Wednesday, 28 June 2017

யார் இந்த அதிமுகவினர்?

யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன? -- By Antony Parimalam

1)ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வி நிறுத்த வழக்கு. பழைய பாடங்களை அச்சிட்டு பல கோடி வீண்.
2)சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த வழக்கு
3) தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க மிகப்பெரிய தொகை செலவு மற்றும் வழக்கு
4) துறைமுகம் - மதுரவாயல் சாலைப் பணியை நிறுத்தி வழக்கு
5) மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு வழக்கு
6) தாமிரப்பரணி நதி நீர் இணைப்பு பணி பாதியில் நிறுத்தம்.
7) திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தல்
8) திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் உள்ள பணிகளை நிறுத்துதல்
9) நில அபகரிப்பு என்ற பேரில் பிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல்
10) மனம் போன போக்கில் அரசு செலவில் அவதூறு வழக்கு போடுதல்
11) மணல் கொள்ளை., தாது மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு போன்ற விசயங்களை கண்டுக் கொள்ளாதது.
12) டெண்டரே வைக்காமல் மின்சாரத்தை கொள்முதல் செய்தல்.
13) இந்த துறை அந்த துறை என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் அத்தனை துறைகளிலும் ஊழல்
14) தமிழகத்தில் இருந்து தொழில் முதலீடுகள் வெளியே போனதை கண்டுக் கொள்ளாமல் விட்டது.
15) சிறுகுறு தொழில்கள் நசிந்து போனதை கண்டும் காணாமல் விட்டது.
16) மின்சார பகிர்மான கழகத்தின் மீது மிகப்பெரிய கடனை சுமத்தி அந்நிறுவனத்தை பாழ் படுத்தியது.
17) தமிழக அரசின் கடனை ஐந்தே வருடங்களில் இரண்டு மடங்குக்கு மேலாக உயர்த்தி சாதனை படைத்தது.
18) மத்திய அரசு காவல் துறை மேம்பாடு கல்விதுறை மேம்பாடு போன்ற பணிகளுக்கு ஒதுக்கிய பெரும் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது.
19) ஊழல் அதிகாரிகளை தேர்வு செய்து முக்கிய பணிகளில் அமர்த்தியது.
20)மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்யாமல் இருப்பது.
21) அரசு பணத்தை பெரும் அளவில் இலவவசங்களுக்கு செலவிட்டதுடன் விளம்பரங்களுக்கும் ஆடம்பர செலவீனங்களுக்கும் செலவு செய்தது.
22) தமிழகத்திற்கு தானாக வந்த நான்கு வழிச் சாலைகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காதது.
23) தமிழக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற ஒரு முறை கூட முயற்சிக்காமல் தூங்கி வழிவது.
24) யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு 110 இன் கீழ் தொடர்ந்து அறிவிப்புகளை மட்டும் செய்து விட்டு எந்த நிதியும் ஒதுக்காதது.
25) முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி விளம்பரம் தேடிக்கொண்டது.
இதெல்லாம் சாதனைகளா இல்லை வேதனைகளா ??
நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்

வைக்கோவின் அந்தர் பல்டிகள்

அந்தர்பல்டி ஆறுமுகம்,
தமிழகத்தின் அரசியல் காமெடியன் #ஜைக்கோவின் அரசியல் கேனத்தனங்களில் சில.
படித்துவிட்டு வாய்க்கு பதில் வேறு வழியே சிரிக்கவும்

1) எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது  ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.

*2) பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம்  பூமராங்காகப் பாய்ந்தது.

*3) "காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க  'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.

* 4) 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

*5) 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

*5) தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டார்.

*6) "இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். கூடச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.

*7) "தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..?' எனச் சொந்தக் கட்சிக்காரர்களே கொஞ்சம் அரண்டுதான் போயினர்.

*8) விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்!

*9) ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.

*10) அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..?' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.

 11)அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

*12) 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..!' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..?' என மக்களே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.

*13) மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..!'ன்னு சொல்லுவாரோ என்னவோ..?( நன்றி Vikadan)

யார் இந்த வைக்கோ?
இவர் செய்வது அரசியலா?
இல்லை வியாபாரமா?

1994 ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி.

96 ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி.

98 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி

99 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி

2001 ல் ரெண்டு பேருமே எதிரி

2004 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி

2006, 2009 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி

2011 ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி

2014 ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி

2016 ல் ம.ந.கூட்டணி

2019 இல் யார் அறிவார்?
அவருக்கே தெரியாதே




நிலக்கரி வாங்குவதில் கொள்ளை?

மோடியின் 2 ஆண்டு சாதனை: மின் துறையில்  50 ஆயிரம் கோடி ஊழலும் அதில் தமிழகத்தின் பங்கும்

மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார், இந்தியா சிமெண்ட்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட 40 நிறுவனங்களுக்கு இதில் தொடர்பு இருப்பது  தெரியவந்திருக்கிறது.

இந்த பெரும் முறைகேடுகள்  மூன்று முறைகளில் நடந்திருக்கிறது.

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை அதிகப்படுத்தி கணக்கு காண்பிப்பது.மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கருவிகளை இறக்குமதி செய்வதில் விலையை உயர்த்தி கணக்கு காட்டுவது.இழப்பீட்டு தொகை என்ற முறையில் அரசின் இழப்பீடை தவறான முறையில் பெறுவது.

சரி, இப்படி ஏன் இவர்கள் விலையை அதிகப்படுத்தி பொய்க் கணக்குகாட்ட வேண்டும்?

மக்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படுவது கிடையாது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றாலேயே மின் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது.

இதை தீர்மானிக்க அவர்களே வகுத்துகொண்ட கொள்கையின் அடிப்படையில் கெப்பாசிட்டி கட்டணம் (நிலைகட்டணம்), எனர்ஜி கட்டணம் (முதன்மை எரிபொருள் கட்டணம்) ஆகியவற்றின் அடிப்படையில் மின் கட்டணம்  தீர்மானிக்கப்படுகிறது.

மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் முதலீடு மற்றும் செலவினங்களை கூறுவார்கள். அதற்கேற்ப விலையை வைத்து (உயர்த்தி)  மக்களிடமிருந்து வசூலித்து தருகின்றன ஒழுங்குமுறை ஆணையங்கள். ஆக எவ்வளவு அதிகமாக செலவு செய்ததாக சொல்ல முடியுமோ, அந்த அளவுக்கு உற்பத்தி செலவை அதிகரித்துச் சொல்கிறார்கள்.

நிலக்கரி இறக்குமதியில் எப்படி மோசடி நடக்கிறது?

டாடா, அதானி, அம்பானி, எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் உள்ளிட வெவ்வேறு நாடுகளில் லெட்டர் பேட் நிறுவனங்களை பதிவு செய்துகொள்கிறார்கள் அல்லது தங்களது நிறுவனத்தின் கிளை நிறுவனங்களை பெயருக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்குதான் கொண்டுவரப்படுகிறது.  ஆனால் அதற்குரிய இன்வாய்ஸ் எனப்படும் விலைப்பட்டியல் ஆவணங்களோ பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கைமாறி இறுதியாக இந்தியா கொண்டுவரப்படுவதை போல  போலியாக தயாரிக்கப்படுகிறது.

அதாவது இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரியை துபாயில் இருக்கும் நிறுவனம் வாங்கி அதிக விலைக்கு மலேசியாவிலிருக்கும் நிறுவனத்திற்கு விற்பதாகவும்,  இப்படி கைமாறி இறுதியாக அதானி கைக்கு வருவதாகவும் சொல்வார்கள்.

இதனால் அதானி “வாங்கும்” நிலக்கரி செலவு அதிகமாகும். ஆனால் இதில் சோகமான நகைச்சுவை என்னவென்றால்,  இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரி சுரங்கம் முதல் அது பயணிக்கும் அனைத்து நிறுவனங்களும் அதானியின் சொந்த நிறுவனங்கள்தான்.

இந்திய அதானி நிறுவனம் இந்த அதிகமான  விலையை வெளிநாட்டிலிருக்கும்  தனது  துணை நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். அத்துணை நிறுவனம், உண்மையான விலையை மட்டும் இந்தோனேசியாவின் நிலக்கரி அனுப்பிய நிறுவனத்துக்கு  அனுப்பிவிட்டு மற்ற தொகையை அமுக்கிவிடும்.

அந்த பணம்  வரியில்லா சொர்க்க நாடுகளில் கருப்பு பணமாக பதுக்கப்படும்.

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை எம்முறையில் கணக்கிட்டாலும் மெட்ரிக் டன் ரூ. 3,300-க்கு (50 அமெரிக்க டாலர்) மேல் போகாது.

ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 5,380 –க்கு (80 அமெரிக்க டாலர்) வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்.

இந்த இடைப்பட்ட ரூ.2000(30 டாலர்) , சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அமுக்கப்படுகிறது.

உதாரணமாக கடந்த 2014-2015-ம் ஆண்டு கணக்கை பார்ப்போம். அந்த நிதி ஆண்டில் 212.11 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  இது முந்தைய ஆண்டை காட்டிலும் 27% அதிகமாகும்.

ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2000 ஏமாற்றப்டுகிறது  என்றால் 212.11 மில்லியன் டன்னுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏமாற்று நடந்திருக்கும் என்கிறது “எக்கனாமிக் அன்ட் பொலிட்டிகள் விக்லி” இதழ்.

இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக மனோஜ் குமார் கார்க் என்ற இடைத்தரகரை மத்திய வருவாய் நுண்ணறிவு(Directorate of Revenue Intelligence) பிரிவு கடந்தஆண்டு  பிப்ரவரி மாதம் கைது செய்தது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்றுள்ள ரூ.280 கோடி ஊழல் தொடர்பாக இந்த கைது நடந்தது. இந்த மனோஜ் குமார் துபாயை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் ஜெனரல் டிரேடிங்(Glints Global Trading LLC) நிறுவனத்தையும், ஹாங்காங்கை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் லிமிட்டட்(GlintsGlobalLimited) என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார்.

இவர் மீது ஏற்கனவே பேங்க் ஆஃப் பரோடா(BOB) வங்கியில் நடைபெற்ற அந்நிய செலவாணி மோசடி மற்றும் சட்டவிரோத பாசுமதி அரிசி இறக்குமதி ஆகிய குற்றச்சாட்டுகள்  உள்ளன.

இதில் பேங்க் ஆஃப் பரோடா வழக்கு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கபட்டு வருகிறது, பாசுமதி விவகாரம் மத்திய உளவுதுறையால் விசாரிக்கபடுகிறது. இதன் மூலம் இந்த வழக்குகளின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த இடைத்தரகரின் நிறுவனம் மூலமாகத்தான் தமிழக மின்வாரியம் நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விசயம்,  இந்த நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதியில் முன்னனுபவமே கிடையாது என்பதுதான்.

தமிழநாடு மின்சார வாரியம் MGB commodities என்ற நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. இந்த MGB நிறுவனம் கிலின்ட்ஸ் நிறுவனதின் மூலம் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து $45 க்கு பெறப்படும் நிலக்கரியின் விலையை $87 என போலியான ஆவணங்கள் மூலம் தெரிவித்து தமிழக மின்வாரியத்திடமிருந்து (மிக அதிகமான)  தொகையை பெறுகிறது இந்தநிறுவனம்.

நன்றி patrikai.com

(தொடரும்)

ராமதாஸ் பாமாக வின் சத்தியம்

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1)நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ(வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்கமாட்டேன்!

2.சங்கத்தின்பொதுக்கூட்டங்களுக்கும்
பொதுநிகழ்ச்சிகளுக்கும்,எனது சொந்தச் செலவில் தான் வந்து போவேன். ஒருகாலகட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல்போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனே யொழிய, ஒருபோதும் மற்றவர் செலவில் வந்துபோகமாட்டேன்!

3) எனது வாழ்நாளில் நான் எந்தத்தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால்செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4).எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் – எந்தக்காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்தஒருபதவிக்கும்
வரமாட்டார்கள்!

எனக்கு இந்தநாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ்வங்கியில்ஆயிரம்கோடிரூபாய் என்பெயரில் போடுவதாக பேரம்பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டான்- இதுசத்தியம்! என்தாய்மீதுசத்தியம்!

இதையெல்லாம் உங்கள்டைரியில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். என்தாய் மீதுசெய்துகொடுத்த இந்தசத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடுரோட்டில் நிறுத்திவைத்து, சவுக்கால்அடியுங்கள்!

இப்படிக்கு
ராமதாஸ்

2G மறு ஏலம் மிகப்பெரிய தோல்வி


சமீபமாக 2G மற்றும் 3G அலைக்கற்றை 380+5=385 MHz. டெலிகாம் துறையால் ஏலம் விடப்பட்டது. அதில் அரசுக்கு 385 MHz க்கு 1,09000 கோடி கிடைத்துள்ளது. அதாவது ஒருMHz சராசரியாக. சுமார் 290 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

ஆனால் வினோத்ராய் ஒருMHzக்கு 3350 கோடிக்கு ஏலம் போகும் என கணக்கிட்டதன் அடிப்படையில்  385 MHzக்கு 12,89,750 கோடி வருமானம் ஏலத்தில் வந்திருக்க வேண்டுமே. ஆனால் வந்திருப்பது  வெறும் 109000 கோடிதானே.  இதன் மூலம் வினோத்ராய் என்னும் பொய்யரின் கணக்கு தவறு என நிரூபணமாகியுள்ளது.

          2007-08 ஆம் ஆண்டிலேயே ராஜாவால் டெலிகாம் துறைக்கு 52 MHz க்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம்  சுமார் 14000 கோடி  வருமானம்  வந்துள்ளது.

ராஜா விற்பனை செய்த 52 MHz ஐ ஏலம் விட்டால் அரசுக்கு 174000 கோடிகள் கிடைத்திருக்கும் என ஒரு மெகா பொய்யை திட்டமிட்டே சொன்னவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். 2G வழக்கு முடிந்த பின்னர் அதை எதிர்பார்க்கலாம்.

2G கூட்டு சதியா?

ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளுடன் ராசா கூட்டு சதியில் ஈடுபட்டார் என்ற சிபிஐயின் குற்றச்சாட்டு சரியா  ? அல்லது சதியா?

ராசா டெலிகாம் மந்திரி ஆவதற்கு முன்பே ஸ்வான் கம்பெனி லைசென்ஸ்க்கு விண்ணப்பம் செய்திருந்தது. மேலும் ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நிலையில் கூட்டுசதி எப்படி சாத்தியம்?
சதிக்கு ஆதாரம் என்ன?
ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து முதலீடு பெற்றது தவறு என்கிறது சிபிஐ.

ஆனால் இதே டெலிகாம் துறையில் டாடா டெலிசர்வீஸ் லிட் , சிஸ்டமா சியாம் டெலிசர்வீசஸ் மற்றும் எஸ் டெல் போன்ற கம்பெனிகள் மிப்பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் பெற்றிருக்கிறார்களே  . அதை அரசும் சிபிஐயும் கண்டுக்கொள்ளவில்லையே. அது ஏன்?

டெலிகாம் துறையில் மிகப்பெரிய முதலீடு தேவை என்ற நிலையில் புதிய கம்பெனிகள் தொழில் தொடங்க முதலீடு பெறவும் புதியதொழில் என்றால் காலதாமதம் என்பதும் நடக்கக்கூடியதுதானே.

அது சரி இதற்கெல்லாம் எதை ஆதாராமாக வைத்து ராசாவை தொர்பு படுத்துகிறது சிபிஐ. ?

நாடகத்தை ஆரம்பித்து விட்டு திரு திரு என முழிக்கிறார்கள்.

If Swan and Unitech are to be charged because of the equity infusion into their companies, then the prosecution (CBI) has to explain why it has not charged Tata Teleservices Ltd, Sistema Shyam Teleservices, and S Tel, which also had infusion of foreign equity of much greater amounts.''
"The prosecution (CBI) theory of one conspiracy among all accused is ex-facie absurd.'' Swan had already applied for a licence in March 2007, before Raja became the telecom minster. It had no reason to conspire with him. Plus, Unitech and Swan were direct rivals. They would never conspire with each other. "Unitech never got spectrum in Delhi circle and Swan did not get it in some other districts. There is no evidence at all to suggest a to suggest a common conspiracy between Swan and Unitech.''

கட் - ஆப் (Cut-off) தேதியை மாற்றி ராசா தவறு செய்துவிட்டார் என்ற CBI குற்றச்சாட்டு சரியா ?


கட் - ஆப் (Cut-off) தேதியை மாற்றி ராசா தவறு செய்துவிட்டார் என்ற CBI குற்றச்சாட்டு சரியா  ?
ராசா டெலிகாம் மந்திரியானவுடன் யாருக்கும்  ஒதுக்கப்படாமல் ஸ்பெக்ட்ரம் இருப்பதை கண்டறிந்தார்.
அதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்பட்டு வந்தது.
ராசா உடனடியாக ஸ்பெக்ட்ரம்  விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார். 1-10-2007 க்குள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் ஆனது.
ஆனால் எதிர்பாராத விதமாக 575 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. கையிருப்பு வெறும் 52 MHz ஸ்பெக்ட்ரம் மட்டுமே.
எனவே கடைசி தேதி 25.9.2007 என அட்வான்ஸ் செய்யப்பட்டது.

இதைத்தான் ஊழல் என எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில் வரப்பெற்ற 575 விண்ணப்பங்களுக்கும் எந்த லைசென்ஸும் வழங்கப்படவில்லை. அதனால் கட்ஆப் தேதி மாற்றத்தால் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.

 இந்த 575 விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு  பலமாதங்கள் முன்பே  வந்திருந்த விண்ணப்பங்கள் சற்று தாமதமாக கண்டறியப்பட்டது.
எனவே அந்த விண்ணப்பங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவேடு மற்றும் வந்த தேதி அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் என்ன தவறு ?

அவ்வாறு வழங்கப்பட்ட கம்பெனிகளில்தான்
ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகள்
வருகின்றன. இரண்டு கம்பெனிகளும் எதிரி கம்பெனிகள். இரண்டு எதிரெதிரான கம்பெனிகள் கூட்டுசதியில் எப்படி ஈடுபடுவார்கள்  ?


ராசாவால்  2G லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள் அதை பயன்படுத்தி பெரிய தொகை லாபம் அடைந்து விட்டதாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் ராசாவால் வழங்கப்பட்ட அத்தனை லைசென்ஸ்களும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள அத்தனை பெரிய கம்பெனிகளும் முதலில் தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவார்கள்.
பிறகு அதை பயன்படுத்தி புதிய பங்குகளை வெளியிட்டு அதில் பெரிய லாபம் பார்ப்பார்கள். பின்னர்தான் தொழில் தொடங்குவார்கள். அதற்குள் சில வருடங்களே ஆகிவிடும்.

இதெல்லாம் உச்ச நீதிமன்றம் அறியாததா? முழுமையாக விசாரித்து அதன் பின்னர்தானே லைசென்சை ரத்து செய்திருக்க வேண்டும்.

இதற்கு பெயர்தான் ஜனநாயகமா  ?