரும்ப அதிமுகவினரும் சில்லரை கட்சிகளும் ஏற்கனவே சொன்ன பழைய பொய்களையே திரும்ப திரும்ப தினமும் சொல்லி அவதூறு பரப்புகின்றனர்.


அந்த பொய்களையும் அவதூறுகளையும் திரும்ப திரும்ப வியாபார ஊடகங்கள் பணத்திற்காக பரப்புகின்றன.


ஆனா திமுக தரப்பில் இருந்து எப்போதாவது ஒரு பதில் அறிக்கை வருகிறது. திமுகவிற்கு ஊடகங்களின் பலமும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனா திமுக இதையெல்லாம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.


எதிரிகளின் தினப்பொய்களை என்னைப் போன்ற திமுகஅனுதாபிகளாலேயே சகிக்க முடியவில்லையே திமுக கட்சி தொண்டர்களால் எப்படி சகித்துக்  கொள்ளமுடியும்?


எதிர் தரப்பினர் ஒரே பொய்யை தினம் தினம் சொன்னால் திமுகவினரும் தங்கள் தரப்பில் உண்மையை பதிலடியாக அறிக்கைகள் மூலம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதுதானே.


தினம் ஒரு பதிலடி அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு கொடுப்பதில் திமுகவிற்கு என்ன பிரட்சினை?


தினசரி அறிக்கைகள் தயாரிக்கும் பொறுப்பை திமுகவின் கொ.ப.செயலாளர்களிடமும் செய்தி தொடர்பாளர்களிடமும் கொடுப்பதில் திமுக தலைமைக்கு என்ன தயக்கம்?


இன்றைய இளைஞர்களுக்கு திமுக வரலாறு சென்றடையவே இல்லையே. எதிரிகளின் பொய் பிரட்சாரம் திமுக ஆதரவு இளைஞர்களை கூட பாதிக்குமே.


இதற்கு மேலும் திமுக அலட்சியமாக இருப்பது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.


By A. Parimalam


No comments:

Post a Comment