Monday, 9 April 2018

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம்

15 வது நிதிக்குழு தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளின் கள்ள மௌனம் அயோக்கியத்தனமானது. திரு.ஸ்டாலினை தவிர மற்றவர்கள் கண்டுக்கொள்ளாதது ஏன்?
ஏனென்றால் மக்களுக்கு இதெல்லாம் புரியாத விசயம்.இதனால் ஓட்டு இழப்பு ஏதும் வராது. அதனால் கள்ள மௌம்.
தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ
மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே
அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ.
உபி செலுத்துவது 7000ரூ
திரும்ப பெறுவது 11200ரூ.
ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ
திரும்ப பெறுவது7800ரூ.
13 வது நிதிக்குழு வரை மற்ற அம்சங்களுடன் 1971 மக்கள்தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு
மாநிலங்களுக்கு பங்கு பிரித்தது
ஆனால் 14வது நிதிக்குழுவில்
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 17.5% என்றும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10% என்றும் எடுத்துக் கொண்டதால் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய பங்குத்தொகையில்
19% குறைந்தது.
அதாவது 13 வது நிதிக்குழு வருவாயுடன் 14 வது நிதிக்குழு வருவாயை ஒப்பிட்டால் சுமார் 6000 கோடி தமிழகத்திற்கு நஷ்டம்.
இந்த லெட்சணத்தில் 15 வது நிதிக்குழுவில் 2011 சென்சஸ் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படப் போவதாக தகவல் வெளியாகவுள்ளது.
அது நடந்தால் 13 வது நிதிக்குழு வருவாயுடன் 15 வது நிதிக்குழுவை ஒப்பிடும் போது
தமிழகம் சுமார் 70% நிதிஇழப்பை சந்திக்க நேரிடும்
எந்தெந்த அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி பிரித்து வழங்கப்படுகிறது என்ற விபரம் கீழே.
                    commission
Factor              13th                   14th  
Population
(1971)                25%                 17.5%
Population
(2011)                  0%                      10%
Fiscal
Discipline.          17.5%                    0%
Income
Distance            47.5%                  50%
Area.                   10%                     15%
Forest Cover.    0%                       7.5%
Total.                 100%                  100%
வரும் 15 வது நிதிக்குழுவில் 14 வது நிதிக்குழுவில் சொல்லப்பட்டுள்ள மற்ற அம்சங்களை மாற்றாமல் 1971 சென்சஸ் கணக்கை புறந்தள்ளிவிட்டு 2011 சென்சஸை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழகம் சந்திக்கப்போகும் நிதிஇழப்பு இப்போதைய 19% லிருந்து 70% மாக அதிகரிக்கும்.
2020 ஏப்ரலில்தானே அறிமுகமாகும் என்று இப்போது தூங்கினால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது.

By A.Parimalam ( THE NEWS MAN

Monday, 2 April 2018

history of Katchatheevu?

What is the history of Katchatheevu?

This island seems to have been under the Kings of Ramanathapuram in modern Tamil Nadu. During the British era, the island was administered by both the sides. Sri Lanka claimed it mainly because of its strategic location; and this issue was discussed many a times before 1974.

In what circumstances, this island was given to Sri Lanka?

After the 1974 nuclear tests, India was under enormous international pressure and there was a need to garner support from neighbours. Sri Lanka was to host the NAM summit in 1976 and it was likely that president of UNGA may be from Sri Lanka. Thus, Indira Gandhi quickly signed an agreement with Sri Lanka and ceded the territory without any discussion with Indian people or parliament mainly to garner support from Sri Lanka.

In the year 1973 then indian prime minister indira gandhi travelled to sri lanka and also in the year 1974 sri lankan president sirimavo
bandaranaike came to india. And the agreement was signed between both of them. Katchatheevu was ceded to Sri Lanka without discussing with tamilnadu by Indira Gandhi in the year 1974 december 28.While gifting away the land, Indira Gandhi pointed out that Katchatheevu Island is being ceded not on the basis of records but for other political reasons.

the Emergency was in effect from 25 June 1975 until its withdrawal on 21 March 1977

What are the problems created by this transfer?

The dispute relating to the status of this island was settled in 1974 by an agreement and both countries examined the entire question from all angles and took into account historical evidence and legal aspects. This position was reiterated in the 1976 agreement.

This 1974 agreement had secured the rights of Indian fishermen only to dry their nets and use Church for religious observance. But then in 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS. With this, Indian fishermen do not have any right to even engage in drying of nets and use of Church because 1976 agreement superseded 1974 agreement.

How the cessation of Katchatheevu is claimed to be illegal in India?

The Government of India maintains in courts that the settlement of the island was legal and final, though it was not ratified by Indian Parliament. However, in the Berubari Union case (1960), the Supreme Court had already ruled that cessation of Indian territory to other country had to be ratified by the parliament via a constitution amendment act. Thus, this cessation was unconstitutional and illegal because constitutional process was not followed.

What is Sri Lanka’s stand?

Sri Lankans also claim that they gave an island called “Wedgebank” to India in exchange.

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் 1976 இல் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாம்.

அன்று ஒப்பந்தத்தை எதிர்த்த கலைஞரை வசைபாடிய எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்ட எதிர்கட்சிக்கட்சிகள்
இன்று கலைஞரை குறை சொல்கின்றனர்

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை.

Sunday, 1 April 2018

மக்கள் எதிர்ப்பை மீறி பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால அறிவிப்புகள்

#வானதியின்_பொய்கள்

திரு ஸ்டாலின் 2011 இல்
Great Eastern Energy Corporation Limited (GEECL) என்ற கம்பெனிக்கு மட்டும் மன்னார்குடியில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்.
அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்த்ததால் தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டது. அந்த திட்டம் தவிர வேறு எந்த திட்டத்திற்கும் திரு.ஸ்டாலின் கையொப்பமிடவில்லை.

ஆனா வழக்கம் போல ஒட்டுமொத்த ஹைடிரோ கார்ப்பனுக்கும் திமுக அனுமதித்தது போல் பொய் பரப்புகிறர்.

1959 முதல் 105 ஆயில் கிணறுகள் ONGCயால் தோண்டப்பட்டுள்ளது

தமிழகத்தில் Oil  and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நரிமனம் , களப்பாள் ஆகிய இடங்களில் தொடங்கி 35 இடங்களில் நடந்து வருகிறது.


2014-15 க்கு மட்டுமே, தமிழக அரசுக்கு , ONGC மீத்தேன் எடுத்ததற்காக 300 கோடி ராயல்டி கொடுத்ததாவது  தெரியுமா?

இன்றைக்கும் தினமும் காவேரி படுகையில்3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் மீத்தேனும் 700 டன் ஆயிலும் ONGC யால் எடுக்கப்படுவதாவது தெரியுமா ?

இதெற்கெல்லாம் திமுகவா காரணம்?

கடந்தகாலங்களில் மீத்தேன் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கிடையாது.
தற்போது மக்கள் எதிர்க்கிறார்கள்.

ஆனா BJP யோ கடந்தகால அனுமதிகளை காட்டி இன்று தமிழக மக்களுக்கு தான் செய்யும்
துரோகங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறது.

ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டபோது எந்த அளவிற்கு சுற்று சூழல் பாதிக்கும் என்பதை மக்களோ அரசோ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று பாதிக்கப்பட்டோர் போராடுகிறார்கள். அதனால் ஸ்டாலின் உட்பட அனைவரும் ஸ்டெரிலைட்டை மூட ஆதரவு தருகிறார்கள். அதை தவறு என்று எப்படி சொல்லமுடியும்?

எந்த கட்சி எந்த திட்டம் கொண்டு வந்திருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்று கருதினால் தாங்கள் கொண்டு வந்த அனுமதித்த திட்டத்தை கைவிடுவதே ஒரு நல்ல கட்சிக்கு அழகு.

ஆனால் மத்திய அரசோ NEET ஐ தமிழக மக்கள் மீது திணித்தது போல மக்கள் விரும்பாத திட்டங்களை மேலும் மேலும் திணிக்கிறது.

#இதைத்தான்_திமுக_எதிர்க்கிறது

மக்கள் எதிர்ப்பை மீறி
பிஜேபியின் மார்ச் மாத மற்றும் கடந்தகால
அறிவிப்புகள்

1)தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் புதிதாக 24 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க BJP அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2)நியூட்ரினோ திட்டத்திற்கு மார்ச் 2018 இல் பிஜேபி Ministry of Environment and Forests (MoEF) தானே environmental clearance வழங்கியிருக்கு.
மக்கள் எதிர்ப்பை மீறி
ஏன் வழங்கினீர்கள்?

3) தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய மண்டலம்*
நெல்லை, எண்ணூர், சென்னை அருகே வல்லூர், ஆசனூர் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4)நெடுவாசல் திட்டம் தொடங்கப்பட்டு பிறகு கட்டுப்படியாகாது என காங்கிரஸ் அரசால் கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால் தற்போதைய BJP ஆட்சியில்தான் 2015 செப்டம்பரில்தான் நெடுவாசல் உட்பட 69 இடங்களில் Discovered Small Fields Policy திட்டத்தின் கீழ் ஹைடிரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி மந்திரிசபை முடிவெடுத்தது. 

Thursday, 29 March 2018

கலைஞர் & திமுக யோக்கியமா? அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

கலைஞர் & திமுக யோக்கியமா?
அவர்கள் சம்பாதிக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள்

1) கலைஞர் ஆட்சி 19 வருடம்தான்
MGR மற்றும் ஜெயலலிதா ஆட்சி 12 + 17 = 29 வருடம் நடந்திருக்கு.
அத்தனை அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் பழிவாங்கல்களும் நடந்திருக்கு.
கேவலம் ஒரு FIR கூட கலைஞர் மேல் போடமுடியவில்லையே
ஏன்?

2) ஏறத்தாழ 13 வருசம் இந்திராவை எதிர்த்துதான் கலைஞர் அரசியல் செய்தார். இடையிலே எமர்ஜென்சி வேறு.
இந்திராவிற்கு சிறிய ஆதாரம் கிடைத்திருந்தால் அப்போதே
எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞரை இருந்த இடம் தெரியாமல் செய்திருப்பாரே.
ஏன் வெட்டியா சர்க்காரியா கமிசன் போடனும்?

3) ஜெயாவுக்கு எதிராய் ஆதாரபூர்வமாக சொத்துக்குவிப்பு வழக்கை போட்டு, இருபது ஆண்டுகாலம் விடாது நடத்தி, உச்ச நீதிமன்றம் மூலம் இறுதி தீர்ப்பையும் பெற்று, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என நிரூபித்ததை போல கலைஞர் மேலும்
வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே
ஏன் போடமுடியல?

46 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயாதான்.
இருமுறை முதல்வர் பதவியிலிருந்து ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு கீழே இறங்கியவரும் ஜெயாதான்

கலைஞரால் நிம்மதியின்றி 20 வருடம் வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஊழல் செய்தார் என சிறு துரும்பு
ஆதாரம் கிடைத்திருந்தாலும் அதை தூணாக மாற்றி கலைஞரை பழிவாங்கியிருக்கமாட்டாரா ஜெயலலிதா?

இதையெல்லாம் சொன்னால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்காத சர்க்காரியா சயின்டிபிக் ஊழல் என்று சொன்னாதாக இவனுங்களா கதை விடுவானுங்க.

சயின்ஸ் என்றாலே சோதனையில் நிரூபிக்கக் கூடிய ஒன்று என்றே அர்த்தம். சயின்டிபிக் ஊழல் என்றால் சோதனையின் மூலம் நிரூபிக்க வேண்டியதுதானே.
ஏன் முடியல?

குப்பிற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை கதைதான்.

கலைஞரே தனக்கு சொத்து வந்த கதையை விளக்கியிருக்கிறார்
http://antonyparimalam.blogspot.in/2017/07/blog-post_3.html?m=1


இதை படித்து அறிவை வளர்த்துங்க மூடர்களே

By A.Parimalam / The News man

Sunday, 4 March 2018

ஈழப்போரும் திமுகவும்*** எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

ஈழப்போரும் திமுகவும்***

எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

டெல்லியில் சொந்த மகளை வெறும் விசாரணை கைதியாக அநியாயமாக சாட்சியங்களை கலைத்து விடுவார் எனச் சொல்லி சொல்லியே ஜெயிலில் 6 மாதங்களாக வைத்திருந்தார்களே ஒரு முதல்வராக இருந்த கலைஞரால்  தடுக்க முடியலையே ஏன்? சொந்த நாட்டில் சொந்த மகளுக்கு ஏற்பட்ட அநீதியையே தடுக்கமுடியாத கலைஞரால் ஈழத்தில் நடந்த போரை எப்படி நிறுத்தியிருக்க முடியும்?

(1)கேள்வி :- கலைஞரால் சோனியாவிடம் பிரபாகரனை காப்பற்றுமாறு கோரமுடியுமா?

ராஜீவ் கொலையில திமுகவின் மீதும் களங்கம் சுமத்தப்பட்டது அதையும் மீறிதான் சோனியா திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டார்

ராஜீவை கொன்றது LTTE தான் என்பது உறுதியில்லை எனினும்
தன் கணவன் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என நம்பும் சோனியாவிடமே போய் பிரபாகரனை காப்பாற்று என கலைஞர் கேட்கமுடியுமா?

(2) கேள்வி:- கலைஞர் சொன்னா இந்திய அரசு கேட்டு போரை நிறுத்தி இருக்குமா?

பதில் :- 2008 வாக்கிலேயே திமுக மேல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கசப்புணர்வு மேலோங்கிவிட்டது.  2009 ல் காங்கிரசுடன்  அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு தூதுவர்களை சோனியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த நேரம் அது. இலங்கை பிரட்சினைக்காக திமுக ஆதரவை விலக்கினால் ஆதரவளிக்க தயார் என முலாயம்சிங் வெளிப்படையாகவே அறிவித்தார்.

மேலும் காங்கிரசுக்கு தானும் ஆதரவளிப்பதாக ஜெயலலிதா தன் பங்கிற்கு காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டார்.

2009 ஆரம்பத்தில் திமுகவை கழற்றி விடும் நோக்கத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.

எனவே திமுக என்ன செய்திருந்தாலும் அது காங்கிரஸ் காதில்
விழுந்திருக்காது என்பதே உண்மை.

2008 இல் கூட காங்கிரஸ் திமுக ஆதரவை நம்பி இல்லை. மத்தியில் ஆதரவை விலக்கியிருந்தால் ஒன்றும் நடந்திருக்காது.


(3)கேள்வி :-திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை?

பதில் :-இலங்கையில் உச்சகட்ட ஈழப்போர் நடந்தது ஏப்ரல்,மே 2009 மாதங்களில்தான் மே 18ல் போர் முடிந்துவிட்டது

அதே சமயம் இந்தியாவில் 15வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக 16 ஏப்ரல் 2009 to 13 மே 2009 வரை நடந்தது

மன்மோகன் பதவியேற்பு 22 மே 2009

பதவியே முடியும் நேரத்தில் திமுக MPக்கள் ராஜினாமா செய்ய அவசியமே இல்லையே.

(4) கேள்வி :- திமுக ஆட்சியை ராஜினாமா ஏன் செய்யவில்லை?

பதில் :-2009 இல் கலைஞர் தன் அரசை ராஜினாமா செய்திருக்கலாம். அதனால் மீண்டும் தேர்தல் வந்து நீங்களெல்லாம் ஈழத்தாய்க்கு ஓட்டு போட்டு மீண்டும் ஈழத்தாய் அப்போதே ஆட்சிக்கு வந்திருக்கும். அதை தவிர வேற எதுவும் நடந்திருக்காது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுக ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு யார் என்ன நன்றி காண்பித்தார்கள்?


(5)கேள்வி :- என்ன செய்திருந்தா ஈழப்போரை நிறுத்தியிருக்கலாம்?

பதில் :-என்ன செய்திருந்தாலும் யாராலும் போரை நிறுத்தி இருக்க முடியாது.

தனது நெடுங்கால எதிரியை ஒழித்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க சிங்கள ராணுவமோ ராஜபக்சேவோ தயாரில்லை.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

அத்தனை பெரிய இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

இந்தியாவோ, UNO வோ, அமெரிக்காவோ
யார் நினைத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க வழியில்லை

(6) கேள்வி :- திமுகவை கேள்வி கேட்க யாருக்கு யோக்கியதை
உள்ளது?

ஈழத் தமிழர்கள் விசயத்தில் திமுகவை குறை கூறுவோர்
தங்கள் கட்சி ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை சொல்லிவிட்டு அல்லவா குறை சொல்லனும்

தமிழ்நாட்டில் மல்லாக்க படுத்துகிட்டு சிங்களனை திட்டி அவனுக்கு வெறியேற்றியதும்
வெளிநாடு தமிழர்களிடம் பணம் வசூலிச்சதும்தானே நீங்க செஞ்ச ஈழப்பணி😁

கலைஞர் 85 வயதில் 1/2 நாள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை காட்டினார். ஆனால் அதை கூட செய்யாத தமிழ் தேசியவாதிகளுக்கு கலைஞரை நோக்கி கைக்காட்ட. குறைசொல்ல என்னடா யோக்கியதை இருக்கிறது?

அப்போது நீங்கள் செய்தது மிகச்சிறந்த உள்நாட்டு வெளிநாட்டு வசூல் வேட்டைதானே.


பிரபாகரன் தந்த கடைசி Interview இது.

https://m.rediff.com/news/2008/oct/26ltte2.htm

இதிலும் ஜெயாவை பிரபாகரன் விமர்சித்துள்ளார்

விலகியிருப்பினும் கலைஞர் எந்த சூழலிலும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை. அவ்வாறே பிரபாகரனும் கலைஞரை விமர்சித்ததில்லை

டேய் கேணப்பசங்களா ....ராஜீவ் காந்தி இறந்த போது உடமைகளை இழந்து அடியும் உதையும் வாங்கி இழப்பை சந்தித்ததது நாம்தமிழர் , பாமக,  அதிமுக கட்சியினர் இல்லடா... திமுககாரன்தான்டா.

அதைவிட பெரிய தியாகத்தை எவனும் செய்ததில்லை.











Wednesday, 6 December 2017

69% இட ஒதுக்கீட்டில் ஜெ உண்மையில் அக்கறை காட்டினாரா? அக்கறை காட்ட வைத்தவர் கலைஞருங்க.

உண்மை என்னவென்றால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ஜெய‌ல‌லிதா தானாக அக்கறை காட்டவில்லை அவரை அந்த நிலைப்பாட்டை எடுக்க வைத்தது கலைஞர்தான்.
இடஒதுக்கீடு 69சதவீதம் என்பதற்கு மாறாக 50சதவீத அளவுக்கு மட்டுமே செல்லும் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.
இதன்விளைவாகத்  தொழிற்கல்விகளில் 69சதவீத அளவுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம்  மாணவர்கள்   மத்தியில்  பெரிதாக எழுந்தது.
இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில்  அரசியல்  சட்டத்தில் திருத்தம்  கொண்டு வரவேண்டும் என முதலில் குரல் எழுப்பியது திமுகதான்.
இடஒதுக்கீடு பிரச்சனையில்  ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது.
இதற்குக்  காரணம், 1993இல் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப்பத்திரத்தில் , நீதிமன்றத்தின்  தீர்ப்பையேற்று தமிழகத்தில் 1993-1994 ஆம்ஆண்டுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்.
இதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடுதான் என அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது
இடஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்ய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும், இடஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசே முடிவெடுக்க வழி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாகக்கூட்டி, அரசியல்  சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற ஆதரவு அளிக்கக்கோரி கலைஞர் வலியுறுத்தினார்.
அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு  கேட்டு முன்னாள் பிரதமர்வி.பி.சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அப்போது கடிதம் எழுதினார் கலைஞர்.
அந்தக்கடிதங்களுக்கு பா.ஜ.கதலைவர் வாஜ்பாய், வி.பி.சிங், இந்திரஜித்குப்தா, ஜார்ஜ்பெர்னாண்டஸ், ஹர்கிஷண்சிங்சுர்ஜித், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இடஒதுக்கீடுபிரச்சனைக்காக 1994 இல் தி.மு.க உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய -மாநிலஅரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் நடத்தப் போவதாக அறிவித்தன. 
அப்போது அதேநாளில் பந்த் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால்,எதிர்க்கட்சியினர் தங்களது மறியல் போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதற்கும்  ஜெ அரசு அனுமதி மறுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைதுசெய்து காவ‌ல்துறை பின்னர் விடுவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தி.மு.க. காட்டிய அக்கறை குறித்தும், அப்போதைய அ.தி.மு.கஅரசு நடந்து கொண்டவிதம் பற்றியும் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

திமுக ஏற்படுத்திய நிர்ப்பந்தகளாலும் அழுத்தத்தாலுமே முதலில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட  ஜெ பின்பு வேறு வழியின்றி 69% இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

Friday, 10 November 2017

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்? வீண் பழி சுமந்த திமுக**

மின் வெட்டுக்கு திமுகவா காரணம்?
வீண் பழி சுமந்த திமுக**
ADMK Govt's lack of initiatives to set up new power projects during their regime( 2001-06 ) was the main reason for the power crisis in the State during the DMK regime from 2006-2011.
DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity.
This saved the State from power crisis from 2001 to 2006.
But the AIADMK did not invest on any such project 2001-06 five years. This hit the people badly when the DMK was back in power from 2006-2011.
Moreover  Dmk govt attracted a lot of investments for setting up industries for generating new employment opportunities. But, there was no adequate electricity generation to support their needs and this resulted in severe power crisis.
From 2006 to 2011 DMK initiated a host of power projects such as the 600 MW plant at Rs. 3,136 in Ennore, the Rs. 2,475-crore 600 MW thermal power plant in North Chennai, the 800 MW plant at Udankudi at an investment of Rs. 8,362 crore, a 600 MW power plant in Mettur and 183 MW generation through cooperative sugar mills.

All the above projects were expected to be completed by 2013-15 and put an end to power crisis though Dmk were not in power.